Showing posts with label குருபூஜை அழைப்பிதழ். Show all posts
Showing posts with label குருபூஜை அழைப்பிதழ். Show all posts

Wednesday, November 27, 2013

குருபூஜை அழைப்பிதழ்


குருபூஜை அழைப்பிதழ்

பேரன்புடையீர்! வணக்கம்!

திருஅருட்பிரகாச வள்ளலாரின் மாணவர், வள்ளல்அடி ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் 89-ம் ஆண்டு குருபூஜை விழாவானது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளின் திருவருள் வளத்தாலும் காரணப்பட்டுவாழ் சீரோங்கும் கிராமவாசிகளாலும் சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த அருளாளர்களின் ஆசிகளோடும் வருகின்ற டிசம்பர் மாதம் எட்டாம் தேதி (08-12-2013) அன்று காரணப்பட்டு கிராமத்தில் அருள்ஒளி ஈந்துவருகின்ற அவரது சமாதி நிலையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

அவ்வமையம் சுத்த சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்களும், பொதுமக்களும் வள்ளல்அடியின் குருபூஜையில் கலந்துக்கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை பெறவேண்டுமாய் அழைக்கிறோம்.

மாணவரின் விழாவிற்கு ஆசிரியர் வராமல் இருப்பாரா? நமது ஆசிரியர் அழைக்காமலேயே வந்துவிடும் பேரருளை உடையவர் அல்லவா? ஆம்... நிச்சயம் வள்ளலார் இவ்விழாவிலே கலந்துக்கொண்டு நம்மை எல்லாம் ஆசிவழங்க காரணப்பட்டு கிராமத்தில் எழுந்தருள்வார். ஆகையால் அன்பர்களே, நம்மை நேரில் வந்து அழைக்கவில்லையே! எப்படி அங்குப் போவது? என்று இருந்துவிடாதீர்கள், இவ்விழா வள்ளலார் கலந்துக்கொள்ளும் விழா என்பதை மறக்காதீர், வாருங்கள் காரணப்பட்டிற்கு, வள்ளலாரின் திருவடி அங்கேஇருந்துக்கொண்டு இப்பிரபஞ்சத்தை ஆண்டுக்கொண்டிருப்பதை வந்து காணுங்கள். அருளை பெறுங்கள்.

மெய்ஞானி கந்தசாமிப் பெரியோன் நூல்வாழி
அஞ்ஞானம் நீங்கி அருள் வளர்க இஞ்ஞாலத்
திந்தச் சமாதி எழிற்சிற் சபையாகிச்
சந்ததமும் வாழ்க தழைத்து. (பிரபந்தத்திரட்டு)

துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
  சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
  பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
  மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. (திருஅருட்பா)

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி