Tuesday, September 2, 2014

என்ன பாவஞ் செய்தேனோ??



ஆன்ம நேய அன்பர்களுக்கு வணக்கம்.

    நாம் நமது கருமத்தை தொலைப்பதற்காகவே நமக்கு இந்த மானிட தேகத்தை இறைவன் தனது மாயா சக்தியால் படைத்தான். அதன்படி நாமும் மனித தேகம் எடுத்து தற்போது இப்புவியில் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் நாம் முற்பிறவி கருமத்தை கழிக்காமல் இப்பிறவியிலும் பல கருமங்கள் செய்து கருமங்களை இன்னும் நாம் கூட்டிக்கொள்கிறோம். கருமங்கள் எப்போது பூஜ்ஜியம் ஆகுமோ அதுவரை நமக்கு இப்புவியில் பிறப்பு உண்டு.

    நல்ல கருமங்கள் செய்தால் மனித பிறப்பும், தீய கருமங்கள் செய்தால் மற்ற விலங்கின தேகங்களும் கிடைக்கும். எனவே நாம் நற்கருமங்களையே செய்ய வேண்டும். நம்முடன் இருப்பவர்களான தந்தை, தாய், சகோதர சகோதரிகள், சொந்தம், நண்பர்கள், சாதியர்கள், மதத்தவர்கள், இனத்தவர்கள், தேசத்தவர்கள் என்று இவர்களாலும் நம்முடன் சுற்றித் திரியும் விலங்கினங்களாலும், நாம் உண்ணும் உணவு வகைகளாலும் நமக்கு தீய கருமங்கள் ஏற்படுகின்றன என்பதை கவனமுடன் கவனித்து மேற்கண்ட யாவரையும் ஆன்மாக்களே என்ற ஆன்மநேயத்துடன் அவர்களுடன் யாதொரு பந்த பாசமும் வைக்காது, யாவருக்கும் தீங்கு செய்யாது இருக்க பழகவேண்டும்.

    இப்பழக்கமே நம்மை அடுத்தப் பிறவியில் இதே மனித தேகத்தை எடுக்க உதவிபுரியும். மனித தேகமே இறைநிலையை அடைய சரியான இடமாக உள்ளதால், நமக்குக் கிடைத்த இந்த மனித தேகத்தை வீணே பந்த பாசத்தால் ஈர்க்கப்பட்டு நாம் கீழ்காணும் எந்த பாவச்செயல்களையும் செய்துவிடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் தாம் எழுதிய மனுமுறை கண்ட வாசகம் என்னும் நூலில் பாவங்களின் வகைகளை விளக்கி யிருப்பார். அதே நடையில் தற்போது காலத்திற்கேற்ப சில பாவநிகழ்ச்சிகளை இங்கே வகுக்கப்பட்டுள்ளது. மொத்த 150 பாவச்செயல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதனையும் மீறி பல செயல்கள் இப்பூமியில் உண்டு. அதையெல்லாம் நமது மனசாட்சிக்கு விரோதமின்றி எதனையும் செய்து பழகவேண்டும். அப்போது பாவங்கள் தவிர்க்கப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் எண் 108 - ல் இருந்து 150 வரை வள்ளலார் ஏற்கனவே தமது மனுமுறை கண்ட வாசக நூலில் கூறியிருப்பதாகும்


 
  1. ள்ளல் அடியாரை வணங்காம லிருந்தேனோ!

  1. சுத்த சன்மார்க்கரை சீறி வைதேனோ!

  1. சன்மார்க்க சங்கத்தை சாராம லிருந்தேனோ!

  1. திரு வருட்பாவை தீண்டாம லிருந்தேனோ!

  1. அருட்பெருஞ் ஜோதி அகவல் படியாதிருந்தேனோ!

  1. சித்தி வளாகச் சித்தரை இகழ்ந்திருந்தேனோ!

  1. வடலூர் சபைக்காண வர மறுத்தேனோ!

  1. தருமச் சாலைக்கு தருமமில்லை என்றேனோ!

  1. மஹா மந்திரம் மறந்தி ருந்தேனோ!

  1. ஜீவ காருண்யமின்றி ஜீவித் திருந்தேனோ!

  1. சன்மார்க்கச் சாதுக்களை சோதனை செய்தேனோ!

  1. மாதப்பூசம் காணாது மாண்டு போனேனோ!

  1. தைப்பூச ஜோதி தரிசனம் பாராமலிருந்தேனோ!

  1. சன்மார்க்கம் பேசியும் சாதி பற்றிலிருந்தேனோ!

  1. சன்மார்க்கம் சார்ந்தும் செத்து ஒழிந்தேனோ!

  1. சத்தியம் தெரியாது சகத்தில் வாழ்ந்தேனோ!

  1. வடலூர் வந்தும் வருத்த முற்றேனோ!

  1. வள்ளல் இருக்க வாட்ட மடைந்தேனோ!

