எல்லாம் உடையவனுக்கு ச.மு.க.அருள் நிலைய விண்ணப்பம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அருட்பெருஞ்ஜோதி
இன்னும் சோதனை செய்து கொண்டு இருக்கிறது என் மகளின் துன்பம் தீரவில்லை. நீ உண்மை என்று நம்புகிறேன் எனது மகளை குணமாக்கு அருட்பெருஞ்ஜோதி
அப்பா எனது மனம் நடுங்குகிறது. --- DrArul Nagalingam Erode.
அழுது நடுங்கிடும் தந்தையின் உயிரும்
….அணைத்து வளர்த்திட்ட மகளின்
பழுத்த உயிரும் உலகிடை நோய்பறிக்க
….பார்க்கவோ நின்மலரடி நின்று
தொழுத உயிரன்றோ அருட் ஜோதியன்
….திகழும் அருள்நிலைய அருளால்
எழுந்திடுவாய் பூரண நலமுடன் இன்றே
….அருள் நாகலிங்கம் மகளே.