சற்குரு திருஅருட்பிரகாசர் அருளாலும் பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவர் கருணையாலும் "இராமலிங்க
அகவல்" என்கிற இவ்வகவல், சுத்த சன்மார்க்க உலகிற்காக அருளப்பட்டுள்ளது. திருஅருட்பிரகாசரின் பெயரினையே இவ்வகவலுக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. இவ்வகவலை என்னுளிருந்து சற்குரு புனைந்தவாரே நானும் (தி.ம.இராமலிங்கம்-கடலூர்) புனைந்துள்ளேன்.
இவ்வகவல் நிலைமண்டில ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் திருஅருட்பிரகாசர் இயற்றிய "அருட்பெருஞ்ஜோதி அகவல்"
1596 அடிகளைக் கொண்டதாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். தற்போது 2338 அடிகளைக் கொண்ட இந்த "இராமலிங்க அகவல்" அருளப்பட்டுள்ளதால், சுத்த சன்மார்க்க உலகிலும் தமிழ் இலக்கிய உலகிலும்
"இராமலிங்க அகவலை"
மிஞ்சிய மிகப்பெரிய பாடல் இல்லை என்பது இதன் சிறப்பாக உள்ளது.
https://drive.google.com/file/d/1kwFDSnh8k1MSdUKD4QMckfsbUkjNtvBV/view?usp=drive_link
அருட்பெருஞ் ஜோதி
ஆண்டவர் தானாகி 26022014
அருள்புரியும்
சிதம்பரம் இராம லிங்கம்
ஆன்மபிரகா மாய்
ஓங்கி எங்கும்
ஊன்றிய சிதம்பரம்
இராம லிங்கம்
இங்குலகில் அனையா
வருள் ஜோதியாய்
எங்குமொளிரும்
சிதம்பரம் இராம லிங்கம்
ஈவதுஇது வெனக்கூறி
அன்னதானத் தால்நாம்
ஆவதுஇறைஎன்ற சிதம்பரம்
இராம லிங்கம்
உண்மை உரைத் துலகில்
நமக்கெல்லாம்
அண்ணனான சிதம்பரம் இராம லிங்கம் 10
ஊரற்று தந்தை அம்பலத்தை தம்பெயர்முன்
ஓர்நிலையாக்கிய
சிதம்பரம் இராம லிங்கம்
எதுவும் இல்லாதாகி
எல்லாம் தானாகி
அதுவுமாகிய சிதம்பரம்
இராம லிங்கம்
ஏகமாகி போகமாகி
உலகுக்கு அருட்பாவை
ஆகமமாக்கிய சிதம்பரம்
இராம லிங்கம்
ஐம் பொறியும் அறியஜீவ
காருண்யத்தை
அம்பலமாக்கிய சிதம்பரம்
இராம லிங்கம்
ஒத்தது ஒருமையில்
ஓங்கிய சித்தது
அத்ததாகிய சிதம்பரம் இராம லிங்கம் 20
ஓதாது உணர்த்தியதை என்றும்
இசைக்கின்ற
ஊதாதஒலியாகிய சிதம்பரம்
இராம லிங்கம்
ஒளவென்ற ஒலியால்
அடங்கிய பசுவாய்
அவ்வுளவாகிய சிதம்பரம் இராம லிங்கம்
ஃதொரு மாடமாய் இயங்கு
முக்கண்னாய்
அக்துருவான சிதம்பரம்
இராம லிங்கம்
புணரும் இன்பம்
புரியவைத்து எனக்கோர்
உணர்ச்சியாம் சிதம்பரம்
இராம லிங்கம்
ஆற்று நீரென ஓடவிட்டு என்பாட்டை
ஏற்றும் சிதம்பரம் இராம லிங்கம் 30
காற்றாகி காட்சியாகி என்னுள்ளே அமுத
ஊற்றாகும் சிதம்பரம் இராம லிங்கம்
விடத்தை அமுதாக்கிய வித்தகன் எந்தன்
உடலுயிராம் சிதம்பரம் இராம லிங்கம்
விதியல்லா மதியால் வாஎன நினைக்க
எதிர்வரும் சிதம்பரம் இராம லிங்கம்
அருளிய அருட்பாவுடன்
இப்பாட்டும் நல்
அருளாணையாம் சிதம்பரம் இராம லிங்கம்
என்றோ எனஇருக்க அங்கமதில் சங்கமித்து
அன்றுவந்தாண்ட சிதம்பரம் இராம லிங்கம் 40
சிறுமை நீங்கி சிற்சபையுள் என்றுந்தீரா
உறுபசியாம் சிதம்பரம் இராம லிங்கம்
குரைத்த வேதங் கெடுத்துத் தமிழை
உரைத்த சிதம்பரம் இராம லிங்கம்
மதம்பிடித்த உலகோர் மீள மருதூரில்
உதயமான சிதம்பரம் இராம லிங்கம்
விந்தைகள் செய்து விண்ணிலும் மண்ணிலும்
ஐந்தொழில்செய் சிதம்பரம் இராம லிங்கம்
புன்னான மங்கையுடன் புணரும் மாயையில்
என்னைவிடாத சிதம்பரம் இராம லிங்கம் 50
சிறந்தன என்றிங்கு சிரித்தமத மார்க்கமெலாம்
இறந்தனவென்ற சிதம்பரம் இராம லிங்கம்
அன்ன மளித் தன்பர்பசி நீக்கியமெய்
இன்பமாம் சிதம்பரம் இராம லிங்கம்
ஆர்தருவார் ஒருமை எங்களுக் கென்றும்
ஓர்தலைமை சிதம்பரம் இராம லிங்கம்
வல்லானே நல்லானே வான உருவான
எல்லையாம் சிதம்பரம் இராம லிங்கம்
வளியாகி ஒலியாகி வானாகி புனலாகி
ஒளிஉருவாம் சிதம்பரம் இராம லிங்கம் 60
வல்லான் இல்லான் வாழ்வான் வீழ்வான்
எல்லார்க்கும் நல்லானான இராம லிங்கம்
கண்கள் கலந்து காதலாகி கசிந்துருகி
எண்ணத்தில் ஒன்றிய இராம லிங்கம்
கல்லா நெஞ்சத்துள் கனிந்து இனித்தான்
எல்லாம்செய் வல்லான் இராம லிங்கம்
இருளாய் ஒளியாய் அருவாய் உருவாய்
அருளாய் வருவாய் இராம லிங்கம்
தவமாய் இதமாய் தத்துவ நிலையாய்
அவனாய் நிற்பாய் இராம லிங்கம் 70
வானந்த வெளியே விண்நடு ஒளியே
ஆனந்த நாதனேஎன் இராம லிங்கம்
ஒருகடை விரித்தே ஒருவனை விற்கும்
அருளுடை அப்பனான இராம லிங்கம்
தள்வது தள்ளித் தலைவனைக் காட்டி
உள்ளது உரைத்தஎன் இராம லிங்கம்
நில்லாத ஆக்கை நிலைக்குமென்ற எங்கள்
இல்லத்துப் பிள்ளையான இராம லிங்கம்
பல்லாரும் கடவுள் பற்பல ஆனாரும்
எல்லாரும் வணங்கும் இராம லிங்கம் 80
கருவில் அமர்ந்த குருவே என்னகத்தில்
அருள்நாடகம் புரியும் இராம லிங்கம்
தம்பலம் முழுதும் தந்து எம்பலமாக்கிய
அம்பலமே அற்புதமே இராம லிங்கம்
விடி வெள்ளி விண்டது அவன்
அடிமுடி கண்ட இராம லிங்கம்
கொடி கட்டிக் கொண்டே பேருபதேசம்
இடிமுழக்க மானது இராம லிங்கம்
மருளு பதேசம் மாளவே சத்திய
அருளு பதேசமான இராம லிங்கம் 90
உப்பிட்ட உயிரான உண்மை பதியான
அப்பர் வருவாரென்ற இராம லிங்கம்
கற்பூரம் மணக்கும் காயம் அளித்தே
அற்புதம் செய்வாரென்ற இராம லிங்கம்
குட மொன்று குலையாது சித்தகத்தில்
இடமொன்று அளித்த இராம லிங்கம்
தானே வந்திங்கு தன்னோடு கலந்தான்
நானே சத்தியமென்ற இராம லிங்கம்
வானே உருவாய் வந்திங்கு எனது
ஊனே புகுந்தான் இராம லிங்கம் 100
சன்மார்க்கி ஆகி சகத்தில் சாகதவனே
என்மார்க்கம் என்ற இராம லிங்கம்
அழுவா ரறிய இங்கு செத்தவர்
எழுவார் என்ற இராம லிங்கம்
மது உண்டு மாளாயாக்கை அருள்வதற்கு
இதுவே தருணமென்ற இராம லிங்கம்
கருணை களித்து காருண்யம் இலயித்து
அருட்ஜோதி ஆனேனென்ற இராம லிங்கம் 110
அருவான சித்தனிடம் அன்பான அப்பரிடம்
அருளாட்சி பெற்றோங்கும் இராம லிங்கம்
எவ்வுலகி லமைந்த உடலெல்லாம் அதிலுறும்
எவ்வுயிரும் தம்முயிரென்ற இராம லிங்கம்
சத்தியம் சார்ந்து சுகமளித் துயிர்களை
ஒத்துரிமை யாக்கிய இராம லிங்கம்
சுத்த சன்மார்க்கத்தில் சுத்த சித்துருவாய்
எத்துணையும் பேதமுறா இராம லிங்கம்
பொருள்நெறிக் காணாது பொது நெறியில்
அருள்நெறி அளித்த இராம லிங்கம் 120
மருட்பா என்று முழங்கியோர்க்கும் திரு
அருட்பா அளித்த இராம லிங்கம்
குடியிருக்கும் கோயிலை கொல்லா திருப்போர்
அடிக்கு ஏவல்புரியும் இராம லிங்கம்
நன்றே செய்து நடிக்கும் கருணை
ஒன்றே வடிவான இராம லிங்கம்
சும்மா இருக்கும் சுகமதை யளித்த
அம்மா என்னப்பா இராம லிங்கம்
பாகம் பிரித்து பரமனை வணங்காது
ஏகம் சிவம்ஏகமென்ற இராம லிங்கம் 130
மாய உலகிலினில் மாளது காயநேய
ஆயவாய நேயனாம் இராம
லிங்கம்
போதநாத சபாநாத பாபநாச
ஜோதிநேச
ஆதவாத வேதகீத இராம
லிங்கம்
தங்கஅங்க துங்கபுங்க
தயாலிங்க சங்கமே
அங்கலிங்க ஜோதியாம்
இராம லிங்கம்
எத்திக்கும் தித்திக்கும்
ஆனந்த அந்தமே
அத்தமுத்த ஆதியாம்
இராம லிங்கம்
துஞ்சேல் இனிசுகமே
துயரம் யாதுபற்றினும்
அஞ்சேல் அஞ்சேலென்ற இராம லிங்கம் 140
வட்டமிட்ட தண்டநிட்ட
வாட்டமிங்கு தீரவே
அட்டவட்ட நட்டமிட்ட
இராம லிங்கம்
அரியபெரிய முத்தேகம்
அறிந் தடைந்த
உரியதுரிய பிரியனாம்
இராம லிங்கம்
பயிர்களை வளர்த்து
பசித்துன்ப மில்லா
உயிர்களைக் காக்கும்
இராம லிங்கம்
கலகமுற்று வாழுமக்கள்
கருணையுற்று வாழவே
உலகமுழுதும் அமுதுபொழியும்
இராம லிங்கம் 150
உதய சூரியன் அருட்பா
பாடகன்
குறியுள் இன்பமே
கூடிப்பெற்ற சுகமே
அறிவுள் அறியுமறிவே
இராம லிங்கம்
பினிநரை மூப்பு
பற்றற்ற தேகத்திலோர்
இனிய நிறைவுதரும்
இராம லிங்கம்
இன்பம் பொங்கும்
இதய கமலத்துள்
அன்பர் நிலைக்கநின்ற
இராம லிங்கம்
குலங்களும் மதங்களும்
கழன்றவர் மனதிலே
இலங்குஞான நாதமாம்
இராம லிங்கம் 160
தேடிய வேதத்திலே
பாடிய கீதத்திலே
ஆடிய பாதமாம் இராம
லிங்கம்
தம்முடல் பலமே தம்முயிர்
உறவே
எம்குலச் சிவமாம்
இராம லிங்கம்
கண்ணொளி காட்சியே
கருணைநிறை ஆட்சியே
எண்குணச் சுடராம்
இராம லிங்கம்
என்புதோல் போர்த்த
உடம்பில் வந்துதித்த
அன்புடைக் குருவாம்
இராம லிங்கம்
விதி யாளும் வினையை
ஓட்டும்
அதிகார பதியாம்
இராம லிங்கம் 170
கருவுறும் இடத்தே
கனிதரும் மரமே
அருளுறு வெளியாம்
இராம லிங்கம்
சிற்றின்ப சிறையில்
சிக்கி மாளும்
ஒற்றனை உதைத்த இராம
லிங்கம்
சாதிநீதி நீங்கவே
சோதிதனைக் காட்டியே
ஆதிநீதி வேதனான
இராம லிங்கம்
பாடும்ஏடு போதுமா
பாவம்நீங்கிப் போகுமா
ஆடல்நீடு பாதனான
இராம லிங்கம் 180
நாறிய பிண்டத்தை
நாயகன் தோளிலேற்றி
ஏறிக்கரை ஏறிய இராம
லிங்கம்
இன்னல் இன்றியே
இன்ப மயமாய்
என்னுள் அமர்ந்த
இராம லிங்கம்
கள்ள மனதால் கடிந்து
ரையாமல்
உள்ளது உரைத்த இராம
லிங்கம்
ஏனந்த வேதங்கள்
வீனந்த வாதங்களென்ற
ஆனந்த நாதனாம் இராம
லிங்கம்
அக்கரை ஏதுமின்றி
இக்கரை அதுவுமின்றி
எக்கரையுமின்றி
ஓங்கும் இராம லிங்கம் 190
குருவும் வந்திங்குக்
குருட்டை நீக்கினார்
இருட்டை நீக்கும்ரவியாம்
இராம லிங்கம்
வேதா கமங்களின்
விளைவை எல்லாம்
ஓதா துணர்ந்த இராம
லிங்கம்
நம்மொடு இருந்தே
நீடு வாழ்வளிக்கும்
எம்பெரு வாழ்வாம்
இராம லிங்கம்
கபடும் சூதும் கள்ளமும்
நீக்கியே
அபயம் அளித்த இராம
லிங்கம்
விபத்தில்லா உலக
வாழ்வை அளிக்கும்
உபயப் பதமாம் இராம
லிங்கம் 200
எவ்வுயிரும் இன்புற்
றிருக்க நீடுவாழும்
இவ்வுடம்பை எடுத்த
இராம லிங்கம்
அளந்தறியா இறையை
அடிமுடிக் காண
உளவறிந்து அளந்த
இராம லிங்கம்
திருச் சிற்றம்பலத்தே
திருநட ஜோதிகண்டு
அருட்பாலை அருந்திய
இராம லிங்கம்
சிரிப்பும் கோபமும்
சதிசெய்யும் காமமும்
எரித்த என்னய்யா
இராம லிங்கம்
சன்னதியின் முன்னே
செருக்குடன் நின்ற
என்னையும் பணிவித்த
இராம லிங்கம் 210
எவ்வுலகிலும் இலை
எனைப்போல் அருளர்
இவ்வுலகிலும் இலைஎன்ற
இராம லிங்கம்
என்மீது ஆணை எல்லாம்
செயல்கூடுமென்ற
உன்ஆணை செயலோங்கும்
இராம லிங்கம்
கற்ற சாகாக் கல்வியுடன்
ஒத்தஒழுக்கமும்
உற்ற துணையென்ற
இராம லிங்கம்
உனை மறவாதுஎனது
உள்ளம் மறக்கினும்
எனையாளும் துரையாம்
இராம லிங்கம்
முன்செய் தவத்தால்
மயக்கம் நீக்கி
என்னுயிரில் கலந்த
இராம லிங்கம் 220
சிறுபயல் விளையாட்டை
சகித்து நான்
உறுசெயலை திருத்தும்
இராம லிங்கம்
கழியும் ஓர்நாளாய்
கற்பம் கடக்கினும்
அழியாதமுத் தேகன்
இராம லிங்கம்
தன்னிலை என்னிலை
தருமொரு நிலையான
என்னிரு கண்மணியாம்
இராம லிங்கம்
என்னையே கொடுத்தேன்
உனக்கு எனக்கு
உன்பெரிய பெயரைஈந்த
இராம லிங்கம்
இச்சகத்தில் என்னரு
ளன்றி ஏதுமில்லைஎன
அச்சம் தவித்தஎன்
இராம லிங்கம் 230
சிந்தை களித்து
சிற்றறிவைக் கடந்தேன்
எந்தன் பேறறிவாம்
இராம லிங்கம்
படிஎன்று ஆணையால்
படித்த எனை
அடியன் எனவைத்த
இராம லிங்கம்
அந்நாளில் வருவேன்
என்றுச் சொல்லி
எந்நாளைத் தெரிவித்த
இராம லிங்கம்
எஞ்ஞானமு மின்றி
மெய்ஞான மிழைய
அஞ்ஞானம் களைத்த
இராம லிங்கம்
பன்மார்க்க தெய்வங்களும்
பயன் பெறும்
ஒன்றென்ற உணர்ச்சியில்
இராம லிங்கம் 240
பின்தொடர்ந்து வந்து
பித்தனை அடியனாக்கி
என்தரத்தை உயர்த்திய
இராம லிங்கம்
தனமென்ற குணமென்ற
தான தருமமென்ற
எனக்கென்ற பொருளாம்
இராம லிங்கம்
அன்பெனும் அப்பனை
அருட்பெருஞ் ஜோதியனை
என்கரங்களில் கொடுத்தீந்த
இராம லிங்கம்
நல்லான் நமக்குள்
நிறைவான் நினைவான்
எல்லாஞ் செய்வல்லான்
இராம லிங்கம்
கன்மம் ஆணவம் காரிருள்
நீக்கியே
என்பால் தயவுசெய்த
இராம லிங்கம் 250
தன்செயலால் வாழும் தயவுடையார் யார்க்கும்
அன்னியன் அல்லனென்ற
இராம லிங்கம்
வழி தெரியாது வடலூர்
வந்தஎன்னை
இழியாது அருளும்
இராம லிங்கம்
தேடிய இடத்தில்
தயவுடன் மெல்லெழுந்
தாடியகால் மலராம்
இராம லிங்கம்
தட்டி எழுப்பி தாழ்திறக்கும்
தயவோனே
எட்டும் இரண்டுமான
இராம லிங்கம்
ஒருவன் உயிரான அருவன்
நிலையான
உருவன் மூலாங்க இராம லிங்கம் 260
அடியை வீழ்த்து மந்த மரணாதிகளுக்கு
இடியாய் இருந்து
அருளும் இராமலிங்கம்
பாடையிலே படுத்து
பின்மண் மூடிப்போகாது
ஓடையிலே நீர்போல
ஓடுகின்ற இராமலிங்கம்
மரணமிலா வாழ்வை
மனிதம் பெறவே
தரணியில் தயவால்
தரும் இராமலிங்கம்
எடுக்கும் போதெல்லாம்
அழுகின்றேன் நானும்
படுக்கும் நேரமெலாம்
பயந்தேன் இராமலிங்கம்
சாகாக் கல்வி சர்க்கரையே சுவையான
