அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
இராமலிங்க
அந்தாதி (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)
நேரிசை
வெண்பா
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWVU5GZHQ5YUxiTkU/view?usp=sharing
கனவு நினைவாகி கெடிலமும் பெண்ணையும்
தினமும் வற்றாது திகழ்ந்திடும் - இனமான
காவிரி கூவம் கோமுகியாறும் ராமலிங்கமே
ஆவிகாணாது நீர் ஓடும்.
ஓடுகின்ற நதிகளிலே அடையாறு செய்யாற்றைப்
பாடுவதினால் புனல் பாயுமே - பாலாறும்
கொடுதலை யாறும் கண்டால் ராமலிங்கமே
காடுகண்டக் குரங்காய் களிப்பேன்.
களியூட்டும் ஆரணியாறு கொள்ளிடமும் நாம்
குளிப்பதற்கு ஏற்றதொரு கரையாம் - வளிவீசும்
அமராவதி வைகை யாறுமோட ராமலிங்கமே
சமவெளி பாய்ந்து செழிக்கும்.
செழிக்கும் தாமிரபரணி சிறுவாணி மணிமுத்தும்
வழியெங்கும் மக்களைவாழ வைக்கும் - குழி
வெட்டி மணல் வாறினால் ராமலிங்கமே
கூட்டியழும் காலம் கூடும்.
கூடுகின்ற நதிகளின் குத்தாட்டம் கண்டிங்கு
வீடுதோறும் விளைச்சல் வரட்டும் - பாடுமிந்த
ஏட்டினையும் மதிக்க ஏற்று ராமலிங்கமே
நாட்டில் நதிகளிணைய நாட்டு.
நாட்டிலே பலப்புதிய நீர்வழிகளைக் காட்டியே
காட்டையும் வளர்க்கும் கால்வாய் - கூட்டிடும்
நதிகளால் உபரி நீரினை ராமலிங்கமே
மதியால் வென்று மீட்கலாம்.
கலாம்கண்ட கனவு கங்கைக்காவிரி இணைவு
தலா பத்துரூபாய்த் திட்டமிது - உலாவரும்
நீரினால் இணைவதே பிறப்பு ராமலிங்கமே
ஏரிக் குளங்களும் ஏங்கட்டும்.
ஏங்கிய வெட்டாறும் ஆடிய வெண்ணாறும்
பாங்காய் ஓடும்காலம் பார்ப்போம் - தூங்கிய
மலட்டாறும் விழித்து மலர ராமலிங்கமே
வலம் வந்து வாழ்த்திடுவாய்.
வாழ்த்துமிந்த பெரியாறு வரதம்மா மருதாநதியைச்
சூழ்ந்திடும் மக்களுக்கு சுகந்தருவாய் - தாழ்ந்திடும்
வசிட்டா நதிக்கு வந்தால் ராமலிங்கமே
பசிக்கா நிலையைப் பார்க்கலாம்.
பார்க்கும் குடமுருட்டி பாமிணியாறு ஜம்புநதியும்
யார்க்கும் அருள்தரும் யோகநதியாம் - போர்
வரும்முன் நீர் வந்தால் ராமலிங்கமே
கருணை என்றே கொள்வேன். 410
கொள்ளும் குண்டாறு கோதையாற்றில் நீர்
துள்ளிமீன் துள்ளத் தழைக்கும் - அள்ளிக்
குடிக்க பவானி கண்டாய் ராமலிங்கமே
பிடித்ததாறு என்றும் பழையாறு.
ஆறாறு காட்டுமிந்த அர்ஜூனாறு கெளசியாறும்
ஊறாத உப்பாறும் ஊறிடக்காண் - ஏறாத
நிலை யெல்லாம் நீரிடை ராமலிங்கமே
அலைபோல தந்து ஆற்று.
ஆற்று வைப்பாறும் அடங்கா தொப்பையாறும்
போற்ற நெய்யலாறும் பாய்ந்தது - வீற்றிந்த
ஆறெல்லாம் கூடியோ ரலையாய் ராமலிங்கமே
பேறெல்லாம் பெற்றது பழந்தமிழ்நாட்டில்.
பழமையான பரப்பலாறு பறளியாறும் இங்கே
அழகாய் ஓடிவருவது அமுதே - உழவுப்
பணி சிறக்கமழை பொழி ராமலிங்கமே
அணியாகும் எல்லா ஆறுகளும்.
ஆறுகளின் அரசனோ அரசலாறு கபினிகல்
லாறும் சீர்மிகும்பே ரழகே - கூறுமாற்றின்
பேரெல்லாம் உன் பேர்தான் ராமலிங்கமே
நீரெல்லாம் சூழவே நிலம்.
நிலந் தாங்கஓடும் நங்காஞ்சி செஞ்சியாறும்
பலமிழந்த உப்பனாறும் பலமே - வலம்வரும்
சுண்ணாம் பாறும் சிற்றாறும் ராமலிங்கமே
எண்ணில்லா அழகை ஏந்தும்.
ஏந்திவரும் நீரினிலே ஏதுமில்லை புனிதமே
வாந்திஎடுக்க வைக்குமே வாரனாசி - சாந்தி
செய்யப் போடும் சடலத்தால் ராமலிங்கமே
பெய்யும் மழையும் பாழாம்.
பாழானப் பாவமெலாம் போகுமென மூழ்கி
வீழாத ஆற்றில் வீழ்கின்றீர் - ஊழான
அவைகள் ஆற்றில் அழியுமோ ராமலிங்கமே
இவைகளின் உண்மை அறிவி.
அறியாத சின்னாறும் ஓடுமிந்த குதிரையாறும்
குறியாத குந்தாவாறும் கண்டால் - நெறியான
ஒழுக்க முறை ஓங்குமே ராமலிங்கமே
இழுக்க வருவதோ அறம்.
அறங் கெடிமலமாறு உறும் மஞ்சளாறுஇவை
புறவழகை பார்த்தாலே போதும் - திறமான
முல்லை யாறு மோயாற்றை ராமலிங்கமே
எல்லை இல்லாம லாக்கு. 54. 420
ஆக்கும் பச்சையாறும் அழகு நொய்யலாறும்
தாக்கும் மனதைத் தூக்கும் - தேக்கும்
தென்னையும் வானைத் தொட ராமலிங்கமே
என்னே ஆற்றங்கரை யழகு.
அழகொத்த சண்முகா ஆற்றிலும் சங்கரபரணியிலும்
குழலூதி கும்மாளுமிடும் குயில்கள்
- பழமை
பரம்பிக்குளமும் நாம் பார்க்க ராமலிங்கமே
இரக்கம் தருமிந்த இயற்கை.
இயற்கை தேனமுதாம் இறைவன் இருப்பதை
சுயம்பெனக் காட்டும் சனந்தகுமாரநதி
- வயல்
வெளிக் காணும் வாணியாறும் ராமலிங்கமே
களிப்பருளும் மரக் கற்பகம்.
கற்பக மரங்காணும் கம்பையநல்லூர்
ஆறும்
நற்பைக்காரா ஆறும் நல்லனதரும் -
சற்குரு
மார்கண்ட நதி மார்க்கத்தை ராமலிங்கமே
நேர்காணும் உந்தன் நடை.
நடைநெளிந்து வரும் நீண்ட பாம்பாறின்
இடை தொடுவதே இதமாகும் - புடையுறும்
புதுஆறு மன்னியாறும் பொலிய ராமலிங்கமே
மதுவெனும் மழையை மீட்டு.
மீட்டுகின்ற வீணையில் வந்துதித்த
ராகம்போல்
நாட்டுகின்ற நண்டலாறு நீடும் - பாட்டில்
பிராவிடனாறு வாஞ்சியாறைப் பாட ராமலிங்கமே
திராவிட நாட்டையவை தாங்கும்.
தாங்கும் சராசரத்தை திருமலையாறு
என்றே
ஓங்கி நடந்தும் ஓடுகிறது - ஏங்கியநான்
என்று காண்பனோ எல்லாம் ராமலிங்கமே
அன்று ஓடும்கருணை ஆறு.
ஆறு போற்றுவார் உனை ஆர்க்காவதி ஆற்றின்
பேறும் குமாரதாராவாறும் பூர்வம்
- கூறும்
பொன்னியாம் சொர்ணவதியை பாரும் ராமலிங்கமே
என்னிதயம் பிடித்தவைதான் எத்தனை.
