"சன்மார்க்க
விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
ஆசிரியரின்
தலையங்கம்
DECEMBER - 2015
தங்கமே தங்கம்
எந்த ஒரு நாட்டிலும் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக
இருக்க வேண்டும். அப்படி இருக்கும் நாடுதான் வல்லரசாக இருக்க முடியும். நமது
இந்தியாவில் அவ்வாறு இல்லை. எப்போது பார்த்தாலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்ற
வார்த்தையினை மத்திய அரசு வெளியிட்டுக்கொண்டே இருக்கும். அது என்ன நடப்பு கணக்கு
பற்றாக்குறை? எந்த ஒரு பொருளையும் இறக்குமதி செய்யும் போது அதற்கான தொகையினை நாம்
பயன்படுத்தும் இந்திய பணத்தால் செலுத்த முடியாது. அதற்கு பதிலாக அமெரிக்கன் டாலர்
அல்லது யூரோ பணமாகத்தான் செலுத்த வேண்டும். இந்த அமெரிக்கன் டாலரும் யூரோவும்
நம்மிடம் எப்படி கிடைக்கிறது எனில், அது ஏற்றுமதி செய்வதின் மூலம் கிடைக்கிறது.
ஏற்றுமதியானதால் இப்படி கிடைத்த அன்னிய செலவானியை நாம் இறக்குமதி செய்ததற்காக பிற
நாடுகளுக்கு கொடுத்துவிடுகிறோம். இதனால் நம்மிடம் அன்னிய செலவானி கையிருப்பு
இருப்பதில்லை. இந்த அன்னிய செலவானி கையிருப்பு பற்றாக் குறையினைத்தான் நாம் நடப்பு
கணக்கு பற்றாக்குறை என்கிறோம்.
அன்னிய செலவானி கையிருப்பை அதிகரிக்கத்தான் தற்போத மத்திய அரசு பல்வேறு
முயற்சிகளை செய்துவருகிறது. நாம் செய்யும் இறக்குமதிகளிலே பெட்ரோல், டீசலுக்கு
அடுத்த படியாக தங்கக்கட்டிகளைத்தான் அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.
தற்போதய நிலையில் தங்கச் சுரங்கம் இந்தியாவில் எங்கும்
செயல்படவில்லை. ஒரு கிராம் தங்கத்திற்குக் கூட நாம் வெளிநாட்டினையே நம்பியுள்ளோம்.
இந்நிலையில் இந்தத் தங்க விற்பணையில் இந்தியா தான் உலகிலேயே இரண்டாவது இடத்திலும்
தங்க இறக்குமதியில் முதல் இடத்திலும் உள்ளது. இந்திய மக்கள் இதனை முதலீடாகக்
கருதுவதே இதற்கு காரணம். முக்கியமாக பெண்களை பெற்ற பெற்றோர்கள் தங்கள் வீட்டுக்கு
மாப்பிள்ளைகளை வாங்குவதற்கு இந்தத் தங்கத்தையே பயன்படுத்துகின்றனர்.
இதற்காக நாம் வாங்கும் தங்கத்தை மாப்பிள்ளை
வீட்டாரிடம் கொடுத்து விடுகிறோம். அதனை அவர்கள் வீட்டிலோ அல்லது வங்கி லாக்கரிலோ
வைத்துப் பூட்டி வைக்கின்றனர். அல்லது அடமானமாக வங்கியில் தூங்கிக்
கொண்டிருக்கும். இவ்வாறு பல நிறுவனங்களிலும், கோயில்களிலும் கூட தங்கம் பயன்பாடு
இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் நாட்டிற்கோ வீட்டிற்கோ யாதொரு பயனும்
இல்லை. இவ்வாறு நமது நாட்டில் பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம்
முடங்கிப்போயுள்ளது.
அவ்வாறு முடங்கியுள்ள தங்கத்தை வெளிகொண்டு வந்தால், நாம் புதியதாக தங்கத்தை
இறக்குமதி செய்யாமல் இதனையே மறு சுழற்சி மூலம் மீண்டும் தேவைப்படுவோர்க்கு விற்பணை
செய்யலாமே! இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையே இல்லாமல் செய்யலாமே! என்பதே
மத்திய அரசின் கனவு.