ஆகார அற்புதமே யாகும் இராமலிங்கம் 270
சுத்தசன் மார்க்கமாம் சகத்தில் ஓர்புதியவிதை
வித்திட்ட விவசாயி
வள்ளல் இராமலிங்கம்
வெள்ளாடை அணிந்து
வரும் அன்பர்களின்
தள்ளாட்டம் போக்கும்
தயாளன் இராமலிங்கம்
கைகளை கட்டியே
கடிந்தவர்க்கும் அன்புப்
பைகளை அளிக்கும்
பகலவன் இராமலிங்கம்
அடக்கமே உருவாய்
உருக்கமே பார்வையாய்
நடக்குமே முன்நின்ற
நிழலான் இராமலிங்கம்
தாள்பட்ட மண்ணாங்கட்டி
தகன்றதைப் பார்த்து
வாள்பட்ட மரம்போல
வாடிய இராமலிங்கம் 280
தாம்வாடினால் பயிரும்வாடு
தலால் ஆன்மநேயம்
காம்பிற்கும் உண்டுடென்ற
கருணீக இராமலிங்கம்
பட்சிகளை பதைக்க
பழங்கொடுத்து கூண்டினுள்
கட்டு வித்ததை
கடிந்துரைத்த இராமலிங்கம்
விலங்குகளை கொன்று
விருந்துண்ணும் மனித
குலங்களை புறவினமென
குறித்த இராமலிங்கம்
குலவழக்க மென்று
கொலைசெய்யும் கோவிலை
உலகில் கண்டபோது
அலறிய இராமலிங்கம்
ஆடுமாடு கோழிகளை அலங்கரித்து பலியிட்டு
ஆடுகின்றீர் அன்பறியீரென்ற
அன்பு இராமலிங்கம் 290
கருணை உடையோரெல்லாம் கூடி அகத்தில்
அருள்பெற ஞானசபை
அளித்த இராமலிங்கம்
உலகுயிர்கள் இன்புற்று
ஓர்வாழ்வியல் நடத்த
உலகியல் வகுத்த
உத்தமன் இராமலிங்கம்
ஓரணுவிலே பேரொளி
அமர்வை அளந்த
பேரன்பனே அணுபரா
பரமே இராமலிங்கம்
அடுக்கிய அண்டமெலாம்
அருகிலே பார்க்கும்
நெடுபார்வை உடைய
நல் இராமலிங்கம்
அண்டவெளி யெலாம்
உயிர்கள் உண்டென
உண்மை உரைத்த உயிரான
இராமலிங்கம் 300
எல்லா அண்டங்களும்
அணுவில் அடக்கும்
வல்லான் பெற்ற
வான்பிள்ளை இராமலிங்கம்
அண்டம் விசாலமானது
அதைவிட மானிட
பிண்டம் பெரியதென்ற
பிள்ளை இராமலிங்கம்
ஐந்தொழிலை ஓர்துறும்பும் இயக்கு மென்ற
உந்தன்சொல் பலிக்க அருள் இராமலிங்கம்
உன்தேகத்தி னோர்முடி
செத்தாரைஎழுப்பும்
என்றுச் சொல்லி
எழுப்பிய இராமலிங்கம்
செயல் எல்லாம்கூட
சோதிதனை ஏற்று
மயல் வாழ்வை மறந்த
இராமலிங்கம் 310
உலகெலாம் பதத்திற்கு அகஉலகை காண்பித்து
பலபெயரிட வதுவிரிய
பார்த்த இராமலிங்கம்
இல்லாதநிலை யதுஅணுவும்
அல்லாத நிலை
எல்லாமாகி விளங்குகின்ற
இறை இராமலிங்கம்
பொய்யான சாதிமதசமய
பழக்கத்தை விடுத்து
மெய்சுத்த சன்மார்க்கம்
மலந்த இராமலிங்கம்
இறப்பொழிக்கும்
மார்க்கம் இங்கே வம்மின்
உறவுகளே என்று
அழைக்கும் இராமலிங்கம்
இதிகாச புராண மியற்றிய
வேதமெல்லாம்
மதிக்காது ஆளும்
மன்னன் இராமலிங்கம் 320
மதசமய ஆசாரங்கள் மறைஎன்பன யாவும்
உதவாத ஊடகமென்ற உறவன் இராமலிங்கம்
எல்லாவற்றையும்
விட்டு இறவா நிலைபெற்று
அல்லலற்று நீடூழி
ஓங்கும் இராமலிங்கம்
குருட்டு நடையாம்
கண்மூடிபழக்க மெலாம்
சருவாகி மண்மூட
சாபமிடும் இராமலிங்கம்
தான்படைத்த பணங்களை
தானம் வழங்காமல்
கோன்படைத்த அருளை
கொடுக்கும் இராமலிங்கம்
பணத்திலே சிறிதும்
பாசமின்றி கருணை
குணத்திலே தோய்ந்த
கனியன் இராமலிங்கம் 330
இறக்கவும் ஆசையின்றி
இங்குபிறக்க வுமாசையின்றி
இறவாம லிருக்கும்
இறையோன் இராமலிங்கம்
சமரசசுத்த சன்மார்க்க
சத்திய சங்கத்திலே
இமயமென நின்றோங்கும்
அமலன் இராமலிங்கம்
சமரசசுத்த சன்மார்க்க
சத்திய ஞானசபையிலே
அமர்ந்து அருள்புரியும்
ஆதி இராமலிங்கம்
சமரசசுத்த சன்மார்க்க
சத்திய சாலையிலே
அமுது படைக்கு
உழவன் இராமலிங்கம்
ஆடல் குழந்தைகளுக்கு
அழகாய் திருக்குறள்
பாடலை பாட்டுவித்த
பாட்டன் இராமலிங்கம் 340
செம்மொழி தமிழ் சமஸ்கிருதம் ஆங்கிலம்பயில
மும்மொழி திட்டம்தந்த
முதல்வன் இராமலிங்கம்
இனியோர் மானிடன்
இறக்கக் கூடாதென
தனியோர் மார்க்கம்
தந்த இராமலிங்கம்
மாண்டவரை வைத்து
மாரடிக்கும் மக்கள்
மாண்புர வந்தமரண
மருத்துவர் இராமலிங்கம்
மரணம் குறித்து
மாபறையோசை கேட்டு
கரணம் கலங்கிய
காந்தி இராமலிங்கம்
தொட்ட தெல்லம்
துலங்கி மரணமில்லா
மொட்டை முகர்ந்த
முத்தன் இராமலிங்கம் 350
தொடாமல் தொட்டுத்
தனம்மாள் மனதில்கூடி
விடாமல் விளங்கும்
விந்தை இராமலிங்கம்
பொருளினை பிறரிடம்
பெறும் போதெல்லாம்
இருளுறும் என்றே
அஞ்சிய இராமலிங்கம்
அருளும் கருணையும்
அன்பான பொருளுமன்றி
உருவான மற்றதை இகழென்ற இராமலிங்கம்
இறைவனிடம் சுதந்தரம்
அடைந்த ஓர்மனிதராம்
மறையில்லா மார்க்கந்தந்த
மறவர் இராமலிங்கம்
சும்மா இருந்து
செங்கோலைப் பெற்று
ஐம்பெருந் தொழிலை
ஈனும் இராமலிங்கம் 360
நலந்தரும் நாட்டியம்
நடுவினில் கண்டு
உலகுயி ரான அன்பன்
இராமலிங்கம்
அகத்தில் வஞ்சமும்
இகத்தில் நல்நெஞ்சமாய்
செகத்தில் நடிப்பவரை
சாடும் இராமலிங்கம்
மண்ணுயிர் மாண்பை
மனுமுறை வாசகம்
கண்ட மனுநீதிசோழ
குரவன் இராமலிங்கம்
ஏன்பிறந்தே னென்ற
ஏக்கம் நீக்கிஎன்னோடு
வான்பொழு தாய்நீடு
வாழும் இராமலிங்கம்
எண்ணங்களை விற்று
இறைவனைப் பெற்ற
பண்ட மாற்றுவியா
பாரி இராமலிங்கம் 370
உருத்திரர் நாரணர்
உறுபிரமர்பல கோடிபுறம்நிற்க
அருள்திரு நடனம்கண்ட
ஐயா இராமலிங்கம்
அருட்பெருஞ் சோதியரை
அருள்மணம் புரிந்து
அருவாய் கலந் தாடுகின்ற
இராமலிங்கம்
ஆசைவெட்கம் அறியாது
அவருடன் கூடிஎழுந்த
ஓசையை அருட்பாட
லாக்கிய இராமலிங்கம்
ஆயிரங்கோடி அணிவிளக்
கேற்றியே அருட்பா
பாயிரம்கோடி பாடிப்
பணிந்த இராமலிங்கம்
தழைக்க நீரில்லாத்
தோணியில் நீர்நிரம்ப
மழை பொழிவித்த
மாரியே இராமலிங்கம் 380
தத்துவம னைத்தும்
தனித்தனி கடந்த
சுத்தசன் மார்க்க
சங்கம் இராமலிங்கம்
சோதியா யாவதல்ல
சடங்காற்றா வதல்ல
ஆதி நீதியால் உடல்பேணும் இராமலிங்கம்
எழும்பிறவி தடுக்க ஏழுதிரை அகற்றி
விழும் உடலை வளர்க்கும் இராமலிங்கம்
சாகாத்தலை கண்ட சுத்த சன்மார்க்கியே
ஆகாயனே எங்கள் அய்யன் இராமலிங்கம்
இறைவன் ஒருமை அருமைகளை
வாயே
பறையாய் ஒலித்த
பறையன் இராமலிங்கம் 390
எவ்வுலகும் சன்மார்க்க மடைய உயிரோங்கி
இவ்வுலகி லிருந்து
இயங்கும் இராமலிங்கம்
ஏட்டில் எழுதாமறை
எல்லாம் பேரருள்
பாட்டில் எழுதிய
பரமன் இராமலிங்கம்
அம்மே அப்பா ஐயா
அரசேஎன்றவனை
விம்மி அழைக்கின்ற
வீரன் இராமலிங்கம்
மங்களம் சூழ் மங்கையர்க்கு சன்மார்க்க
சங்கம் சூழ சரிபாதிதந்த இராமலிங்கம்
ஊன்வேறாய் அதிலுறும்
உயிர்வேறாய்
தான் இன்றி தனிவடிவ
இராமலிங்கம் 400
பொடிவைத்து பேசாமல் படிநிலை முடிவை
கொடிகட்டி காட்டிய
கண்ணன் இராமலிங்கம்
உடம்பின் நடுவை
அணுவின் அசைவை
நடராஜபதி என்றே
நாட்டிய இராமலிங்கம்
நானே சத்தியம்
நானே நித்தியம்
ஊனே நானென்ற உண்மை
இராமலிங்கம்
எனது உனதென்பதும்
இனியேது அக
இனமாகி எல்லா மாகிய
இராமலிங்கம்
ஆகநாழிகை ஒன்றிலே
அந்நாள் மாலையே
யோகநிலை முழுது
மடைந்த இராமலிங்கம் 410
நாதமுடி மேலிருந்து
நாதாந்த நாட்டுக்கோர்
வேதநாயக முடி வேந்தன்
இராமலிங்கம்
சிதையாத தேகம்பெற்ற
சித்தி வளாகத்தை
கதையாக சிலர்பேச
களிக்கின்ற இராமலிங்கம்
தத்துவம் அனைத்தும்
தன் வசமாக்கி
சுத்தநிலை புரிந்த
சத்தியன் இராமலிங்கம்
பொயுலகினிடை மரணபெரும்
பயம் தவிர்த்திட
மெய்ஞானம் கூறும் மதியோன் இராமலிங்கம்
பிறர்தீங்கு செய்யினும்
பரிந்துதீங்கு எண்ணா
அறவோன் புகழ் அறவாழி
இராமலிங்கம் 420
இயற்கை உண்மையாகி இயற்கை இன்பமாகி
இயற்கை விளக்கமாகி இயங்கும் இராமலிங்கம்
குற்ற மெலாம் குணமாக்கி எங்களுக்கு
உற்றதை கொடுத் தருளும் இராமலிங்கம்
சோற்றிலே விருப்பம் சூழின் தவமெலாம்
ஆற்றிலே கரைத்த உப்பாமோ இராமலிங்கம்
நலம் ஒன்றையே நாடி நானிலத்தில்
உலகியல் சிறிதும் அண்டாத இராமலிங்கம்
கண்டதெலாம் காமமே களிப்பற சுவையாய்
உண்டதெலாம் மலமே என்ற இராமலிங்கம் 430
முடிக்கு அடிபுனைய
முயன்று வந்தமர்ந்த
குடிக்கு மாயா
குடிலமைத்த இராமலிங்கம்
முன்வைத்த அடியும்
முயன்று நடக்க
நின்னருள் தனை
நாடினேன் இராமலிங்கம்
ஆட்டுவிக்க ஆடியும்
உறங்குவிக்க உறங்கியும்
கூட்டுவிக்க கூடியஇறை
கருவி இராமலிங்கம்
திருவருள் அன்றி
தடுப்பானும் தடைதீர்ப்பானும்
குருவன்றி யாரேஎனும்
சற்குரு இராமலிங்கம்
அவனன்றி ஓர் அணுவும் அசையாதென்பது
தவமுடை யார்க்கே தகுமென்ற இராமலிங்கம் 440
பிறப்பும் சாவும்
பெரும்பாவ மென்றே
இறப்பை தடுத்த
இனியன் இராமலிங்கம்
பாவக் காரியங்களை பட்டியலிட்டு கூறும்
ஜீவ காருண்ய ஜீவனாம் இராமலிங்கம்
அருவ வழிபாட்டை அடக்கி ஜோதியெனும்
உருவ வழிபாட்டை ஆண்ட இராமலிங்கம்
சன்மார்க்க சங்கத்தில்
சத்தியனாகி வரும்
அன்பர்களை தூய
னாக்கும் இராமலிங்கம்
அன்பின்றி புலா
லுண்ணுபவரைக் கண்டே
என்பெலாம் கருக
இளைத்த இராமலிங்கம் 450
எளியாரை வலியார்
அடிக்கப் பார்த்து
வெளிகண்ட புயலாய்
வரும் இராமலிங்கம்
உலகுயிர்கள் பொதுவென
உணரா கொலைநெறி
உலகியலரைக் கண்டு
அஞ்சிய இராமலிங்கம்
வலையும் கண்ணி
வகைகளும் உயிரெடுக்கும்
புலையர்களை கண்டே
பயந்த இராமலிங்கம்
இரக்கமே உயிராகவும்
அன்பே பக்தியாகவும்ஜீவ
இரணத்தை போக்கிய அரன் இராமலிங்கம்
முகத்திலும் அகத்திலும்
மறந்தும் வஞ்சமறியா
சகத்திலும் பொய்யறியா
சத்தியன் இராமலிங்கம் 460
எதிலு மோராசை இடருமின்றி
பிறர்பொருட்டு
கதிகலங்கிய எம்
கருணை இராமலிங்கம்
தன்னுயிர் காத்தல்
தலைவன் கடனென்றே
சன்மார்க்கம் பெற்று
சாதித்த இராமலிங்கம்
யாவும்நீ என்றேநம்பி
யாரும் அடையாபேரும்
சாவும்நீக்கிய
சன்மார்க்க சித்தன் இராமலிங்கம்
தேன்தொய்ந்த மலராய்
தான்தொய்ந்த மனமாய்
ஊன்தொய்ந்த உயிரான
உறவு இராமலிங்கம்
எல்லா உலகும்வாழ்க
எல்லா உயிரும்வாழ்க
அல்லா தொன்றும்
இல்லா இராமலிங்கம் 470
தீய விலங்கினங்களை
தூயமானிட ராக்குகின்ற
காயசித்தி பெற்ற
காவலன் இராமலிங்கம்
எத்தெய்வமும் காணா
அத்தவனாம் மானுட
சத்தவனாம் அருள்
சோதி இராமலிங்கம்
நாசியில் ஓடும்
நாதனைக் கண்டு
வாசி கணக்கிட்ட
வானன் இராமலிங்கம்
கள்ளுண்டு கடவுளைக் காமுற்ற என்
வெள் ளாடை வேந்தர்
இராமலிங்கம்
இரப் போர்க்கு ஈயாது உண்டியிலை
நிரப்போர் மனதில் நில்லா இராமலிங்கம் 480
பசித்தோர்க்கு
உணவைப் போல் பக்தி
கசிந் துருகுவோர்க்கு
கடவுள் இராமலிங்கம்
சமயாசாரங்களை வலிந்து
சுமக்கும் கூலிகாள்
இமயம்பிடிக்க சுமை
ஏனென்ற இராமலிங்கம்
கலையிலே சிலையிலே
கலங்கி நில்லாதே
மலையிலே தேனை முகர்ந்த
இராமலிங்கம்
புறத்திலே சடங்கிலே புலால் புசியாதே
அறத்திலே மார்க்க
மருளிய இராமலிங்கம்
பணத்திலே பிறர்
பொருளிலே ஆசையன்றி
குணத்திலே வாழும்
குமரன் இராமலிங்கம் 490
சகத்திலே சன்மார்க்க
சங்கத்திலே கூடுகின்ற
அகத்திலே ஆடுகின்ற
அகத்தியன் இராமலிங்கம்
ஞானத்திலே வானத்திலே
ஞான சபையிலே
மோன நிலையிலே மேலோங்கும்
இராமலிங்கம்
ஆதியிலே நடுவிலே
அந்தத்திலே மதமிலே
சாதியிலே குலமிலேஎன்ற
சாது இராமலிங்கம்
நாதத்திலே நாதமுடிவிலே
நானுமிலே நீயுமிலே
சாதத்திலே சாதமுடிவிலே
சாவுமிலா இராமலிங்கம்
ஈயிலே எறும்பிலே
ஆனையிலே அணுவிலே
சேயிலே
மீனிலே சார்ந்த இராமலிங்கம் 500
முத்தேகத்திலே
சுத்தசன் மார்க்கத்திலே எனது
இத்தேகத்திலே அமர்ந்
தருளும் இராமலிங்கம்
சக்தியிலே பக்தியிலே
சித்தியிலே முக்தியிலே
உக்தியிலே உலகிலே
உயர்ந்த இராமலிங்கம்
அன்றுமிலே இன்றுமிலே
என்றுமிலே இரண்டுமிலே
ஒன்றுமிலா ஒன்றிலே
ஒன்றிய இராமலிங்கம்
தானுமிலே வானுமிலே
தனக்கோர் உவமையிலே
நானுமிலே அவனுமிலே
நாதாந்த இராமலிங்கம்
எண்ணல்ல எழுத்தல்ல
ஆண்ணல்ல பெண்ணல்ல
கண்ணல்ல விண்ணல்ல
கருணை இராமலிங்கம் 510
சொல்லல்ல பொருளல்ல செம்பல்ல கல்லல்ல
கொல்லல்ல கோயிலல்ல
காயநேய இராமலிங்கம்
தாழ்வல்ல உயர்வல்ல
தானும் ஓருருவல்ல
ஊழ்அல்ல விதியல்ல
ஊழி இராமலிங்கம்
அகரநிலை தகரநிலை உகரநிலை சிகரம்யாவும் 23062014
நிகரான எங்கள் நாயகன்
இராமலிங்கம்
அருள்நிலை பொருள்நிலை
இருள்நிலை யாவும்
தருமொரு நிலையான
தயாளன் இராமலிங்கம்
பண்மை வெளியுள்
பரமன் நடமிடும்
உண்மை வெளியான உருவே
இராமலிங்கம் 520
இயன்ற விளக்கங்கள்
எவ்வகை ஆயினுமது
இயற்கை விளக்கமான
இறை இராமலிங்கம்
எவ்வுயிர் சுகங்களும்
அவ்வுயிர் துன்பங்களும்
இவ்வுயிர் அறியுமென்ற
இன்ப இராமலிங்கம்
மலமகன்று உள்ளகத்தில்
மலர்ந்து விளங்கும்
உலகெலாம் அறிய உவந்த இராமலிங்கம்
மறையாக மங்கள் மதத்தலை வர்கள்பேசா
இறைவனுக்கு நல் இணையாம் இராமலிங்கம்
கற்பங்கள் பற்பலக் கடக்கினும் நின்றோங்கும்
பொற்சபை யளித்த பொன் இராமலிங்கம் 530
அகவடிவை கணத்தே அனக வடிவாக்கி
