இறந்துபோன எனது உடல்கள்
வணக்கம் நண்பர்களே...
இரண்டு நாட்களுக்கு முன்னர், எனது முகநூல் பக்கத்தில், பல வருடங்களுக்கு முன்னர் நான் பதிவிட்ட எமது புகைப்படங்களில் சிலவற்றை ஒருவர் பார்வையிட்டு அதனை லைக் செய்ததால், அந்தப்படங்களை தற்போது நான் பார்வையிட நேர்ந்தது.
அது எனது படம்தான். ஆனால் அந்தப்படங்கள் பதினைந்து வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. நான் அதனை தற்பொழுது பார்க்கையில், அந்த இளமை, அந்த காலம் எல்லாம் எப்படி போயிற்று? என வியக்க வைக்கின்றது.
அந்த புகைப்படங்கள் எல்லாம், இறந்துபோன எனது உடல்கள், இறந்து போன எனது காலங்கள் என்பதல்லவா உண்மை.
இறந்துபோன எனது உடலை, இறந்துபோன எனது இளமையை, நானே தற்போதுள்ள உடலால் பார்க்கின்றேன். நமது புகைப்படங்கள் அல்லது நமது வீடியோக்கள் எல்லாம் நமது இறந்துபோன பிணத்தின் வடிவங்கள்தான் என்று நினைக்கையில், இப்போதுள்ள உடலும் இறந்துக்கொண்டே தன்னை புதுப்பித்துக்கொள்வதை உணரமுடிகின்றது.
வள்ளலார், தனது உடலை புகைப்படத்தில் பதியசெய்யாமைக்கு காரணம் இதுவாகத்தான் இருக்குமோ?. தனது இறந்துபோன உடலை புகைப்படமாகக்கூட தானும், இவ்வுலகமும் பார்த்துவிடக்கூடாது என்ற காரணத்தால், வள்ளலார் தனது உடம்பினை ஒளி உடம்பாக மாற்றினார், அதனால் அவரை புகைப்படமாகக்கூட நம்மால் பார்க்கமுடியாமல் போனது. நன்றி,
அருட்பெருஞ்ஜோதி.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.