இக்கனவு செயல்பாட்டுக்கு வந்தால் ரூபாய் 52 லட்சம் கோடி
மதிப்புள்ள 2 கோடியே 20 லட்சம் கிலோ இந்திய தங்கம் மீண்டும் இந்திய மக்களுக்கே
விற்பணைக்கு வரும். இக்கனவு நிறைவேறினால் நிச்சயமாக நம்நாடு வல்லரசு ஆகும்
என்பதில் சந்தேகம் இல்லை. சராசரியாக ஒரு ஆண்டிற்கு நாம் பத்து லட்சம் கிலோ
தங்கத்தை இறக்குமதி செய்கிறோம். அதாவது நாம் நம்மிடம் உள்ள தங்க நகைகளில் 70
சதவிகதிம் மட்டுமே உபயோகிக்கிறோம். ஏதோ ஒரு காரணத்தினால் நாம் நமது 30 சதவிகித
நகைகளை பயன்படுத்தாமல் உள்ளோம். அந்த 30 சதவிகத நகைகளைத்தான் 2 கோடியே 20 லட்சம்
கிலோ என்று மதிப்பிட்டுள்ளோம். இதனைத்தான் மறு சுழற்சிக்கு நமது அரசு கேட்கிறது.
கோயில்களில் உள்ள தங்கம் முழுவதும் இந்தக் கணக்கில் வராது. அது பலப்பல கோடி
கோடியினைத் தாண்டிச் செல்லும்.
தங்க மறுசுழற்சிக்கானத்
திட்டத்தையும் நமது மத்திய அரசு நவம்பர் 05-ஆம் தேதி துவங்கியது. அதற்காக மூன்று
விதமான தங்க முதலீட்டுத் திட்டத்தை அறிவித்தது.
1.
தங்க
நாணயம்:
தங்க நாணயங்களை இந்திய அரசே உற்பதி செய்து விற்பது. அசோக
சக்கரம் ஒரு புறமும், மறு புறம்
காந்தி உருவம் பொறித்த தங்கக் காசுகளை, நமது இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர
மோதி அவர்கள் அன்றைய தினமே வெளியிட்டார். தங்க இறக்குமதி என்பது தற்போது
பிஸ்கெட்டாக பெறப்படுவதில்லை. மாறாக நாணயங் களாகவே பெறப் படுகின்றது. உள்
நாட்டிலேயே நாணயத்தைத் தயாரித்து விட்டால் இறக்குமதியைக் குறைக்கலாம் என்பதே
மத்திய அரசின் கணக்கு.
நாம் இனிமேல் தங்கக்காசுகளை வங்கியிலோ,
நகைக்கடைகளிலோ வாங்காமல் இந்திய அரசு வெளியிட்டுள்ள இந்தத் தங்க நாணயங்களை
வாங்குவதன் மூலம், நாம் நமது நாட்டிற்கு உதவ முன்வரலாம். இது 5, 10, 20 கிராம்
எடைகளில் கிடைக்கிறது. இதனை நாடு முழுவதும் இருக்கும் எம்.எம்.டி.சி. (
Metals and Minerals Trading Corporation) விற்பனையகங்களில் வாங்கிக்கொள்ளலாம். நாம் இனிமேல்
சேமிப்பிற்காக தங்கம் வாங்கும்போது நகைகளாக வாங்காமல், அரசின் இந்த தங்க நாணயங்களை
வாங்குவது நாட்டிற்கும் வீட்டிற்கும் சிறந்தது.
2. தங்க முதலீட்டுத் திட்டம்:-
பொதுமக்களிடம் உள்ள பயன்படுத்தப்படாத உள்ள தங்கத்தை பணமாக்கும் திட்டம்.
இந்தத் திட்டம்தான் நமது இந்திய இறக்குமதியை கணிசமாக குறைக்கின்ற திட்டம் ஆகும்.
ஏற்கனவே இத்திட்டம் எஸ்.பி.ஐ.
வங்கியில் நடைமுறையில் உள்ளது. எனினும் இத்திட்டம் பரவலாக மக்களிடம்
சென்றடையவில்லை. தற்போது அரசே இதனை மேற்கொள்வதால் மக்களிடம் மிக எளிதில்
சென்றடையும்.
நாம் தங்கத்தை அடமானம் வைத்தாலும்,
லாக்கரில் வைத்தாலும், சம்பந்தப்பட்ட வங்கிக்கு வட்டியாகவோ கட்டணமாகவோ நாம் பணத்தை
செலவிட வேண்டும். இவ்வாறு வட்டியுமின்றி கட்டணமுமின்றி நமது உபரி தங்கத்தை
வங்கியாளர் மூலம் பாதுகாப்பதின் மூலம் நமக்கு வருமானம் கிடைக்கும் திட்டமே இந்த
தங்க சேமிப்புத் திட்டம். இதனால் பயன்படுத்தப்படாத தங்க நகைகள் பண மதிப்பைப் பெறுகின்றன.