சுகவடிவம் பெற்ற சுடர் இராமலிங்கம்
சொன்னது இறைச் சொற்களேஎன அவனது
பொன்னொளி கண்ட புண்ணிய இராமலிங்கம்
பல்லாய மதங்களிலே பாசம் வைத்தக்
கல்லாய மனங்களைக் கரைத்த இராமலிங்கம்
தன்னொளி வெளியில் தயவெனும் இறையை
அன்பெனும் பிடியுள் அடக்கிய இராமலிங்கம்
பிரிவிலா நிலையில் பரமனுடன் கூடித்
திரிபிலாப் பொருளாய்த் திகழ் இராமலிங்கம் 540
மறவேன் என்ற மந்திரத்தை மறந்தே
அறவோன் மந்திரம் ஓதிய இராமலிங்கம்
மொய்த்த பாவையாசை மெய்யன் ஆசைவர
பொய்யுலக ஆசையும் போமென்ற இராமலிங்கம்
மருதூரில் பிறந்த மாணிக்கமே எங்கள்
கருவில் கலந்த குருவே இராமலிங்கம்
சிரத்தில் அமர்ந்த சிற்சபை ஜோதியனே
பரத்தி லொரு பெரியனே இராமலிங்கம்
இகத்தே பரத்தை இனிதேபெற்றுக் கலந்து
புகழெலாம் பெற்ற பெரும்பதி இராமலிங்கம் 550
அன்பெலாம் நிறைந்து உயிரெலாம் விளங்கி
இன்பெலாம் புரிந்த இறைவா இராமலிங்கம்
வெல்லமே எந்தன் வேந்தனே உண்மைச்
செல்வமே எந்தன் செல்லமே இராமலிங்கம்
காயினும் இனியக் கனியே அன்புத்
தாயினும் பெரிய தந்தையே இராமலிங்கம்
வாங்கும் பிறவிதோரும் வந்தெனை யாண்டுத்
தாங்கும் ஒருமைத் தலைவனே இராமலிங்கம்
சினம் அடக்கியே சிங்கார அகத்துள்ளே
இனமாகிக் கூடும் மணமே இராமலிங்கம் 560
விழைந்த காமமும் வன்சொல் புகலும்
பிழையும் பொருத்தருள் புரியும் இராமலிங்கம்
மந்தையில் செல்லும் மனதை தனிக்கச்செய்து
சிந்தையில் கலந்த சொந்தமே இராமலிங்கம்
திருநாவுக் கரசாமென் தந்தையின் கண்ணே
அருளாய் அமர்த்தி யாண்ட இராமலிங்கம்
தந்தையிடம் இருந்து தாயாம் மல்லிகாவிடம்
பந்தமுற கொணர்ந்து பேணும் இராமலிங்கம்
ஊரார் இகழாது ஊமைஎனை பேசவைத்து
இராமலிங்க அகவல் ஓதிய இராமலிங்கம் 570
தண்டபாணி என்பெயரைத் தள்ளி உன்பெயரான
பண்டமானேன் எனைப் பெற்ற இராமலிங்கம்
சென்னை மும்பைச் சென்று பணிசெய்யினும்
என்னை வடலூர் அழைத்த இராமலிங்கம்
திருமண பந்தத்தைத் தடுத்தே எனைப்புணர்ந்து
ஒருமணம் புரிந்த என்னவன் இராமலிங்கம்
கற்புடைப் பெண்எனைக் கற்பம் பலகழியினும்
அற்புதமாய் கலந்தே அருளும் இராமலிங்கம்
காமத்தில் உயர்ந்தோனை காருண்ய வழிநிறுத்தி
சாமத்தில் கூடி சுகமளிக்கும் இராமலிங்கம் 580
மாய உலகிலோர் மண்ணாசை மறக்கச்செய்தே
காய சித்தியருளிய கருணை இராமலிங்கம்
பொன்னாசை அறச்செய்து பொற்சபை யளித்த
பொன்னார் மேனியன் பரமன் இராமலிங்கம்
நானென்பதை நீஇருக்க நினையேன் அன்பே
தானென்பதை உணர்த்தி தாயான இராமலிங்கம்
என்னுடல் பொருள் ஆவிஎன்றொன்று மில்லை
உன்னுடல் உறவு அளித்த இராமலிங்கம்
கொடும்முன் கொடுத்ததாய்க் கூறும் பழக்கம்
தொடுத்து வந்தெனை தாங்கிய இராமலிங்கம் 590
தூக்கமும் சோம்பலும் தூக்கி எறிந்தே
ஏக்கமும் நீக்கிய ஏந்தல் இராமலிங்கம்
எங்கேநான் செல்லினும் என்னுள் இருந்து
அங்கே எனை யாளும் இராமலிங்கம்
நாயேனென் வாழ்வில் நோயற்று வாழவே
தேயேனுன் தேனை தந்த இராமலிங்கம்
நரைதிரை மூப்புக்கு நாயகன் நீயேகாப்பு
கரை காணா கதிரோன் இராமலிங்கம்
மரணப் பெரும்பிணி மறந்தும் வராதவகை
சரண மடைந்தேனுனை சாமி இராமலிங்கம் 600
பாடையிலே படுத்தாலும் பாங்குடனே எழுந்து
மேடையிலே ஆடுவேன் மாய இராமலிங்கம்
இடுகாட்டுப் பிணமானால் இப்பூமி சுற்றுமோ
விடுமூச்சைப் பிடித்தேன் வசமாக இராமலிங்கம்
இத்தேகத்தை புதைப்பார் உளரோ சொல்லாய்
அத்துவித மயமானேன் அரசே இராமலிங்கம்
மண்ணுறுமோ இத்தேகத்தை மாயன் அருளாலே
விண்ணுறுமே எந்தை விமலா இராமலிங்கம்
காலத்தைக் கடந்தேன் காலாதீத னானேன்று
தாளத்தை போடென்ற தயாள இராமலிங்கம் 610
இத்தேகந் தனில் இழியா நலங்கொடுக்கும்
முத்தேகம் கண்டேன் முத்தா இராமலிங்கம்
சித்தொன்றும் அறியேன் சித்திவளாகச் சித்தனின்
வித்தொன்றை அறிந்தேன் வித்தக இராமலிங்கம்
வாழ்வில் ஏற்றம் விரும்பேன் இரக்கமும்
தாழ்வும் தயவும் தந்தருளும் இராமலிங்கம்
இரக்கமும் உயிரும் ஒன்றெனக் காட்டி
சரம்பிரியா சிரமான சோதி இராமலிங்கம்
அயல வருடனே அடிக்கடி சண்டையிட்ட
தயவில்லா கடியேனை தாங்கிய இராமலிங்கம் 620
மணம் புரியவே முயன்றேன் அந்தோஎந்தன்
குணம்புரிந்தது எனைக் காத்த இராமலிங்கம்
மெய்மொழிப் பொருளை மருளும் எனக்கே
அய்யா செப்புவாய் அப்பா இராமலிங்கம்
எந்தாய் என்னறிவே என்றிட சித்தெல்லாம்
இந்தா என்றளிக்கும் அம்மா இராமலிங்கம்
நஞ்சான பகையும் நமைக்கண்டு அஞ்சும்
தஞ்ச மெனக்கருள் தலைவ இராமலிங்கம்
உலகெலாம் என்பதின் உண்மைக் கண்டு
மலர்ந்த சுகந்த மலரே இராமலிங்கம் 630
மறவாத உளத்தில் மணிமாட இடத்தில்
இறவா வரம் ஈனும் இராமலிங்கம்
சன்மார்க்க உலகிலே சத்திய நாயகனாம்
அன்பு மயமான அகமே இராமலிங்கம்
மகா மந்திர மதியே எதனினும்
பகா தேகப் பதமே இராமலிங்கம்
காலன் கணவனைக் கொண்டப்பின் மகளிர்
தாலி வாங்குதலை தடுத்த இராமலிங்கம்
முறைவைத்து குழவிக்கு முயன்று காதுகுத்தல்
இறை சம்மதம் இலைஎன்ற இராமலிங்கம் 640
விழித்து தனித்து வாழ்வோர்க்கு என்றும்
அழியா இளமை யளிக்கும் இராமலிங்கம்
காலச்சக்ரன் என்னும் காலாதீதன் மாயையான
காலத்தை ஊடுருவிக் காணும் இராமலிங்கம்
விரைந்து சன்மார்க்கம் வாருங்கள் என்றே
கரைந்து கூட்டும் காகம் இராமலிங்கம்
குணத்தை நமக்குக் கொடுத்து தான்படைத்த
பணத்தை எறிந்த பண்பன் இராமலிங்கம்
உமியான மொழிகளுள் உயர்ந்த எம்மொழிக்கும்
தமிழ் மூத்த தந்தைஎன்ற இராமலிங்கம் 650
தன்னை வணங்கினால்.
தலைவனுக்கு இழுக்கென
என்னை சாமி எனக்கூடாதென்ற
இராமலிங்கம்
நினைந்து நினைந்து
நீடூழிவாழ இவ்வுலகில்
அனையா தீபம் ஏற்றிய
இராமலிங்கம்
வினையால் பசியே
வரினும் புசித்துபோக்கவே
அனையா அடுப்பு அளித்த
இராமலிங்கம்
மறவேன் என்ற மந்திரத்தை
மறந்துயர்ந்த
அறவோன் எங்க ளன்பு
இராமலிங்கம்
வேதாந்த சித்தாந்த
வேகாத மறைகளையும்
ஓதாது உணர்ந்த உத்தமர்
இராமலிங்கம் 660
நினைத்தப் பொய்யில்
நிறைந்த மதங்கள்
அனைத்தையும் விட்
டேறிய இராமலிங்கம்
உளவறியா நிலையில்
உவந்து தண்ணீரில்
விளக் கேற்றிய விமலன்
இராமலிங்கம்
தண்ணீர் விளக்கெரித்து
திருஅருட்பாப் பாடி
கண்ணீர் மல்கிய
கந்தன் இராமலிங்கம்
எறிபவைகளை எல்லாம்
எரித்து கடவுள்நிலை
அறிந்து அம்மயமான
இறை இராமலிங்கம்
சித்தெல்லாம் பெற்று
சகத்தில் கருணையாலே
செத்தாரை எழுப்பிய
சத்தியன் இராமலிங்கம் 670
மாளும் மனிதரை மாளாது காத்து
ஆளும் கருணைக் கரசே இராமலிங்கம்
சதகோடி அனுபவ சாதனைகள் சொல்லி
அதனை அருட்பாவில்
அமைத்த இராமலிங்கம்
நிதமும் நம்பிள்ளை
நமக்கேயென வேலாயுத
முதலியாரை ஆண்ட
முகிலன் இராமலிங்கம்
விட்டு தனிக்க வருவார்குரு
என்றிருந்தகல்
பட்டு ஐயாவை பணித்த
இராமலிங்கம்
சந்தமிகு சன்மார்க்கநூல்
சீர்பெற பாடுவாயென
கந்தசாமி பிள்ளையை
குறித்த இராமலிங்கம் 680
பிரபந்தத் திரட்டை
சன்மார்க்கத்தில் ஏழாம்
திருமுறை என்று
தருகின்ற இராமலிங்கம்
ஆதியும் அந்தமும்
அறிந்து எல்லாம்வல்ல
ஜோதியுள் ஜோதியுள்
ஜோதி இராமலிங்கம்
அருவாய் இருந்து
ஆன்ம பிரகாசமான
புருவ மத்தி புருடன்
இராமலிங்கம்
பிரகாசமாய் இருந்து
பரவெளியில் விளங்கும்
பரமாகாச பரம் பரமே
இராமலிங்கம்
அகமும் புறமும்
அகப்புறமும் புறப்புறமும்
கடவுள் பிரகாசம்
கண்ட இராமலிங்கம் 690
ஊன்றிய ஜீவகரண இந்திரிய
காட்சிவிடுத்து
ஆன்மக்காட்சி காண்க
என்ற இராமலிங்கம்
இசையும் நடனமும்
ஆன்மாவின் உள்ளொளி
அசைவே நடராஜர் என்ற
இராமலிங்கம்
இனமான சன்மார்க்கிகள்
இறைவனை நினைத்து
தினம் ஆறுமுறை தொழுகவென்ற
இராமலிங்கம்
தொன்னத்தாறு அகத்
தத்துவங்களே நமது
பொன் னான பிண்டமென்ற
இராமலிங்கம்
ஐந்தொழில் யாவும்
எக்காலமும் தடையுறாது
விந்தை செயல் விக்கும்
இராமலிங்கம் 700
கற்பத்திற்கு ஒருபிறவி
காணும் ஆன்மாவென
கற்பித்த மெய் கணக்கன்
இராமலிங்கம்
சரமோடும் மனிததேகமே
சுவர்க்கம் மற்றும்
நரகம் என்ற நல்லோன்
இராமலிங்கம்
தத்துவக் கெடுதியால்
தேகநரை ஏற்படுமென்ற
வித்தக சித்த வைத்தியர்
இராமலிங்கம்
ஆன்ம அறிவால் அறிவதே
கடவுளென்று
தான் அறிந்த தயவன்
இராமலிங்கம்
பக்குவ ஆன்மாவிடம்
பரமன் காரியப்பட
அக்கனமே முத்தேக
மாகுமென்ற இராமலிங்கம் 710
செயற்கைக் குணமாம்
சினம்வெகுளி காமமதை
முயன்று விடுகவென்ற
மனிதன் இராமலிங்கம்
இக்கிரக ஜீவன்மனித
ஆக்கையில் இறைவிளங்க
விக்கிரக விளக்கம்
ஜாலமென்ற இராமலிங்கம்
பால்மயக்க இன்பம்போல்
புகன்ற பலசமயமத
நூல்களின் உண்மை
நயந்த இராமலிங்கம்
அறுபத்துமூன்று
நாயனர்களும் ஆழ்ந்த தத்துவ
முறும் கதைகளே எனும்
இராமலிங்கம்
ஆழ்வாரும் நாயன்மாரும்
உண்மையில் இலர்
வீழ்புராண புளுகென்ற
வீரர் இராமலிங்கம் 720
தயவு வடிவமான தேகிகளே
தேவர்களென்ற
நயந்த நம் நன்னன்
இராமலிங்கம்
ஈன்ற குணம்நாலான
அப்பு தத்துவங்களே
நான்கு வேதமென்ற
நாதன் இராமலிங்கம்
தியாகம் செய்வோரை
தத்தெடுக்கும் மார்ச்சால
நியாய குரு நாயகன்
இராமலிங்கம்
பேதப் பேய்களை பற்றற
விடச்செய்யும்
காதல் செய் கனியாம்
இராமலிங்கம்
விருப்பு வெறுப்பற்ற
வெண்மையே என்
இருப்பு என்ற அய்யா
இராமலிங்கம் 730
தன்னையும் தன் தலைவனையும்
காட்டி
புன் னையும் பொன்னாக்கும்
இராமலிங்கம்
எடுத்தப் பிறவிதனில்
அமுதமளித்து முத்தேகம்
கொடுக்கும் முதற்
கருவியே இராமலிங்கம்
மறை பொருளாம் மன்னவன்
நிலையறிந்து
இறை ஏகம் அனேகமென்ற
இராமலிங்கம்
பெண் மண் பொன்னாசை
விடச்செய்து
விண்ணாசை யளிக்கும்
வரம் இராமலிங்கம்
கள்காமம் கொலை களவுபொய்
ஐந்தும்
தள் ளென்று தனித்த
இராமலிங்கம் 740
இறக்கச் செய்வதே
இறை சோதனைஎன
உறக்கம் தவிர் என்ற
இராமலிங்கம்
ஆண்டவன் அருளுற
இடைவிடா முயற்சி
வேண்டு மென்ற வடலூர்
இராமலிங்கம்
ஆகாரத்தில் இச்சை
இன்றி அழுதழுது
ஆகாயனை பார் என்ற
இராமலிங்கம்
தொழிலுறும் உலகில்
தன்னைக் காட்டாது
ஒழிக்க வேண்டு மென்ற
இராமலிஙகம்
நமதுஉள்ளும் புறமும்
நற்றுணையாய் வள்ளல்
அமர கவலை ஏன்னென்ற
இராமலிங்கம் 750
ஓராயிரம் ஜென்மமெடுத்து
அறியும் யறிவை
ஓர்கணத்தே ஓதா துணர்ந்த
இராமலிங்கம்
உபயஇன முண்டாக்கி
அதில் அகஇனத்திற்கு
அபயம் விரைந் தளிக்கும்
இராமலிங்கம்
சமயமதங்கள் கடந்தே
சுத்த சன்மார்க்கம்
அமயு மென்ற அன்பு
இராமலிங்கம்
மர்மங்களை அம்பலமாக்கி
முத்தேகம் பெற்ற
சர்வ சித்தி சத்தியன்
இராமலிங்கம்
சிற்சபை பொற்சபை
ஞானசபையாம் படிமூன்றில்
விற்பத மெய்திய
வண்ணன் இராமலிங்கம் 760
பெரியோரென பெயர்
பெற்றோரும் தாயுமானவரும்
இரண்டரக் கலக்க
வில்லைஎன்ற இராமலிங்கம்
பேசாதக் கலையெலாம்
பேசியே பற்றொழித்து
ஆசாரம் விட்டேறிய
ஆசான் இராமலிங்கம்
தலைவனைத் தொழும்
தொழிலே கடமையாக
அலைகடல் கடந்த ஓடன்
இராமலிங்கம்
மூவரோடு யாவரும்
மூடத்தரமாதலால் சமயத்
தேவர்களை வழிபடா
தேவன் இராமலிங்கம்
வழுக்கும் மார்க்க
வகைசெல்லாது சன்மார்க்க
ஒழுக்கம் ஒழுகி
ஓங்கிய இராமலிங்கம் 770
சாகாக் கல்வியே
சன்மார்க்க முடிபு
சாகாத் தலை சதுரன்
இராமலிங்கம்
சாகா தவனே சன்மார்க்கி
என்றே
வேகாக் கால் விளக்கும்
இராமலிங்கம்
ஏகாந்தத்தில் ஊரும்
அமுதத்தை அருந்திப்
போகாப் புனல் புணர்ந்த
இராமலிங்கம்
ஒருநாள் தூக்கம்
ஒருமணிநேரமானால் ஆயிரம்
வருடம் ஆயுள் வருமென்ற
இராமலிங்கம்
எப்போதும் சலியாமல்
அருளாய் நிற்றலே
இப்போத சாகாக்கல்விக்கு
ஏதென்ற இராமலிங்கம் 780
மார்க்க சமயமதங்களை
முற்றும் விட்டோர்க்கே
ஈர்க்குமாம் சன்மார்கம்
என்ற இராமலிங்கம்
கான அறிவாம் கொலைபுலை
அற்றோர்க்கே
ஞானஅறிவு தரும்
ஞானி இராமலிங்கம்
நான்கு பதவியடைய நான்கு ஒழுக்கங்களை
ஈன்ற வள்ளலாம் ஈசன் இராமலிங்கம்
குறையுடையோர் பசி கருதி அன்னமிடுவோரே
இறைவனா மென் றுரைத்த இராமலிங்கம்
சத்துவ முடையோன் சமய சன்மார்க்கியென்ற
சத்திய வாக்கு சொன்ன இராமலிங்கம் 790
நிர்குணம் நிற்போர் மதசன்மார்க்கியென்ற
வர்த்த மான வசீகரர் இராமலிங்கம்
சத்தாகிய வழியாகி சன்மார்க்க நிலைய
எத்தன் என் னப்பன் இராமலிங்கம்
ஆறாந்தத்தை மருவி அழகிய துரியநிலையை
கூறுமிந்த சமரச மென்ற இராமலிங்கம்
கடவுள் விளங்க காரணமாக தீபமுள்ளதென்ற
வடல்பதி வாழ் வள்ளல் இராமலிங்கம்
திருநிலை யறிந்தே திருநீறு அளித்தும்விடுத்த
இரு நிலை இனியன் இராமலிங்கம் 800