எத்தனை ஆறுகளை இறைவா எங்களது
சத்தாய்ப் படைத்தாய் சரணம் - வித்தாய்
துங்கபத்திரை சிம்சாநதி தவழ ராமலிங்கமே
இங்கு லட்சுமணாறும் இருக்கும்.
இருக்கும் நேத்ராவதி யாறுஹாரங்கி
ஆறும்
ஊருக் கெல்லாம் உதவிடும்பாரு - உருகும்
எமது ஹேமாவதியை ஏந்தி ராமலிங்கமே
உமது கரங்களால் தழுவு. 430
தழுவாது எமைஎன்றும் தாக்காத எமாவதி
வழுவில்லா தவனை விடும் - அழுதாலும்
ஆரங்கிநதி தன் ஆற்றலால் ராமலிங்கமே
சாரல் மழைப்போல் சாரும்.
சாருமிந்த முசியாற்றை சார்ந்தால்
வளம்
சேருமே அது செல்லுமிடமெலாம் - பாருமே
அச்சன் கோவில் ஆறும் ராமலிங்கமே
இச்சை போகாது இதைக்காண.
காணக் கண்போதுமா கண்ணாடிப் புழாவால்
ஆணவம் போகுமே ஆங்கு - நாணயஞ்
சொல் காயத்ரிப்புழாவைச் சுற்றி ராமலிங்கமே
வெல்லும் கேரளத்து வெள்ளம்.
வெள்ள மினிக்கும் வளப் பட்டணமாறும்
சுள்ளியாறும் தொட்டால் சுடும் -
வெள்ளி
மணிமாலா ஆறு மங்கலமாறு ராமலிங்கமே
அணி யென்றாகும் ஆன்றோர்க்கு.
ஆன்ற அம்பன்கடவும் அயலூர்ப் புழாவும்
ஈன்ற பிள்ளையினும் ஈகும் - சான்றாய்
இத்திக்கரை ஆற்றை உடைய ராமலிங்கமே
சித்திப்பல ஈன சிந்தைசெய்.
சிந்தை களிக்கும் சாலக்குடியாறு
வளர்
குந்திப்புழாக் கரையும் கற்கண்டு
- மந்தித்
தாவும் பம்பையாற்றில் தவழ ராமலிங்கமே
சாவும் புறமேவிச் சாகும்.
கும்மென்று குதிக்கும் கல்லடை யாற்றில்
கம்மென்று இருக்கவருங் கருணை - நம்
இடமல யாற்றில் இணைய ராமலிங்கமே
வடமலைச் சிகரம் வரும்.
வருகின்ற யாரும் வண்டாழிப் புழாவில்
ஒருநிமிடம் நிற்க ஓங்காரமே - இருளகற்றும்
பாரதப் புழாவைப் பார்க்க ராமலிங்கமே
நீரதன் தந்தைஎன நாடுவேன்.
நாடெல்லாம் உண்ண நெய்யாறு ஓடி
காடெல்லாம் செழிக்கக் காணும் - வீடெல்லாம்
கல்பாத்திப் புழாவில் குளிக்க ராமலிங்கமே
பல்நோக்கு பார்க்குமுன் பார்வை.
பார்வையாலே என்னைப் புன்னப்புழா வாக்கிச்
சேர்ந்ததே நல்ல செறுகுன்னப்புழா - ஈர்த்ததே
துப்பாண்டிப் புழாவில் துயரமெலாம் ராமலிங்கமே
தப்பாது போகும் தீர்த்தமது. 440
மதுவான மருதப்புழாவும் மீனச்சிலாறும்
அந்த
சதுமறையும் காணாத சூதகம் - பொதுவாம்
பறம்பிக்குள மாற்றைப் புகழ ராமலிங்கமே
இறந்தவர் எழுவர் இங்கு.
இங்குமங்கும் இருப்பது இயற்கை ஒன்றே
எங்குமாய் விளங்கி ஆறுபடும் - அங்கமான
மலம்புழா ஆறு மாயுமோ ராமலிங்கமே
வலமுற சுற்றியே வந்தேன்.