இத்திட்டத்தின் மூலம், நம்மிடம்
பயன்பாட்டில் இல்லாத ஆங்காங்கு தூங்கிக் கொண்டிருக்கும் தங்க நகைகளை / தங்கத்தை
எடுத்துச் சென்று அரசுடைமை வங்கிகளில் கொடுத்துவிட வேண்டும். குறைந்த பட்சம்
ஒருவர் 30 கிராம் தங்கத்தை முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கான காலம் அதிகபட்சம் 15
ஆண்டுகள். ஓர் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான குறுகிய கால டெபா சிட், 5 முதல் 7
ஆண்டுகள் வரை யிலான நடுத்தர கால டெபாசிட், 12 முதல் 15 ஆண்டுகள் வரை யிலான நீண்ட
கால டெபாசிட் என 3 வகையான தங்க டெபாசிட் திட்டங் களை வங்கிகள் செயல்படுத்தும். இதற்காக
ஆண்டுக்கு இரண்டரை சதவிகித வட்டி நமக்குக் கிடைக்கும். இதன் மூலம் கிடைக்கும்
தங்கத்தை நகை உற்பத்தியாளர்களிடம் அரசு விற்பணை செய்துவிடும். எனவே நகை
உற்பத்திக்காக நாம் தங்கத்தை இனி இறக்குமதி செய்ய தேவை இருக்காது.
உற்பத்தியாளர்களிடம் அரசு விற்பணை செய்துவிடும். எனவே நகை
உற்பத்திக்காக நாம் தங்கத்தை இனி இறக்குமதி செய்ய தேவை இருக்காது. இவ்வாறு முதலீடு
செய்த தங்கத்தை நாம் குறிப்பிட்ட காலம் கழித்து தங்கமாகவோ, அன்றைய மதிப்பில்
பணமாகவோ பெற்றுக்கொள்ளலாம். இடையில் ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டியும் கிடைக்கிறது
என்பதே இதன் சிறப்பம்சம்.
நாம் முதலீடு செய்யும் தங்க நகைகளை
உருக்கி அதில் உள்ள சுத்த தங்கத்தையே மதிப்பீடாக கொள்வார்கள். எனவே அந்நகை உருக்கி
வந்தவுடன்தான் அதன் மதிப்பு நமக்குத் தெரியும். தங்க நகைகளை உருக்கும் ஆலை
மும்பையில்தான் உள்ளது. அங்கு சென்று உருக்கிய பிறகே அதன் மதிப்பிற்கு, நமக்கு
தங்க வைப்பு சான்றிதழ் கொடுப்பார்கள் வங்கியாளர்கள். முதலீட்டாளர்கள் பி.ஐ.எஸ்.
தரச்சான்றோடு நகைகளை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே சொன்னது போல் மாதா
மாதம் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி மூலம் கிடைக்கும் தொகைக்குவருமான வரி
செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இதன் சரியான நடைமுறை என்ன?
என்பது இன்னும் வங்கியாளர்களுக்கே தெரியவில்லை.
நாம் வங்கியில் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கிற்கு 4 சதவிகிதம் ஆண்டு
வட்டி கிடைக்கிறது. அதனையே குறிப்பிட்ட காலத்திற்கு வைப்புத் தொகையாக (Fixed
Deposit) வைத்தால் குறைந்த பட்சம் 8
சதவிகிதம் ஆண்டு வட்டி கிடைக்கிறது.
