காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் சீடர் பிறையாறு சிதம்பரம் சுவாமிகள் (கையில் குடையுடன் நிற்பவர்)
காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் சீடர் நாகை அட்டவணை இரத்தினம் பிள்ளை
(இடது புறம் நிற்பவர்)
காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் சீடர் பிறையாறு சிதம்பரம் சுவாமிகள் (கையில் குடையுடன் நிற்பவர்)
காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் சீடர் நாகை அட்டவணை இரத்தினம் பிள்ளை
(இடது புறம் நிற்பவர்)
சுத்த சன்மார்க்கம் உருவமா? அருவமா?
சுத்த சன்மார்க்க
அன்பர்களுக்கு வந்தனம்.
சமீப காலமாக
வள்ளற்பெருமானின் சுத்த
சன்மார்க்கத்தை பின்பற்றும்
அன்பர்களில் சிலர்
உருவ வழிபாட்டை
முன்னெடுத்தும், சமயங்களில்
உள்ள சடங்குகளான
குடமுழுக்கு போன்ற
செயல்களை தாங்கள்
கட்டும் சன்மார்க்கம்
சார்ந்த கட்டங்களுக்கு
செய்விப்பதும் அதிகரித்துக்கொண்டே வருவதை நாம் சமூக
வலைதளங்களில் காண்கின்றோம்.
வள்ளற்பெருமானின் சிலை
ரூபத்தை செய்து
அதனை பூக்களால்
ஜோடித்து, மின்
விளக்கு அலங்காரமும் செய்து, அதனை வண்டியில்
ஏற்றி ஊர்வலம்
வரச்செய்து அகம்
மகிழ்கின்றார்கள். அவ்வாறு
செய்வதில் என்ன
தவறு இருக்கின்றது?
சுத்த சன்மார்க்கர்களில் சிலர் அதனை எதிர்க்கின்றார்கள்.
சமயங்களில் மட்டுந்தான்
இவ்வாறு செய்ய
வேண்டுமா? சுத்த
சன்மார்க்கத்தில் இவ்வாறு
செய்வதால் என்ன
தவறு? இவை
எல்லாம் அன்பர்களின்
பக்தி பரவசமன்றோ? இதனை எதிர்க்கலாமோ?
குற்றம் காணலாமோ?
16-01-1866-ஆம் ஆண்டு
அட்சய வருடம்
தை 5 – ஆம் தேதி, கடலூரில் உள்ள
தென்பெண்ணை ஆற்றிக்கருகில்
உண்ணாமுலை செட்டிச்
சாவடிக்கு அருகில்
நடந்த ஒரு
திருவிழாவில், இராமலிங்க
சுவாமி கலந்துக்கொள்கின்றார்.
(அன்று இராமலிங்க
சுவாமிக்கு 43-வயது, வள்ளலார் என்கின்ற
பெயர் அப்போது
அவருக்கு இல்லை.). அப்போது பிரம
சமாஜம் சம்பேடு – ஸ்ரீதர சுவாமி
நாயக்கர் அவர்களும்
அவ்விழாவில் கலந்துக்கொண்டு,
”பிரமத்தை நினைப்பது
தகுதி என்றும்
விக்கிரக ஆராதனை
செய்வது தகுதி
அல்ல” என்றும்
பிரச்சாரம் செய்தார்.சைவ சமயத்தில்
ஆழ்ந்த பற்றுள்ள
இராமலிங்க சுவாமிகளிடம்,
பிரம சமாஜம்
பற்றி விவாதிக்க
வேண்டும் என
ஒரு சில
சைவ சமயத்தினர்கள்
கேட்டுக்கொண்டதற்கு இணங்க, விவாதமும் நடைபெற்றது. இறுதியில்
இராமலிங்க சுவாமிகள்
விக்கிரக வழிபாடுதான்
சிறந்தது. ஒருவருக்கு
மனம் செயல்படும்
வரை பிரமத்தை
அறிய முடியாது. எனவே மனம்
செயல்படுபவர்கள் விக்கிரக
வழிபாடு செய்யலாம்
எனவும், மனம்
செயல்படுவது நின்றால், அப்போது ஆன்ம
ஞானம் விளங்கும். ஆன்ம அறிவால்
மட்டுமே பிரமத்தை
அறிய முடியும், ஆன்ம
அறிவுடையோர்களுக்கு அருவ
வழிபாடு இயற்கையாக
அமைந்துவிடும், எனவே
அவரவர்கள் அவரவர்கள்
நிலைக்கு தக்கப்படி
செயல்பட வேண்டும்
என்பது இராமலிங்க
