அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
இராமலிங்க
அந்தாதி (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)
நேரிசை வெண்பா
என்றும் கடவுளர்கள் ஏத்தும் பொதுவாம்
மன்றில் நடிக்கும் மணியே - என்னில்
குடிகொண்ட துரியக் குடிலே ராமலிங்கமே
விடிந்த தென்னுள்ளம் விரைந்து.
விரைந்துக் காண வேண்டும்நான் உன்னில்
கரைந்து காணாமைக் கூடுமழகை - நரையுடன்
திரைகூடும் பருவந் தன்னில் ராமலிங்கமே
கரைகாட்டி எனைக் காப்பாய்.
காப்பாகி என்வானின் கதிராகி இப்பாட்டின்
கூப்பாடும் உனது கருணையாகி - நாப்பாடும்
பாட்டெலா மிங்கு பொதுவாகி ராமலிங்கமே
ஈட்டும் மரணமிலா இயக்கம்.
இயங்கி முதல்நான்கை அடுத்த நந்நான்கும்
முயங்கிக் கடந்தும் முடிவில்லை
- தயங்கி
நிற்கையில் என்னுயிர் நிறைந்த ராமலிங்கமே
கற்கோயில் காணாக் கடவுள்.
கடவுளே கடவுளே கடவுளே என்றேதினம்
சடமுள்ளே கடவாத சடமானேன் - மடமான
மதக்கோயில் வழிபட்டு மகிழ்ந்தேன்
ராமலிங்கமே
சதமான அருட்பாவை சார்ந்திலேன்.
சார்பெலாமாகி பெருஞ் சுடருமாகி புவியில்
ஓர்நிலையாகி சன்மார்க்கம் ஓங்குக
- ஏர்உழுது
நீர்ப்பாய்ச்சி நடவும் நட்டால் ராமலிங்கமே
சீர்உற வளர்க்கும் சன்மார்க்கம்.
சன்மார்க்கச் சாலையில் சபையுடன்
சித்திவளாக
தன்மார்க்க இடம்காட்டுவது தயவு
- துன்மார்க்க
சாதிசமய மதந்தவிர்த்து சார்ந்தால்
ராமலிங்கமே
சோதிமயமாய் ஆண்டு சாதிப்பான்.
சாதிப்பேன் என்கிறவனை சோதித்தால்
நானும்
வாதிப்பேன் உன்னிலையை வாய்கிழிய
- தாதியை
நாடினும் ஓர்சுகம் நல்குமே ராமலிங்கமே
ஆடிப்பாடி னேனுனையே அன்புதாராய்.
அன்பினால் ஏகசிவபோக அனுபோகம் அடைய
என்மூன்று சுதந்தர மூச்சும்போனது
- சன்னலான
ஒன்பது ஓட்டையும் அடைந்தது ராமலிங்கமே
ஏன்தான் அருள்தரதாமதம் எனக்கு.
எனக்கென்று வீடில்லை ஊரில்லை உலகமில்லை
தனக்கென்று தந்தை தாயுமில்லை - மனமகிழ
சுவையூட்ட மனைவி சீருமில்லை ராமலிங்கமே
இவையெலாம் நீயெனவே இருந்தேன். 610
இருந்த வேலையை இருமாப்போடு விட்டேன்நான்
வருந்தவே காலங்களை வரைந்தாயோ - இருந்தும்
உனைப் பாடுவது உண்மையெனில் ராமலிங்கமே
எனைஎவ் வுலகமும் ஏற்றும்.
ஏற்றிய வாழ்வெங்கே ஈட்டிய செல்வமெங்கே
போற்றிய உலகமெங்கே பிறருக்காக -
ஆற்றிய
வேலை யெங்கே வள்ளல் ராமலிங்கமே
காலைநீட்டி படுத்தக் காலை.
காலைமாலை இரவென்று காலக் கணக்கில்
ஓலைவரும் வரை ஓயாதுசுகத்தை - சேலைத்
தழுவிக் கூடித் தளர்ந்தேன் ராமலிங்கமே
அழுகும் உடலில் அழகாய்நீ.
