கருணைக் கொலை
ஆசையே துன்பத்திற்கு
காரணம் என்ற புத்தர்
ஆசைக்கு காரணமானதை
கொலை செய்யச் சொல்லவில்லை!
வாடியப் பயிரைக்
கண்டபோது வாடிய
வள்ளலார் அதனைப்
பிடுங்கி எறியச் சொல்லவில்லை!
வலியால் துடிக்கும்
கன்றுக் குட்டியை
கொன்றுவிடச் சொன்ன
மகாத்மா மட்டும் விதி விலக்கு!
பரவாயில்லை, நாம்
கொலைக்கு முன்னால்
அதற்கு கருணை
பட்டம் கொடுக்கத் தேவையில்லை!
ஏனெனில்
கருணை வாழவைக்கும்
கொலை சாகடிக்கும்
இரண்டும் இணைவ தில்லை!
கொலைச் செய்யும்
உரிமை கடவுளுக்கே
உண்டு அதுமறக்கருணை
ஆக்குபவன் அழிப்பான் ஆனால்நாம்?
துடிப்பவர்கள் துடிக்கட்டும்
மனநலம் பாதித்தோர்கள்
மூளைச்சாவு அடைந்தோர்கள்
எல்லாம் கிடக்கட்டும் என்பதல்லகருணை!
மனநல காப்பகம்
முதியோர் இல்லம்
தொட்டில் குழந்தை
திட்டம்போல் திட்டம் உருவாக்குவோம்!
மக்கள் நலஅரசு
இதற்குப் பொறுப்பேற்று
கருணைக் காப்பகம்
உருவாக்க அரசிடம் கூறுவோம்!
இவர்களின் உயிர்நலம்
உடல்நலம் நலம்பெற
இறைவனிடம் இறைஞ்சுவோம்
மனிதர்களாக வாழ்வோம் இசைந்து!
கருணை பொதுநலம்
கொலை சுயநலம்
நண்பர்களே எதுநலம்
என்று சிந்திப்பது நலம்!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.