(Fixed
Deposit) வைத்தால்
குறைந்த பட்சம் 8 சதவிகிதம் ஆண்டு வட்டி கிடைக்கிறது. நமது தங்கத்தை விற்றுவிட்டு
அந்தப் பணத்தை வங்கியின் சேமிப்புக் கணக்கில் வைத்தாலே 4 சதவிகிதம் வட்டி
கிடைத்துவிடுகிறது. வைப்புத் தொகையாக வைத்தால் 8 சதவிகிதம் வட்டி
கிடைத்துவிடுகிறது. பிறகு ஏன் 2.5 சதவிகத வட்டிக்காக நாம் நமது தங்கத்தை அரசிடம்
ஒப்படைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
சேமிப்பு கணக்கிலும் வைப்பு கணக்கிலும்
வட்டி சதவிகிதத்திற்கு ஏற்ப லாபம் கிடைக்கிறது. ஆனால் நாம் தங்கத்தை அரசிடம்
ஒப்படைக்கும்போது, தங்கம் கை மாறுகிறதே ஒழிய அந்த தங்கம் இன்னும் உங்களுடைய
சொத்தாகவே உள்ளது என்பதும், அதன் மதிப்பு குறிப்பிட்ட காலத்தில் என்ன மதிப்போ அதனை
அடைந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் நாம் தங்கத்தை அரசிடம்
கொடுப்பதை விட அதனை விற்று வரக்கூடியப் பணத்தை வங்கியில் வைப்புத்தொகையாக வைத்தாலே
நமக்கு அதிக லாபத்தை அது ஈட்டித்தரும். எனினும் நாம் அதனை துணிந்து செய்ய
மாட்டோம். ஆகவே இது போன்ற தஙக முதலீட்டுத் திட்டத்தில் சேர்வதே சிறந்தது. பண
லாபத்தைவிட தங்கம் நம்மிடையே இருப்பது நட்டத்தைக் கொடுத்தாலும் அதனையே இந்தியர்கள்
விரும்புகின்றனர். எனவேதான் இந்த திட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது.
3. தங்க பத்திரத் திட்டம்:-
இத்திட்டத்தின்படி நாம் குறைந்த பட்சம் 2 கிராம் முதல் அதிகபட்சம் 500 கிராம் வரை முதலீடு செய்யலாம்.
அன்றைய தங்கத்தின் மதிப்பை சான்றிதழில் குறித்து பத்திரமாக பெற்றுக்கொள்ளலாம்.
தங்கம் கிடைக்காது. தங்கத்தின் மதிப்பில் சான்றிதழ் கிடைக்கும். இந்த
பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.75 சதவிகித வட்டியும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல்
பத்திரத்தின் மதிப்பு, அன்றாடம் உள்ள தங்கத்தின் மதிப்பை ஒத்து மாறுபட்டுக்கொண்டே
இருக்கும். முதலீட்டு காலம் 8 ஆண்டுகள். எனினும் 5 ஆண்டு முதல் முதலீட்டை அன்றைய
மதிப்பில் தங்கமாகவோ அல்லது பணமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தங்கப் பத்திரத்தை வைத்து கடன்
பெறமுடியும் மற்றும் மற்றவர்களுக்கு விற்கவும் முடியும் என்கின்றனர். எனினும் இதன்
முழு விவரம் இன்னும் சரியாக தெரியவில்லை. அனைத்தும் தெரிந்துக்கொண்டு நாம் இதில்
முதலீடு செய்வது மிகச் சிறந்தது. இதன் மூலம் விற்பவரோ வாங்குபவரோ, தங்கத்தை
பார்க்கமலேயே அதன் மதிப்பை வைத்து விளையாடும் ஒரு சிறந்த சூதாட்டம் இது.
பத்திரம் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? அதனை களவாடியவருக்கு அது
சொந்தமாகுமா? என்ற சந்தேகங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இனி நாம் தங்க நகைகளை
வாங்கிக்கொண்டு அதனை பாதுகாக்க பல வழிகளை தேடிக்கொண்டிராமல் இப்படிப்பட்ட
காகிதங்களை வாங்கிக்கொள்வது நமக்கும் நமது அரசிற்கும் நல்லது. தங்க நகைகள்
என்னதான் ஹால் மார்க், பாஸ் மார்க்
என்னதான் ஹால் மார்க், பாஸ் மார்க் என்று வாங்கினாலும்
நமக்கு அந்த நகைகள் மேல் உள்ள சந்தேகம் தீராது. மேலும் அதனை விற்கும் போது அந்த
கூலி, இந்த கூலி என்று கழித்துவிட்டுத்தான் பணம் கொடுப்பார்கள். அந்த சிக்கல்
எல்லாம் இத்திட்டத்தின் மூலம் தீர்ந்தே விட்டது.
இனிமேல், எவ்வளவு நகை போடுவீர்கள்
என்று கேட்காமல், எவ்வளவுக்குப் பத்திரம் கொடுப்பீர்கள் என்று கேட்கும் காலம்
வந்தாச்சு. எனக்கு அந்த மாடல் பிடிக்க வில்லை, அதனை மாற்ற வேண்டும் என்று ஒருவர்
சொல்ல, அது என் வீட்டு சொத்து, அதனை மாற்றக்கூடாது என்று ஒருவர் மறுக்கின்ற
சிறுபிள்ளை பிரச்சனைக்கும் முடிவு வந்துவிட்டது. இனிமேல் எல்லாம் ஒரே பேப்பர்
மாடல்தான். பண்டிகை காலங்களிலும் நாம் தங்க நகைகளுக்கு பதில் தங்கப் பத்திரத்தை
வாங்குவோம்.