அழகாய் நீயும்உன் அருகில் நானுமிருக்க
விழலாமோ தேகம் விமலா - நிழல்தரும்
மரத்தை வீழ்த்த மனமேனோ ராமலிங்கமே
கரத்தைப் பிடித்தேன் கைவிடேல்.
கைவிட மாட்டாயென கைத்தாளம் போட்டேன்
தைவிட மனமில்லை தலைவா - பைவிடமெலாம்
போக்கிப் பூசத்தன்றே புணர்வாய் ராமலிங்கமே
ஆக்கை கலக்கஓர் அறைதருவாய்.
தருகின்ற சோதனையை தலைவணங்கி ஏற்கவாநீ
அருள்கின்றாய் ஐந்தொழில் அறிந்து
- தருக்கமாய்
கேள்விகேட்க விடலாமோ கருணை ராமலிங்கமே
நாள்கடக்கும் முன்கரம் நீட்டாய்.
நீட்டிய அருட்பாக்களில் நாட்டிய
அருளைநீ
ஊட்டியே நான்வளர ஊத்தையெலாம் - பாட்டிலே
பாடையேறி போகவே பார்த்தேன் ராமலிங்கமே
ஆடையாகி என்தேகம் ஆனான்.
ஆனேன் என்றுஅன்று அறைந்த முரசெலாம்
வீனேன் எனக்குமறைய விழையுமோ - கூனேன்
குழையேன் நின்அருளை குறியேன் ராமலிங்கமே
பிழையேன் நாயேனுன்னைப் பாடேன்.
உன்னைப் பாடாத உன்னை நினையாத
சன்மார்க்க சங்கம் சாராதவர் - வன்உலகர்
தன்மார்க்கம் பெரிதென தானிருப்பர்
ராமலிங்கமே
உன்மார்க்கம் அறிந்தால் உருகுவர்.
உருகும் மனம்படைத்தோர் உண்மை ஞானியர்
அருளும் குணம்படைத்தோர் ஆண்டவர்
- தரும
சிந்தை யுடையோரே சன்மார்க்கர் ராமலிங்கமே
உந்தை அடியாரேஎல்லா முடையார். 620
யார்எனத் தேடியுள்ளே யாகத்தீ வளர்க்க
பார்எனைப் பார்என்பான் பரமன் - ஓர்
ஆயிரங் கோடிசூரிய அனலை ராமலிங்கமே
பாயிர மாயிரம்பாடிப் பணிந்தேன்.
பணிதல் வேண்டாம் பொய்ச்சம யாதியை
அணி செய்வோரை அடித்திடுக - தணிக்கை
செய்திடுவீர் மதங்களின் சுயத்தை
ராமலிங்கமே
நெய்த மார்க்கம்தான் நிலைக்கும்.
நிலைஎனக் கருதும் நிழல்கலை தெய்வங்களை
மலைஎனக் கூறுவோரை மாய்த்திடுக -
சிலை
வணங்கும் தொல் வழக்கத்தை ராமலிங்கமே
குணமுடையர் இன்றே கைவிடுவர்.
விடுத்ததால் வந்த விளைவை அறியீர்
கடுத்த மதத்தாலென் கண்டீர் - இடுகாட்டு
பிணங்கூட எழுந்து படிக்கும் ராமலிங்கமே
மணஞ்செய்த அருட்பா முறையை.
முறைசெய்த ஆறும் மலர்ந்த பிரபந்த
மறையான ஏழும் மனிதர் - நிறைகாண
எழுகின்ற இந்த எட்டும் ராமலிங்கமே
பழுக்கின்ற சன்மார்க்கிகளின் பாட்டு.
பாட்டுக்கு அடிமையாகில் புன்னான
மதத்
தீட்டெல்லாம் இனித் தீயாகும் - கூட்டிய
மதக் கூட்டங்கள் மாயவே ராமலிங்கமே
வதஞ் செய்கின்றான் வாழ.
வாழவே பிறந்து வயோதிகம் அடைந்து
வீழவே போவரெலாம் வீணர் - ஆழவே
அருட்பாக் கடலில் ஆழ்ந்தால் ராமலிங்கமே
பெருவாழ்வு அளிப்பான் பார்.