பொன்மை கால்பங்கு பகிர்ந்தொரு வெண்மை
ஆன்மக் கொடி ஏற்றிய
இராமலிங்கம்
குறித்த பரிபாஷை
களெல்லாம் வகரதகரத்தால்
அறிந்த ஆன்ம அனுபவமென்ற
இராமலிங்கம்
சாதனம் கடந்த சாத்தியர்களே
சுத்ததேகிகளென்ற
நாதனடி பரமாகாச
நேயனடி இராமலிங்கம்
நன்மார்க்கம் நான்கில்
நான்காவது மார்க்கமாம்
சன்மார்க்க மதை
சான்ற இராமலிங்கம்
சுத்த சன்மார்க்கமே
சடாந்த அனுபவத்தினும்
சத்திய மதை சாருமென்ற
இராமலிங்கம் 810
ஆசானடி மறவாமல் எப்போதும் இருப்பதே
சாகாக் கல்விச் சாலையென்ற இராமலிங்கம்
தூக்கமெனும் சுகமதை துச்சமென விடஆயுசு
ஆக்கம் பெறும் என்ற இராமலிங்கம்
காமக் குரோதம் கொலைபுலை தவிர்த்தோர்க்கு
ஏமச் சித்தி அளிக்கும் இராமலிங்கம்
காதல் கோட்டைக் கட்டி களித்தங்கே
சாதல் இன்றி இருக்கும் இராமலிங்கம்
ஜீவனிடம் தயவும் ஜோதியிடம் அன்பும்
ஆவர்களே சன்மார்க்கி எனும் இராமலிங்கம் 820
கருணையும் சிவமும் காணும் பொருளென
அருளிய எம்முயிர் உயிராம் இராமலிங்கம்
உலகெலாம் வாழ உள்ளமதில் பிரார்த்தனை
நிலவுவதே நன் நலமென்ற இராமலிங்கம்
நான்பெற்றப் பேற்றை நிலவுலகம் பெறவே
வானிடத்து வேண்டிய வள்ளல் இராமலிங்கம்
சர்வ ஜீவதயவுடன் சர்வவல்லமை பெறமானிட
சரீரம் நல்கிய சுவர்ண இராமலிங்கம்
ஆசாரங்கள் அழிய உயிரரக்கம் பெருகுமென்ற
பேசாத சித்து பெற்ற இராமலிங்கம் 830
எதிலும் பொதுநோக்கம் அதிலும் அருள்நோக்க
மதி பெற்ற மதியன் இராமலிங்கம்
உள்ளம் நெகிழ்தலே உண்மை பக்திஎன்று
கள்ளத்தை கடந்த கடவுள் இராமலிங்கம்
ஆன்ம நெகிழ்ச்சியே உண்மை அன்புஎன்று
சான்று அளித்த சத்தியன் இராமலிங்கம்
தரும முடையான் தேகநட்ட மடையானென்ற
தருமச் சாலை தலைவன் இராமலிங்கம்
இறைவனின் பெருமையை இம்மனிதரிடம் பேச
நிறைந்த இன்பம் நீடுமென்ற இராமலிங்கம் 840
இம்மனிதனின் சிறுமையை இறைவனிடம் பேச
நிம்மதி வாழ்வில் நிறையுமென்ற இராமலிங்கம்
தீபமில்லா இடத்தில்
தூங்கினால் ஆன்ம
ஆபத்து நேரும் என்ற
இராமலிங்கம்
நெற்றிக் கண்ணை
நலம்பெறத் திறந்து
வெற்றி காண விழைந்த
இராமலிங்கம்
எந்நாளிலும் நமது அறியாமையை வாங்க
வந்த நீல வியாபாரி இராமலிங்கம்
கடவுளிடம் நீங்காநினைவே கோசத் தடிப்பை
அடக்கு மருந் தென்ற இராமலிங்கம் 850
பெண்களுக்கும் யோகங்கள் பயிற்று விக்க
எண்ணங் கொண் டேகிய
இராமலிங்கம்
கரிசாலை தூதுளை
காயகற்ப மென்றுதின
சரியாய் உண்ண சொன்ன
இராமலிங்கம்
கடை விரித்தோம்
கொள்வாரில்லை என
விடை கொடுத்த வள்ளல்
இராமலிங்கம்
இறையுடன் வருவேனென
இரண்ட ரையில்
மறைந்து காப்பிட்ட
முருகு இராமலிங்கம்
சன்மார்க்க பதியை
சகத்திலே காட்டுவித்து
துன் மார்க்க துயரறுத்த
இராமலிங்கம் 860
உத்தம மனிதனென்று
உரைத்த சந்நியாசிக்கு
புத்தி சொல்லிய
பெருமான் இராமலிங்கம்
திருடனுக்குப் பொருள்
தந்த திருவாளன்
குருவிற்கும் அருள்
கொடுத்த இராமலிங்கம்
உருவ வழிபாட்டின்
உண்மையை ஸ்ரீதரருக்கு
அருளிய பிரம்ம அருவம்
இராமலிங்கம்
சித்திரை மாதத்தில்
சில்லென மழைவருவித்து
முத்திரை பதித்த
மருதூர் இராமலிங்கம்
அசலான செம்புஈய
மவைகளை பொன்னாக்கி
ரசவாதம் செய்த ரட்சகர் இராமலிங்கம் 870
மருதூர் இராமைய்யா
மகனான கருணை
கருணீகர் குலம்
கண்ட இராமலிங்கம்
சின்னக் காவணம்
சிற்றூரில் சின்னம்மையாரை
அன்னையாகப் பெற்ற
அன்பன் இராமலிங்கம்
பாவஞ்செய் மீனவர்களை
பயிர்த் தொழில்
ஏவிய இனிய எங்கள்
இராமலிங்கம்
இறந்த காலத்திற்கு
இலக்கணம் வகுத்த
அறந் தலை அமரன்
இராமலிங்கம்
சந்தை படிப்பான
சாத்திரங்களை விட்டே
சொந்தப் படிப்பை
படித்த இராமலிங்கம் 880
மண்ணின் பொருளும்
மங்கையர் காதலும்
எண்ணா எம் அண்ணா
இராமலிங்கம்
பாழான மடந்தையர்
பால்சிந்தை வைத்து
வீழாது ஞானம் வளர்த்த
இராமலிங்கம்
வாள்விழி மாதர்பால்
வளையாமல் அவன்
தாள் வழி தாழும்
இராமலிங்கம்
முலைக்கு மயங்கி
மாமாயை பற்றி
அலையாது தீப ஒளியான
இராமலிங்கம்
பாவமே உருவாகிய
பாவையர் கண்படாது
காவல் செய்த காவலன்
இராமலிங்கம் 890
கோவைவாய் இதழ்க்
கிச்சை வையாது
சாவை ஓட்டிய சாதகன்
இராமலிங்கம்
குய்யம் காட்டும்
கடினப்பெண் பேய்களை
அய்யன் அருள ஓட்டும்
இராமலிங்கம்
மான்விழிக் காட்டி
மோகத்தைக் காட்டினும்
வீன்போது கழியா
விண்ணன் இராமலிங்கம்
பாவம் யாவும் பழகுறும்
பாழுங்குழியில்
தாவாது அன்பில்
தவழும் இராமலிங்கம்
சிறுநீர் தரும்கொடிய
சீழ்க்கொள் குழியினை
வெறுத்து இருளை
வென்ற இராமலிங்கம் 900
நாற்றக் குழியை
நாடுவோரை வீழ்த்தும்குழி
போற்றாரை ஏற்று
போற்றும் இராமலிங்கம்
பொதிதரும் மங்கையின்
கொங்கை மேல்
மதி செலுத்தா மேலோன்
இராமலிங்கம்
வஞ்ச மடமாதர் வாய்த்ததொரு
போக
மஞ்ச மஞ்சிய மகான்
இராமலிங்கம்
பஞ்சனை இடைக்குள்
பிளந்த வெடிப்பில்
அஞ்சியே விழாத ஆண்மை
இராமலிங்கம்
இளமுலை தழுவ ஏங்கியவர்க்கு
ஏவல்செய்
உளமதை அடக்கி உயர்ந்த
இராமலிங்கம் 910
முலைமுகங் காட்டி
மயக்கிடும் கொடியார்முன்
விலை போகா வில்லன்
இராமலிங்கம்
மங்கையர் புழுக்குழியில்
மயங்கி ஆழாது
அங்கையர் கனி யான
இராமலிங்கம்
அண்டமும் அதிலுறும்
உயிர்களும் பரம்பர
மணியால் பார்த்த
மாதவன் இராமலிங்கம்
பராபர மணியால் பிண்டமும்
அதிலுறும்
சராசர உயிரையும்
சான்ற இராமலிங்கம்
எண்ணியதை எண்ணியாங்
கருளஅரும் பெறன்
மணியை அருளால் மீட்டும்
இராமலிங்கம் 920
அண்டத்து உயிர்களை
ஆட்டிவைக்கும் ககனமா
மணியை அடித்து மகிழும்
இராமலிங்கம்
சரவொளி மணியால்
சகத்துயிர்களை ஆட்டி
நரகிடை மீட்கும்
நாதன் இராமலிங்கம்
கலைநிறை மணியால்
காணா உலகெலாம்
அலையாய் உலாவும்
அமரன் இராமலிங்கம்
சரஅசர உயிரின் சரமான
வித்தகமணியை
அரசராய் பெற் றாளும்
இராமலிங்கம்
சித்திகளை நடத்த
சித்து செய்மணியை
புத்தியில் ஏற்றிய
புனிதன் இராமலிங்கம் 930
அழியா வாழ் வீணும்
வளரொளிமணியை
இழியாது பெற்று
ஓங்கும் இராமலிங்கம்
களித்து நடனமிட
குளிகைமணி ஒன்பதையும்
அளித்து எனையும்
ஆளும் இராமலிங்கம்
பொய்யர் இடத்திலும் புலையர் இடத்திலும்
மெய்யர் புகுதல்
மறுத்த இராமலிங்கம்
நல்லோரைக் காணுமோர்
நாழிகையில் பாவ
மெல்லாமும் போகு
மென்றஎன் இராமலிங்கம்
உடலை பலருங்கூடி
இடுகாட்டில் வைக்காமல்
வடலை அடைந்த வானன்
இராமலிங்கம் 940
சாகாக் கல்வியெலாம்
சழக்கற கற்பித்தெனையும்
ஆகாயன் என ஆண்ட
இராமலிங்கம்
இல்லையென உன்பால்
உரிமையாய்க் கேட்கஎன்
அல்லலை யொழித்த
அப்பர் இராமலிங்கம்
சதகோடி அண்டமும்
சந்நிதிமுன் நானாக
இத மொன்று அருளும்
இராமலிங்கம்
ஆருகச் சமயக்காட்டை
அழித்தெனை சன்மார்க்க
பாருக் குள்ளே பதித்த
இராமலிங்கம்
வாய்த் திறந்தோர்
வார்த்தையும் சொல்லாமலே
தாய்ப் போலெனை தாங்கும்
இராமலிங்கம் 950
பாரினில் பாசமெலாம்
போக்கி என்னை
வாரி வெளுத்த வண்ணா
இராமலிங்கம்
வெள்ளை நீறணிந்து
வேடமிடாமல் வெள்ளை
உள்ள கத்தை அளித்த
இராமலிங்கம்
ஊழை யகற்றும் உளவு
தெரிவித்திந்த
ஏழையை சீமா னாக்கிய
இராமலிங்கம்
மங்கையர் புணர்ச்சி
மயங்கி நேராமல்
இங் கென்னை ஆளும்
இராமலிங்கம்
பொருள்தேடும் நாயாய்
பார்த்தும் எனை
அருள் தேட அழைக்கும்
இராமலிங்கம் 960
நாயும் மதியா நெடுவறுமை
வந்தாலுமெனை
மாயும் நிலை மீட்கும்
இராமலிங்கம்
மகிழ்வுசெய் பெருவாழ்வு
மகிழ்ந்து தந்தெனை
நெகிழ்வு செய்து
நாடும் இராமலிங்கம்
வழியிது என்றே வடலூர்
வந்தெனக்கு
அழியா திருக்கும்
அடிநல்கும் இராமலிங்கம்
கணப் பொழுதும்நான்
கலங்கிடாது எனை
மணந்து இன்புறும்
மணவாளர் இராமலிங்கம்
இறப்பில்லாது இவ்வுடல்
இங்கிருக்க வேண்டி
மறப் பில்லா மனமருளும்
இராமலிங்கம் 970
சதியில் விழாது
சூதும் கவ்வாதெனை
விதி யறிந்து வேதித்த
இராமலிங்கம்
சீழ்மதக் குழிபுகாது
சீர்சன்மார்க்கக் கடலில்
புகவைத் தெனை புணரும்
இராமலிங்கம்
மலமான காமமதில்
மறந்தும் விடாதெனை
நலமோடு நீடுவாழ
நவின்ற இராமலிங்கம்
பார்போற்றும் ஞானிகள்
பலரிருக்க என்னை
ஊர் போற்ற உளம்கலந்த
இராமலிங்கம்
பரிசளிப்பாய் என்றுனையே
பாடு மென்னை
சரிப் படுத்திச்
சாரும் இராமலிங்கம் 980
கன்னியருடன் கூடிநான்
கற்பழிந்து நில்லாமல்
உன்னோடு கற்பழிய
ஆசையென் இராமலிங்கம்
நடுநெற்றியில் நீரிருக்க
நல்லநீறெ தற்கென
விடுத்த எனையும்
விடாத இராமலிங்கம்
கொலைபுலைக் குறவான
கோவத்தை விட்டுன்
வலையுள் சிக்க வைத்த
இராமலிங்கம்
அகங்காரம் அவாவெகுளி
இவையற் றெனைபல
யுகங் காண யுத்தியளித்த
இராமலிங்கம்
எல்லாம் பெற்றேன்
உன்னிடம் நான்
இல்லா திருக்க இயற்றிய
இராமலிங்கம் 990
பொய்யன் எனினுமுனை பாடிய எனை
அய்யன் அடி ஆழவைக்கும்
இராமலிங்கம்
கரும்பாய் கனியாய்
கற்கண்டாய் அகத்தில்
அரும்பி உள்ளே இனிக்கும்
இராமலிங்கம்
அருட் பெருஞ்ஜோதி
அகவல் அருளியிங்கு
இருள் நிலை அகற்றும்
இராமலிங்கம்
அருட் பெருஞ்ஜோதி
அட்டகம் அருளியிங்கு
கருப் பொருள் காட்டும்
இராமலிங்கம்
தனிப் பெருங்கருணை
தனித்தலைமை பதியை
கனிந் துருகிக்
கூட்டும் இராமலிங்கம் 1000
அருட் பெருஞ்ஜோதி
அடைவு அருளியிங்கு
மருள் நீங்கி மகிழும்
இராமலிங்கம்
அருட்பெருஞ் ஜோதி யாகியஇறை தாம் 02102014
ஒருவனே என்ற அருட்பெருஞ்
ஜோதி
இருள்சூழ் உலகம்
ஒளிபெற இராமலிங்கரை
உருசெய் தளித்த
அருட்பெருஞ் ஜோதி
சுத்த சன்மார்க்கச்
சித்தியினைக் கொடுத்தே
உத்த மனாக்கும்
அருட்பெருஞ் ஜோதி
உயர்நெறிக் காட்டி
உணர்ச்சியில் ஓங்கும்
இயற்கை உண்மையாம்
அருட்பெருஞ் ஜோதி 1010
கன்ம வினை கெடுத்து
இயற்கை
இன்ப மளிக்கும்
அருட்பெருஞ் ஜோதி
தருமச் சாலை தருமங்களில்
இறை
யருளைத் தருகின்ற
அருட்பெருஞ் ஜோதி
தூக்கமும் ஏக்கமும்
தவிர்த்து நீடுவாழும்
ஆக்கையை அளிக்கும்
அருட்பெருஞ் ஜோதி
சுகங் கொடுத்து
சதகோடி பொருள்கொடுத்து
அகஇனங் காக்கும்
அருட்பெருஞ் ஜோதி
புலை தவிர்த்தோர்க்கே
பரிந்து அமுத
அலை எழுப்பும் அருட்பெருஞ்
ஜோதி 1020
அன்பான உயிரெலாம்
என்னுயிர் என்போர்க்கு
இன்னுயிர் ஆகும்
அருட்பெருஞ் ஜோதி
நலமெலாம் அடைய நமக்குள்
தத்துவ
உலகெலாம் அமைத்த
அருட்பெருஞ் ஜோதி
பூரண அறிவைப் பெற்றார்க்கு
என்றும்
ஆரண மாகிய அருட்பெருஞ்
ஜோதி
கள்ள மனைத்தும்
கடந்தோர்க்கு என்றும்
உள்ளிருந் தருளும்
அருட்பெருஞ் ஜோதி
மூப்பைத் தடுக்க
முயன்றோர்க்கு நல்லதோர்
ஆப்பை கொடுக்கும்
அருட்பெருஞ் ஜோதி 1030
நரைதிரை கெடுதிகள்
நாடாது உடலுக்கோர்
இரையான மருந்தாம்
அருட்பெருஞ் ஜோதி
அழுக்கில்லா மனதில்
ஆடுகின்ற அப்பனாம்
இழுக்கில்லா இறையாம்
அருட்பெருஞ் ஜோதி
கண்ணொளிப் பார்வையாய்
காதுறு ஒலியாய்
எண்ணொடு எழுத்தாம்
அருட்பெருஞ் ஜோதி
தமிழெனும் மொழியில்
தவழ்ந்து வந்தருளும்
அமிழ்தினும் அமிழ்தாம்
அருட்பெருஞ் ஜோதி
மதமான இருளை மதியாது
அருட்பெருஞ்சுடர்
உதயத்தைக் காட்டும்
அருட்பெருஞ் ஜோதி 1040
தட்டும் தாளமும்
தாலாட்டும் இராகமும்
எட்டும் இரண்டுமான
அருட்பெருஞ் ஜோதி
இன்பங்கள் இசைந்து
இமயமென உயரும்
அன்பெனும் சுகமாம்
அருட்பெருஞ் ஜோதி
கணுவாக இணைத்து
கதிராக ஒளிரும்
அணுவான அருவாம்
அருட்பெருஞ் ஜோதி
மண்வகை கல்வகையால் முயங்கிக் கோள்கள்
எண்ணற்று அமைத்த அருட்பெருஞ் ஜோதி
பயிர்விளை மண்ணில் பிறவி எடுக்கும்வரை
உயிர்களை மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி 1050
காற்றாகி கனலாகி கதிராகி மாயாக்கால
ஊற்றாகி உழலும் அருட்பெருஞ் ஜோதி
ஏகாந்த இடமாம் ஆதியற்ற பரமாகாச
ஆகாய நிலையாம் அருட்பெருஞ் ஜோதி
புருவ நடுவில் பொலிந்து நடமிடும்
அருவச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
சம்பூரண மயமாய் சன்மார்க்க நிலையாய்
அம்பலத் தாடும் அருட்பெருஞ் ஜோதி
கண்ணிமை நேரமும் கருணையால் நமக்கு
உண்மை உரைக்கும் அருட்பெருஞ் ஜோதி 1060
நிரந்தர ஆட்சியில் நலந்தரு அற்புத
அரசியல் நடத்தும் அருட்பெருஞ் ஜோதி
பயிரெலாம் செழிக்க பார்தனில் பிறக்கும்
உயிரெலாம் வணங்கும் அருட்பெருஞ் ஜோதி
தளர்வடையா மனதில் துளிர்விட் டோர்
உளவு சொல்லும் அருட்பெருஞ் ஜோதி
குறிவைத்து வாழ்வார்க்கு குருவாக வந்து
அறிவுறுத்து மப்பனாம் அருட்பெருஞ் ஜோதி
மலமகற்றி நீடுவாழ மக்களுடன் கூடி
உலகம் சுற்றும் அருட்பெருஞ் ஜோதி 1070
குருட்டாட்டம் நீங்கி குவலயம் ஓங்கத்திரு
