Showing posts with label மழையூர் சதாசிவம் - நிறைவு: 05-02-2026. Show all posts
Showing posts with label மழையூர் சதாசிவம் - நிறைவு: 05-02-2026. Show all posts

Friday, February 6, 2026

மழையூர் சதாசிவம் - நிறைவு: 05-02-2026

 மழையூர் சதாசிவம் - நிறைவு: 05-02-2026

இராமலிங்கம் தி.ம


நலந்தரும் திரு அருட்பாவை

நயமாய் திக்கெட்டும் தனது
பலத்த குரலால் பாடிப்பாடி
பிழைக்க வைத்தாய் சன்மார்க்க
உலகை அந்தோ மறப்பறியோம்
இன்று வள்ளல் மனதிலூன்றி
மலர்ந்து மணந்த தவமே
மழையூர் சதா சிவமே.
தனது காலம் முழுதும் திருவருட்பாவை தவிர்த்து வேறு ஏதும் எனது வாயால் பாட மாட்டேன் என முழக்கமிட்டு அவ்வாறே நடந்து காட்டினார். பல முறை சினிமா பாடல் பாடகராக வாய்ப்புக் கிட்டியும் அதனை தவிர்த்தார்.
ஒரு முறை, எங்கள் ஐயாவை போற்றி பாட வேண்டும் என (’ஐயா” என தங்கள் தலைவரை அழைக்கும் கட்சியினர்) கேட்க, அதற்கு மறுத்து, நான் எனது ஐயாவைத் தவிர (வள்ளலாரை) வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்ல, அக்கட்சியினரிடம் அடியும் வாங்கினார்.
மயிலாடுதுறையில் நடந்த எங்கள் சகோதரரின் திருமண வரவேற்பில் திருவருட்பா பாடி எங்களை மகிழ்வித்ததை அன்புடன் நினைவு கூர்கிறோம்.
இவ்வாறு சன்மார்க்கத்தில் அதீத பற்று கொண்டவரின் அருட்பா குரல் என்றும் திருவருட்பா உள்ளவரை நீடும்.
-TMR