Sunday, June 21, 2026

தமிழ்நாட்டில் ஓர் புனித நகரம் - வடலூர்

 தமிழ்நாட்டில் ஓர் புனித நகரம் - வடலூர்

HOLY CITY

https://vadalurpunithanagaram.com


🔥 உங்கள் ஒரு கையெழுத்து... ஓர் உயிரைக் காப்பாற்றும்! 🔥

🕊️ வடலூரை "புனித நகரமாக" அறிவிக்க மாபெரும் ஆதரவு கையெழுத்து இயக்கம்! 🕊️

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய" திருவருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்த புண்ணிய பூமி நமது வடலூர். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று வாழ்ந்து காட்டிய அந்த மகானின் மண்ணை, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக "புனித நகரமாக" அறிவிக்க வேண்டும்!

நமது முக்கிய கோரிக்கைகள்:

வடலூரைச் சுற்றி 15 கிலோமீட்டர் சுற்றளவிற்குள்:

🚫 இறைச்சிக் கடைகள் மற்றும் மாமிச உணவகங்கள்

🚫 மதுபானக் கடைகள்

🚫 போதை வஸ்துக்கள் விற்பனை

ஆகியவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும்!

நீங்கள் ஏன் கையெழுத்திட வேண்டும்?

இது வெறும் கையெழுத்து அல்ல; ஒரு ஜீவனின் உயிர் மூச்சு! நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு கையெழுத்தின் பின்னாலும், வாய் பேச முடியாத ஓர் உயிரின் வலியும் வேதனையும் துடைக்கப்படும். கசாப்புக் கத்தியிலிருந்து ஓர் உயிரைக் காப்பாற்றும் மாபெரும் புண்ணியத்தில் நீங்களும் பங்குகொள்ள வேண்டாமா? உங்களின் ஒரு கையெழுத்தால் ஒரு உயிர் துன்பத்திலிருந்து மீட்கப்படும்!

🌐 உடனே இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்:

👉 

https://vadalurpunithanagaram.com

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

1. மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு e-Sign (டிஜிட்டல் கையெழுத்து) பதிவு செய்து உங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும்.

3. இந்தப் பதிவை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் பகிரவும்!

வடலூர் சத்திய ஞானசபையில், அகவல் பாராயணக்குழு அன்பர்களால் மாதப் பூச நன்னாளான இன்று (17/06/2026) இந்த இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான இணையதளத்தை வடிவமைத்துத் தந்த தயவு ராகேஷ் ஐயா (மலேசியா) மற்றும் தயவு அருட்சிவமாறன் ஐயா (சென்னை) ஆகியோருக்கும், இதனை முன்னெடுத்து நடத்தும் வடலூர் புனித நகரம் அகவல் பாராயணக்குழு அன்பர்களுக்கும் சன்மார்க்க நெஞ்சங்களின் சார்பாக நன்றிகள்!

கையெழுத்திடுவோம்! உயிர்களைக் காப்போம்! வாரீர்! வாரீர்!

✨ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ✨

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.