வந்த தூதப்புழாவை வாவென்று வரவேற்று
அந்தக் கரையிரண்டிலும் ஆடினேன்
- பந்தப்
பெருஞ் சான்குட்டியாறு பெருமை ராமலிங்கமே
அருஞ்சொற் பொருளும் ஆயும்.
ஆய்கிற மூவாற்றுப்புழா ஆற்றில் நீந்தும்
பாய்மரப் படகும் பேய்தான் - தாய்போல
கடலுண்டிப் புழாக் காற்று ராமலிங்கமே
சடமும் சுவாசிக்க சரந்தரும்.
சரந் தெரிந்தால் செறுதோணிப் புழாவில்
வரமான சித்தினை வாங்கலாம் - மரம்
முதிரப்புழா கிளை மலர ராமலிங்கமே
நதிக்கெல்லாம் நல்விதியா நீர்.
நீரின்றி அமையாது நிலம்நற் சாலியாறு
பாரினை உயிர்ப் பிக்கும் - கூரினை
குற்யாடி யாறு கூறும் ராமலிங்கமே
பற்பல நதியாய் பாய்வான்.
வான்காணா எங்கள் வாமனபுரம் ஆற்றைத்
தான்காண வந்துறுந் தயவு - நான்
சந்திரகிரி புழாவில் சயனிக்க ராமலிங்கமே
மந்திர மெல்லாம் மகிழ்ந்திடும்.
மகிழ்ந்து ஏறியக்கரை மனையாற்றில்
மனம்
நெகிழக் காதலில் நனையலாம் - அகில்
மணக்கு மிந்த மாகிப்புழாவில் ராமலிங்கமே
வணக்கஞ் சொல்லபொருள் வரும்.
வருகின்ற உலகில் வந்துதிக்கும் நல்லோர்
கருவுறு மிந்தக் குப்பம்ஆறு - திரு
திரூர்ப் புழாவை தரிசிக்க ராமலிங்கமே
கரூர் என்றுங் காணார்.
காணாத காட்சியாய்க் கரிங்கோட் ஆற்றில்
வீணாக அமர்ந்தாலும் வீரனாம் - ஆணான
நிலேஷ்வர மாற்றில் நிற்க ராமலிங்கமே
கைலேஷ்வரம் காணும் கண். 450
காணாத காட்சியாய்க் கரிங்கோட் ஆற்றில்
வீணாக அமர்ந்தாலும் வீரனாம் - ஆணான
நிலேஷ்வர மாற்றில் நிற்க ராமலிங்கமே
கைலேஷ்வரம் காணும் கண்.
கண்னெனும் ஷிரீயாறும் கீச்சேரிப்புழா
கரு
வண்ணூ ராறும்பல வண்ணங்கள் - எண்ணினால்
அஞ்சரக் கண்டி யாற்றை ராமலிங்கமே
வஞ்சகர் அழியநல்லோர் வாழ்வர்.
வாழ்வதற்காக கொடும் வலையா லாற்றில்
ஆழ்ந்து மீன்பிடித்தால் ஆபத்து
- வீழ்ந்து
நரகில் நெடுக நிலைப்பாய் ராமலிங்கமே
இரக்கம் இல்லையே இவர்க்கு.
இவரெல்லாம் பிறர்க்காக அயிரூ ராற்றில்
தவமிருக்க தன்பாவம் தள்ளும் - கவரும்
பள்ளிக்கல் ஆறு பிரம்பாஆறு ராமலிங்கமே
துள்ளிவந்து துடைக்கும் துயர்.
துயருறும் வாழ்வைத் துக்கமாய் கண்டால்
மயலுறும் எதையும் மகிழ்வாய் - உயரும்
உப்பாள ஆறாய் என்றும் ராமலிங்கமே
எப்பாலும் காண் இன்பம்.
இன்பமின்றி துன்பம் இல்லை கோரப்புழா
அன்பர்க்கு எல்லாம் அளிக்கும் -
நின்கொடை
கல்லாயிப் புழாக் கரையில் ராமலிங்கமே
புல்லும் உறும் புனிதம்.
புனித மோக்ராலாறும் புழாக்கல் ஆறும்
கனியமுதை நல்கிக் காட்டும் - பனிவிழா
தலச்சேரி ஆற்றின் திறம் ராமலிங்கமே
மலமறுக்கும் அதன் மணம்.
