Wednesday, January 30, 2013

மின்சாரம்


மின்சாரமோ மின்சாரம்





கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....

இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்..?!

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.

இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். 


அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.



அன்பெனும் பிடியுள்
தி.ம.இராமலிங்கம்










இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

Sunday, January 20, 2013

பாலியல் வன்கொடுமை


பாலியல் வன்கொடுமை


பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சமீப காலமாக இந்தியாவில் அதிக அளவில் நடப்பதை ஊடகங்களின் மூலமாக அறிந்து ஆண்கள் அணைவரும் வெட்கப் படவேண்டியதாக அசிங்கப் படவேண்டியதாக உள்ளது. சில சமயங்களில் பாலியல் வன்கொடுமை கொலை செயலில் சென்றுக் கூட முடிந்து விடுவதை பார்க்கும்போது இதனை தடுக்க என்ன செய்யவேண்டும் என்றே தெரியவில்லை, புரியாத புதிராகவே உள்ளது. பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு மதத் தலைவர்கள், பல்வேறு ஊடகங்கள், சட்டத் துறையினர்கள், மகளிர் அமைப்பினர்கள் இவைப் போன்ற பல்வேறு துறையினர்களும் தனித்தனியாக தங்களது கருத்துக்களை தெரிவித்தாலும் இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை, ஏன்? ஏன்? ஏன்???

மனிதன் என்பவன் உண்மையில் மிருக வம்சமா?

சத்தியமாகச் சொல் நீ மனிதன் தானா? என்ற பழைய சினிமா பாடல் வரியினுக்கு ஒவ்வொரு ஆடவரும் தனது மனசாட்சியினை ஆதாரமாக வைத்து சிந்தித்தாலே, உடனே தெரிந்து விடும் நீ மனிதனா? மிருகமா? என்று, ஆனால் அது அவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாக உள்ளது தான் இப்போது பிரச்சனை. நம்முடன் பழகுபவர்களில் யார் மிருகம்? எப்போது மிருக குணம் வெளிப்படும்? என்று யாருக்கும் தெரியாது. பிரமச்சரியம் பற்றி உபதேசம் செய்பவர்களையே இந்த பெண் இன்பம் என்ற மாயை, பாலியல் வன்கொடுமை என்ற மிருகசெயலுக்கு மாற்றி விடுவதையும் நாம் பார்க்கின்றோம்.
கண்போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
இப்படி மனிதர்கள் போன பாதையை மறந்ததினால் வந்த வினைகள் தான் இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடக்க காரணம்.

சரி, இவற்றை தடுக்க என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்று பல்வேறுபட்ட ஊடகங்கள் வழியே பலர் கூறிய வழிமுறைகளை இங்கே தொகுப்பாக பார்ப்போம்.

அனைத்துப் பெண்களும் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகள்:

# வெளியில் செல்லும் பொழுது தற்காப்பிற்காக மிளகாய் பொடி, கண் எரிச்சல் தெளிப்பான்களை எடுத்துச் செல்லலாம்.
# தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ளலாம்.
# விரலமில்லாத ஆடைகளை அணியலாம், உடல் முழுக்க ஆடைகளால் மறைக்கலாம்.
# ஆண் நண்பர்களை முற்றும் தவிர்க்கலாம்.
# சிறிய வயதிலேயே திருமணம் செய்திடலாம்.
# கைப்பேசி உபயோகத்தை தவிர்க்கலாம்.
# இரவில் பயணம் செய்வதை தவிர்க்கலாம்.
# உறுப்பை மறைத்து பூட்டு போட்டுக் கொள்ளலாம்.
# விளம்பரங்களிலும், சினிமாக்களிலும் கவர்ச்சியான காட்சிகளை தவிர்க்கலாம். இவைப் போன்று கருத்துகளை இன்னும் விரிக்கின் பெருகும் என்க…

அனைத்து ஆண்களும் பாலியல் வன்கொடுமையை செய்யாமல் தடுக்க மேற்கொள்ளவேண்டிய ஒழுக்கம் சார்ந்த, மனிதாபிமானம் சார்ந்த, பல்வேறுமதங்களில் உள்ள நெறிமுறைகளை இதுவரை யாரும் ஊடகங்களில் கூறியதாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால் பாலியல் வன்கொடுமை செய்துவிட்ட பின்பு அந்த ஆடவனை எப்படி தண்டிக்கலாம்?, அந்த தண்டனையின் மூலம் மற்ற ஆண்களுக்கு ஒருவித பயத்தை உருவாக்கி இந்த வன்கொடுமையை இனி தடுக்கலாம் என்கிற ரீதியில் பல கருத்துகளை பல்வேறுபட்ட ஊடகங்கள் வழியே பலர் கூறிய வழிமுறைகளை இங்கே தொகுப்பாக பார்ப்போம்,

# மரண தண்டனை அளிக்கலாம்.
# பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளலாம்.
# உறுப்புகளை வெட்டிவிடலாம்,
# ஆண்மை தன்மையை நீக்கிவிடலாம்,
# ஆயுள் இருக்கும் வரை சிறை தண்டனை அளிக்கலாம்,
# விபச்சாரத் தொழிலையும் அரசே ஏற்று நடத்தலாம்.
# கைகளில் அழியா வண்ணம், மற்றவர்களுக்கு தெரியும் வண்ணம் பச்சை குத்தலாம்.

இவ்வாறு பெண்கள் மேற்கொள்ளக்கூடிய கட்டுப்பாடுகளையும், தவறு செய்த ஆண்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனைகளையும் பலர் மேற்கொண்டவாறு பகிர்ந்துக்கொண்டதை பார்த்தோம்.

இப்படி என்னதான் பெண்கள் தடுப்புமுறைகளை கையாண்டாலும், தவரிழைத்த ஆண்களுக்கு தண்டனைகள் கொடுத்தாலும் இந்த பாலியல் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்க முடியுமா? ஆக இதற்குத் தீர்வுதான் என்ன???


அமெரிக்காவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து மத சார்பாக கலந்துக்கொண்டவர் தமது கருத்துகளை தெரிவிக்கும் முன்பு “சகோதர சகோதரிகளே என்று அணைவரையும் அழைத்து நமது நாட்டின் சகோதர பாசத்தை வெளிப்படுத்திய “விவேகானந்தர் நமது இந்திய திருநாட்டில் தானே பிறந்தார்! அந்த சகோதர சகோதரி பாசம் – நட்பு – உறவு – இப்போது வேகமாக மறைந்து வருவதையே இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்க முக்கிய காரணமாக உள்ளது. சமுதாயத்தில் நாம் அணைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்பதனை நமது குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்களது நடத்தைகளின் மூலம் உணர வைக்கவேண்டும்.


“கற்பு என்று வந்தால் அதனை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்  என்றானே “புரட்சிக் கவி பாரதியார்அவன் பிறந்ததும் இந்த இந்திய திருநாட்டில் தானே! ஆண்களுக்கும் கற்பு உண்டு என்பதனை நமது குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்களது நடத்தைகளின் மூலம் உணர வைக்கவேண்டும். பாலியல் வன்கொடுமை மற்றும் விலை மாதர்களின் தொடர்பால் பெண்கள் பலாத்காரத்தின் மூலமோ அல்லது தாங்களே விரும்பியும் தங்களது கற்பை இழக்கையில் அதே நொடியில் ஆண்களும் தாங்கள் உணராமலேயே தாங்களாகவே முன்வந்து தங்களது தவறான இச்சைக்காக தங்களது கற்பை இழக்கிறார்கள் என்பதனை உணர்ந்து இக்காரியங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.


“பிறன்மனை நோக்காத பேராண்மை
 அறனொன்றோ ஆன்றவொழுக்கு 
என்று திருக்குறளை நமக்காக கூறிய “திருவள்ளுவர் நமது இந்திய திருநாட்டில் தானே பிறந்தார்! இக்குறளின் படி “பேராண்மைபிறன்மனை நோக்காத பேராண்மை இன்று எத்தனை பேரிடம் உள்ளது. இதனை ஒவ்வொரு இந்திய குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்களது நடத்தைகளின் மூலம் உணர வைக்கவேண்டும்.



