அருட்ஜோதி ஆலாபனை
வினைக்கரம்
வந்துஆட உனைக்கரம் என்றுஓத
உதைப்படும்
கன்மமோட - அணுவான
இணைப்பதம் கண்டுபாட
அணுக்களும் இன்பமாக
இறப்புகள் வென்றுவாழ - நிறைவாக
இரக்கமும் இங்குநாட
உடல்உயிர் இன்றிஈக
இறைக்கடல் நம்மதாக - மனமோக
நிலைக்குறும்
அந்தமாக சிலைத்தகும் பெண்மையாக
உனைத்தொடும்
பந்தமாக - மணமாக
மதக்கலம் விஞ்சிஊது
மடத்தனம் நஞ்சுஊது
மயக்கமும் அன்றிஊது - திடமாக
சமக்களம் என்றுபாடு
இறக்களம் விண்டுபாடு
திருச்சபைக்
கண்டுபாடு - இசையாக
இறைச்சுகம்
உண்டுஆடு நடுச்சுடர் ஒன்றிஆடு
அணுக்கலம் அண்டமாடு -
அனலாக
அகச்சுகம் ஒன்றைநாடு
அகத்தினம் அண்டநாடு
புறத்தினம் மண்டைஓடு - அறமாக
படுத்திடும்
பண்மைசாடு கடத்திடும் வெண்மைகூடு
நடத்திடும்
உண்மைவீடு - நலமாக
விடத்திலும்
பொய்மைசாக சரத்திலும் தின்மைவேக
மனத்திலும்
வன்மைபோக - வருஞ்ஜோதி!
---------------------------------------------------------------------------
ஈரமன தாயிருக்க
ராமலிங் கா - எனக்
காசைமிக தாயிருக்கு
ராமலிங் கா
வானமய மாயிருக்க
ராமலிங் கா - அந்த
ஞானநட நாடிருக்கு
ராமலிங் கா
நாதமய மாயிருக்க
ராமலிங் கா - நானும்
பாடஇனி தாயிருக்கு
ராமலிங் கா
வீடுஎன நீஇருக்க
ராமலிங் கா - நானும்
காடுவிட ஊரிருக்கு
ராமலிங் கா
பாடுஎன ஆணையிட்ட
ராமலிங் கா - என்னை
நீடுஎன வாழவிட்ட
ராமலிங் கா
யாருமறி யாதிருக்க
ராமலிங் கா - உடல்
யாவுமதி யாயிருக்கு
ராமலிங் கா
நானுமது வாயிருக்க
ராமலிங் கா - அருள்
தூதுசொல ஏவதென்ன
ராமலிங் கா
காடுமலை போயிருக்க
ராமலிங் கா - மனம்
சாகநிலை யாயிருக்கு
ராமலிங் கா
மாறுமுட லாயிருக்க
ராமலிங் கா - என்னை
ஈறுகெட கூடுவித்த ராமலிங் கா
ஞானஉட லாயிருக்க
ராமலிங் கா - உயிர்
ஊனஉட லாயிருக்கு
ராமலிங் கா
--------------------------------------------------------------------------------------
உன்னுருவங்
கண்டிடவே ராமலிங் கா - நானும்
என்னுருவங்
கண்டிலனே ராமலிங் கா
மெய்யுருவங்
கொண்டிடவே ராமலிங் கா - இந்த
பொய்யுருவங்
கொண்டனனோ ராமலிங் கா
அன்பனெனும்
சொல்படவே ராமலிங் கா - அந்த
இன்பமதில் சென்றிடவோ
ராமலிங் கா
கண்நடுவில்
ஊன்றிடவே ராமலிங் கா - அந்த
எண்திரையும்
நீங்கிடவா ராமலிங் கா
பஞ்சமுதம் தோன்றிடவே
ராமலிங் கா - நின்ற
அன்புமகன் ஏங்கிடவா
ராமலிங் கா
என்னறிவும்
ஓங்கிடவே ராமலிங் கா - உந்தன்
வெஞ்சுடரில்
தூங்கிடவா ராமலிங் கா
கண்நடுவும்
தூண்டிடவே ராமலிங் கா - இந்த
மண்வெளியும்
ஆண்டிடவா ராமலிங் கா
என்னிதயப் பூக்களிலே
ராமலிங் கா - நீயும்
வந்துகளிப்
பூட்டிடவா ராமலிங் கா
உன்னறிவுக்
கூட்டினிலே ராமலிங் கா - நானும்
என்னறிவைப்
போக்கிடவா ராமலிங் கா
உன்னடியன் பாட்டினிலே
ராமலிங் கா - நின்று
உன்னுருவம்
காட்டிடவா ராமலிங் கா
---------------------------------------------------------------------------------
தி.ம.இராமலிங்கம்
– கடலூர்