மணமான காவேரிப்புழா மானமாறும் ஊறும்
கிணற்றில் அமுது கிடைக்கும் - பணமிகும்
ராமபுரம் ஆற்றில்மூழ்க ராம லிங்கமே
காமக் குரோதம் கழலும்.
கழண்ட சிற்றேரியாறு காணும் நிலங்களில்
இழப்பில்லா விளைச்சல் ஈனும் - உழவன்
வேண்டும் நீரின் வளத்தை ராமலிங்கமே
ஈண்டுத் தருவாய் இங்கு.
இங்கு பாங்கரமஞ்சேசுவர ஆறு பாய்வதால்
தங்கு தடைகாணாது தண்ணீர் - பங்குநீர்
வழங்குவதில் நல் விதியை ராமலிங்கமே
வழக்கற அமைத்து வாழ். 460
வாழ்வளிக்கும் பீமாவாறு வளங்கள்
நிறைய
ஏழ்மையில் விவசாயி இறப்பதோ - ஊழூழி
உலாவரும் முடா ஆற்றில் ராமலிங்கமே
நிலாவின் நிழல்காண நன்று.
நன்றாம் முளாஆறு நர்மதாவும் இந்தியாவில்
என்றும் செழிக்க ஓங்கும் - குன்றைக்
காட்டா சிந்துநதி கோதாவரியும் ராமலிங்கமே
கூட்டாய் தேசத்தைக் காத்திடும்.
காத்திடும் பிரம்மபுத்திரா கிருஷ்ணாவில்
நீர்
கூத்திடும் சத்தம் கீச்சிடும் -
சாத்திரமான
சரஸ்வதி ஆறு சிறக்க ராமலிங்கமே
வரச்சொல் அந்த வானமுதை.
வானவரும் யமுனாவின் வளத்தை அறியார்
ஈனவரும் அசுத்தமே இழைப்பர் - தனந்தரும்
சம்பல்நதி எங்கும் சிறக்கஓட ராமலிங்கமே
அம்பலத்தி லிருந்து ஆற்று.
ஆற்றுபடுத்தும் ஆறு அந்தமகாநதிக்
கோர்
மாற்று இருந்தாலதனையும் மீறும்
- வேற்று
உலகவரும் சபர்மதியில் உலாவ ராமலிங்கமே
கலகம் வாராது காப்பாற்றும்.
காப்பாற்றும் சோன்நதி கோசியாறும்
நமக்குச்
சாப்பாட்டை வழங்கும் சன்னதி - காப்பாகும்
ஜீலம் நதியின் ஜீவனை ராமலிங்கமே
காலங் கடத்திக் காத்திடு.
திடுதிடுவென வரும் தபதியாறு இறப்பைத்
தடுத்திடுமோர்த் தந்திரந் தரும்
- இடுப்பு
நெளிய பீஸ்ஆறு நடுங்கி ராமலிங்கமே
தெளிந்த நீராய்த் தவழும்.
தவழ்ந்து உதிக்கும்ராவிஆறும் துங்கபத்ராவும்
சிவம் காக்கும் சித்தாறுகள் - புவனத்தில்
சட்லஜ் லுனிஆற்றின் சுயத்தை ராமலிங்கமே
வட்டமாய் ஆக்கி விடு.
விடுமிந்தக் கூட்டை விழுங்குமிந்த
ஆற்று
இடுகாட்டுக்கு நானும் இனிக்கவோ
- கெடு
முடிந்தாலும் விழுங்க மடியேன் ராமலிங்கமே
பிடித்தப் பிறப்பைப் போக்கு.
போகும் தருவாயில் பண்ணியப் பாவங்கள்
ஊகும் என்றாலும் ஊட்டிடும் - ஏகும்
ஊக்லி ஆற்றின் உண்மையை ராமலிங்கமே
ஆக்கினான் அந்த ஆனந்தன். 470
ஆனந்தம் பொங்கும் அலக்நந்தா ஆற்று
கானகத்தின் அருமை காண் - தானந்த
தாமோதர் ஆற்றின் தலையை ராமலிங்கமே
ஆமோதித்து பொங்கி அருள்.