அருட்பாவை அளித்த அருட்பெருஞ் ஜோதி
தாழா நிலையருளைத் தரும் பிரபந்தத்திரட்டை
ஏழாம் திருமுறையெனும் அருட்பெருஞ் ஜோதி
கானகப் பாதையைக் கடந்து வயோதிக
ஊனம் தவிர்க்கும் அருட்பெருஞ் ஜோதி
கூடுவிட்டு போகுமுன் கூட்டுவித்து சிரத்தில்
ஆடுகின்ற சிற்றம்பல அருட்பெருஞ் ஜோதி
கூவிப்பிறக்கும் முன்எம் கூட்டினைக்
காத்த
ஆவி உருவான அருட்பெருஞ் ஜோதி 1080
பழுதான மேனியைப் புதைக்கச் செத்தாரை
எழுப்பிடும் அருளான அருட்பெருஞ் ஜோதி
எந்நிலை விரும்பினும் அன்பர்க்கு விரைந்து
அந்நிலை அருளும் அருட்பெருஞ் ஜோதி
புலை கொலை பாதகர்கட்கு பேரருள்
இலை என்னும் அருட்பெருஞ் ஜோதி
வெறுத்துப் பசியால் வாடியோர்க்கு சாலையில்
அறுசுவை அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி
காட்சி கொடுத்து கருணை ஞானசபையில்
ஆட்சி செய்யும் அருட்பெருஞ் ஜோதி 1090
சித்தி வளாகத்தில் சித்தனோடு கலந்திங்கு
எத்திக்கும் தித்திக்கும் அருட்பெருஞ்
ஜோதி
சங்கமதை நாடியோரை சத்தியனாக்கி அவர்
அங்கமதை தங்கமாக்கும் அருட்பெருஞ் ஜோதி
முத்தேகம் அடைவதே முத்தி என்றே
இத்தேகம் நீடுசெயும் அருட்பெருஞ் ஜோதி
சாதிமத குலமும் சாடியே பொய்யென்று
ஓதி உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி
கற்பம் ஒன்றிற்கு கருப்பை ஒன்றீனும்
அற்புதம் செய்யும் அருட்பெருஞ் ஜோதி 1100
மாண்டவன் தாண்டவன் மதச் சாமிக்கெலாம்
ஆண்டவன் நானெனும் அருட்பெருஞ் ஜோதி
கூற்று ஒழியும் காற்றை அளித்தே
ஆற்று படுத்திய அருட்பெருஞ் ஜோதி
மருந்தான தயவை மலர்ந்தவர் நமக்கு
அருந்தவப் பயனாம் அருட்பெருஞ் ஜோதி
கடல்சூழ் உலகிற்குக் கதிரவன்போல் நமது
உடல்சூழ் ஒளியாம் அருட்பெருஞ் ஜோதி
வாழத் தெரியாது வன்பொருள் ஈட்டும்
ஊழல் ஒழிக்கும் அருட்பெருஞ் ஜோதி 1110
காதல் மலர்ந்து கருத்தொ ருமையினால்
ஈதல் செய்யும் அருட்பெருஞ் ஜோதி
இருமை ஒழிந்து உத்தமன் உறவளிக்கும்
ஒருமை நினைவாம் அருட்பெருஞ் ஜோதி
சிந்தனை ஒன்றி சிந்திக்க பெருவாழ்வில்
எந்தனை ஏற்றும் அருட்பெருஞ் ஜோதி
காம மகற்றி காதலுறச் செய்து
ஏம சித்தருளும் அருட்பெருஞ் ஜோதி
பசித்திருந்து உள் பார்க்கச் சொல்
அசிகை தவிர்க்கும் அருட்பெருஞ்
ஜோதி 1120
தனித்தே இருந்து தவம் செய்வார்க்கு
இனிக்கும் இன்பமாம் அருட்பெருஞ் ஜோதி
விழித் திருக்கும் வழிச் செல்வோரை
அழித்தல் கூடுமோ அருட்பெருஞ் ஜோதி
வானத்தின் காட்சிகளை வியந்து நோக்கின்
ஆனந்தம் ஆனந்தம் அருட்பெருஞ் ஜோதி
வல்லானைக் காண விரும்பிஅழக் கடல்
எல்லாம் கண்ணீரோ அருட்பெருஞ் ஜோதி
சித்திப் பெற சித்தனைப் பாடும் எனக்கீன்ற
உத்தியோகம் இதுவோ அருட்பெருஞ் ஜோதி 1130
தூமையில் பிறக்கவைத்து தூய்மை யாக்கி
ஊமைஎனை பேசவைத்த அருட்பெருஞ் ஜோதி
காண்பன யாவும்நடுக் கண்ணால் காணும்
ஆண்மை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
ஜீவகாருண்ய பணிசெய்து ஜீவித்திருக்க
ஆசை
ஆவதெல்லாம் உன்னருளே அருட்பெருஞ் ஜோதி
கண்ணொளி யாகக் காட்சித் தந்தாட
எண்கோனம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அறியாம லிருக்க அருவமாகும் சித்தை
அறிவியல் ஆக்கும் அருட்பெருஞ் ஜோதி 1140
பாழுமுலக வாசனை பாழ்பட விட்டால்
ஏழுத்திரையும் தடையோ அருட்பெருஞ் ஜோதி
சாதாரணன் என்னை சாகாதவன் என்றே
ஆதார மாக்கும் அருட்பெருஞ் ஜோதி
இம்மையும் மறுமையும் இன்றி எடுத்துஎன்
ஐம்புலன் களாகிய அருட்பெருஞ் ஜோதி
நரக உலகிடை நாய்யெனக் குரைத்தேன்
இரவும் பகலுமாய் அருட்பெருஞ் ஜோதி
கதைசொல் பக்தியில் களிப்பவர் கோடி
இதென்ன மாயை அருட்பெருஞ் ஜோதி 1150
அன்பினால் என்னை அழைத்தே என்னிடம்
உன்னைக் கொடுத்தேன் அருட்பெருஞ் ஜோதி
விளைந்த வினையால் விளைத்த விதையாய்
இளைப்பதை தடுக்கும் அருட்பெருஞ் ஜோதி
பகலவன் நினைக்கப் பாடுகின்ற இராமலிங்க
அகவலில் புணர்ந்த அருட்பெருஞ் ஜோதி
நிராதார நிலையளித்து நலம் அளிக்குமே
இராமலிங்க அகவல் அருட்பெருஞ் ஜோதி
நாமபஜனை அகவல் நவின்றால் இங்கு
ஈமக்கடன் உண்டோ அருட்பெருஞ் ஜோதி 1160
இரண்டாயிர மடி அகவலைஓதியே நாழிகை
இரண்டரையில் கலப்பாய் அருட்பெருஞ் ஜோதி
தாய்எனத் தாங்கும் தந்தையாய் காக்கும்
ஓய்வற்று ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி
படிகள் மூன்றும் பார்த்து அதற்கே
அடிமை ஆனேன் அருட்பெருஞ் ஜோதி
இக்கரை கடப்போரை இன்பம் ஊட்டும்
அக்கறை செலுத்தும் அருட்பெருஞ் ஜோதி
சகத்தில் ஓங்கும் சன்மார்க்க சாலைக்கு
அகரப் பதியாம் அருட்பெருஞ் ஜோதி 1170
தகவல் அறிந்து தனித் திருப்போரை
அகழியாய் காக்கும் அருட்பெருஞ் ஜோதி
கசடு போக்கி களித் திருப்போரைஉன்
அசல் என்றாக்கும் அருட்பெருஞ் ஜோதி
கசிந்து உருகாதக் கடவுள் பக்தி
அசிங்கம் இல்லையோ அருட்பெருஞ் ஜோதி
சடங்குகள் இன்றி சத்திய முடையார்க்கு
அடக்கம் தரும் அருட்பெருஞ் ஜோதி
எடுத்த முத்தேகம் எடுக்கும் இத்தேகம்
அடுத்தது நானே அருட்பெருஞ் ஜோதி 1180
தடியேன் எம்மை தனிப்பெருங் கருணையால்
அடியேன் என்றாக்கும் அருட்பெருஞ் ஜோதி
மடங்கும் மனதை மங்கையர் நினைவை
அடக்கு வந்தெனை அருட்பெருஞ் ஜோதி
அடித் துண்ணாமை அருள் பெறுவதற்கு
அடிப்படை யன்றோ அருட்பெருஞ் ஜோதி
கடை விரித்ததை கொள்வோர்க் கெல்லாம்
அடைவு கொடுக்கும் அருட்பெருஞ் ஜோதி
பணி செய்வோரை பணிந் திருப்பதே
அணி என்றாகும் அருட்பெருஞ் ஜோதி 1190
தஞ்ச மடைந்துனை தலைவனென ஏற்று
அஞ்சலி செய்வேன் அருட்பெருஞ் ஜோதி
தசை தின்று தயா வேடமிடுவோர்க்கு
அசைவம் ஏனோ அருட்பெருஞ் ஜோதி
சிக்க லெடுத்து சிங்கார மானோர்க்கு
அக்கம் பக்கமான அருட்பெருஞ் ஜோதி
இசை அருட்பா இசைத்தோர்க்கு மனம்
அசைதல் இலையே அருட்பெருஞ் ஜோதி
அகஇனத் தாருக்கு அருட்பெருஞ் ஜோதி
அகவல் துணையாம் அருட்பருஞ் ஜோதி 1200
அச்சம் தவிர்த்து ஆசை விட்டார்க்கு
அச்சு தெரியும் அருட்பெருஞ் ஜோதி
அட்ட சபையும் அட்டக பாடலும்
அட்ட காசம் அருட்பெருஞ் ஜோதி
கணுவில்லாக் கரும்பாய் காணு மிடத்தே
அணுவும் உண்டோ அருட்பெருஞ் ஜோதி
பிணை தரும் பசிக்கு ணவுதரும்
அணையா தீபம் அருட்பெருஞ் ஜோதி
சமைத்த சுத்த சன்மார்க்க மெங்கும்
அமைதி அமைதி அருட்பெருஞ் ஜோதி 1210
தப்பாத பிறவி தோறும் காக்குமென்
அப்பர் நீயன்றோ அருட்பெருஞ் ஜோதி
அதீன மடைந்து அகங் குளிர்ந்தால்
அதீத சுகமாம் அருட்பெருஞ் ஜோதி
விமலனைத் தொழ விபூதிப் பூசும்
அமளி ஆகுமோ அருட்பெருஞ் ஜோதி
மந்திரம் ஓதியே மருந்துண்டேன் இனியுன்
அந்தரங்கம் எனதாகும் அருட்பெருஞ் ஜோதி
உபயம் இன்றி ஒன்றென ஓங்குவோர்க்கு
அபயம் அபயம் அருட்பெருஞ் ஜோதி 1220
எமபய போக்கும் உந்தனிச் சித்தியை
அமலாக்கம் செய் அருட்பெருஞ் ஜோதி
இம்சை நீக்கிய இயல்பினரை உந்தன்
அம்ச மாக்கு அருட்பெருஞ் ஜோதி
வம்பு செய்து வாய் தடித்தோர்க்குன்
அம்பு பாயும் அருட்பெருஞ் ஜோதி
உபாயம் இன்றி ஓங்குமென்ற உம்திறன்
அபாரம் அபாரம் அருட்பெருஞ் ஜோதி
கபாலக் கனல் கண்டு அமர்ந்தெனக்கு
அபாயம் உண்டோ அருட்பெருஞ் ஜோதி 1230
அத்தைத் தெரிந்து அமர்ந்த எனக்குநீநல்
அத்தைப் பெண்ணாம் அருட்பெருஞ் ஜோதி
சத்திய அகவலிது சகத்திலோர் புதிய
அத்தி யாயம் அருட்பெருஞ் ஜோதி
அன்பு ளோர்க்கு அமுதுடன் பசிதீரும்நல்
அன்ன மளிக்கும் அருட்பெருஞ் ஜோதி
அருள் விளக்காய் என்னுள் ஓங்கும்
அருட் பிரகாச அருட்பெருஞ் ஜோதி
ஆத்திகம் பேசி ஆருயிர் போக்குவார்மேல்
ஆத்திரம் உண்டோ அருட்பெருஞ் ஜோதி 1240
சதிசெய்து வழக்காடும் சதியாளர் மேல்
அதிருப்தி காட்டுக அருட்பெருஞ் ஜோதி
நல்லார்கள் வாழ நல்லதுணை உனை
அல்லால் யாரோ அருட்பெருஞ் ஜோதி
நரகிடை வழியை நடத்தும் ஆசைக்கு
அரக்கன் ஆகுக அருட்பெருஞ் ஜோதி
இருள்சூழ் வானில் இளம்பிறை யானது
அருமை அருமை அருட்பெருஞ் ஜோதி
தருகின்ற சுத்த தேகத்தில் மலர்ந்ததோர்
அரும்பாய் மணக்கும் அருட்பெருஞ் ஜோதி 1250
கலகமுற உயிர்களைக் கொல்லும் போது
அலறு கின்றேன் அருட்பெருஞ் ஜோதி
மறித்து நிற்கும் மொழி பலஉண்டென்று
அறியாயோ என் அருட்பெருஞ் ஜோதி
அறியா மார்க்கத்தை எல்லா மொழியிலும்
அறியச்செய் என் அருட்பெருஞ் ஜோதி
இரவு வெளுக்க இறவானை மொழிக்கோர்
அரசனை வரச்செய் அருட்பெருஞ் ஜோதி
நிர்க்குணனே நிராமயனே நான் உனக்கே
அர்ப்பணம் அர்ப்பணம் அருட்பெருஞ் ஜோதி 1260
கரத்தா லின்பங் கொண்டேன் எனைப்போல்
அரக்கன் உண்டோ அருட்பெருஞ் ஜோதி
உலகியல் விடுத்தும் அருள்தர என்மேல்
அலட்சியம் தானோ அருட்பெருஞ் ஜோதி
மலையாக நிற்கும் மாமாயை எண்ணங்கள்
அலை அலையாம் அருட்பெருஞ் ஜோதி
சற்குரு புகன்ற சுத்த சன்மார்க்கம்
அற்புதம் அற்புதம் அருட்பெருஞ் ஜோதி
குறித்துநீ உரைத்ததை கேளாமல் நடப்பது
அறியாமை அன்றோ அருட்பெருஞ் ஜோதி 1270
சரணம் சரணம் சுத்தசன்மார்க்கம் என்றே
அரங்கம் ஏறினேன் அருட்பெருஞ் ஜோதி
நட்சத்திரத் தூவல்கள் நலம்வாழ நீஇட்ட
அட்சதை வாழ்த்தோ அருட்பெருஞ் ஜோதி
சம்சாரமும் சகல சம்பத்தும்நீ யன்றோஎன்
அம்மையும்நீ என்பேன் அருட்பெருஞ் ஜோதி
எமபயம் நீக்கி இவ்வுலகிடை ஓங்கஎனை
அமர்த்தினாய் வாழியென் அருட்பெருஞ்
ஜோதி
உருவ உடலினை உண்மை யாக்கி
அருவ மாக்கும் அருட்பெருஞ் ஜோதி 1280
கவைக் குறியாய்க் கருதி வணங்கும்
அவை அவையாம் அருட்பெருஞ் ஜோதி
பறிந்து ஊட்டும் பாலையும் அருந்தா
அறிவிலி பாராய் அருட்பெருஞ் ஜோதி
மனு அளித்தும் மன்னிக்காதென் பிழைமீது
அனுதாப மிலையோ அருட்பெருஞ் ஜோதி
மாகாயமதில் மருவி மலர்ந்ததால் அந்த
ஆகாயம் எனதாச்சு அருட்பெருஞ் ஜோதி
என்னைத் தன்னோடு ஈர்த் தென்றும்விடாத
அன்றாட சுவாசமாம் அருட்பெருஞ் ஜோதி 1290
பாசிகளை எடுத்துப் பழகும் எனைநல்
ஆசிரியர் ஆக்கும் அருட்பெருஞ் ஜோதி
தனுவெலாம் பொடித்து தானே நானாகும்
அனுபவம் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி
பழமைத் தமிழும் பார்க் கடலும்
அழகு அழகு அருட்பெருஞ் ஜோதி
காட்டுப் பாதைச்செல்லக் கூடும் கரணங்கள்
ஆட்டுவிக்க ஆடேன் அருட்பெருஞ் ஜோதி
பாட்டில் பிழையாய் பாடினும் எனை
ஆட்கொண் டாடு அருட்பெருஞ் ஜோதி 1300
நாட்டில் நல்லவனென நடித்த எனை
ஆட்டு விப்பாய் அருட்பெருஞ் ஜோதி
ஏடு படித்து அருட்பா அமுதுண்டு
ஆடு கின்றேன் அருட்பெருஞ் ஜோதி
கணை விடுத்தேன்
காண எனைவினை
அணை தடுக்குமோ அருட்பெருஞ்
ஜோதி
பாயிரத்தில் கலந்துப் பாடுபொருள் நீயானால்
ஆயிரம் பாடுவேன் அருட்பெருஞ் ஜோதி
பாடை ஏற்றாதுஎனை பகலொளியாய் வெள்
ஆடை போலாக்கு அருட்பெருஞ் ஜோதி 1310
காண் இரண்டறக் கலக்காது போனால்
ஆண் நானோ அருட்பெருஞ் ஜோதி
உழைத்த எனை உன்பணிக்கு வடலூர்
அழைத்தாய் வாழி அருட்பெருஞ் ஜோதி
தளரும் எனைத் தழுவி முகரும்போது
அளவு கடக்குமே அருட்பெருஞ் ஜோதி
மனுநீதி பாவமெலாம் மறந்தும் செய்யாதிருக்க
அனுமதி தருவாய் அருட்பெருஞ் ஜோதி
இறைத்தன்மை நிறைய இனி இறவாதிருக்க
அறைந்தாய் எனையே அருட்பெருஞ் ஜோதி 1320
காதலால் களிக்கின்ற காயம் அதிசூடு
ஆதல் என்றுருமோ அருட்பெருஞ் ஜோதி
தன்னோடு என்னைத் தழுவிக் கலந்து
அன்புருவ மாக்கும் அருட்பெருஞ் ஜோதி
ஊன் நிலைத்து உண்மை ஓங்குவதே
ஆன்ம இலாபம் அருட்பெருஞ் ஜோதி
காலம் கடந்த காயமடைதலே அன்ம
ஆலயம் ஆகும் அருட்பெருஞ் ஜோதி
சாபம் நீக்கி சோதனை செய்யும்
ஆபத்தை நீக்கும் அருட்பெருஞ் ஜோதி 1330
காணவரும் நாள் கொஞ்சம் அதில்
ஆணவம் ஏனோ அருட்பெருஞ் ஜோதி
பார்வை அகத்துள் பதியைத்தேட அதிக
ஆர்வம் எனக்கு அருட்பெருஞ் ஜோதி
ஊரூராய் சுற்றினும் உண்மை அறியேன்
ஆரூடம் சொல் அருட்பெருஞ் ஜோதி
வேதா கமங்கள் வேண்டிலேன் மெய்போகா
ஆதாயம் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
மாண்டுப் போகவே மரணநாள் எதுவென
ஆண்டு போகுமோ அருட்பெருஞ் ஜோதி 1340
வளி மண்டலம் வந்து சுழன்றுஆங்கே
அளிப்பாய் சுகமே அருட்பெருஞ் ஜோதி
புனலில் நீந்தி பல்கும் உயிர்க்கும்
அனல் ஆகும் அருட்பெருஞ் ஜோதி
தாவர உயிரியில் தழைத்து ஓங்கியோர்
ஆவண மாகிய அருட்பெருஞ் ஜோதி
நாளும் உயிர்களை நாடி அன்பால்
ஆளும் அரசே அருட்பெருஞ் ஜோதி
இறந்தாரை எழுப்பும் இறை சித்திவகை
அறமெலா மருள் அருட்பெருஞ் ஜோதி 1350
ஊமைக் கனவை உரைத்த மதவழியெலாம்
