Saturday, April 30, 2022

தூக்கிய திருவடி - சிதம்பரம் நடராஜர்

 

                                    தூக்கிய திருவடி

 



 மூன்று நாட்களுக்கு முன்னர் சிதம்பரம் நடராஜர் பற்றி ஒருவன் மிக இழாவாக பேசியது கண்டிக்கத்தக்கது. அரசு உடனே அவனை கைது செய்ய வேண்டும். மேலும் அவன் சொன்ன கதையை நானும் படித்திருக்கிறேன். நீங்களும் படித்திருப்பீர்கள். இப்படிப்பட்ட அசிங்மான கதைகள் இந்து புராணங்களில் நிறைய உண்டு.

இன்றைய கால கட்டத்தில் இப்படிப்பட்ட புராணங்கள் / கதைகள் எழ வாய்ப்பே இல்லை. காரணம் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள அறிவு வளர்ச்சி மற்றும் மற்ற மதங்களுடன் செய்யப்படும் ஒப்பீடு.

நமது முன்னோர்கள் என்றோ எழுதிய இப்படிப்பட்ட புராணங்கள் மீது, நியாயமாகப் பார்த்தால் நமக்குத்தானே முதலில் கோபம் வர வேண்டும்.

இனி இந்துக்களாகிய நாம் ஒன்றிணைந்து புராண எரிப்பு போராட்டம் நடத்தி, புராணங்களை ஒழிக்க முன்வர வேண்டும். நமது இந்துக் கடவுள்களை புராணங்களிலிருந்து மீட்க வேண்டும். இந்த செயல் நடந்த பின்பு இந்து மதம் புத்துயிர் பெற்றுவிடும்.

நமது இந்து மதத்தில் சீர்திருத்தங்கள் நடைபெற்றுள்ளன. இராஜாராம் மொகன்ராய் உருவாக்கிய பிரம்ம சமாஜம் என்பது, இந்து மதங்களிலுள்ள புராண மற்றும் இதிகாசங்களை மறுத்து உருவாகியது. நமது வள்ளலாரும் ஏறத்தாழ அதே சீர்திருத்தத்துடன் சுத்த சன்மார்க்கம் கண்டார். எனவே புனிதமான இந்து மதக்கடவுள்களை இழிவு படுத்தும் புராணங்களை அழிப்போம்.

இந்து மதங்களில் புராணங்கள், இதிகாசங்கள் இவைகள் அம்மதத்தின் புண்களாக இருக்கின்றன. நாம் அவைகளை நன்கு அறிந்தும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடுவது போல வாதிடுகின்றோம். அந்தப் புண்களின் மேல் வாசனை திரவியங்கள், பூ மாலைகள், பட்டாடைகள் போட்டு அந்தப்புண்கள் ஆறாத வண்ணம், நாற்றம் வெளிவராத வண்ணம் பாதுகாத்து வருகின்றோம். யாரோ ஒருவன் அந்தப்புண்ணில் அவ்வப்போது கை வைக்கும்போது, வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று வலித்து துடிக்கின்றோம். நாம் இனியும் அவ்வாறு இல்லாமல், புண்களை ஆறவைத்து அதனை முற்றிலும் நீக்க வழிவகை செய்வதே சிறந்தது. நாமும் நமது முன்னோர்களும் கதைகள் கேட்டது போதும். இனி வரும் சமுதாயம் அறிவின் முதிற்சியுடன் இப்பூமியில் பிறக்கும். அவர்கள் இக்கதைகளையெல்லாம் மதத்தின் பெயரால் சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். எனவே புராணங்களை தீயிட்டு கொளுத்தி சுத்தம் செய்வதே சாலச்சிறந்தது.

மற்ற மதங்களிலும் இப்படிப்பட்ட குப்பைகள் உள்ளன. அந்தந்த மதத்தவர்கள் அதனைக் கண்டறிந்து இந்து மதத்தைப் போன்று சீர்திருத்தம் செய்ய முன்வரவேண்டும்.

--TMR

Whatsapp No.9445545475

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.