அருளாய் சரயுநதி அகன்றுப் பாய்ந்து
இருளைப் போக்கி ஒளிரும் - உருவாய்
சராவதி ஆற்றின் சரத்தை ராமலிங்கமே
பரா மரித்துப் போற்றும்.
போற்றும் செனாப்ஆறு பற்றும் நிலங்களை
ஏற்று உழுதேசென்று அடங்கும் - காற்றாய்
காகர்நதி வீசும் களத்தில் ராமலிங்கமே
போகர் பூவாய்ப் பொலிந்தான்.
தானாய்த் தழைத்தமந் தாகினியாற்றங்
கரை
கானாப் பாடல்பாட கலையுறும் - நானாகப்
பாட வேண்டும் பகீரதியாற்றில் ராமலிங்கமே
ஆடவும் கூடவும் அழகு.
அழகான டீஸ்டா ஆறும் பியாஸ்ஆறும்
கழனிப்பலக் கண்டு கிளைக்கும் - கிழவனும்
இளைஞ னாவான் இங்கே ராமலிங்கமே
கிளைக்கின்ற ஆற்றங் கரையில்.
கரைதனில் தேயிலைக் காட்டி எம்மனத்
திரையை மீட்டும் ரங்கீத்ஆறு - வரைபடமாய்
சியாங் ஆறு சிக்கலாயோட ராமலிங்கமே
வியாபித்து இயற்கை விளங்கும்.
கும்மென டிராப்ஆறு குதிப்பதைப் பார்க்க
எம்மனம் உன்னை யழக்கும் - சிம்மமாய்ப்
பாயும் டிபாங்ஆறின் பாட்டையை ராமலிங்கமே
சாயுங் காலம்காணச் சுகம்.
சுகமொன்றே கொடுக்கும் சோமேஸ்வரி
ஆறு
உகமெலாம் மேவும் உகந்து - அகமகிழ்வைத்
தரும் டொயங்ஆற்றின் தயவு ராமலிங்கமே
கரும்பென இனிக்கும் காதல்.
காதலாய் டிக்குஆற்றைக் காமுற எந்தன்
மாதவி வந்தாள் மார்த்தழுவ - மாதவம்
புரிந்தாலு மந்த பரக்ஆற்றுக்கு ராமலிங்கமே
சரிநிகர் ஆகுமோநம் சந்ததி.
சந்ததிப் பலகாணும் சம்ப்பைஆற்றில்
அந்த
விந்தும் நாதமும் விளங்குதே - சிந்தும்
அருளாமிந்த இம்ப்பால் ஆற்றை ராமலிங்கமே
கருணையால் பிடித்துக் கட்டு.
186 480
கட்டிய உலகிடை கொட்டும் மழையினை
சுட்டியே ஆறுகளைச் செய்தான் - வட்ட
மமிட் ஆற்றின் மாண்பை ராமலிங்கமே
இமியும் குலைக்காது அமை.
அமைந்த பொரொலி ஆறும் பரக்ஆறும்
இமையும் சோறாது இயங்கும் - சமைந்த
அமேசான் ஆற்றின் அடியை ராமலிங்கமே
பூமேகத்தால் பொழிந்துப் போற்று.
போற்றுகின்ற நைல்நதி ஆற்றுகின்றச்
செயலை
ஏற்றுநடை போடும் உலகம் - சாற்றுகின்ற
சல்வீன் நதிச் சாரலில் ராமலிங்கமே
பல்கலை கற்கப் பார்ப்பாய்.
பார்வையால் சுர்தர்யாஆற்றின் படிப்பை
நீர்
சார்ந்தால் காண்பாய் சொர்க்கம்
- கார்மேகம்
சாவோ பிரான் சிஸ்கோவில் ராமலிங்கமே
ஈவோமென்று கொட்டி அடையும்.
அடையாத யுகான்நதியின் அதிவேகம் பல
மடைத் தாண்டி மோகிக்கும் - இடையில்
புருஸ் நதியின் புறத்தை ராமலிங்கமே
கருவைக் காப்பதுபோல் காப்பாய்.
காப்பாகி நட்பாகி கூட்டாகும் மதேயராநதியை
நாப்பாட இனிக்குமே நாக்கு - பாப்பாடும்
ஷத்அல்அரபு நதி சங்கமத்தை ராமலிங்கமே
வித்தாக்கி எங்கும் விதையும்.
