வள்ளற் பெருமானின் வினோதங்கள்:
திருமணமானவர், ஆனால் - மைதுனம் இல்லை, வாரிசு இல்லை. சுத்த வெள்ளாடைத் துறவி.
2. அவர் பணக்காரரா? ஏழையா?
தன்னிடத்தில் தனக்கென வீடு கட்டிக்கொள்ளாமல், இறைவன் வசிக்க வீடு கட்டியவர்.
நாடி
வருவோரின் பசிப்பிணிப் போக்கும் வள்ளல்.
எண்பது
காணிக்கு சொந்தக்காரர். பல கோடிகளுக்கு அதிபதி, கோடீஸ்வரர்.
ஆனால்
– பொது இடத்தில் வசித்து, இரண்டு வெள்ளாடையுடன், எப்பொழுதாவது சிறிது உண்டு வாழும்
சுத்த ஏழை.
3. அவர் மரணமுற்றவரா? மரணமற்றவரா?
தற்காட்சியை மறையச் செய்து, தன் தேகத்தை மரணமற செய்த சுத்த சன்மார்க்கர்.
4. அவர் மதவாதியா? மத மறுப்பாளரா?
இந்து மதத்தின் சைவம், வைணவத்தைப் பாடி போற்றியவர். ஆனால் – அனைத்து சாதி, மத மறுப்பாளர், ஓர் இறை பற்றாளர்.
5. அவர் புதிய மார்க்கத்தை படைத்தாரா? பழைய மார்க்கத்தை புதுப்பித்தாரா?
பழைய மார்க்கமான சைவ சமயத்தின் சன்மார்க்கத்தைப் பின்பற்றி, புதிய மார்க்கமான சுத்த சன்மார்க்கத்தைப் புதியதாகப் படைத்தார். புதிய இறைவனாக ‘அருட்பெருஞ்ஜோதி’ ஆண்டவரை வெளிப்படுத்தினார். – ஆனால் புதிய மார்க்கப்படைப்பிற்கு அவருக்கு உதவிய பழைய மார்க்கத்தைத் துறந்தார்.
-TMR