சுவாமிகளின் கோட்பாடாக
காண்கின்றோம். (பிரபந்தத்திரட்டு
– திரு.அ.திருநாவுக்கரசு பதிப்பு – பக்கம் – 95)
ஒருவருக்கு தனது
பச்சைத்திரை விலகியவுடன்
ஆன்ம அறிவு
விளங்கும் என்பது
வள்ளலாரின் உபதேசம். அந்த பச்சைத்
திரை விலகும்வரை
நாம் உருவ
வழிபாட்டில்தான் இருந்தாக
வேண்டும். ஆனால்
உருவ வழிபாடு
என்பது பலதரப்பட்ட
குற்றங்களை உடையதாக
உள்ளதால், வள்ளலார்
ஜோதி வழிபாட்டை
கொண்டுவந்தார். ஜோதி
என்பது உருவமாகவும்
அருவமாகவும் உள்ள
காட்சியாகும். மற்றய
உருவ வழிபாட்டில்
உள்ளது போல்
எவ்வித சடங்குகளும்
இவ்வுருவிற்கு செய்தல்
முடியாது. ஏன்
இவ்வுருவை எவரும்
தொடக்கூட முடியாது. பார்க்க மட்டுமே
முடியும். இவ்வகையில்
ஓர் புனிதமான
உருவ வழிபாடாக
ஜோதி வழிபாடு
இருக்கும் என்றே
வள்ளலார் இதனைக்
கொண்டு வந்தார். நமது மனம்
செயல்படும்வரை நாம்
இந்த ஜோதி
வழிபாட்டை மட்டுமே
செய்தல் வேண்டும். மனம் செயல்படுவது
நின்றால், இயற்கையாகவே
நாம் இந்த
ஜோதி வழிபாட்டினையும் விட்டு அருவ வழிபாட்டிற்கு
சென்றுவிடுவோம். அருவ
வழிபாடு என்பது
நம்முள்ளே அகஜோதியான
இறைவனைக் காண்பதாகும்.
எனவே மனம்
செயல்படுகின்ற சுத்த
சன்மாக்கிகள் யாவரும்
ஜோதி வழிபாட்டினை
மட்டுமே செய்தல்
வேண்டும். ஆனால் ஒரு
சிலர் ஜோதி
வழிபாட்டில் எவ்வித
சடங்குகளையும், ஆடம்பரங்களையும்,
விளம்பரங்களையும் செய்ய
முடியாமல், அதனால்
மக்களிடையே தன்னை
வெளிச்சம் போட்டு
காட்டமுடியாமல் போகின்றதே
என்று எண்ணி, வள்ளலாரின் உருவத்தை
ஜோடித்து, மற்ற
மார்க்கங்களில் செய்வதுபோன்ற
அனைத்து சடங்குகளையும்
வள்ளலாருக்கு செய்கின்றனர்.
இது எவ்வகையில்
சுத்த சன்மார்க்கத்திற்கு ஏற்புடையதாகும்?
அனைத்து மதங்களிலும்
உள்ள சிறு
பிள்ளை விளையாட்டுகளெல்லாம் ஒழிய பாடுபட்ட வள்ளலாரின்
மார்க்கத்தில், அவரை
வைத்தே விளையாடிக்கொண்டிருக்கும் விளையாட்டுப்
பிள்ளைகளை சுத்த
சன்மார்க்கிகள் கண்டிக்கத்தான்
வேண்டும். நாமும்
இதன் மூலம்
கண்டிக்கின்றோம். நாம்
இவர்களை கண்டிக்கும்போது,
நாங்கள் எல்.கே.ஜி. வகுப்பிலிருந்துதான் சுத்த
சன்மார்க்கத்திற்கு வர
முடியும் எனவும், எனவே எவ்வித
தந்திரத்திலாவது மற்றவர்களை
நம்மவர்களாக ஆக்குவதே
எங்களது நோக்கம்
எனவும் கூறுவது
அறிவுடைமையாகாது.
சுத்த சன்மார்க்கத்திற்கு என ஓர் கட்டமைப்பான
நெறிகள் உள்ளன. அதனை கடைபிடிப்பவர்கள் மட்டுமே வள்ளற்பெருமானின் இயக்கத்திற்குள் வரவேண்டும். எல்.கே.ஜி. விளையாட்டு
பிள்ளைகளுக்கு எல்லாம்
இங்கே என்ன
வேலை? இரும்படிக்கும்
இடத்தில் ஈக்கு
என்ன வேலை
? பொழுது
போக்கிற்காக விளையாடும்
இடம் இதுவல்ல. உங்கள் விளையாட்டிற்கு
பல மதங்களின்
வழிபாட்டுத் தலங்கள்
இருக்கின்றன. அங்குச்சென்று
உங்கள் விளையாட்டுப்பிள்ளைகளுடன் இணைந்து
உங்கள் விளையாட்டை
விளையாடலாமே? யார்
தடை செய்யப்போகின்றார்கள்?
விளையாடுவதற்கு இடமா
இல்லை?