விதைத்தநல் விதையாம் வொல்கா ஆற்றின்
கதையை வரலாற்றில் காண் - சதையான
டோகன்டின்ஸ் ஆறு தழைய ராமலிங்கமே
போகம்பலக் காணுமிந்த பூமி.
பூமித் தீவில்முர்ரேயாறு பூரிப்புக்
கண்டு
சாமியாய் வரந்தரும் சாமியாறு - கோமிய
மருந்தாய் நைஜர்ஆறு மீள ராமலிங்கமே
குருவாய் இருந்துக் காட்டு.
காட்டும் காடுகளிலும் கடும் வெற்றிடத்திலும்
ஓட்டும் மெக்கன்சிநதி ஓங்காரம் - நீட்டும்
மீகாங்நதி ஆசியா மீட்டவே ராமலிங்கமே
ஆகாரமாகி எங்கும் ஓடும்.
ஓடுகின்ற லேனாஆற்றில் ஓர்பள்ளத் தாக்கில்
நீடுகின்ற ஆழமாய் நிலைப்பாய் - ஆடுகின்ற
அமுர்நதியை அன்பாய் ஆண்டு ராமலிங்கமே
அமுதினை அன்பர்க்கு அளிப்பாய். 490
அளித்ததில் மயான ஆழத்தைக் கொண்டு
களிக்கும் காங்கோநதி காண் - விளித்ததில்
பரண ஆற்றின் பாங்கினை ராமலிங்கமே
கரணம் மறந்து கற்றேன்.
கற்று கரைகடக்கும் கல்வியால் சாதல்
அற்று இருக்கும் ஓபிநதி - பற்றால்
மஞ்சள் ஆறு மாய்க்கும் ராமலிங்கமே
அஞ்சாமல் அதை அடக்கு.
அடங்கியப் பொறிகளின் ஆற்றலாய் இங்கு
நடக்குமே என்செநதி நுட்பமாய் - கடக்குமே
மிசிசிபிஆறு பல மாகாணம் ராமலிங்கமே
பசியாற்றுதலில் இவ்வாறே பெரிது.
பெரிய யாங்சேஆறு பனிப்பாறைகள் உருக
அரிய நீராதாரத்தை அறிக்கும் - துரியம்
அடைவதை விட ஆற்றின் ராமலிங்கமே
கொடை அளப்பறிய காருண்யம். 213
காருண்யத்தால் கொழுத்தக் கடல் கூறும்
ஓருண்மையே இறைஎன உணர் - ஓராயிரம்
ஆறுகள் கூடும் இடமாய் ராமலிங்கமே
பேறுபெற்றது பசிபிக் பெருங்கடல்.
கடலில் சூறாவளிக் காற்றை தோற்றுவித்து
திடலைக் காத்திடும் தருமக்கடல்
- அடங்கா
அட்லாண்டிக் கடல் அலையை ராமலிங்கமே
கட்டாது அவைகளில் கலந்திரு.
திருஞான சபை திருமண்ணில் இந்தியப்
பெருங்கடல் அமைந்தது பெருமை - வருங்
காலம் சன்மார்க்கக் காலமே ராமலிங்கமே
கோலங் கொண்டான் கடலாய்.
கடலுடைய உலகங் கண்டேன் அண்டத்தின்
இடத்தில்பல மிதந்து இருக்கு - தடங்காணா
அண்டார்டிக் கடலை அருளி ராமலிங்கமே
எண்ணில்லா உயிரை ஆள்.
ஆள்கின்ற பெருங்கடல் ஆர்டிக் அதனை
நீள்வித்து ஆழ்ந்து நிறைந்தான்
- தூளெனும்
உலகில் கடலின் ஆட்டம் ராமலிங்கமே
நிலவின் ஈர்ப்பில் நிலவும்.
நிலவுலகில் பிறக்க நன்றாம் அரபிக்கடலும்
வலத்தில் நல் வங்காளவிரிகுடாவும் - கலக்கும்
இந்தியப் பெருங்கடல் இடமாம் ராமலிங்கமே
இந்த தீபகற்பமே இந்தியா. 500
(இராமலிங்க
அந்தாதி - தொடரும்)