ஆமைப் பயணமாம் அருட்பெருஞ் ஜோதி
வீழும் உடலில் விமலனைக் காணத்திரை
ஏழும் ஒன்றும் அருட்பெருஞ் ஜோதி
காணும் உயிரெலாம் களித்துலகில் வாழ
ஆணும் பெண்ணுமானாய் அருட்பெருஞ் ஜோதி
பசித்தோர்ப் பசிப் போக்கா உண்டியல்
அசிங்கம் அசிங்கம் அருட்பெருஞ் ஜோதி
கடைந்த தேகத்தில் கற்பூரமணமே உன்
அடையாள மாகும் அருட்பெருஞ் ஜோதி 1360
வாழ் உடலில் விளங்கும் அலைமனம்
ஆழ் கடலாமோ அருட்பெருஞ் ஜோதி
பாபா என்றோதி புலால் உண்ணுதல்
ஆபாச மன்றோ அருட்பெருஞ் ஜோதி
படிநிலை கடந்து பார்க்க இப்பாவிக்கும்
அடிமுடி காட்டாய் அருட்பெருஞ் ஜோதி
பழுது வாராதிருக்க பாட்டால் உனை
அழுது தொழுவேன் அருட்பெருஞ் ஜோதி
வோலை வருமுன்னே வருவோர்க் கோர்
ஆலை நடத்தும் அருட்பெருஞ் ஜோதி 1370
தேனினும் நீடும் தயவுப் பெற்றேனினிதேக
ஆனி நேருமோ அருட்பெருஞ் ஜோதி
கனாக் கண்ட கருப்பொரு ளடையஎனை
அனாதி ஆக்கும் அருட்பெருஞ் ஜோதி
வீதியில் அழியா விதிச்செய் தென்னை
ஆதி ஆக்கும் அருட்பெருஞ் ஜோதி
மருந் தென்று மலரும் குண்டலிப் பால்
அருந்து வேன் அருட்பெருஞ் ஜோதி
பண்டமும் பிண்டமும் படைத்துப் பல
அண்டங் காக்கும் அருட்பெருஞ் ஜோதி 1380
சத்திய நெறியாம் சன்மார்க்கம் பிடித்து
அத்துவித மானேன் அருட்பெருஞ் ஜோதி
தப்பேது செய்யினும் தண்டனை எனக்கருள்
அப்போதுக் கப்போதே அருட்பெருஞ் ஜோதி
கதிபதிக் கெல்லாம் கட்டளை இடும்
அதிபதி யாகும் அருட்பெருஞ் ஜோதி
மகிழ்ச்சி யுடன் மாமனிதர்வாழ மற்றொரு
அகிலம் அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி
நல்லார் நலம்பெற நாடும் உலகில்
அல்லார் ஏனோ அருட்பெருஞ் ஜோதி 1390
சங்கம் சார்ந்த சன்மார்க்கப் போதனை
அங்குச மாகும் அருட்பெருஞ் ஜோதி
படித்தால் பிணிப் போக்கும் அருட்பா
அடியார்க் கடியேன் அருட்பெருஞ் ஜோதி
தமதுயிர் போகாது தடுக்கும் அன்பரை
அமரர் ஆக்கும் அருட்பெருஞ் ஜோதி
சரியென்ற சமயமெலாம் சாராத தனித்த
அரிய சுகமாகும் அருட்பெருஞ் ஜோதி
உருவும் அருவும் இல்லாத ஓர்தனித்த
அருளே வடிவாம் அருட்பெருஞ் ஜோதி 1400
வேதிக்கும் தேகம் வேண்டும் என்
ஆதி பகவனே அருட்பெருஞ் ஜோதி
பன்னிய தத்துவங்களைப் பாரில் ஏதும்
அன்னிய மில்லை அருட்பெருஞ் ஜோதி
சாகும் பிறப்பும் சமமில்லாச் சாதனை
ஆகும் என்றஎன் அருட்பெருஞ் ஜோதி
வேகாக் காலை வேண்டி நின்றோர்க்கு
ஆகாத துண்டோ அருட்பெருஞ் ஜோதி
பரிநரி யானதைப் புரியாதோர் உலகில்
அரிசிவ என்பார் அருட்பெருஞ் ஜோதி 1410
கல்லா தவர்போல்புன் கறி உண்டு
அல்லா என்பார் அருட்பெருஞ் ஜோதி
பாவி என்றே பயங்காட்டிப் பரிசுத்த
ஆவி என்பார் அருட்பெருஞ் ஜோதி
தவாநிலை தயவைத் தந்த புத்தர்
அவா போனதே அருட்பெருஞ் ஜோதி
நாட்டில் புலையரும் நன்றாய் வணங்கி
ஆட்டை அடிப்பதோ அருட்பெருஞ் ஜோதி
ஊழி உருத்த ஆரூடம் பார்த்துவீணே
ஆழியில் மூழ்குவார் அருட்பெருஞ் ஜோதி 1420
கனவு நனவாகக் கூட்டமாய் நெருப்பு
அனலை மிதிப்பதோ அருட்பெருஞ் ஜோதி
சவந் தின்னும் சனங்களால் உயிர்கள்
அவதி யுறுவதோ அருட்பெருஞ் ஜோதி
மண வாழ்க்கை மயக்கும் மாயையே
அணங்கு என்ற அருட்பெருஞ் ஜோதி
உணவின்றி ஏங்கி உத்தமனுக்காக இளைக்க
அணங்காட்டு தகுமோ அருட்பெருஞ் ஜோதி
எந்தை என்னுள் அமர்ந்து சித்திக்கும்
அந்நாளைத் தருக அருட்பெருஞ் ஜோதி 1430
தடையெலாம் நீக்கி தனித்த அமுமதை
அடைய அருளாய் அருட்பெருஞ் ஜோதி
கணிதம் கடந்து காணா அண்டங்கள்
அணி அணியாம் அருட்பெருஞ் ஜோதி
பணிந்துப் பாடும் பரமாகாச அகவலுக்கு
அணிந்துரைச் செய்யும் அருட்பெருஞ் ஜோதி
உடலைக் கழுவி ஊர்க்கூடியழுது தீயிட்டு
அடலை செய்வதோ அருட்பெருஞ் ஜோதி
கடலைக் கடக்கக் கருதி அணிவோர்
அடலை இதுவோ அருட்பெருஞ் ஜோதி 1440
உருசெய் மதங்கள் உளறிய உலகில்
அருமறை நீயே அருட்பெருஞ் ஜோதி
குறித்து நோக்கினும் காலத் தொடக்கம்
அறியேன் அறியேன் அருட்பெருஞ் ஜோதி
மனமதை அடக்கி மானங் காத்தாரை
அனக னாக்கும் அருட்பெருஞ் ஜோதி
எமன் வரும்வரை ஏதுமறியாது நாள்கழித்து
அமர்ந் திருப்பனோ அருட்பெருஞ் ஜோதி
வழி தெரியாது வந்தப்பிறவி மேன்மேல்
அழிஞ்சிப் பட்டேன் அருட்பெருஞ் ஜோதி 1450
பழிக்கப் பிறரழ பாடையடைய இனிமேல்
அழிஞ்சிப் படேன் அருட்பெருஞ் ஜோதி
சம்மதம் சம்மதம் சன்மார்க்கச் சத்திய
அம்மண மனமருள் அருட்பெருஞ் ஜோதி
இம்மலத் தேக இருட்டை விடுத்தெனை
அம்பலம் செய்வாய் அருட்பெருஞ் ஜோதி
கருஉரு உயிரெலாம் கருணை பெற்றுய்ய
அருளுக அருளுக அருட்பெருஞ் ஜோதி
அழுது தொழுவார் அமுது பெறுவார்
அழுக்கை நீக்கும் அருட்பெருஞ் ஜோதி 1460
எவ்விட மிருந்து எமக்கருள் புரியும்
அவ்விடம் காட்டுக அருட்பெருஞ் ஜோதி
பாகமில்லா ஒன்றாய்ப் புரிந்து ஜோதியாய்
ஆகலாம் ஆகலாம் அருட்பெருஞ் ஜோதி
முத்தேக சித்தனுக்கு முயங்கி அன்றளித்த
அத்தேக மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
ஓதாமல் உணரும் ஓங்கு தயவெனும்
ஆதார மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
சாகா வரம்தந்து சோதனைக் கடந்தநல்ல
ஆகார மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி 1470
சாதீய குணமெலாம் சாரானே சத்தியனுன்
ஆதீன மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
தங்க மயமான தனிஅருட் ஜோதிநிலை
அங்க மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
தாயினு மன்புடையாய் தயவிலா தடியேன்
ஆயினு மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
பழமை தெரியாது புதுமை யோடிருக்கும்
அழகை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
என்னது நின்னதென்ற இருமை நிலையற்ற
அன்பை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி 1480
சிற்றம்பலம் விளங்க சித்தெலாம் செய்யும்
அற்புத மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
சாக்கிரம் ஒழிந்த செத்தாரை எழுப்பும்
ஆக்க மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
சகத்துயிர்கள் வாழ சீவ காருண்ய
அகம் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
ஊட்டியக் கருணையால் அருள் செங்கோல்
ஆட்சி எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
நாழி இரண்டரையில் கருணைக் கணை
ஆழி எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி 1490
நிறை வாகி நின்னோடுறைய சித்திவளாக
அறை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
பறியவினை ஓட பதிஒன்றெனக் காணும்
அறிவு எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
பருவம் ஓயும்முன்னே பிறர்பார்க்க மறையும்
அருவ மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
இகத்திலே பரத்தை ஈட்டிய இராமலிங்க
அகவல் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
உறக்கம் போக்கும் இயற்கை உண்மை
அறத்தை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி 1500
மெய்யனை தூயனை மனத்தானை
இராமலிங்க
அய்யனை எனக்கருள் அருட்பெருஞ்
ஜோதி
களித்து நாமிருக்கக்
கருதி உன்னையே
அளித்து எனக்கருள் அருட்பெருஞ்
ஜோதி
கூற்றதை விலக்கும்திருக்
கூட்டத்தில் சேரும்
ஆற்றலை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
சத்தி பெற்ற சித்திவளாகம்
தங்கமாக்கும்
அத்திற மெனக்கருள் அருட்பெருஞ்
ஜோதி
மதத்தோ ரெல்லாம் மயங்கிப்
புலையராகும்
அதர்மம் பாரேன் அருட்பெருஞ்
ஜோதி 1510
சான்றோன் என்றே சுகபோகம்
காண்கின்றார்
ஆன்மிகம் இதுவோ அருட்பெருஞ்
ஜோதி
சாத்வீக சன்மார்க்கச்
சாதுக்களை காண்பது
ஆத்ம தரிசனமாம் அருட்பெருஞ்
ஜோதி
சாபத்தை நீக்கி சடுதியில்
வருகின்றஎல்லா
ஆபத்தையும் நீக்கும்
அருட்பெருஞ் ஜோதி
ஞானசபை ஓட்டை ஞாயிறாய்
தங்கமாக்க
ஆனதைச் செய்வாய் அருட்பெருஞ்
ஜோதி
பேச்சற்ற ஒலியும் பெயரற்ற
தேகாதிகளும்
ஆச்சரியம் ஆச்சரியம்
அருட்பெருஞ் ஜோதி 1520
பகலவன் ஒளியாய் பார்ப்பவர்ப்
பொருளாய்
அகப்படும் அருளே அருட்பெருஞ்
ஜோதி
இகழ்ந்தோர் வியக்க என்னுள்
நிலைத்து
அகழ்ந்து செல்லும் அருட்பெருஞ்
ஜோதி
சடங்கில்லா பக்தி செய்யும்
என்னுள்
அடங்கி ஓங்கும் அருட்பெருஞ்
ஜோதி
இகரமுறும் உயிர்க்கும்
இசைந்த முத்திக்கும்
அகரஒளி யளிக்கும் அருட்பெருஞ்
ஜோதி
இருள்சூழ் உலகிடை உழலும்
உயிர்க்கெல்லாம்
அருளின்ப மருளுவாய்
அருட்பெருஞ் ஜோதி 1530
உறியென மேலாய் உறுதியோடு
இருப்போர்க்கு
அறிவின்ப மளிப்பாய்
அருட்பெருஞ் ஜோதி
உலகாய் அண்டமாய் அணுவாய்
எல்லாந்தான்
அலதாய் தனித்த அருட்பெருஞ்
ஜோதி
மானத்தின் மாண்பாய்
மலருள் மணமாய்
ஆனஎலாம் நிறைந்த அருட்பெருஞ்
ஜோதி
அகமுறு எண்ணமாய் அண்டத்தில்
வெளியாய்
அகண்டு விரியும் அருட்பெருஞ்
ஜோதி
ஏன்னென்ற கேள்வியும்
ஆம்மென்ற பதிலும்
ஆன்மானந்த மாகும் அருட்பெருஞ்
ஜோதி 1540
அகத்தைப் பிடித்த அகங்காரப்
பேய்யான
அகந்தை யழிக்கும் அருட்பெருஞ்
ஜோதி
சக்கரம் சுழன்று சிரங்காண
மூலாதார
அக்னி மூட்டும் அருட்பெருஞ்
ஜோதி
அகங்காணு முன்னே அன்பாய்ப்
பாடுவது
அகம்பாவம் தானோ அருட்பெருஞ்
ஜோதி
நான் இருக்கையில் நடிப்பாய்
நீஎன்பது
ஆன்றோர்க் கழகோ அருட்பெருஞ்
ஜோதி
என்னோ டுன்னையும் உன்னோ
டென்னையும்
அன்போடு கலந்தருள் அருட்பெருஞ்
ஜோதி 1550
தானாகி என்றுமுன் தாளாகி
இவ்வுடலோடு
ஆனாமை வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
கூடா நட்புடன் கூத்தாடி
மதப்பேயுடன்
ஆடாமை வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
வசைப் பாடுமுலகில் வசப்படாது
நின்நிலை
அசையாமை வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
கானக் குயிலாய்க் கூவுமுனைக்
காணும்
ஆனந்தம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
கமுக்க மாக்கி காயத்துள்
மறைந்தபேர்
அமுதம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி 1560
அருந் தொழிலாம் ஐந்தொழில்
செய்யும்
அருள் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
சங்கம் சொல்லும் சத்திய
நெறிநில்லும்
அங்கம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
அகிலமெலாம் வாழும் ஆருயிர்கட்
கெலாம்
அகிம்சை வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
எங்கும் சென்று எந்தைநின்னருள்
புகழ்பேசும்
அங்கீகாரம் வேண்டும்
அருட்பெருஞ் ஜோதி
கங்கனங் கட்டும் கருத்துடைய
சங்கத்தில்
அங்கத்தினர் வேண்டும்
அருட்பெருஞ் ஜோதி 1570
தப்பாது மேல்செல்ல தடைகளைத்
தாண்டும்
அப்பியாசம் வேண்டும்
அருட்பெருஞ் ஜோதி
கபடும் கள்ளமும் காணா
தருளும்உன்
அபயம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
சபித்தல் நீக்கிச் சுத்தசன்மார்க்க
அருளால்
அபிவிருத்தி வேண்டும்
அருட்பெருஞ் ஜோதி
கபிக்குணம் அடக்கிக்
கண்ணீரால் நனையும்
அபிஷேகம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
சனுவாய் அகத்தும் சகத்தும்
சுகமோங்கும்
அனுபவம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி 1580
தவம் செய்து தத்துவங்கடக்கும்
தயாநிலை
அவசியம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
அவலம் போக்க ஆன்மா என்னுடலிலோர்
அவயமாக வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
சந்திக்கும் வாய்ப்பருளி
சன்மார்க்கச் சித்தி
அந்தியம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
கனகசபை என்னுள் காணும்
ஒருமை
அனந்தம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
காற்றும் கதிரும் கதியும்
விதியுமருளும்
ஆற்றல் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி 1590
தனு தானறியாத தன்மை
அறியஉன்னருள்
அனுகூலம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
பனுவைப் போல் பழியாது
நம்பாட்டை
அனுடிக்க வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
எனுவும் தற்சுதந்தரம்
இல்லை எதற்கும்
அனுமதி வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
இகபரக் காட்சி எல்லாம்
பகலெனக்காண
அகக்கண் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
கரு கலையாதிருக்கக்
குருவென நீஎன்
