Showing posts with label பொதுமக்கள் கவனத்திற்கு.... T.M.RAMALINGAM VALLALAR. Show all posts
Showing posts with label பொதுமக்கள் கவனத்திற்கு.... T.M.RAMALINGAM VALLALAR. Show all posts

Monday, January 26, 2015

பொதுமக்கள் கவனத்திற்கு....

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காணவரும் பொதுமக்கள் கவனத்திற்கு....

இவ்வுலகில் உள்ள மற்ற வழிபாட்டு இடங்களைப்போன்றதல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளியுள்ள சமசர சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை. கொலையும் புலையும் தவிர்த்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஞானசபையினுள் சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தரிசிக்கலாம். மற்றவர்கள் தயவு செய்து ஞானசபை வளாகத்திற்குள், அரசிடம் கட்டணம் செலுத்தியோ, அரசு அதிகாரத்தாலோ, மற்ற சிபாசிகளாலோ உள்ளே செல்வதை தவிர்த்து ஞானசபைக்கு வெளியில் இருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தரிசிக்கவும். வள்ளலாரின் கட்டளைக்கு மதிப்பு கொடுத்து தைப்பூசத்தன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தரிசிக்க வாருங்கள்... வாருங்கள்... புற இனத்தாரெல்லாம் அக இனமாக வாருங்கள்... வாருங்கள்...