“நான் எனது மனக்கட்டுப்பாட்டிற்காகவும், எதிரில் வரும் பெண்களை பார்ப்பதை தவிர்ப்பதற்காகவும் எப்பொழுதும் நடக்கும்பொழுது தலையை கீழே குணிந்தப்படி நிலத்தை பார்த்தே நடப்பேன் என்று தமக்கு தாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்ட நம் தேசத் தந்தை மகாத்மா “காந்தியடிகள் நமது இந்திய திருநாட்டில் தானே பிறந்தார்! அந்த தன்னடக்கம் இன்றைய ஆடவர்களுக்கு எங்கே சென்றது. இவரின் சத்திய சோதனையை ஒவ்வொரு இந்திய குடும்பங்களில் உள்ள பெரியவர்களும் படித்து தங்கள் குழந்தைகளுக்கும் படிக்க வைப்பதின் மூலம் எதிர்காலதில் ஒழுக்கமான இளைஞர்களை கண்டிப்பாக காணலாம்.



“கற்பிழந்தவளைக் கலந்திருந்தோனோ?, கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தோனோ?, காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தோனோ?, கற்பமழித்துக் களித்திருந்தோனோ? என்று என்ன பாவம் செய்தேனோ? என்று பாவங்களை பட்டியலிட்ட “வள்ளலார்”  தோன்றியதும் நமது இந்திய திருநாட்டில் தானே! வள்ளலார் குழந்தைகளுக்காகவே இயற்றிய “மனுமுறை கண்ட வாசகம் என்ற அற்புத நூலையும் திருவருட்பாவினையும் ஒவ்வொரு இந்திய குடும்பங்களில் உள்ள பெரியவர்களும் படித்து தங்கள் குழந்தைகளுக்கும் படிக்க வைப்பதின் மூலம் எதிர்காலதில் ஒழுக்கமான இளைஞர்களை கண்டிப்பாக காணலாம்.

மனிதன் செய்யும் இப்படிப்பட்ட பாவங்களுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனைகளாக வள்ளலார் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்,

# மனத்தால் செய்யும் பாவங்களுக்கு சண்டாளாதி சரீரம் உண்டாகும்.
# வாக்கால் செய்த பாவங்களுக்கு மிருகம் முதலான சரீரம் உண்டாகும்.
# தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரம் உண்டாகும்.
இதில் நமக்கு எந்த தேகமோ? இது வெறும் பொய்யுரை என எண்ணிவிடாதீர்கள், உண்மையானது. “நான் உரைக்கும் வார்த்தையெல்லாம் நாயகன் தன் வார்த்தை என்று வள்ளலார் கூறுவதால் இது வள்ளலாரின் வார்த்தை அல்ல! இறைவனின் வார்த்தையே என்றுனர்தல் வேண்டும்.



நாம் என்ன மிருகங்களா? ஆதிவாசிகளா? அறிவியலில் பல முன்னேற்றங்களைக் கண்டு தற்போது செவ்வாய் கிரகத்தில் வசிக்க தயாராகி வருகிறோம். இந்நிலையில் இப்படிப்பட்ட பழைய முற்காலத்தில் உள்ள மனிதர்களைப் போல் தவறுகளைச் செய்யலமா? என்று ஒவ்வொரு அண்களும் நினைத்துப் பார்த்து வெட்கப்படவேண்டும், வேதனைப்பட வேண்டும். ஒவ்வொரு ஆணும் – பெண் என்னும் தாயின் கருவரையிலிருந்து தானே உரு பெற்று, திரு பெறுவதற்காகத் தானே இப்பூலகில் வரபெற்றோம். அப்படிப்பட்ட கருவறையினை உடைய நடமாடும் கோவில்தான் நமது வணக்கத்துக் குரிய உயிருள்ள கோவிலாகும் என்பதனை உணரவேண்டும்.