அருகில் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி 1600
மதிதரு அருட்பாவை மதித்தறியும்
மதி
அதிகம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
படும் பாடறிந்து படியேறும்
வழிஎனக்கு
அடுத்தடுத்து வேண்டும்
அருட்பெருஞ் ஜோதி
சமப் படுத்திச் சன்மார்க்கங்காண
என்னுள்
அமருதல் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
பஞ்சணை படுத்தாரும்
பாடை காணும்போது
அஞ்சுதல் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
குழைந்துக் குலாவிக்
குறிப்பால் உனைப்பாடி
அழைத்தல் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி 1610
தருகின்ற பிறவியெலாம்
தன்னையே பாடும்
அருள்வாக்கு வேண்டும்
அருட்பெருஞ் ஜோதி
கனுஇரு நடுவில் கனிந்து
ஒளியெனஎனை
அனுப்புதல் வேண்டும்
அருட்பெருஞ் ஜோதி
நிழலில்லா தேகமும் நிறைமதிக்
காட்சி
அழகும் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
அமைத்த மார்க்கம் எம்மதமும்
இயங்காத
அமைப்பு வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
அறிந்த தெலாம் அநித்தியமென
உனையெனும்
அறிஞர் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி 1620
வலையிடு தொழிலெலாம்
விடுக்கும் ஆன்மநேய
அலைகள் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
அகரஉகரம் தெரிவித்து
ஒளிமய மாக்கும்
அகச்சூடு வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
ஐவராதிகள் வந்து ஐயனைத்
தொழும்காட்சி
அவனியில் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
சகத்தே ஆயிரங்கோடி சூரியனைப்
பார்க்கும்
அகவை வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
என்னோ டிருக்கும் ஐம்புலன்
களிலிருந்து
அன்மை வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி 1630
மதிதரும் ஒளிதரும் மற்றென்றும்
இறவா
அதிசயம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
விதிவழிச் செல்லா விதி
படைக்கின்ற
அதிட்டம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
பதம் பணிந்துன் பேரருளைப்
பாடும்
அதரம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
எத்திறம் பெற்றும் எமனை
வெல்லும்
அத்திரம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
சகியா தெழுந்து சீவகாருண்யம்
புரியும்
அகிலம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி 1640
பசலை நீக்கி பெருவாழ்வு
வாழ்கவெனும்
அசரீரி வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
உகங்கள் கடந்தும் உருஅருவா
யிருக்கும்
அகதம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
புகலும் அறத்தால் புலையன்
வருந்திவரும்
அகஇனம் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
பகல் இரவாய் பக்தியினை
உளம்பதிக்கும்
அகத்தடிமை வேண்டும்
அருட்பெருஞ் ஜோதி
தகரத்தில் இருக்கும்
தலைவனின் தயவான
அகத்தியல் வேண்டும்
அருட்பெருஞ் ஜோதி 1650
இன்புற நினைந்துனை இச்சித்து
புகழும்
அன்பு வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
தகதக மின்னும் தந்தையோடு
கலக்கும்
அகநாழிகை வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
அகஇனத் தார்க் கெல்லாம்
நிலைக்கேற்ப
அகப்படல் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
நகமும் சதையுமாய் நவின்ற
உளத்தில்
அகப்பூ வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி
சுகமும் துக்கமும் சுமக்கா
துனைக்காணும்
அகமும் வேண்டும் அருட்பெருஞ்
ஜோதி 1660
கருவாய் கனிவாய் கதிராய்
குணமாய்
அருட்பா அருளும் அருட்பெருஞ்
ஜோதி
குருவாய் கனலாய் காற்றாய்
இயல்பாய்
அருட்பா அருளும் அருட்பெருஞ்
ஜோதி
தருவாய் நிழலாய் தலையாய்
அடியாய்
அருட்பா அருளும் அருட்பெருஞ்
ஜோதி
அருவாய் அணுவாய் ஒலியாய்
ஒளியாய்
அருட்பா அருளும் அருட்பெருஞ்
ஜோதி
உருவாய் உளதாய் இலதாய்
இனமாய்
அருட்பா அருளும் அருட்பெருஞ்
ஜோதி 1670
திருவாய் மலராய் தலமாய்
மணமாய்
அருட்பா அருளும் அருட்பெருஞ்
ஜோதி
மருவாய் உளமாய் மதுவாய்
இதமாய்
அருட்பா அருளும் அருட்பெருஞ்
ஜோதி
இருவாய் பதியாய் அனலாய்
தனமாய்
அருட்பா அருளும் அருட்பெருஞ்
ஜோதி
ஒருவாய் பிரிவாய் இணையாய்
சரியாய்
அருட்பா அருளும் அருட்பெருஞ்
ஜோதி
சருவாய் சலமாய் சுகமாய்
சிரமாய்
அருட்பா அருளும் அருட்பெருஞ்
ஜோதி 1680
பற்பல போதிக்கும் பிரபந்தத்
திரட்டு
அற்புதந் தரும் அருட்பெருஞ்
ஜோதி
பாலகனும் படிக்கும்
பிரபந்தத் திரட்டு
ஆலயம் ஆகும் அருட்பெருஞ்
ஜோதி
பன்மார்க்கப் பஜனை பிரபந்தத்
திரட்டு
அன்பினை ஈர்க்கும் அருட்பெருஞ்
ஜோதி
பாபநிலை அழிக்கும் பிரபந்தத்
திரட்டு
ஆபரண மாகும் அருட்பெருஞ்
ஜோதி
பருப்பொருள் உரைக்கும்
பிரபந்தத் திரட்டு
அருட்பெருங் கருணை அருட்பெருஞ்
ஜோதி 1690
பாவம் போக்கும் பிரபந்தத்
திரட்டு
ஆவது அருவம் அருட்பெருஞ்
ஜோதி
பரமனைக் காட்டும் பிரபந்தத்
திரட்டு
அரச னாக்கும் அருட்பெருஞ்
ஜோதி
பாங்காய்ப் பதியும்
பிரபந்தத் திரட்டு
ஆங்காங் கருளும் அருட்பெருஞ்
ஜோதி
பதிநிலை அளிக்கும் பிரபந்தத்
திரட்டு
அதிசுக இன்பம் அருட்பெருஞ்
ஜோதி
பார் போற்றும் பிரபந்தத்
திரட்டு
ஆர் அறிவார் அருட்பெருஞ்
ஜோதி 1700
ஓசை ஒளியாய் ஆக விரும்புமென்
ஆசை தீர்ப்பாய் அருட்பெருஞ்
ஜோதி
மூச்சுக் காற்றின் முடிபெலாம்
என்னது
ஆச்சு எனப்புகல் அருட்பெருஞ்
ஜோதி
காற்றின் சுவாசம் காத்தருளும்
சித்து
ஆற்றல் தாராய் அருட்பெருஞ்
ஜோதி
பாடலால் உனைப்பாடிப்
பல்வேறு சித்து
ஆடல் விரும்பேன் அருட்பெருஞ்
ஜோதி
விடப் பாம்பான வன்மிருகமான
எம்மனம்
அடர்ந்தக் காடோ அருட்பெருஞ்
ஜோதி 1710
தாக்கும் புலன்களைத்
தடுத்து வீழ்த்தும்
ஆக்கினை இடுவாய் அருட்பெருஞ்
ஜோதி
சாகாத உடம்பினைச் சார்ந்த
வனால்
ஆகாதது உண்டோ அருட்பெருஞ்
ஜோதி
ஏகு என்றாலும் எந்தாய்
போகிலேனென்
ஆகுலம் தடுக்கும் அருட்பெருஞ்
ஜோதி
பாகும் பருப்புமாய்
பரத்துடன் எம்மை
ஆகுபெயர் செய்தாய் அருட்பெருஞ்
ஜோதி
ஈகை பெருவாழ்வு அளிப்பது
சத்தியம்
ஆகையால் ஈந்தேனைனை அருட்பெருஞ்
ஜோதி 1720
பேசாநிலை அடைய பயில்வனோ
அல்லது
ஆசாபங்க மடைவனோ அருட்பெருஞ்
ஜோதி
ஏடகத்தில் அடங்கா உனைப்பாடி
பலர்காண
ஆடம்பரம் செய்வேன் அருட்பெருஞ்
ஜோதி
கால எந்திரக் கணக்கெனும்
காலனெனும்
ஆலம் அமுதாச்சு அருட்பெருஞ்
ஜோதி
பாதந் தொழும் பாமரனென்மேல்
உனது
ஆதரவு நல்காய் அருட்பெருஞ்
ஜோதி
காசி வேளாங்கன்னி காபா
செல்லினுமுன்
ஆசி கிடைக்குமோ அருட்பெருஞ்
ஜோதி 1730
கூசி நிற்போர்க்கு கவள
அன்னமிடஉன்
ஆசி கிடைக்கும் அருட்பெருஞ்
ஜோதி
பாடலாம் கூடலாம் பரிந்து
என்னுடனே
ஆடவருக வருக அருட்பெருஞ்
ஜோதி
நாடகம் நடிக்கும் நாயகன்
ஆயினும்
ஆடகம் ஆக்குக அருட்பெருஞ்
ஜோதி
வேண்டுதல் அளித்து வேண்டாமை
நீக்கி
ஆண்டகை ஆக்கும் அருட்பெருஞ்
ஜோதி
மாண்புயர சன்மார்க்க
மரபில் எனையும்
ஆண்டவ னாக்கும் அருட்பெருஞ்
ஜோதி 1740
ஏணியறிந்து ஏறி எட்டிப்
பிடித்தோர்மேனி
ஆணிப் பொன்னாம் அருட்பெருஞ்
ஜோதி
நாணை விட்டு நான்செல்ல
ஓர்
ஆணை அளி அருட்பெருஞ்
ஜோதி
என்னுடல் உச்சியின்
எதிர்நின்று எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
நன்மயிர்த் தன்மையை
நரைபோக்கி எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்முக நெற்றியில் உள்ளிருந்து
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி 1750
என்புருவ நடுவில் ஆடல்புரிந்து
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்னிமை இயல்பாய் எதிர்ப்பாரிடமிருந்
தெனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்நாசிக் காற்றாய்
உள்ளும்புறமும் எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்னிரு கன்னம் ஏந்தும்கண்நீராய்
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்னிரு காதின்சப்த
ஒலியாயிருந்து எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி 1760
என்னிரு உதடும் உனக்கேவாயிலாக
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்னுடை பற்களாய் உறுதியோடு
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்நாச் சுவையில் இனிப்பாயிருந்து
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்முகந் தாங்கும் எங்கழுத்தாயிருந்
தெனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்மார்பகங்கள் ஈனும்
அமுதாயிருந் தெனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி 1770
என்னிரு கைகளும் உனையேயணைய
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்வயிற்றுப் பசிக்கு
உணவிட்டு எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்குறி இன்பத்தை அறிவின்பமாக்கி
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்கால் நடைபோல் என்னைநடத்தி
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்தோலெலாம் உனது அருளால்மூடி
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி 1780
என்தசைகள் தளராது இளமைபோகாது
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்மூட்டு இடமெலாம்
இணைபிரியா தெனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என் எலும்பாய் இருந்துசெயல்பட்டு
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்நரம்பு தோறும் உயிர்ப்பாயிருந்
தெனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்ரத்த ஓட்டமாய் என்னுள்நிறைந்
தெனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி 1790
என்னிதய துடிப்பாய்
என்றும்விளங்கி எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என் ஆன்மா இயற்கையின்பம்பெற
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என் உயிரெலாம் உன்னுயிராக
எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
என்னுள் உறுப்புகள்
அனைத்துமாகி எனை
அன்போடு காத்தருள் அருட்பெருஞ்
ஜோதி
தொழுதலே என்றுமென் தொழிலாய்
இருக்க
அழுகின்றேன் என்றும்
அருட்பெருஞ் ஜோதி 1800
பரந்த வான்போல பாலில்
நெய்போல
அரசு செய்யுமென் அருட்பெருஞ்
ஜோதி
ஏகாந்த நிலையில் அமரும்
அன்பர்க்கு
ஆகாரம் நீயேஎன் அருட்பெருஞ்
ஜோதி
அகிலம் முழுதும் அன்பே
நிலைக்க
அகிம்சை வழிசெய் அருட்பெருஞ்
ஜோதி
முகவடிவும் உன்பெரும்
மதியும் பேரழகு
அகவடிவும் கண்டேன் அருட்பெருஞ்
ஜோதி
அகத்திலும் புறத்திலும்
எனக்கான உரிமை
அகவாட்டி நீயன்றோ அருட்பெருஞ்
ஜோதி 1810
பகல்பொழுதே ஆயினும்
பரமன் விளங்கும்
அகல்ஜோதி விளக்காம்
அருட்பெருஞ் ஜோதி
படிமூன்று கடந்து பார்க்க
வெட்டவெளியாய்
அடிமுடி விளங்கின அருட்பெருஞ்
ஜோதி
விதிசெய் நிகழ்வினை
விட்டவன் மதியால்
அதிட்டம் வாய்க்கும்
அருட்பெருஞ் ஜோதி
சும்மா இருக்கும் சுகத்தை
அறிந்தோர்க்கு
அம்புலி பூரணமாம் அருட்பெருஞ்
ஜோதி
பதிநிலை அறிவாரைப் பற்றி
எழுப்பும்
அதிகாலை அனுபவ அருட்பெருஞ்
ஜோதி 1820
பற்றில்லா உலகர்க்கு
பாழும் உடலின்
அற்றம் முற்றுமே அருட்பெருஞ்
ஜோதி
நிதமும் நினைவில் நிறுத்திட்டால்
நீயும்
அதர முத்தசுகமே அருட்பெருஞ்
ஜோதி
எந்நிலை உடையாரும் அன்புட
னிருக்க
அந்நியம் இல்லையே அருட்பெருஞ்
ஜோதி
மதங்கள் காட்டிய மூடங்களை
நீயே
அதமம் செய்வாய் அருட்பெருஞ்
ஜோதி
நவநிலை கடந்து நானிருக்க
எண்ணில்லா
அவனி கண்டேன் அருட்பெருஞ்
ஜோதி 1830
அகத்திலே உன்னால் இன்பம்
அடையும்
அகவை அடைந்தேன் அருட்பெருஞ்
ஜோதி
பகர்ந்த சமயமத பொருளுக்கும்
மேலான
அகணிகப் பொருளாம் அருட்பெருஞ்
ஜோதி
அகரமும் உகரமும் அண்ட
பகிரண்டமான
அகண்டா கண்டேன் அருட்பெருஞ்
ஜோதி
விசை ஏதுமில்லாது விண்ணிலும்
என்னிலும்
அசைந் தாடுகின்றாய்
அருட்பெருஞ் ஜோதி
நிலைத்தப் பொருளை நினைவார்
மனதில்உன்
அலைகள் ஓய்வதில்லை அருட்பெருஞ்
ஜோதி 1840
மறிந்தவரை மீண்டும்
மீட்க சன்மார்க்க
அறிஞரே அறிவர் அருட்பெருஞ்
ஜோதி
மழையாய்ப் பெய்கவென
மனம் உருக
அழைக்க வருவாய் அருட்பெருஞ்
ஜோதி
சிக்கெனப் பிடித்தால்