மேற்கண்ட மூன்று திட்டங்களும்
இன்னும் முழுமையாக மக்களிடம் சென்று சேரவில்லை. அதற்கு காரணம் அதன் நடைமுறைகள்
என்ன? என்று முழுவதும் தெரியப்படுத்தாமல் உள்ளது அரசு. இதன் காரணமாக தங்க
முதலீட்டுத்திட்டத்தில் இதுவரை அரை கிலோ தங்கம் மட்டுமே இந்தியா முழுவதிலிருந்தும்
பெறப்பட்டுள்ளது. அதே போல் இதுவரை 150 கோடி ரூபாய் அளவில் மட்டுமே தங்கப் பத்திரம்
விற்பணையாகி உள்ளது. தங்க நாணய நிலவரம் தெரியவில்லை.
போகப்போக இத்திட்டம் வெற்றியடையுமா? தோல்வி யடையுமா? என்பதை
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்த மூன்று திட்டங்களையும் மக்களின்
நலன் கருதியும் நாட்டு நலன் கருதியும் சன்மார்க்க விவேக விருத்தி வரவேற்கிறது.
இதனிடையில் திருப்பதி கோயிலில்
உண்டியல் மூலம் பெறப்படுகின்ற தங்கங்களை எல்லாம் இந்த தங்க முதலீட்டுத்
திட்டத்தில் செலுத்த திட்டமிட்டு அவ்வாறே செயல்படுத்தியும் வருகிறது திருப்பதி
கோயில் நிர்வாகம். அதனையும் வரவேற்கிறது சன்மார்க்க விவேக விருத்தி.
நாம் மறந்துப்போன கேரள பத்மநாபசுவாமி
கோயில் தங்க ஆபரணங்களையும் அங்கிருந்து எடுத்து 70 சதவிகத நகைகளை (முக்கியமானதைத்
தவிர) இதே திட்டத்தில் முதலீடு செய்ய அந்த கோயில் நிர்வாகம் முன்வரவேண்டும். அங்கே
இன்னும் இரண்டு அறைகளை திறந்துக்கூடப் பார்க்கவில்லை. ஜாதகம், சாஸ்திரம்
பார்த்துக்கொண்டு நமது பொருளாதாரத்தை நாமே பின்னுக்கு தள்ளுகிறோம் என்பதனை அங்கே
உள்ள கோயில் நிர்வாகிகள் கவனிக்க வேண்டும். பல கோடிக் கோடி நகைகள் அங்கே தேவையற்று
பூட்டிக்கிடக்கின்றன. அவைகளை பணமதிப்பில் கொண்டு வந்துவிட்டாலே நம் நாடு
வல்லரசாகிவிடும். மத்திய அரசும், உச்ச நீதி மன்றமும் நம் நாட்டின் நலன் கருதி
இதற்கு ஒரு நல்ல முடிவைத் துணிந்து எடுக்க வேண்டும் மேலும் நம் நாட்டில் உள்ள
எல்லா கோயில்களிலும் உள்ள தேவையற்ற நகைகளை எல்லாம் இத்திட்டத்தில் பயன்பெறும்படி,
அந்தந்த கோயில் நிர்வாகிகள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று இந்த சன்மார்க்க விவேக
விருத்தி கேட்டுக்கொள்கிறது.
கோடிக் கோடி நகைகள் அங்கே தேவையற்று பூட்டிக்கிடக்கின்றன.
அவைகளை பணமதிப்பில் கொண்டு வந்துவிட்டாலே நம் நாடு வல்லரசாகிவிடும். மத்திய
அரசும், உச்ச நீதி மன்றமும் நம் நாட்டின் நலன் கருதி இதற்கு ஒரு நல்ல முடிவைத்
துணிந்து எடுக்க வேண்டும் மேலும் நம் நாட்டில் உள்ள எல்லா கோயில்க ளிலும் உள்ள
தேவையற்ற நகைகளை எல்லாம் இத்திட்டத்தில் பயன்பெறும்படி, அந்தந்த கோயில்
நிர்வாகிகள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று இந்த சன்மார்க்க விவேக விருத்தி
கேட்டுக்கொள்கிறது.
