Tuesday, September 23, 2025

Galaxy - Time

 Galaxy - Time

TMR


உங்கள் வீட்டின் சுவற்றில் உள்ள கடிகாரம் தான் இந்த 'Milky Way Galaxy' என கற்பனை செய்துக்கொண்டு இந்த பதிவை தொடருங்கள்.
நம் சூரிய மண்டலம் இந்த படத்தில் உள்ள மில்கிவே கேலக்ஸிக்குள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அசுர வேகத்தில் சுற்றி வருகிறது.
சூரிய மண்டலத்தின் வேகம்:
மணிக்கு - 8,28,000 கி.மீ
நிமிடத்திற்கு - 13,800 கி.மீ
வினாடிக்கு - 230 கி.மீ.
இப்போது உங்கள் சுவர் கடிகாரம் தான் மில்கிவே கேலக்ஸி. இந்த கடிகாரத்தில் நம் சூரிய மண்டலம் 12-லிருந்து தொடங்கி திரும்ப 12 மணிக்கே வருவதற்கு 220 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.
அதாவது,
வினாடி முள் ஒரு வினாடி எடுத்து வைக்க 5080 ஆண்டுகள் ஆகும்.
நிமிட முள் ஒரு நிமிடத்தை முடிக்க 3,05,000 ஆண்டுகள் ஆகும்.
மணி முள் 12-லிருந்து 1 மணிக்கு வர 18.3 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.
இப்போது இந்த கடிகாரத்தில் நம் சூரிய மண்டலத்தின் ஒரு சுற்றை(Orbit) மட்டும் பார்ப்போம்.
ஒரு சுற்று - 220 மில்லியன் ஆண்டுகள்.
கடிகாரத்தின்(கேலக்ஸி) 12 மணியிலிருந்து நம் சூரிய மண்டலம் புறப்படுகிறது(மேலே கூறிய அசுர வேகத்தில்).
சூரிய மண்டலம் 55 மில்லியன் ஆண்டு பயணத்திற்கு பின்னர் 3 மணியை தொடும்போது டைனோசர்கள் அழிவுக்கு அருகே வாழும்.
110 மில்லியன் ஆண்டுகள் பயணத்திற்கு பின்னர் 6 மணியை(மில்கிவேயின் பாதி தூரம்) தொடும்போது பாலூட்டி விலங்குகள் தோன்ற தொடங்கும்.
165 மில்லியன் ஆண்டுகள் பயணத்திற்கு பின்னர் 9 மணியை சூரிய மண்டலம் அடையும்போது டைனோசர்கள் அழிந்திருக்கும்.
பின்னர் சூரிய மண்டலம் தொடர்ந்து பல மில்லியன் ஆண்டுகள் பயணித்து...
11.59.59 மணி நேரத்தை அடையும்போது தான் மனிதர்களாகிய நாம் தோன்றுகிறோம்.
சோ, இந்த மில்கிவே கேலக்ஸியில் டைனோசர்கள் 30 நிமிடங்கள் வாழ்ந்துள்ளன. ஆனால், இதே மில்கிவே கேலக்ஸியில் மனிதர்களாகிய நாம் தோன்றி வெறும் 1 வினாடி தான் ஆகிறது.
இந்த ஒப்பீடு மூலம் நம் சூரிய மண்டலம் எவ்வளவு தான் அசுர வேகத்தில் சுற்றினாலும் கூட, ஒரு சுற்று முடிவதற்குள் பல உயிரினங்கள் பரிணாமம் அடைந்து அழிந்து போனது எனில், இந்த கேலக்ஸி எவ்வளவு பிரமாண்டமானது என்பதை புரிந்துக் கொள்ளலாம்.