51 வருடம்
வள்ளற்பெருமான் தனது காயத்துடன் இவ்வுலகில் வெளிப்பட வாழ்ந்த காலம் 51 வருடம்.
சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் மிகச்சரியாக தங்களது 51 ஆவது அகவையில் முத்தேகம் பெற வேண்டும். 51 வயதிற்கு மேல் தனது தேகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். 30 வயதிற்கு மேல் புகைப்படத்தில் காயம் விழக்கூடாது. இன்னும் பல...
இன்னும் சில நாட்களில் 51-ஆம் வயதில் நான். வள்ளலார் தமது காயத்தை மறைத்தது 1874. நான் சரியாக 100 வருடம் கடந்து 1974-ல் பிறப்பு. 3500-க்கும் மேற்பட்டு சுத்த சன்மார்க்க மரபு பாடல்களும், சில சன்மார்க்கம் சார்ந்த கட்டுரைகள் இயற்றியும், சில சன்மார்க்க நடைமுறைகளை பின்பற்றியும், ஒரு பெண்ணைக்கூட தொடாமல் இருந்தும் - பணம், உலகியலில் ஆழ்ந்ததால், சுத்த சன்மார்க்கத்தில் தோல்வியின் விளிம்பில் நான்....
--TMR