மழையும் மனிதனும்
நவம்பர் மாதம் - இந்த வருட தீபாவளியை கொண்டாட தமிழக மக்கள்
தயாராகிக் கொண்டிருந்தனர். தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன்னரே வானிலை அறிக்கையை
மக்கள் கேட்டறிந்தனர். வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
அதனால் புயல் உருவாகி அது கடலூர் அருகே கரையைக் கடக்கும், கடலோர மாவட்டங்களில் மழை
பெய்யும் என்று சொல்லியது வானிலை அறிக்கை. அந்தத் துறையின் கடமை அத்துடன்
முடிந்தது.
இதனை எங்கிருந்தோ தெரிந்துக்கொண்டது
அரசு. உடனே கடலூர் மாவட்ட ஆட்சியர் மூலம் மழையையும் புயலையும் சமாளிக்கும் வகையில்
தயாராக இருக்கும்படி அதிகாரிகளை முடுக்கி விட்டது. மழையும் புயலும்
சேர்ந்துக்கொண்டு இவ்வருட தீபாவளியை சிறப்பாகவே கொண்டாடின. இதனால் கடலூர்
மாவட்டத்தில் தீபாவளி அன்று மின்சாரம் நிறுத்தப்பட்டது. பல கிராமங்களில் வெள்ளம்
பெருக்கெடுத்து ஓடின. வீராணம் ஏரி திறந்துவிடப் பட்டதால் சிதம்பரம் நகரம்
வெள்ளத்தால் சூழ்ந்தன. பண்ருட்டி அடுத்த பெரிய காட்டுப்பாளையம் ஓடையில் ஏற்பட்ட
வெள்ளப் பெருக்கால் அப்பகுதி மக்களில் பத்து பேர் இறந்தனர் இதற்கு முன்னர்
2011-ஆம் ஆண்டில் இதே கடலூர் மாவட்டம் 'தானே' புயலால் பாதிப்படைந்தது.
அப்படிப்பட்ட பெரும் புயலிலும்கூட மக்கள் மாளவில்லை. ஆனால் இம்மாதம் பெய்த மழையால்
கடலூர் மாவட்டத்தில் மக்கள் இறந்தனர்.
தானே புயலால் கடலூர் நாகை மாவட்டங்கள்
பாதிப்படைந்ததாலும், அடிக்கடி புயல் மழையால் இவ்விரு மாவட்டங்களும்
பாதிப்படைவதாலும், மின்சார வசதி அச்சமயங்களில் துண்டிப்பதை தவிர்க்க பூமிக்கடியில்
மின்சார கேபிள் பதித்து அதன் மூலம் மின்சாரம் வழங்க மேற்படி மாவட்டங்களுக்காக நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டும் அவ்வேலைகளை இதுவரை செய்யவில்லை. ஆகையால் இம்மாதம் பெய்த
மழையால் மின்சார வசதிகள் ஆங்காங்கே தடைபட்டன. பல லட்சங்கள் செலவிட்டு தற்போது
மின்சார கம்பங்களை மாற்றி வருகின்றனர். பூமிக்கடியில் புதைப்பதற்காக ஒதுக்கப்பட்ட
நிதி என்னவாயிற்று. ஏன் இப்பணிகளை இதுவரை துவக்கவில்லை என்பது பெரும்புதிராக
உள்ளது.
இதனை
அடுத்து தொடர்ந்து பெய்துக்கொண்டிருந்த மழையால் சென்னை மாநகரமும், அதன் புறநகர்
பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை மாநகரமே ஒரு பெரிய ஏரிக்குள்தான்
இருக்கிறது என்பதை அப்போதுதான் அந்நகர மக்களும் அரசும் புரிந்துக்கொண்டன.
காஞ்சிபுரம்,
. என்பதை அப்போதுதான் அந்நகர மக்களும் அரசும்
புரிந்துக்கொண்டன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டமும் இதே போன்று மழை நீரால்
பாதிப்படைந்தது. குறுவட்டம், வட்டம், மாவட்டம், அமைச்சர், முதலமைச்சர், எதிர்
கட்சித் தலைவர், மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் தங்களால் முடிந்தவரை மக்களை நேரில்
சென்று அவர்கள் படும் துயரினை கண்டு ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கைகள் விட்டபடி
இருந்தார்கள். சிலர் நிவாரணம் என்ற பெயரில் உணவு வகைகளும் படுக்க பாய்கள், துணி
வகைகள் ஆகியவைகளை கொடுத்து தங்களது கட்சியின் பொறுப்பினையும் மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்தினர்.
