Tuesday, July 29, 2025

ஆன்ம சாந்தி:

 ஆன்ம சாந்தி:

+++++++++++

T.M.RAMALINGAM

T.M.RAMALINGAM


வள்ளலார் உருவாக்கிய புதிய பாதையான சுத்த சன்மார்க்கத்திற்கு தனது வாழ்நாளையும் தனது செல்வங்களையும் அற்பணித்து வாழ்ந்த அருட்.எம்.ஏ.வெங்கட் ஐயா அவர்கள் 28-07-2025 திங்கள் அன்று ஆன்ம சாந்தி கொண்டார்.

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

19-09-2014 ஆம் தேதி காரணப்பட்டார் பதிப்பித்த திருவருட்பாவினை முதல் தங்க முலாம் பூசப்பட்ட திருவருட்பாவாக மறு அச்சு செய்து வெளியிட்டவர் அருட்.எம்.ஏ.வெங்கட் ஐயா அவர்கள்.

மேலும் காரணப்பட்டிற்கு பல முறை வந்திருந்து வழிபட்டுள்ளார். அவரை பிரிந்து தவிக்கும் அவரது குடும்த்தார்களுக்கும் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-TMR

Monday, July 28, 2025

பிரபந்தத்திரட்டு ஓர் ஆய்வு

காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை
பிரபந்தத்திரட்டு ஓர் ஆய்வு
=+++++++++++++++++++=======
முனைவர் சண்முக செல்வகணபதி அவர்கள் மற்றும் முனைவர் செ.கற்பகம் அவர்களும் இணைந்து ஆய்வு செய்த ’பிரபந்தத்திரட்டு ஓர் ஆய்வு” - நூல் வருகின்ற ஆகஸ்ட் 10-தேதி தஞ்சை பெரிய கோயிலில் வெளியிடப்படுகின்றது. அனைவரும் வருக.


வள்ளலார்

 
வள்ளலார்

Wednesday, June 25, 2025

திருமறைப்பா

 திருமறைப்பா

ஆசிரியர்
(வள்ளலார் இராமலிங்கம்)

















Friday, May 9, 2025

அப்பா நான் வேண்டுதல்

 அப்பா நான் வேண்டுதல்

Vallalar


அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்

 

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்

 

செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

 

தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்

தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.




 

Tuesday, May 6, 2025

51 வருடம்

51 வருடம் 

வள்ளற்பெருமான் தனது காயத்துடன் இவ்வுலகில் வெளிப்பட வாழ்ந்த காலம் 51 வருடம்.

இதன் மூலம் அவர் வெளிப்படுத்தும் சுத்த சன்மார்க்கச் செய்தியாக நான் கருதுவது,
சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் மிகச்சரியாக தங்களது 51 ஆவது அகவையில் முத்தேகம் பெற வேண்டும். 51 வயதிற்கு மேல் தனது தேகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். 30 வயதிற்கு மேல் புகைப்படத்தில் காயம் விழக்கூடாது. இன்னும் பல...
இன்னும் சில நாட்களில் 51-ஆம் வயதில் நான். வள்ளலார் தமது காயத்தை மறைத்தது 1874. நான் சரியாக 100 வருடம் கடந்து 1974-ல் பிறப்பு. 3500-க்கும் மேற்பட்டு சுத்த சன்மார்க்க மரபு பாடல்களும், சில சன்மார்க்கம் சார்ந்த கட்டுரைகள் இயற்றியும், சில சன்மார்க்க நடைமுறைகளை பின்பற்றியும், ஒரு பெண்ணைக்கூட தொடாமல் இருந்தும் - பணம், உலகியலில் ஆழ்ந்ததால், சுத்த சன்மார்க்கத்தில் தோல்வியின் விளிம்பில் நான்....
--TMR

T M RAMALINGAM