பார்வை மறைந்தால் பரம்பொருள் தெரியும்
கூர்ந்து நோக்கு குறிநடுவே - ஈரிரண்டும்
ஒன்றாய்க் கூடி ஒளியாகும் ராமலிங்கமே
உன்அருளால் கூடுவது உண்மை.
உண்மை அறியாத உலகீர் நீவிரெல்லாம்
கண்மை அழகிலே கவிழ்ந்தீர் - பெண்மை
மதமாம் சுகத்தில் மாண்டீர் ராமலிங்கமே
நிதமும் ஆண்மை நவின்றான்.
நவின்ற பலகோடி நலிந்த சமயமதக்
கவிஞர்கள் பாடிய கவிதையெலாம் - குவிந்தன
குப்பைக் கூளங்காலாய் குருவே ராமலிங்கமே
தப்பேது மில்லாததுஉன் தயவுகவி. 630
கவியாலே சத்தியங் குறித்து என்றும்
புவியில் சாகாத புண்ணியா - தவித்தேனே
அதுபோல் நானும் ஆகவே ராமலிங்கமே
மதுபோதை ஆனானென் மனதில்.
தில்லை என்றும் திருப்பதி என்றுமோர்
கல்லை வணங்குவார் கல்லார் - நல்லார்
வணங்கும் ஞானசபை வெளியே ராமலிங்கமே
மணம் புரிந்துநமை மீட்பார்.
மீட்பேன் என்றே மேட்டுக் குப்பத்தில்எனை
ஆட்கொண்ட தேவா ஆங்கே - பூட்டிட்டு
மறைய எனக்குமோர் மனையை ராமலிங்கமே
இறையென வந்து இடுவாய்.
இடுகாடு செல்லாது இறையருள் பெற்று
சுடுகாடும் காணாத சுகந்தருவாய் - எடுத்த
இவ்வுடம்பில் கலந்து இருக்க ராமலிங்கமே
அவ்வுடல் மூன்றும் அருள்.
அருளன்றி ஆடேன் ஆருயிர்க் காப்பேன்
இருள்நெறி ஒழிய இயங்குவேன் - திருவருள்
பெற்று ஓங்குவேன் பணிந்து ராமலிங்கமே
கற்றதைக் கற்று களிப்பேன்.
களித்து வீண்காலம் கழியேன் நல்விசாரணை
அளித்து எனை அடக்குவேன் - எளிதில்
சாகாவரம் பெறுவேன் சத்தியம் ராமலிங்கமே
போகாத நிலைக்கும் போவேன்..
போவென எனைஇப் பூமியில் பிறப்பித்து
ஈவென எல்லாம் ஈந்தாய் - தாவென
கேட்காத போதே கொடுத்த ராமலிங்கமே
தீட்டாக நான்வீழாது தடுத்தாய்.
தாயுடம்பில் உள்ளபோதே தாங்கியத் தந்தைநீ
சேயுடம்பில் உள்ளபோதே சேர்ந்தாய் - பாயும்
மூச்சினுள் ஜீவனாய் முயங்கி ராமலிங்கமே
பேச்சான என்மொழி பெரிது.
பெரிதினும் பெரிதாகி பெயரொன்றும் இல்லாதாகி
அரிதினும் அரிதான அருள்ஜோதி - சரியை
கிரியை யோகஞானம் காணாது ராமலிங்கமே
உரிமை என்றோதில் உறவுறும்.
உறவெனச் சொல்ல உனையன்றி இவ்வுலகில்
இறவாதார் யாருண்டு எனக்கு - மறவாதே
எனையன்றி உனக்கும் உறவில்லை ராமலிங்கமே
உனைப்போல் நானும் உத்தமன். 640
உத்தமன் உறவெனக்கு உற்ற அந்நாழிகை
அத்தினம் இன்பத்தை என்சொல்வேன் - சித்தி
வளாக சித்தையே விழைந்தேன் ராமலிங்கமே
ஆளாக்கு என்னையுன் அடிக்கு.
அடிக்கு ஏவல்செய்யும் அருளான வம்சத்தில்
தடிக்கு விழுந்த தடியேன் - படித்து
அறியும் பண்பிலேன் அல்லன் ராமலிங்கமே
குறித்து உரைத்ததை கருதேன்.