யார் தான் என்ன
செய்ய முடியும்? இப்படி ஒரு மழை வரும் என்று அரசு எதிர்பார்க்கவில்லை. வானிலை
பார்த்துச் சொன்ன இயக்குனரும் எப்பவும்போல் கடமைக்கு புயல் வரும், மழை வரும் என்று
மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பது போல் சொல்லிவிட்டு, இத்துடன் நமது வேலை முடிந்தது
என்று அமர்ந்துக்கொண்டார். இதனை சொல்வதற்கு ஒரு இயக்குனர் தேவையா? அந்தப் படத்தை
பார்த்தால் ஒரு குழந்தைக்கூட இதனை சொல்லி விடுமே.
ஒரு இயக்குனர்
என்றால், மிகக்கடுமையான மழை இந்தந்தப் பகுதியில் வரும், காற்றும் வீசும். வரும்,
காற்றும் வீசும். எனவே அப்பகுதி மக்களை எச்சரிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள்.
வெள்ளம் வர வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்களை உடனே அப்புறப்படுத்துங்கள். ஏரிகள்
ரொம்பி கரைகள்கூட உடையும் அபாயம் இருக்கலாம். எனவே ஏரிக்கரைகளை முடிந்தால்
பலப்படுத்துங்கள், இல்லை யெனில் அதனை சுற்றியுள்ள மக்களை அப்புறப்படுத்துங்கள்.
என்கிற இதுபோன்ற ஆலோசனைகளை அல்லவா அரசிற்கு எடுத்துரைத்திருக்க வேண்டும். அப்படி
எதுவும் நமது இயக்குனர் சொல்லவில்லையே. பிறகு எதற்கு நமக்கு வானிலை ஆராய்ச்சி
நிலையம்? அங்கு வேலை பார்க்கும் நபர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்? எனத்
தெரியவில்லை.
அதே போன்று
அரசும், அந்த வானிலை இயக்குனரை அழைத்து பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை போன்ற
முக்கிய துறை அமைச்சர்களுடன் விவாதித்திருக்க வேண்டும். விவாதத்தில் எடுத்த
முக்கிய முடிவுகளை அமல் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு கூட்டத்தை அரசு
நடத்தவே இல்லை. ஏதோ அவர்கள் இஷ்டத்திற்கு நடத்தவா மக்களாகிய நாம் அவர்களிடம் நமது
ஆட்சியைக் கொடுத்தோம்? இவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் எதற்கு?
மக்களும், நாம் வீடு கட்டுமிடம் ஏரி எனத் தெரிந்தும்
அவ்விடத்தை வாங்கி வீடு கட்டினர். நாம் வீடு கட்டுமிடம் கால்வாய் எனத் தெரிந்தும்
அவ்விடத்தை வாங்கி வீடு கட்டினர். நாம் வீடு கட்டுமிடம் குளம், குட்டை எனத்
தெரிந்தும் அவ்விடத்தை வாங்கி வீடு கட்டினர். அந்த முறையற்ற செயலுக்குத்தான்
மக்களாகிய நாம் தற்போது இயற்கையை ரசிக்க முடியாமல் அதனுடன் போரிடுகிறோம். மக்களாகிய
நமக்கும் புத்தி மழுங்கிவிட்டது.
கூவம்
ஆற்றின் கரையில் கூரை போட்டு வசிப்பவர்களுக்கும், பணங்கொடுத்து ஏரியில் மனை வாங்கி
வீடு கட்டி வசிப்பவர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. இருவரும் ஒருவரே. இயற்கை
அந்த இருவரையும் விரட்டி அடிக்கிறது. பிறகு குய்யோ முறியோ என்று கத்திக்கொண்டு
நாம் நமது அரசினை குற்றம் சொல்ல நமக்கு என்ன அருகதையிருக்கிறது?
இருப்பினும்
இதில் அரசுதான் நூறு சதவிகிதம் தவறு இழைத்துள்ளது. ஏரிகள், கால்வாய்கள், குளங்கள்,
குட்டைகள் ஆகிய பகுதிகளை மக்களுக்கு விற்பணை செய்தது எப்படி? மக்களிடம் பணத்தை
வாங்கிக்கொண்டு ஏப்பம் விட்டுவிட்டனர் அரசு ஊழியர்களும், அரசு நடத்துனர்களும்.
