Sunday, April 16, 2023

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். (மங்கலம் - சோபகிருது)

 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

”இராமலிங்க அந்தாதி” நூலின் 999-ஆம் பாடலாக கீழ்காணும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துப் பாடல் அமைந்துள்ளது.

 உலகம் மங்கலம் உறவே சாதிமத

கலகம் ஒழியக் காணும் – திலகமே

சோபகிருது ஆண்டு சாது ராமலிங்கமே

ஆபத்து நீக்கி ஆள்வான்.

                                ---திருச்சபை.

 

14-04-2023 - தேதி வெள்ளி அன்று தமிழ்புத்தாண்டு“ மங்கலம்” ஆண்டு (சோபகிருது) பிறக்கின்றது. இவ்வருடம் எவ்வுலக மக்களுக்கும் மங்கலகரமாக அமையும். சென்ற வருடத்திலிருந்து இதுநாள் வரை நாம் வாழும் இந்த பூமியில் மனிதர்களால் முன்னெடுக்கப்படும் போர் குற்றங்கள் யாவும் படிப்படியாக நீங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் எவ்வுயிரும் இன்பமுறும் பொருட்டு மங்கலம் (இன்பம்) உருவாகும். சாது இராமலிங்கமே போர் ஆபத்துக்களை எல்லாம் நீக்கி நம்மை ஆள்வான்.  

 


 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.