இத்திரு தந்தை நாட்டில், இவ்வாறு பல்வேறு மகான்கள் தோன்றி, பல்வேறு உபதேசங்களை செய்து அருளியது மட்டுமல்லாது அதனை தங்களது வாழ்க்கையிலும் கடைபிடித்துக் காட்டினார்கள். அதன்படி இனிமேலாவது இவ்வுலகில் பெண்களை மதிக்க பழகிக்கொள்வோம்.
“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்கமுடியாது என்பதற்கிணங்க, சட்டங்கள், அடக்குமுறைகள், கட்டுப்பாடுகள் இவைகள் எதுவும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவோ குறைக்கவோ இயலாது. ஆடவரின் மனங்கள் / பார்வைகள் இயற்கையாகவே மாறவேண்டும். மன மாற்றத்திற்கான வழிமுறைகளை இந்த ஆடவ சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்வோம்.

“நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய “நக்கீரன் பிறந்ததும் இந்த தந்தை திருநாட்டில் தான். எனவே இந்த பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஏதேனும் தண்டனை கொடுக்க வேண்டுமல்லவா? என்ன கொடுப்பது?


மேற்கண்ட தண்டனைகளை கொடுப்பதை விட, அவர்களை உயிருடன் மருத்துவ துறைக்கு கொடுத்துவிடவேண்டும். அங்கே பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் தங்களது உயிரையும், உடலையும் மனித குலத்திற்கு அற்பனிக்கிறார்கள், அவர்களுக்கு இது தண்டனை அல்ல, மனிதர்களுக்கு செய்யும்  சேவை.

அன்பெனும் பிடியுள்
தி.ம.இராமலிங்கம்










               
  

Sunday, January 13, 2013

தைப் பூசத்திருவிழா அழைப்பிதழ் - 2013


தைப் பூசத்திருவிழா அழைப்பிதழ் - 2013


தமிழ் நாள்
ஆங்கில நாள்
கிழமை
விழா விபரம்
13 தை
26.01.2013
சனி
மருதூர், காலை 08.00 மணிக்கு நற்கருங்குழி, வடலூர் சத்தியதருமச்சாலை, மேட்டுக்குப்பத்தில், சித்திவளாகத் திருமாளிகை, ஆகிய இடங்களில் கொடி கட்டுதல் 10.00 மணிக்கு வடலூர் சத்திய ஞான சபையில் கொடி கட்டுதல்

தை 14
27.01.2013
ஞாயிறு
வடலூர் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்
காலை 06.00 & 10.00 மணி,
மதியம் 01.00 மணி,
இரவு 07.00 & 10.00 மணி.

தை 15
28.01.2013
திங்கள்
வடலூர் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்    காலை 06.00

தை 16
29.01.2013
செவ்வாய்
மேட்டுக்குப்பத்தில் திருவருட்பிரகாச வள்ளற் பெருமானார் முத்தேக சித்தி பெற்று திருக்காப்பிட்டுக் கொண்ட சித்திவளாகத் திரு அறைதரிசனம்.
மதியம் 12.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை.


      ஆன்மநேயம் சார்ந்த சன்மார்கர்களுக்கும், அன்புள்ள பொதுமக்களுக்கும் வள்ளலாரின் சார்பில் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன், 

      அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தணிப்பெருங்கருணையால் வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் வள்ளலார் முன்னிலையில் மேற்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி நடைபெற உள்ளது. 

      அவ்வமையம் தாங்கள் அணைவரும் தவறாமல் வருகை தந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளையும் திருவருளாம் பெருஞ்ஜோதி திருக்கருணையையும் பெற்று இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப்பெருவாழ்வில் வாழ உள்ளன்போடு அழைக்கிறேன்.    

 அன்பெனும் பிடியுள் 
தி.ம.இராமலிங்கம்.

Saturday, January 12, 2013

திருமண அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ்


அண்புடையீர்,

வருகின்ற 18-01-2012 வெள்ளிக் கிழமை எங்களது சகோதரர் திரு.ம.சரவணன் அவர்களுக்கு செல்வி.அ.அமலா அவர்களுக்கும் A.V.N. சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் ( G.S.T. Road, Guduvancherry, Chennai )                  இறைவனின் திருவருளாள் நடைபெற உள்ளது, அவ்வமையம் தாங்கள் அணைவரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி சிறப்பிக்குமாறு இதன் மூலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு


தி.ம.இராமலிங்கம்.
தி.ம.சதீஷ்கண்ணன்.
மு.ச.அருள்.
மு.ச.குமரேசன்.