எனவே இதற்கு
தீர்வாக, அடுத்த பத்தாண்டுகளுக்குள் தமிழகம் முழுவதும், காணாமல் போன ஏரிகளையும்,
கால்வாய்களையும், குளங்குட்டைகளையும் கண்டுபிடித்து அதனை மீண்டும் அரசு, இந்த
மண்ணிற்கு அளிக்க வேண்டும். அங்கே எப்படிப்பட்ட ஆக்ரமிப்பு தற்போது இருந்தாலும்
அதனை அகற்றி அவ்விடங்களை தூர்வார வேண்டும். மன்னர் ஆட்சிக் காலத்தில் இருந்த
அனைத்து ஏரிகளும் இந்த பூமி மீண்டும் பார்க்க வேண்டும். அதனை தமிழக அரசு செய்ய வேண்டும்.
இதற்கு மக்களாகிய நாமும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆக்ரமிப்பு செய்த
மக்களுக்கு வேறு எங்கேனும் மேடான இடங்களில் குடியிருப்பை அமைத்துத் தரவேண்டியது
அரசின் கடமையாகும். நீதிமன்றமும் இதில் தலையிட்டால்தான் இந்த புண்ணிய காரியம்
தமிழகத்தில் நடைபெறும்.
இதனை
செய்யாமல் அவ்வப்போது ஏற்படும் வெள்ளத்தால், அமைச்சர் வருவாராம் கூடவே ஆட்சியர்
வருவாராம் நிவாரணங்கள் கொடுப்பார்களாம். அதன் பிறகு அவரவர்கள் வேறு வேலையை பார்க்க
போய்விடுவார்களாம். மக்கள் சாலை மறியல் செய்வார்களாம். காவல் துறை அவர்களை அடித்து
துவைப்பார்களாம். இதுதான் அரசா? இவர்கள்தான் மக்களா?
நவம்பர்
மாதம் பெய்த மழையால் உயிரிழந்த 45-க்கும் அதிகமான மக்களின்
குடும்பத்தார்களுக்கும், வெள்ளத்தால் பாதிப்படைந்து தமது உடமைகள், வசதிகளை இழந்து
வாடும் லட்சங்கணக்காண மக்களுக்கும் சன்மார்க்க விவேக விருத்தி தமது ஆழ்ந்த
அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நமது அரசினை நேர்
வழியில் நடத்துவார் என நம்புவோம்.
இழந்து வாடும் லட்சங்கணக்காண மக்களுக்கும் சன்மார்க்க விவேக
விருத்தி தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
நமது அரசினை நேர் வழியில் நடத்துவார் என நம்புவோம்.
அரசு
என்பது அந்தந்த நேரத்து நிவாரணம் தானோ? துயரம் என்பது அந்தந்த நேரத்து நினைவுகள்
தானோ? மக்கள் என்பவர் அந்தந்த நேரத்து கூட்டங்கள் தானோ? வாழ்க்கை என்பது அந்தந்த
நேரத்து நியாயங்கள் தானோ?
விழித்திருக்க இயலாது வளர்ந்த சமூகம்
விதிவழி செல்லுதே ஆண்டுகள்
கழிந்தும் இன்னும்நாம் வசிக்கும் இடம்
குளங்குட்டை சாக்கடை என்றால்
அழிக்க எழுவாய் அரசினை மனிதா
ஆள்வதும் நாம்தானே அசிங்கம்
இழிவாய்ப் பாட எனக்கும் உண்டே
இனிஇயங்காய் சன்மார்க்கர் ஆளவே. 1
தானே புயலால் தலைகள் உருண்டினத்
தடயங் கண்டும் நம்மரசு
மானே போல்ஆண்டு மென்ன கடலூர்
மக்கள் மாண்டு போனரே
தேனே போல்வந்த மழையும் நம்மை
தேள்என கொட்டிய தென்ன
வானே போல்அர செங்கும் ஊழலால்
வளர வாழ்கநம் ஆட்சியே. 2
கொட்டின மழைக்கு கூடாரம் எங்கேநம்
கைகள்வெட்டின கால்வாய் எங்கே
மொட்டையாய் நின்ற ஏரிகள் எங்கே
மலர்ந்தநீர்த் தேக்கங்கள் எங்கே
கொட்டையால் விளைந்த மரங்கள் எங்கே
கட்டையில் போகிறவன் காசுக்கு
பொட்டைப் போல் விற்றானே இனிநாம்
பட்டைக்கு போவதுதான் எங்கே. 3
===========================================================================
தி.ம.இராமலிங்கம்