அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா
உயிர்களும் இன்புற்று வாழ்க
ஆன்மநேய
அன்பர்களுக்கு வணக்கம்.
எல்லாம் வல்ல
அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளின் கருணையால் இன்று (28-06-2018) காரணப்பட்டு ச.மு.க.
அருள் நிலையத்தில் வாராந்திர ஜோதி வழிபாடு வழக்கம்போல் நடைபெற்றது. திரு அருட்பெருஞ்ஜோதி
அகவல் ஓதி கொடியேற்றத்துடன் வள்ளற்பெருமானின் திருப்பாதுகைக்கு வழிபாடும் ஜோதி வழிபாடும்
நடந்தேறியது.
முன்னதாக வழக்கம்போல்
காலையில் கஞ்சி வார்க்கப்பட்டது. மதியம் அன்ன தானம் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய அன்னதானத்தை
கும்பகோணத்தை சேர்ந்த அருளாளர் திரு.எம்.சண்முகநாதன், திருமதி.எம்.சுபாஷினி அவர்களின்
குடும்பத்தினர்கள் வழங்கினார்கள். நான்காவது முறையாக தொடர்ந்து இக்குடும்பத்தினர் காரணப்பட்டு
ச.மு.க. அருள் நிலையத்தில் அன்னதானம் வழங்கியுள்ளார்கள். அவர்களால் இன்று சுமார் நூறு
ஆன்மாக்கள் பசித்துன்பத்திலிருந்து விடுதலை பெற்று ஆனந்தமடைந்தனர். திரு.எம்.சண்முகநாதன்,
திருமதி.எம்.சுபாஷினி அவர்களின் குடும்பத்தார்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளுக்கு
முழுதும் பாத்திரமாவார்கள். இக்குடும்பத்தார்களுக்காக சிறப்பாக வேண்டுதலும் வள்ளற்பெருமானிடம்
வைக்கப்பட்டு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
வள்ளற்பெருமானின்
அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் அன்னதானம் வழங்க விருப்பமுடையோர்கள்
கீழ்காணும் அறக்கட்டளை கணக்கில் ரூ.5,000/- செலுத்தினால், அவர்களது பெயரில் சிறப்பு
அன்னதானம் அளிக்கப்படும்.
Account Name:
KARANAPPATTU SA.MU.KANDHASAMY PILLAI 5S TRUST
Account
No.: 63201010000103
Account
Type: Current Account
Bank Name
& Branch: Syndicate Bank & Cuddalore
IFSC :
SYNB0006320
Contact
No.9445545475