Showing posts with label சுத்த அரசியல் இயக்கம் PURE POLITICAL PARTY. Show all posts
Showing posts with label சுத்த அரசியல் இயக்கம் PURE POLITICAL PARTY. Show all posts

Wednesday, March 4, 2015

சுத்த அரசியல் இயக்கம்

தமிழக மக்களுக்கு ஓர் விண்ணப்பம்:

      நாமெல்லாம் ஒன்றுகூடி அரசியலில் சுத்த ஒழுக்கத்தை உருவாக்கி நம்மை நாமே ஆண்டுக்கொண்டு அனைவரும் பூரண இன்பத்தையும் பூரண சுதந்தரத்தையும் பெற்று உய்ய "சுத்த அரசியல் இயக்கம்" துவங்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பினை இணையத்தளத்தின் வழியில் மட்டுமே தற்போது வெளியிட்டுள்ளோம். அவ்வறிவிப்பு வெளியிட்ட சில நாட்களிலே மக்களிடமிருந்து வரவேற்பும் கிடைத்துள்ளது. தங்களை இவ்வியக்கத்தில் இணைத்துக்கொண்டவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

      ஆனால் இன்னும் பல மாவட்டத்திலிருந்து இவ்வியக்கத்திற்கு தலைமை ஏற்கும் பண்புள்ளவர்களை தேடிக்கொண்டுள்ளோம். இதைக்கண்ணுறும் அன்பர்கள் தாங்களாகவே முன்வந்து இவ்வியக்கத்தில் சேரும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

      அடுத்த வருடம் தமிழக சட்டசபைத் தேர்தலில் இவ்வியக்கம் போட்டியிட உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய பெயர், முகவரி மற்றும் கைப்பேசி எண்களை கீழ்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

      இதனுடைய சில ஒழுக்கங்களையும், திட்டங்களையும் கீழே உள்ள இணைப்பில் சென்று படித்து தெரிந்துக்கொள்ளலாம். நன்றி.

இப்படிக்கு

சுத்த அரசியல் இயக்கம்.
purepolitical@gmail.com