ஜீவகாருண்யம் என்கின்ற பெயரில் கடவுள் சுதந்தரத்தில் தலையிடாதீர்கள்:
**********************************
ஜீவகாருண்யம் செய்கின்றேன் என்று நம்மில் சிலர், மனிதர்களால் வளர்க்கப்படாத சுதந்தரமான ஜீவன்களாகிய நாய்கள், குரங்குகள், யானைகள், காக்கைகள், புறாக்கள் போன்ற ஜீவன்களைத் தேடிச் சென்று அவைகளுக்கு உணவளித்தல் ஜீவகாருண்யம் ஆகாது. பசி போக்குவிக்கும் செயலை மனிதர்களிடத்தேதான் செய்ய வேண்டும்.
”நிலத்திலும் நீரிலும் ஊருகின்ற உயிர்களுக்கும் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் அவ்வவற்றின் ஊழ்வகைக்குத் தக்கபடி அருள் நியதி ஆகாரங் கொடுப்பிக்க உண்டு பசியாறுகின்றன வென்றும், அவ்வவைகளுக்குத் தக்க ஆகாரம் அறிந்து கொடுப்பது நமது சுதந்தரமல்ல கடவுள் சுதந்தர மென்று அறிய வேண்டும்.
“பசியை ஆகாரத்தினால் நிவர்த்தி செய்விக்கின்ற சீவகாருணிய ஒழுக்கம் மனிதர்களிடத்தே பெரும்பான்மை நடத்த வேண்டுமென்று அறிய வேண்டும்." - Vallalar.
++++++++++++++++++++++++++++++++++++
முகநூலில் இக்கருத்திற்கு வந்திருந்த பின்னூட்டங்கள்:
++++++++++++++++++++++++++++++++++++
Christ Damodharanமனுஷனுக்கு பசி ஆற்றும் தகுதி அந்த கூமுட்டை கடவுளுக்கு இல்லையா
175 வருஷம் முடிஞ்சு போச்சு.. எத்தனை கடவுள் உருவாக்கி இருக்கு சன்மார்கம்
அண்டா கணக்கில் சாப்பாடு போடுறது தான் மிச்சம்
வேலாயுதம் முதலியார் கூட கடவுள் ஆகல.. சாப்பாடு போட்டு கடவுள் ஆக போறாங்கலாம்
TMR:
அடுத்த வேளை உணவிற்கு வழியில்லாமல் பசியால் வாடி நிற்பவர்களுக்கு தக்க சமயத்தில் உணவு அளித்து அவர்களது உயிரையும் மானத்தையும் காப்பவரே கடவுள். அந்தக்கடவுளை, உணவிற்கு வழியில்லாதவர்களால் மட்டுமே காணமுடியும். சுத்த சன்மார்க்கத்தில் இப்படிப்பட்ட கடவுள்களை நிறைய காணலாம்.
+++++++++++++++++++++++++++++++
Karthi Stoneஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களிடத்தில் கடவுள் இருக்கிறார் அதனால் அந்த ஜீவன்களுக்கு உணவளிப்பதில் என்ன தவறு உள்ளது நிறைய ஜீவன்கள் பசியால் வாடுகின்றன இது ஜீவகாருண்யம் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்
TMR:
இதனை யாம் கூறவில்லை. ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் வள்ளலார் கூறும் உண்மை இது. சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதன் உண்மை புரியும்.
Karthi Stoneவணக்கம் அப்படி என்றால் வள்ளலார் வாடிய பயிரை கண்டபோது வாடினேன் என்று ஏன் கூறுகிறார் அந்த ஓரறிவு தாவரம் வாடிய போது அவர் மனம் மிகவும் வருந்தினேன் என்று கூறுகிறார்
TMR:
அந்த வாடிய பயிரானது மனிதர்களின் வளர்ப்பில் உள்ளது. அதனால் வாடினார். தான்தோன்றி அல்லது காட்டு தாவரங்கள் அனைத்தைம் இறைவன் சுதந்தரத்தில் உள்ளன.
Karthi Stoneஅதைத்தான் நானும் கூறுகிறேன் ஐயா நாம தேடி போய் செய்ய வேண்டாம் நம் பக்கத்தில் உள்ள ஜீவன்களுக்கு செய்யலாமே
TMR:
நமக்கு பக்கத்தில் உள்ள ஜீவன்கள் மனிதர்கள் இடும் உணவினை எதிர்பார்த்திருந்தால் செய்யலாம். சுதந்தரமாக உலா வரும் பறவை இனங்கள் விலங்கினங்கள் நீர் இனங்களுக்கு, அவைகள் நமக்கு பக்கத்தில் இருந்தாலும் அவைகளுக்கு உணவிடுவது ஜீவகாருண்யம் அல்ல. ஆனால் அவைகள் ஆபத்தில் இருந்தால் உதவுவது சிறந்தது.
++++++++++++++++++++++++++++++++++
Natarajamoorthyr Ramalingamதெருநாய்களுக்கு யார் உணவளிப்பார்கள்?
TMR:
முன்பெல்லாம் தெரு நாய்களுக்கு மனித மலம் உணவாகக் கிடைக்கும். தற்போதுள்ள நாகரீக உலகில் தெருநாய்களுக்கு அவைகள் கிடைப்பதில்லை. மேலும் மனிதர்களாகிய நாம் நமது வீட்டில் எஞ்சிய உணவை அவ்வப்போது அவைகளுக்கு கொடுத்து வருகிறோம். அப்பழக்கத்தை தொடரலாம். எனினும் வள்ளலார் கருத்துப்படி கடவுளின் சுதந்தரத்திலும் அவைகளின் ஆன்ம வினைகளின்படியும் அவைகளுக்கு உணவு கிடைக்கும்.
++++++++++++++++++++++++++++
Abhirajநம் கண்முன் துன்பத்தால் வாடும் எந்த உயிருக்கும் உதவலாம்
TMR:
கண்டிப்பாக உதவ வேண்டும்
+++++++++++++++++++++++++++++++
பாரதியார் காக்கை குருவி எங்கள் ஜாதி காடு மலைகள் எங்கள் கூட்டம் என்று கூறியுள்ளாரே
TMR:
அதனதன் இயற்கை செயல்களை மதித்து, அதன் போக்கில் தலையிடாமல் சிறை பிடிக்கமல் கொல்லாமல் சிதைக்காமல் போற்றுவதை அவ்வாறு பாடியிருப்பார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
வள்ளலார் வளாகம். மவுனகுரு ஆசிரமம்தேடி வந்தால் சாமி?
TMR:
பழக்கப்படுத்தாமல் தேடி வராது.
பசித்தால் வரும், திருடன் பழகியா பசி வந்தால் திருடுகிறான்? இல்லை குழந்தை தான் பிரட்டை திருடுகிறதா? பசி வந்தால் எல்லாமே செய்யத்தோன்றும், அது எந்த உயிராக இருந்தாலும் உறவே...
TMR:
வளர்ப்பு கால்நடைகள் பசி வந்தால் வரத்தான் செய்யும். மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்தர ஜீவன்களுக்கு உணவளிப்பது மனிதனின் வேலை அல்ல என வள்ளலார் கூறுகிறார்.