கருத்தறியேன் நின்உளக் குறிப்பறியேன்
சாகா
மருந்தறியேன் கொடும் மனத்தினேன்
- இருள்
நெறியில் பல்கால் நின்றேன் ராமலிங்கமே
வெறித்த என்னால் விளைவதென்ன.
என்னெனச் சொல்வேன் இடுகாட்டுப் பிணமாய்
தன்னிலை அறியாது தளர்ந்தேன் - அன்றியும்
பொறித்த மதத்தில் புகுந்தேன் ராமலிங்கமே
பறித்தப் பழத்தில் புழுவேன்.
புழுவினுள் புழுத்தப் புழுவாகி அதிலிருக்கும்
அழுக்கினை உண்ணும் இனமானேன் - எழுத்தில்
பொய்யே எழுதிஎனைப் புகழ்ந்தேன் ராமலிங்கமே
மெய்யாய் இருக்க மனமிலேன்.
மனமுறும் காமத்தை மறித்திட அறியேன்
தினமும் மங்கைமடித் தேடியே - கனமும்
சுகத்தில் லயித்து சுழன்றேன் ராமலிங்கமே
இகபர சுகம் அறிந்திலேன்.
அறியாதவன் போல் உன்முன்னே நின்று
எறியாத மதங்களுடன் எதிர்த்தேன் -
வெறியோடு
வேதத்தை மதித்து வீழ்ந்தேன் ராமலிங்கமே
நாதமுடி மேல் நாடிலேன்.
நாடிய நாட்டமெலாம் நானுரைத்தால்
நாயும்
ஓடிவிடும் குணத்தில் ஒன்றினேன்
- வாடியென
மகளிரை அழைக்கும் மதியேன் ராமலிங்கமே
முகநக நீறிட்டு மயக்கினேன்.
மயக்கத்தில் இருக்கவே மூடமத சமயநெறியை
தயக்கமின்றி பிடித்துத் தூக்கினேன்
- பயமின்றி
பிறர் நயக்க பிணமுமாவேன் ராமலிங்கமே
அறத்தை கற்றிடாத அரக்கனானேன்.
அரக்கச் செயலெனினும் அறமென மதங்கள்
இரக்கமின்றிச் சொன்னதால் அந்தோ
- நரகச்
செயலாய் புலாலை இச்சித்தேன் ராமலிங்கமே
பயமின்றி போனதே பக்தி. 650
பக்தியால்
வள்ளலுன் பாதக்கமலம் தொழுது
நிக்கிரகம்
செய்ய நினையேன் - அக்கிரமம்
செய்தேன்
சுக்கில சூட்சுமத்தை ராமலிங்கமே
மெய்காக்க
எனக்கு முயங்கு.
முயங்கிய
அருட்பாவில் முப்பத்து மூன்றின்
சுயம்பு
மந்திர சித்தறியேன் - உயர்ந்ததென்று
ஐந்தெழுத்தால்
ஐயோ இறந்தேன் ராமலிங்கமே
உந்தன்
சாகாமந்திரமே உயர்ந்தது.
உயர்ந்த
உண்மையும் உவட்டாத இன்பமும்
நயந்த
வள்ளலை நானறியேன் - மயக்கும்
சைவசமய
நீற்றைச் சூடினேன் ராமலிங்கமே
ஐவரும்
செத்திடசாகா ஐயன்நீ.
நீயும்நானும்
அருவமும் நல்உருவ முமாய்
பாயும்
மூச்சாய் பாரிலிருந்து - மாயுமிந்த
மானிடக்
குலத்தை மீட்போம் ராமலிங்கமே
நானினிஉன்
உத்தம நண்பன்.
நண்பனின்
சொல்லெல்லாம் நல் மந்திரமாக
கண்மூன்றும்
திறந்திடக் களித்தேன் - விண்
உலகம்
முழுவதும் உலவினேன் ராமலிங்கமே
இலகுந்
தொழில்யாவும் அளித்தான்.
