அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி
"உலகுயிர்த் திரளெல்லாம் ஒலிநெறி பெற்றிட திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் உலகுக்கு அளித்த அருட்கொடைதான் மேலே உள்ள மகாமந்திரம். நம் தெய்வத் தமிழ் மொழியில் அ, இ, உ, எ, ஒ இவ்வைந்தும் உயிர் எழுத்துக்கள். இதேபோல் ஆங்கிலத்திலும் A, E, I, O, U என்பவைதான் வவ்வல்ஸ் என்று கூறுவார்கள். மேலே உள்ள மகாமந்திரத்தில் இவ்வைந்து உயிர் எழுத்துக்களும் இருப்பதை நாம் சிந்தித்து உய்யலாம்.
அருட்பெரும்ஜோதி
அ = - அ
ர் + உ = ரு - உ
ப் + எ = பெ - எ
ச் + ஒ = ஜோ - ஒ
த் + இ = தி - இ
உயிர் எழுத்து ஐய்தும் அடங்கிய மந்திரம் இந்த சுத்த சன்மார்க்கத்தில் அல்லாது, உலக மக்களால் பின்பற்றக்கூடிய மதத்திலோ, சமயங்களிலோ, வேறு அமைப்புகளிலோ இல்லை, அதனால்தான் இப்புனித மந்திரத்திற்கு "மகாமந்திரம் " என வள்ளலார் பெயர் வைத்தது பொருந்துகிறது அல்லாவா?
{குறிப்பு : இதனை கண்ணுறும் அன்பர்கள், வேறு ஏதேனும் மந்திரங்களில் இந்த ஐய்து உயிர் எழுத்துகளும் அடங்கி இருந்தால் தயை கூர்ந்து எனக்கு தெரிவிக்கலாம் . (vallallarmail@gmail.com) }
தி.ம.இராமலிங்கம்
தி.ம.இராமலிங்கம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.