சுத்த சன்மார்க்க
நெறிகளுக்கு கட்டுபடுவது
என்பது நமது
மனதிற்கு பிடிக்காததாகவே
இருக்கும். அதனால்
நமது மனதிற்கு
பிடித்தவாறு எல்.கே.ஜி., யூ.கே.ஜி. என்று
சுத்த சன்மார்க்கத்தை
கொச்சைப்படுத்தக்கூடாது. சன்மார்க்க
நெறி முறைகளை
முழுமையாக கடைபிடிக்க
வேண்டும். வள்ளற்பெருமானை
சிலை வடிவில்
காண்பது சுத்த
சன்மார்க்க செயல்
அன்று. எனினும்
சிலை செய்யப்பட்டால்
அதனை வழிபடும்
இடத்தில் மிகச்
சுத்தமாக பராமரிக்க
வேண்டும். அச்சிலை, வழிபடும் இடத்தைவிட்டு
வேறு எங்கும்
வெளியில் எடுத்துச்
செல்லக்கூடாது. அதாவது
வள்ளலாரின் சிலையை
ஊர்வலமாக எடுத்துச்
செல்வது என்பது
கண்டிக்கத்தக்கது. வள்ளலார்
சிலை இருக்குமித்தில் அனையா தீபம் இருந்தால், நமது தொழுகை
அனையா தீபம்
நோக்கியே இருக்க
வேண்டும். அனையா தீபம் மத்தியில் இருக்க வேண்டும். வள்ளலார்
சிலை அதன் அருகில் ஓரத்தில் அமைக்கப்பட வேண்டும். வடலூரில் தருமச்சாலையில் இருக்கும்
அனையா தீபமானது, வள்ளலார் படம் இருக்கும் இடத்தில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
மேலும் தருமச்சாலை,
சங்கக் கட்டிடம் போன்ற
வற்றை புதியதாக
உருவாக்கி திறப்பு
விழா செய்யும்போது
குடமுழக்கு செய்வதும், மற்ற சடங்குகள்
செய்வதும் கண்டிக்கத்தக்கது.
அங்கு அனையா
தீபம் ஏற்றி, அன்ன விரயம்
மட்டுமே செய்து, சன்மார்க்க உபதேசங்கள்
செய்து திறப்பு
விழாவைக் கொண்டாட
வேண்டும். திருவருட்பா
இசை நிகழ்ச்சிகள்
நடத்தினால், தயவிற்கு
எதிரான தோல்
கருவிகளான மேள
தாளங்களை கண்டிப்பாக
தவிர்த்து, அதற்கு
பதிலாக சிந்தடிக் SYNTHEIC என்று சொல்வார்கள்,
அப்படிப்பட்ட செயற்கை
பட்டைகளால் தயாரித்த
மேள தாளங்களை
பயன்படுத்தி திருவருட்பா
இசை நடத்தப்பட
வேண்டும். http://vallalarr.blogspot.com/2022/03/blog-post.html?m=0
என்னைப்பொறுத்தவரை ஞானசபை
என்பது வள்ளலார்
உருவாக்கிய வடலூர்
ஞானசபை மட்டுமே. சன்மார்க்க அன்பர்கள்
தங்களது முயற்சியால்
உங்களுக்கு தகுந்த
இடங்களில் எல்லாம்
ஞானசபை கட்டுதல்
கூடாது. சுத்த
சன்மாக்கத்தை பரப்ப
சங்கம் மட்டுமே
உலகில் உள்ள
அனைத்து இடங்களிலும்
துவங்கப்பட வேண்டும். ஞானசபை அல்ல.
வள்ளற்பெருமானின் சுத்த
சன்மார்க்கக் கொள்கைகளை
பின்பற்றும் அன்பர்கள்
எல்லாம் சுத்த
சைவத்திற்கு மாறவேண்டும்.
சுத்த சைவம்
என்றால் பால், மோர், தயிர், வெண்ணை, நெய், தேன் மற்றும்
இவைகள் கலந்த
பொருட்களை தவிர்க்க
வேண்டும். தோல்
பொருட்கள், பட்டாடைகள்
இவைகளையும் முற்றிலும்
தவிர்க்க வேண்டும். ஆங்கிலத்தில் வீகானிசம்
என்றும் தமிழில்
நனிசைவம் என்றும்
இதனைக் கூறுவார்கள்.
உலகெங்கிலும் உள்ள
மக்கள் தற்போது
இந்த வீகானிசத்தில்
இணைந்துக்கொண்டு வருகின்றார்கள்.
நாமும் இப்படிப்பட்ட
சுத்த சைவத்திற்கு
மாறுதல் காலத்தின்
கட்டாயம். கருணையின்
கட்டளையாகும். Go Vegan. நன்றி.
தி.ம.இராமலிங்கம்
9445545475