அளித்த
சுகங்களில் ஆருயிர் நண்பன்பெற்று
களித்த
சாகாசுகத்தைக் கண்டேன் - எளிதாய்
என்னுள்
அம்மை அப்பனுமாய் ராமலிங்கமே
நன்றாய்க்
கலந்து நடனமிடுகிறான்.
நடராஜ
நடனமது நடுநாடி ஆட்டமது
வடலூர்
சபையது வந்தால் - உடலூர்
அழியாது
உண்மை இது ராமலிங்கமே
கழியாத
உடலிது காண்.
காணுமிட
மெல்லாம் காய எலும்புகளே
தாணு
மழிவான் தன்னாலே - வாணுலகம்
சென்றாரு
மழிவர் சித்துருவாய் ராமலிங்கமே
வென்றான்
சாகா வரம்.
வரம்யாவும்
பெற்றே வந்தேன் இப்புவியில்
பரம
சித்தாந்தப் பதியுமானேன் - இரவு
பகலற்ற
இடமாய்ப் பொலிந்தேன் ராமலிங்கமே
உகத்தில்
பெயராய் எடுத்தேன்.
எடுத்த
தேகமதில் எல்லாம் வல்லசித்து
உடுத்தி
வந்தேன் உலகீர் - கடுத்துப்
பார்க்காதீர்
நான் பரமாகாச ராமலிங்கமே
சார்ந்த
சன்மார்க்க சத்தியன். 660
சத்தியம்
குறித்தேன் சாகாத வித்தக
பத்தியம்
அறிந்துப் பாரில் - சித்தகம்
புரிய
வந்தேன் பாராய் ராமலிங்கமே
அரியதேக
மூன்று மானேன்.
ஆனேனென்று
சொல்லடா இறவா நிலை
தானேபெற்றே
னென்று துள்ளடா - ஊனே
புகுந்
தாட்டுவேன் பாரடா ராமலிங்கமே
வகுத்தப்
பாதையில் வாங்கடா.
வாங்கடா
வந்தால் வரம்பெற்று சாகாது
ஓங்கலாம்
சத்தியம் ஈதடா - சாங்கியமேதடா
சாதிமத
இனமும் சூதடா ராமலிங்கமே
போதிக்கும்
சங்கம் போங்கடா.
போங்கடா
போக்கற்ற போக்கிரிப் பசங்களா
ஆங்காங்கு
அலைந்து ஒழியுங்கடா - ஈங்கு
சன்மார்க்க
சங்கம் சாருங்கடா ராமலிங்கமே
உன்தேகம்
புகுவான் உண்மையடா.
உண்மையடா
இதுகேள் என்றாலும் கேளாது
பண்ணாத
தீமைகள் பண்ணுங்கடா - உண்ண
கொலை
செய்யும் கொலைகாரங்களா ராமலிங்கமே
புலை
தவிர்த்தான் பாருங்கடா.
பாருங்கடா சத்தியஞான பதியைக் கண்டு
வாருங்கடா வந்தால்
வானாகலாம் - சீரும்
சிறப்புமாய் சாகா சங்கமடா ராமலிங்கமே
இறப்பொழிப்பான் நம்பி இருங்கடா.
இருங்கடா இலகும் ஐந்தொழிலைப் பெற்று
அருட்பெருஞ் ஜோதி யாகலாமடா - குருவும்
தீட்சையு மின்றி தூங்கடா ராமலிங்கமே
காட்சி தருவான் காணுங்கடா.
காணுங்கடா கண்மூடிக் கலை வழக்கமெலாம்
நாணுமடா சன்மார்க்கமே நீளுமடா -
தாணும்
முக் கண்ணுடன் மடிவானடா ராமலிங்கமே
எக்காலமும் இறவாமல் இருப்பானடா.
இருப்பானடா எல்லா உயிருள்ளும் அவனை
கருணை கொண்டு காணுங்கடா - அருமை
தம்பிகளா சத்தியமிது தானடா ராமலிங்கமே
நம்முயிர் ஆனானென்று நில்லடா.