  1. அன்ன தானம் அளிக்காம லிருந்தேனோ!

  1. மூவாசையை விடாமல் மகிழ்ந் திருந்தேனோ!

  1. உடல் வலுபெற ஊன் உண்டேனோ!

  1. பிறர் குற்றங்களை பார்த் திருந்தேனோ!

  1. பொய்யான மதங்களைப் பின் பற்றினேனோ!

  1. சாதியச் சடங்குகள் செய்திருந் தேனோ!

  1. இறந்தாரை புதைக்காமல் எரித்திருந் தேனோ!

  1. மனைவியை இழந்ததும் மறுமணம் செய்தேனோ!

  1. தலைவனை இழந்ததும் தாலியை அறுத்தேனோ!

  1. காலமானவர்க்கு கருமக் காரியம் செய்தேனோ!

  1. குழந்தைகளுக்கு காது குத்தி னேனோ!

  1. சாகாமலிருக்க தவம் செய்யாம லிருந்தேனோ!

  1. அருட்பெருஞ் ஜோதியை ஆராதியா திருந்தேனோ!

  1. தனிப்பெருங் கருணை தயவை அறியாதிருந்தேனோ!

  1. ஆன்ம அறிவை அடையா திருந்தேனோ!

  1. பயத்தை பூஜ்ஜியமாக்க பழகாதிருந் தேனோ!

  1. படங்களை வைத்து பூஜித்திருந் தேனோ!

  1. சிலைகளுக்கு அபிக்ஷேகம் செய்திருந் தேனோ!

  1. கடவுளை உணராது கோயிலில் தேடினேனோ!

  1. திருவருள் காலத்தை தூங்கிக் கழித்தேனோ!

  1. பரமனை நினையாது பெண்போகம் விழைந்தேனோ!

  1. முத்தேகம் அடைய முயலாதிருந் தேனோ!

  1. ஆகாரமே ஆதரமென்று அகங்கரித் திருந்தேனோ!

  1. மனதை அடக்காது மேய்த்திருந் தேனோ!

  1. மூச்சுக் காற்றின் மேன்மை யறியாதிருந்தேனோ!

  1. காமமெனும் கொடியனை கொல்லாம லிருந்தேனோ!

  1. கோபமெனும் கொல்லியால் கொலைபல செய்தேனோ!

  1. புகழ்ச்சிக்கு ஏங்கிப் பொய்பல சொன்னேனோ!

  1. ஆசையை அழிக்கும் அறிவில்லா திருந்தேனோ!

  1. குன்டலனி பாலருந்தா கயவனா னேனோ!

  1. செத்தாரை எழுப்பும் சிற்றம்பலம் அறியேனோ!

  1. அழியாசுகம் அறியாத அற்பன் ஆனேனோ!

  1. சாகாக் கல்வியைச் சகத்தில் கற்காதிருந்தேனோ!

  1. தயவே வடிவான தேகமெடுக்க கருதாதிருந்தேனோ!

  1. விருப்பு வெறுப்பற்ற வண்ண மாயிருந்திலேனோ!

  1. இலவசம் அறிவித்து அரசியல் நடத்தினேனோ!

  1. மதுக்கடை நடத்தி மக்களை அழித்தேனோ!

  1. ஊழல்பலச் செய்து உலகினில் கொழுத்தேனோ!

  1. இலஞ்சம் வாங்கி அரசு நடத்தினேனோ!

  1. பணம் கொடுத்து பாமரரிடம்வாக்குப் பெற்றேனோ!

  1. பஞ்சத்தை ஒழிக்காது பாராதிருந் தேனோ!

  1. பதவி சுகத்தில் பாவம்பல செய்தேனோ!

  1. சாலை பயணிகளிடம் சுங்கவரி வசூலித்தேனோ!

  1. கொல்லா நெறியை குவலயத்தில் சொல்லாதிருந்தேனோ!

  1. குடும்ப அரசியலால் களித்திருந் தேனோ!

  1. மக்களை ஏமாற்றி மக்களாட்சி செய்தேனோ!

  1. ஒழுக்கங் கெட்டவர்களை அமைச்ச ராக்கினேனோ!

  1. மகளிரை வெளியிடத்தில் மலங்கழிக்க வைத்தேனோ!

  1. தரமற்ற இணையத்தை தடைசெய்யா மலிருந்தேனோ!

  1. சாதீய ஒதுக்கீடுவைத்து சாதியை வளர்த்தேனோ!

  1. இலவசத்திற்காக ஓர் அரசை ஆதரித்தேனோ!

  1. மது குடித்து மதிமயங்கி ஒழிந்தேனோ!

  1. இலஞ்சம் கொடுத்து அராஜகம் செய்தேனோ!

  1. இலஞ்சம் வாங்கி ஊழியம் செய்தேனோ!

  1. வாங்கிய பணத்திற்காக வாக்களித் தேனோ!

