Friday, July 5, 2024

கோட்டம்

 கோட்டம்:

++++++++



நாம் இதுவரை “கோட்டம்” என்ற தமிழ்ச்சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது “வள்ளலார்”தான் என்று நம்பி இருந்தோம். சென்னையில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலை தனது பாடல்களால் புகழும் பொழுது வள்ளற்பெருமான் அக்கோயிலை “கந்த கோட்டம்” என்று புகழ்கின்றார். இவ்வாறு “கோட்டம்” என்ற சொல்லை முதன் முதலில் வள்ளலார் பயன்படுத்தினார் என்பது வரலாறு.
வள்ளலாரை பின்பற்றி, கோட்டம் என்ற வார்த்தையினை பயன்படுத்தியவர் கலைஞர் ஆவார். அவர் வள்ளுவருக்கு நினைவிடம் அமைத்து, அவ்விடத்திற்கு “வள்ளுவர் கோட்டம்” என்று சென்னையில் அமைத்தார்.
ஆனால், இந்தக் ”கோட்டம்” என்ற சொல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டிலேயே தமிழில் பயன்படுத்தப்பட்டுள்ளதை மதுரை கல்வெட்டு கூறுவது வியப்பாக உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் “வள்ளலார்” என்கின்ற புகழும் பெருமானாருக்கு உண்டு. ஒரு வேளை மதுரை கல்வெட்டில் உள்ள “கோட்டம்” என்கின்ற தமிழ் வார்த்தையினை, தான் இருந்த இடத்திலிருந்தே இறை அருளால் வள்ளலார் அறிந்து “கந்த கோட்டம்” என்று பாடி இருப்பாரோ? என்கின்ற ஐயம் ஏற்படுகின்றது.
வாழ்க தமிழ்க் கோட்டம் வள்ளலார்!

T M RAMALINGAM
091 9445545475
vallalarmail@gmail.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.