நில்லடா சன்மார்க்கமே நிஜமென்று
மற்றது
கல்லடா என்றே கூறுங்கடா - எல்லாமுடைய
அருட்பெருஞ் ஜோதி யாண்டவரடா ராமலிங்கமே
இருக்க இன்னும்மயக்கம் ஏனடா. 670
ஏனடா இவ்வுலகில் இறந்தும் பிறந்தும்
போனது போதாதா படுங்கடா - தேனது
மானது என்ற மோகமேனடா ராமலிங்கமே
தானதுவாய்க் கலந்துஇருந் தானடா.
அடாத செயல்
ஒன்றில்லை என்றே
கடாகாச நிலை கூடியதடி - சடாந்த
சமரச நிலை சூழ்ந்ததடி ராமலிங்கமே
சுமக்கும் உடலிது சுகந்தானடி.
சுகமென்றாலும் காமம் சிறிதேனும்
இல்லை
அக அனுபவம் அடைந்தேனடி - சிகரத்தில்
ஏறி சிற்றம்பல மானேனடி ராமலிங்கமே
கூறிய முத்தேகம் கண்டேனடி.
அடியே என்றுன்னை அழைத்து வாழ்த்த
தடியேனுக்கு குரோதந் தானடி - படியாத
மனதால் கூடுது மலந்தானடி ராமலிங்கமே
எனநான் இருக்க இசைந்தானடி.
இசைந்த திருவருள் அமுதால் என்பாட்டும்
திசை யெல்லாம் தாக்குமடி - பசையற்று
போகுமடி எல்லா பதிகளும் ராமலிங்கமே
ஆகுமடி அவனே இறைவனடி.
இறைவனடி கண்ட இறைவனடி அவன்
மறையை மறுத்த மாந்தரடி - குறை
இல்லா நாளேதடி எனக்கு ராமலிங்கமே
எல்லா மன்றோ இடரில்லையடி.
இல்லை எனாது எதையும் கொடுக்கும்
வல்லமை எனக்கு வருமடி - கல்லான
லோப குணங்கள் லாபமோ ராமலிங்கமே
கோப மடைவான் கூறுங்கடி.
கடிதம் எழுதிக் கடவுளுக்கு அனுப்பினேன்
படித்து என்னை பிடித்தானடி - மடிகாம்பு
தேடும் கன்றாய்த் தவித்தேனடி ராமலிங்கமே
கூடும் நாளைக் குறித்தானடி.
குறிக்காக மோகித்துக் குதிக்கும்
மனதை
அறிவால் அடக்கி ஆண்டேனடி - பொறி
புலன்களும் எனக்குப் புல்லடி ராமலிங்கமே
உலக மானப்பின் என்னடி.
என்னடி கண்டே என்முடி கண்டேன்
உன்னடியால் எனக்கேது ஆறடி - துன்
மார்க்க மெலாம் மாய்ந்ததடி ராமலிங்கமே
ஓர் ஒளியாகி ஓங்குதடி. 680
ஓங்கின உலகம் உயர்ந்தன உயிர்கள்
ஏங்கின மனதிலே இன்பமடி - தூங்கிய
மனித ரெல்லாம் மாண்டாரடி ராமலிங்கமே
இனிய இறைமார்க்க மடி.
மடித்தேடிய மன்மதன் மதம்பிடித்த மன்னவன்
இடிவிழுந்து துடிக்க இறப்பான் - தடியெடுத்தக்
காவலன் நோய்வந்து கதறுவான் ராமலிங்கமே
பாவலத்தால் திருவருள் புகட்டு.
கட்டும் மனதில் காமம் புகுந்திடில்அதை
வெட்டி எறிபவர் வேந்தர்தாமே - சட்டி
உடைந்தால் பய னுண்டோ ராமலிங்கமே
துடைத் தெறிவாய்த் துயரை.
துயரும் துக்கமும் துனிந்தவர்க்
கில்லை
பயமும் அவர்க்கு பூஜ்ஜியமே - சுயஞ்
ஜோதி அருட் ஜோதியாய் ராமலிங்கமே
ஆதியுமாய் இருப்பா ரவர்க்கு.
அவரென்று சுட்டும் எவரும் வள்ளல்
இவர்க்கு அடிபணிந்தா ரன்றே - சுவர்
இல்லா சித்திர மொன்றை ராமலிங்கமே
நல்லதாய் வரைந்தான் நன்று.
