Sunday, October 5, 2025

வருவிக்கவுற்ற வள்ளல்

 பொருளும் இல்லைநல் பொழுதும் இல்லை

பசித்தோர்க்கு உணவிட பரந்தமனமும் இல்லை
உருகிஉனைப் பாடிடநின் அருளும் இல்லை
உலகில் சிறந்துவாழநல் ஒழுக்கமும் இல்லை
குருவென உனைத்தொழநல் குணமும் இல்லை
கடவுள் ஒருவனெனக் கருதும் கருத்துமில்லை
வருவிக்கவுற்ற வள்ளலுனை வணங்கவு மில்லை
வடலூர் வாழ்வுவாழநல் விதியும் இல்லையே.
-TMR

வருவிக்கவுற்ற வள்ளல்