  1. வருகின்ற தேர்தல்களில் வாக்களியா திருந்தேனோ!

  1. அரசு அதிகாரியாகி மக்களை மதியாதிருந்தேனோ!

  1. மற்றவர் பொருளைத்திருடி மதிக்க வாழ்ந்தேனோ!

  1. சாதிக் காரரென்று சாதகமாய் தீர்பளித்தேனோ!

  1. வழக்கினை முடிக்காது வளர்க்க முயன்றேனோ!

  1. பணத்திற்காக திருடனை பாசமுடன் தப்பவிட்டேனோ!

  1. சட்டத்தை மதியாது சாதித்து இருந்தேனோ!

  1. அடுத்தவர் மண்ணை ஆட்கொள்ள நினைத்தேனோ!

  1. பெண்களை மதியாது மோகித்திருந் தேனோ!

  1. பணம் கொடுத்து புணர்ந் தெழுந்தேனோ!

  1. மனைவியிருக்க பரத்தையுடன் மகிழ்ந் திருந்தேனோ!

  1. கனிகையர் கடிய கற்பழித் தேனோ!

  1. தருமம் வாங்கி திருமணம் செய்தேனோ!

  1. மனைவி அடிமையென மனைமாட்சி புரிந்தேனோ!

  1. கணவன்சொல் கேட்காமல் கடிந்துரைத் தேனோ!

  1. பாலுணர்வை இணையத்தில் பார்த்திருந் தேனோ!

  1. அந்தரங்கங்களை ஊடகங்களில் உலாவ விட்டேனோ!

  1. ஆபாச மின்னஞ்சல் அடுத்தோர்க்கு அனுப்பினேனோ!

  1. ஆபாசக் கதைகளை இணையத்தில் படித்தேனோ!

  1. வன்மை குறுஞ்செய்தி வதந்திகளைப் பரப்பினேனோ!

  1. அற்ப நாடகங்கள்பார்த்து அழுதிருந் தேனோ!

  1. வன்முறை காட்சிகள் வைத்துபட மெடுத்தேனோ!

  1. கதைசொல்லும் திரைப்படம் கண்டிருந் தேனோ!

  1. குழந்தைகளை படப்பாடல்கள் கேட்க வைத்தேனோ!

  1. பாலர்களை படப்பாடல்கள் பாட வைத்தேனோ!

  1. அரைகுறையாடையுடன் சிரார்களை ஆட வைத்தேனோ!

  1. இடையுடன் தொடைகாட்டி ஆடுதலை இரசித்தேனோ!

  1. சுக்கிலம் வீணாகவே சுயஇன்பம் கண்டேனோ!

  1. வக்கிர புத்தியால் வன்புணர்ச்சி கொண்டேனோ!

  1. காதலித்த ஜோடிகளை கலைத்து விட்டேனோ!

  1. உருப்படாத கோயில்களில் உயிர்பலி யிட்டேனோ!

  1. வெளியிடத்தில் ஆடுமாடு வெட்டி விற்றேனோ!

  1. மனந்துடிக்காது வலையிட்டு மீன் பிடித்தேனோ!

  1. கரு கலைத்து கோழிமுட்டை உண்டேனோ!

  1. ல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!

  1. வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!

  1. தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

  1. கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

  1. மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

  1. குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

  1. ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

  1. தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

  1. மண்ணோரம் பேசி வாழ்வழித் தேனோ!

  1. உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!

  1. களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!

  1. பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

  1. ஆசை காட்டி மோசம் செய்தேனோ!

  1. வரவுபோக் கொழிய வழியடைத் தேனோ!

  1. வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ!

  1. பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!

  1. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ!

  1. கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!

  1. நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ!

  1. கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

  1. கற்பழிந் தவளைக் கலந்திருந் தேனோ!

  1. காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ!

  1. கணவன்வழி நிற்போரைக் கற்பழித் தேனோ!

  1. கருப்ப மழித்துக் களித்திருந் தேனோ!

  1. குருவை வணங்கக் கூசிநின் றேனோ!

  1. குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!

  1. கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ!

  1. பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

  1. பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!

  1. கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத் தேனோ!

  1. ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ!

  1. கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

  1. அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!

  1. குடிக்கின்ற நீருள்ள குளத்தை தூர்த்தேனோ!

  1. வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!

  1. பகைகொண்டு அயலோர் பயிரை அழித்தேனோ!

  1. பொது மண்டபத்தைப் போயிடித் தேனோ!

  1. ஆலயக் கதவை அடைத்துவைத் தேனோ!

  1. சிவனடி யாரைச் சீறி வைதேனோ!

  1. தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!

  1. சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!

  1. தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!

  1. தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ!

என்ன பாவஞ் செய்தேனோ!
            என்ன பாவஞ் செய்தேனோனோ....!!!
என்ன பாவம் செய்தேனோனோனோ...........!!!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.