நன்றிது தீதிது நான்கிது இரண்டிது
என்ற றிந்தோர் இங்கே - சன்மார்க்க
சத்திய சங்கம் சார்ந்து ராமலிங்கமே
நித்திய மென்று நின்றனர்.
நின்றனர் யாவரும் நின்னருள் முகம்
என்று காண்போம் எனவே - அன்புடன்
எனக் கருளினா யன்றோ ராமலிங்கமே
உன தருளேஎன் னுயிர்.
உயிர் நண்பனேஎன் ஆன்ம அறிவனே
மயிலை குயிலாக்கும் மாயனே - துயில்
எழுப்பி என்னை ஏற்றிட்ட ராமலிங்கமே
அழுவேன் அப்ப னன்றோநீ.
நீதானே எந்தன் நீலவான நிலவுஎனது
பாதானே பாடுதுனைப் புகழ்ந்து - மாதா
பிதா குருதெய்வ பக்தியை ராமலிங்கமே
சதா நீயெனவே சார்ந்தேன்.
தேனென இனிக்கும் திருவருள் நூலினை
தானென கொள்ளும் தயவு - வானென
கலந்தோ ரெல்லாம் கூறுவர் ராமலிங்கமே
உலகெலாம் ஓதும் உறவன். 690
உறவன் இவனென உண்மைத் தெளிந்து
பெற வேண்டியதைப் பெற்றேன் - துறவு
கொண்டா ரெல்லாம் கதற ராமலிங்கமே
தொண்டரென எனைத் தந்தான்.
தந்திரத்தால் சோம்பல் தூக்கம் தவிர்த்து
விந்து மேலேறும் வழியறிந்தேன் -
மந்தி
மனதடக்கி வீதி மேலேற ராமலிங்கமே
வனம் போகாதுஎன் வயது.
வயதினால் மூப்பு வருவதைத் தடுத்து
தயவெனும் முப்பூ தருவான் - அயல்
என நினையாதீர் உலகீர் ராமலிங்கமே
மனதை அடக்கும் மருந்து.
மருந்திது மணியிது மந்திரமிது மதியிது
ஒருமையிது மார்க்க மிது - குருவிது
அருளிது குலமிது என்ற ராமலிங்கமே
உருவினை மறைத்த உளவெது.
உளவு தெரிந்தேன் உடலினை மறைக்கும்
அளவு தெரிந்தேன் உலகிலே - களவாடும்
பொருள் தெரிந்துப் பணிந்து ராமலிங்கமே
அருளும் என்று அழுதேன்.
அழுதேன் அழுதேன் அழுகை தேனாகவே
எழுதிய தெல்லாம்திரு வருளானது -
எழு
என்றிட செத்தவர் எழுந்தார் ராமலிங்கமே
உன்திறம் எனக்கும் உண்டு.
உண்டுண்டு உறங்கும் உலகீர் உறங்காநிலைக்
கண்டு அதில்புகவும் கருதீர் - நண்டுபோல்
சமயமதக் குழியைச் சூழ்ந்தீர் ராமலிங்கமே
இமயம் என்பதை அறியீர்.
அறிந்தது பொய்என்று அறிந்தேன் அறியாதது
அறிவென்பதை அறிந்து அழுதேன் - பொறி
வைத்தப் பொறியால் விழுந்தேன் ராமலிங்கமே
செத்தாரைக் கண்டு சிரித்தேன்.
சிரித்த மதமெலாம் சிதைந்தோடப் பற்றி
எரிந்தன சடங்குகள் அய்யோமத - நரிகள்
எல்லாம் ஓடிமடிந்து ஒழிந்தன ராமலிங்கமே
பல்லோர்க்கும் நற் பதியனான்.
பதியுனைப் பணிந்துப் பாடி சதாசதம்
பதித்தே திருவருள் பெற்றேன் - சதி
ஒன்றும் இல்லை உலகீர் ராமலிங்கமே
என்றால் திருவருள் ஆடும். 700
(இராமலிங்க அந்தாதி -
தொடரும்)