சிற்சபை அனுபவம்
அக்கனம் தோன்றும் அருட்பெருஞ்
ஜோதி
சங்கத்தில் கூடியே சன்மார்க்கம்
பயின்றால்
அங்கத்தில் அங்கமாகும்
அருட்பெருஞ் ஜோதி
எக்காலத்தும் நம்மில்
உள்ளிருந்து ஓங்கும்
அக்கினி சுடுவதில்லை
அருட்பெருஞ் ஜோதி 1850
இகபர சுகத்தின் அடிமுடி
ஆதிஅந்த
அகராதி நீதானே அருட்பெருஞ்
ஜோதி
சூசகமாய் சதிசெய்யும்
சமய வழக்கெனும்
அசத்தை ஒழியும் அருட்பெருஞ்
ஜோதி
சபலமற்று சாதி சமயமற்று
உன்னில்
அபயம் அபயம் அருட்பெருஞ்
ஜோதி
சுபத்திற்கு கொலை செய்வாய்
சமயமெலாம்
அபத்தம் அபத்தம் அருட்பெருஞ்
ஜோதி
கண் காட்சியினால் கருணை
நிறையுலக
அண்டம் அறிவரோ அருட்பெருஞ்
ஜோதி 1860
உருகும் இரக்கம் அகத்தில்
வந்துவிட்டால்
அருகே மிகஅருகே அருட்பெருஞ்
ஜோதி
விடுத்த மறுகணம் வந்து
அமரும்
அடுத்த இடமாம் அருட்பெருஞ்
ஜோதி
உகந்தோறும் வரும் அனாதி
யியற்கை
அகங்கார மடக்கும் அருட்பெருஞ்
ஜோதி
சமுகத்தில் வாழ்வதும்
சாவதும் உந்தன்
அமுதவிஷ வாயுவால் அருட்பெருஞ்
ஜோதி
இரக்கத்துடன் இருந்து
இறவா நிலையுடன்
இரண்டற கலப்பேன் அருட்பெருஞ்
ஜோதி 1870
கடலெனும் பிறவிகள் கடந்து
நிலைபெறவே
உடல்பெற்று வந்தேன்
அருட்பெருஞ் ஜோதி
பாசாகார பொருள் பற்றுதலுக்கு
ஆதார
ஆசாரம் அறுக்கும் அருட்பெருஞ்
ஜோதி
தத்துவ மென்றசிவத் தன்மையும்
அதன்
அத்துவ பொருளாம் அருட்பெருஞ்
ஜோதி
கருணைச் செயலால் கடவுளைக்
காண்பது
அருள னுபவமாம் அருட்பெருஞ்
ஜோதி
உருளும் உலகில் உயிர்களுக்கு
உணவை
அருட்சத்தி ஊட்டும்
அருட்பெருஞ் ஜோதி 1880
துடிக்கும் இதயம் தயவு
தயவுஎன்போரின்
அடிக்கு அடியேன் அருட்பெருஞ்
ஜோதி
அருளாலே மார்க்க அன்பர்க்கு
பொருந்தல்
அருந்தல் சமமாக்கும்
அருட்பெருஞ் ஜோதி
ஊன் உடம்பே ஒளி உடம்பாவது
ஆன்ம அறிவால் அருட்பெருஞ்
ஜோதி
அமலன் என்றாகில் அகத்துச்
சபையில்
அமனம் தோன்றும் அருட்பெருஞ்
ஜோதி
பசுபாச அறிவைவிட்டு
பதி அறிவால்
அசுரரும் சுரராவர் அருட்பெருஞ்
ஜோதி 1890
உபாயம் இதுவென் அகவினம்
ஆகில்
அபாயம் இல்லை அருட்பெருஞ்
ஜோதி
நலமான சன்மார்க்கம்
நாட மூவாசையும்
அலட்சிய மாகும் அருட்பெருஞ்
ஜோதி
அகவினத் தார் என்றுசங்கம்
சார்ந்தால்
அகவிருள் நீக்கும் அருட்பெருஞ்
ஜோதி
முகநக நட்பெல்லாம் முடித்து
நெஞ்சில்
அகநக நட்பதாம் அருட்பெருஞ்
ஜோதி
தினந் தொழும் திண்மைப் பொருளை
எனக்கு முழுதாய் அருளே அருளே
கனமழை பெருகும் கண்ணீர்ப் பொருளை
எனக்கு முழுதாய் அருளே அருளே
உனது உயிர் உறவான பொருளை
எனக்கு முழுதாய் அருளே அருளே 2110
நினது அருள் நிலையானப் பொருளை
எனக்கு முழுதாய் அருளே அருளே
சனம் விரும்பும் சன்மார்க்கப் பொருளை
எனக்கு முழுதாய் அருளே அருளே
நான் தானாகும் நாதமாம் பொருளை
ஏன்னெனக் கேளாது அருளே அருளே
முத்தேக மடையும் முச்சுடர்ப் பொருளை
இத்தேகத்தில் இப்போது அருளே அருளே
ஜீவ காருண்ய ஜீவதிறவுப் பொருளை
ஈவதுன் கடனென்று அருளே அருளே 2120
எல்லா உயிரும் இன்புறும் பொருளை
இல்லெனச் சொல்லா தருளே அருளே
சாகாக் கல்வியின் சத்தியப் பொருளை
ஆகாய நடுவில் அருளே அருளே
பதி நிலை பசித்திருப் பொருளை
அதிகம் புசிக்க அருளே அருளே
தன் னொளித் தனித்திருப் பொருளை
இன்றே எனக்கு அருளே அருளே
வா னோடு விழித்திருப் பொருளை
ஊனோடு கலந்து அருளே அருளே 2130
தேகமெழுஞ் சஞ்சீவி தீப்பூடுப் பொருளை
ஏகமாய் கொடுத்து அருளே அருளே
சஞ்சீவி மூலிகை சார்ந்த பொருளை
அஞ்சாமல் எனக்கு அருளே அருளே
ஆதாரந் தரும் அருட்பாப் பொருளை
ஓதாமல் உணர அருளே அருளே
உலகெலாம் உணர்ந்த உத்தமப் பொருளை
அலங்கரித் தெனக்கு அருளே அருளே
தங்கஞ் செய்யும் தன்ஏமசித்திப் பொருளை
அங்கஞ்செய்ய எனக்கு அருளே அருளே 2140
உடைய நால்வகை ஒழுக்கப் பொருளை
அடையச் செய்து அருளே அருளே
களித் திருக்க குளிகைப் பொருளை
அளித்து மகிழ்ந்து அருளே அருளே
எழில் உற ஏழுதிரைப் பொருளை
அழித்துக் காட்டி அருளே அருளே
மாயா நிலை முப்படிப் பொருளை
ஆயாமல் எனக்கு அருளே அருளே
தானே நானாகும் தத்துவப் பொருளாய்
ஆனேன் என்று அருளே அருளே 2150
அகத்திலே அடிமுடி இல்லாப் பொருளை
உகந்துடைமை எனக்கு அருளே அருளே
ஆன்ற சன்மார்க்க ஒருமைப் பொருளாம்
ஆன்மநேயம் எனக்கு அருளே அருளே
பொற்பதங் காட்டி பொற் சபை
அற்புதம் எனக்கெ அருளே அருளே
உருவரு அற்ற எல்லோர்க்கும் பதியாம்
அருட்பெருஞ் ஜோதி இறையே இறையே
வளி மண்டலம் வான் மண்டலமெங்கும்
ஒளி வழங்கும் இறையே இறையே 2160
வயங்கு வெளியெலாம் வளர்ந்தத் திரு
இயற்கை உண்மை இறையே இறையே
தயவு விளக்கமெலாம் தருவிளக்க மாகி
இயற்கை விளக்க இறையே இறையே
செயற்கை மயல் சாராது ஓங்குமோர்
இயற்கை இன்ப இறையே இறையே
அன்னை தந்தையாய் எனக்கு குருவுமாகி
என்னைத் தானக்கும் இறையே இறையே
நல்லான் நலம்செய நன்றே நல்குவான்
எல்லாம் வல்லஓர் இறையே இறையே 2170
பயிராய் பரியாய் புழுவாய் பார்க்கின்ற
உயிரில் உறையும் இறையே இறையே
அயனும் வியக்க யாவரும் பெற்றிடும்
இயல் எனக்களித்த இறையே இறையே
சராசரங் காணா சன்மார்க்கப் பெரும்பதி
இராமலிங்கர் காட்டிய இறையே இறையே
வித்த கரெலாம் வியக்க எனக்கமைந்த
சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே
நித்தி யானந்தம் நிலைக்க எனக்கமைந்த
சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே 2180
சித்தியல் முழுதும் சித்திக்க எனக்கமைந்த
சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே
மத்தியில் அமர்ந்து மயலற எனக்கமைந்த
சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே
எத்திக்கும் சந்திக்க என்னுயிரா யமைந்த
சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே
சத்தியம் போதித்து சத்தியனாய் அமர்ந்த
சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே
புத்தியாம் ஒழுக்கம் புரிந்து எனைஏற்றும்
சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே 2190
சத்தமொன்று மிலாது சோதனை தடுக்கும்
சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே
முத்தரும் சித்தரும் மதிக்க அருளிய
சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே
அத்தெலாம் நீக்கிய என் இராமலிங்க
சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே
சன் மார்க்க சித்து பெற்றோங்க
என்னை ஈன்ற என்னன்புத் தாயே
தன்னோடு உயர்த்தி திருக்கூட்ட மரபில்
என்னையும் நிறுத்திய என்னன்புத் தாயே 2200
கருவாய் உருசெய்த காலங் கடத்திஎனை
அருவாய் செய்யும் என்னன்புத் தாயே
என்னோ டிருந்து எந்தனை வளர்த்து
என்னோடு கலந்த என்னன்புத் தாயே
பிறர் இழியாதப் பண்புகளை ஊட்டியே
அறத்தோடு வளர்க்கும் என்னன்புத் தாயே
உணர்வு வருமுன்னே உறு பசிக்கு
உணவளித்து காக்கும் என்னன்புத் தாயே
உறங்கும் போதும் என்தலை சுமக்கும்
உறவாய் இருக்கும் என்னன்புத் தாயே 2210
அழுதிடுந் தோறும் ஆறுதல் கூறிஎனை
எழுந்திட வைக்கும் என்னன்புத் தாயே
சத்தியப் பெயரைச் சூட்டி எனையும்
அத்தனென் றாக்கிய என்னன்புத் தாயே
தேவை எலாம் தெரிந்து எனக்கு
ஆவகை அருளும் என்னிறைத் தாயே
சித்தெல்லாம் புரிந்து சிகரத்தில் ஏற்றிஎனை
உத்தம னாக்கும் என்னறிவுத் தந்தையே
ஒன்றெனக் காணும் அறிவெனக் களித்து
அன்ப னாக்கும் என்னறிவுத் தந்தையே 2220
படிப்பறியா பாவியேன் பரிந் தெனையும்
அடிய னாக்கும் என்னறிவுத் தந்தையே
அநந்த நிலை யானந்த நிலையாயெனை
அநாதி யாக்கும் என்னறிவுத் தந்தையே
தபசு செய்யத் தவறும் எனக்கும்
அபய மளித்த என்னறிவுத் தந்தையே
சரம் ஓங்கவே சன்மார்க்கத் திலெனை
அரச னாக்கும் என்னறிவுத் தந்தையே
அறியா பரமாகாச அற்புதங் களெல்லாம்
அறிய வைக்கும் என்னறிவுத் தந்தையே 2230
ஐந்தொழி லாற்றல் எனக்கு மளிக்கும்
எந்தாயே குருவே என்னறிவுத் தந்தையே
பொய்யான தேகத்தில் புகுந்தே மெய்யாக்கும்
அய்யனே அன்னையே என்னறிவுத் தந்தையே
வான் கலந்தோரெல்லாம் வணங்கவே என்
ஊன் கலந்தோங்கும் என்இறைத் தந்தையே
எல்லாம் வல்ல எந்தனிச் சித்தர்
மெல்லென ஓதிய மகா மந்திரமே
உலகெலாம் உணர்ந்து உயி ரெலாம்
மலர்ந்து மணக்கும் மகா மந்திரமே 2240
சரண மடைந்து சத்திய வழியில்
மரணந் தடுக்கும் மகா மந்திரமே
பார் ஓங்கப் பன்னும் சுத்தசன்
மார்க்க மளித்த மகா மந்திரமே
பாமர மார்க்கங்கள் புகலும் மந்திர
மாமறைகளு மறியா மகா மந்திரமே
கண்ணெனக் காக்கும் கருணை யால்
மண்ணு யிரான மகா மந்திரமே
என் னகத்தில் இரண்டறக் கலந்து
முன்னென நடக்கும் மகா மந்திரமே 2250
உறங்கச் செய்யும் உப தேசங்களை
மறக்கச் செய்யும் மகா மந்திரமே
இனி இறவா இனிமைத் தந்துத்தம
மனித னாக்கும் மகா மந்திரமே
வகுப் பெடுத்து வாய்மை யுரைத்து
மகுடஞ் சூட்டும் மகா மந்திரமே
முடி யெலாம் முகங் காட்டிட
அடி யெலாம் அகங் காட்டிட
கண்ணீர்ப் பெருகி கண்ணும் கரைந்திட
எண்ணம் பெருகி எத்திசையும் சென்றிட 2260
இமை இரண்டும் இமைக்க மறந்திட
சுமை யெலாம் சுகமாய் மலர்ந்திட
நரம் பெலாம் நாட்டியம் புரிந்திட
கர மிரண்டும் கட்டித் தழுவிட
நடு விருக்கும் நற்றவன் எழுந்திட
படுத்த பாம்பெலாம் படமெடுத் தாடிட
விடுத்த மூச்செலாம் விண்ணவ னாகிட
எடுத்த மூச்செலாம் என்னவ னாகிட
இரண்டும் கலந்து இல்லாத தாகிட
மிரண்ட தேகமும் மின்னொளி யாகிட 2270
இரத்த மனைத்தும் இராமலிங்க மாயிட
மரத்தில் கலந்து மகாமந்திர மாயிட
அலறிய குரலெலாம் அன்பே ஓங்கிட
மலர்ந்த இதழ்களில் மருந்தை ஊட்டிட
தத்துவ மெலாம் தன்ன தாகிட
இத்தவம் புரிய அமிழ்து சுரந்திட
புருவ நடுவில் புருடன் கலந்திட
அருவ நிலை அன்றே வந்திட
உடம் பெலாம் உண்மை யாகிட
சடங் களெலாம் சிரித் தெழுந்திட 2280
காய முழுதும் கற்பூரம் மணந்திட
மாய மதங்கள் மருண் டோடிட
இதயத் துடிப்பு இனிதாய் நின்றிட
உதயமாகி உத்தமன் உரு வாகிட
எல்லா உலகும் எதிர்நின்று வணங்கிட
பொல்லாப் பசியும் பறந்தே சென்றிட
எல்லா உயிரும் இன்புற்று வாழ்ந்திட
வல்லா னெனை வருவிக்க உற்றிட
தயவைப் பெற்றே தலைவனைப் பாடிட
நயந்த ஐந்தொழிலை நான்செய்ய தந்திட 2290
ஆன்மக் குறிகளில் இன்பம் பொங்கிட
வான் கலந்தோரெலாம் வந்து வணங்கிட
சிலிர்த்த முடியொன்று செத்தாரை எழுப்பிட
வலிந்து சித்தெல்லாம் விரும்பி கொடுத்திட
என்னதவம் செய்தனோ என்றே முழித்திட
அன்ன தான மளித்தாய் என்றேமுழங்கிட
நான் செய்தவத்தால் நானே தொலைந்திட
வான் செய்தவல்லபம் வானாய் ஆகிட
தேகத்தில் சத்தியம் துளிர்த்து எழுந்திட
போகத்தில் பெருவாழ்வு பெருகி வந்திட 2300
வாழ்க நின்னருள் வளர்க நின்பொருள்
ஏழ்திரை விலக்கிய அருட்பெருஞ் ஜோதி
வாழ்க நின்கொடை வளர்க நின்படை
ஊழ்வினை அகற்றிய அருட்பெருஞ் ஜோதி
புனைந்த வாறே புனைந் துரைத்தேன்
எனையும் புனர்ந்த அருட்பெருஞ் ஜோதி
வாழ்கநின் மனிதம் வாழ்கநின் ஆன்மம்
வாழ்கநின் இயற்கை வாழ்கநின் இறைமை
வாழ்க உலகெலாம் வாழ்க உயிரெலாம்
வாழ்க தருமச்சாலை வாழ்க ஞானசபை 2310
வாழ்க சித்திவளாகம் வாழ்க சங்கங்கள்
வாழ்க சுத்தசன்மார்க்கர் வாழ்க கருங்குழி
வாழ்க திருமருதூர் வாழ்க சின்னக்காவணம்
வாழ்க சென்னை வாழ்க உத்தரஞான சிதம்பரம்
வாழ்க கல்பட்டு வாழ்க தொழுவூர்
வாழ்க காரணப்பட்டு வாழ்க புதுச்சேரி
வாழ்க கடலூர் வாழ்க தமிழ்நாடு
வாழ்க இந்தியா வாழ்க உலகநாடுகள்
வாழ்த் தெல்லாம் வாழவேண்டுமென என்
ஆழ்மனத்தில் இருந்து வாழ்த்தினாய் போற்றி 2320
என்னுள்ளே அமர்ந்து என்னுள்ளே நடந்து
என்னுள்ளே விழுந்து என்னுள்ளே கலந்து
என்னுள்ளே பூத்து என்னுள்ளே மலர்ந்து
என்னுள்ளே கனிந்து என்னுள்ளே இனித்து
என்னுள்ளே எரிந்து என்னுள்ளே தெரிந்து
என்னுள்ளே மறைந்து என்னுள்ளே விரிந்து
என்னுள்ளே நினைந்து என்னுள்ளே காய்ந்து
என்னுள்ளே படிந்து என்னுள்ளே நிறைந்து
என்னுள்ளே விரைந்து என்னுள்ளே ஆழ்ந்து
என்னுள்ளே கடந்து என்னுள்ளே விருந்து 2330
படைத்த தனிக்கடவுளின் பதம் போற்றி
நடை பயிற்றுவித்த நாதனடி போற்றி
உத்தரஞான சிதம்பர உத்தமன் போற்றி
நித்திரை போக்கிய நிமலனடி போற்றி
வடலூர் ஞானவடிவ வானவன் போற்றி
கடவுள் தனிப்பெருங் கருணையன் போற்றி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி 2338