Friday, May 1, 2020

வெட்கம்



வெட்கம்:
மண் மனிதனை
மரணிக்கத் தூண்டுகின்றது!
மனிதன் ஒரு கோழை
பதுங்கிக் கொள்கின்றான்!

மண் தன்னை
திருத்திக் கொண்டது!
மனிதன் தன்னை
மதித்துக் கொள்கின்றான்!

அன்று
மண்ணில் நூறுகோடி
மனிதன் தோன்ற
மூன்று இலட்சம் ஆண்டுகள்!

இன்று
மண்ணில் அறுநூறு கோடி
மனிதன் தோன்ற
நூறு ஆண்டுகள்! எப்படி?

மனிதா?
மரண பயத்தில்
பதுங்கினாலும் உனது
சுய உற்பத்தி அதிகமாமே!

உலகம் உன்னை
விரும்பவில்லை! நீயோ
உலகை துறக்க
விரும்பவில்லை! வெட்கம்

திறந்த வீட்டில்
நாய் புகுந்தது போல்
பரந்த உலகில்
நீ புகுந்தாய்! 

உனக்கென மதம்
உனக்கென கடவுள்
உனக்கென கல்வி
உனக்கென மொழி
உனக்கென மண்ணுயிர்கள்
உனக்கென இவ்வுலகமாம்
உனக்கென்ன தகுதி?
யார் நீ?

எனக்குத் தெரிகின்றது
இவ்வுலகில் மனிதன்
ஒரு அந்நியன்!
உங்களுக்கும் இது
தெரியும்போது…

பதுங்குக் குழியிலிருந்து
வெளியில் வருவீர்கள்!
மரணத்தை வெல்வீர்கள்!
பிற உயிர்களுக்கு
இடையூறு செய்யீர்கள்!
உலகை அந்நியமாய்
பார்ப்பீர்கள்!

ஆதியில் எப்படி
வந்தாயோ அப்படியே
சென்றுவிடு மனிதா!
ஆதியை நோக்கி
இவ்வுலகம் செல்லும்போது
நீ நீதி பேசுவது
அழகல்லவே!

இவ்வுலகம் உன்னிடம்
விரும்புவது எதுவெனில்
விஞ்ஞானம்
அஞ்ஞானம்
மெய்ஞானம் அல்ல!
நிர்வானம் மட்டுமே!!

நிர்மூலம் ஆகும்முன்
நிர்வானம் ஆகிவிடு!

அடுத்தப் பிறவி
எவ்வுலகமோ?
எவ்வுடம்போ?
எங்குச் செல்லினும்
உனக்கு மேலே ஒரு வானம்
உனக்கு மேலே நிர்வானம்!!
--TMR

1 comment:

  1. உங்களுக்கு நிதி தேவையா? நீங்கள் நிதி தேடுகிறீர்களா? உங்கள் வணிகத்தை பெரிதாக்க நிதி தேடுகிறீர்களா? தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வணிக விரிவாக்கத்திற்கான நிதி பெறவும், எந்த அளவிலும் ஒரு புதிய வணிகத்தை அமைக்கவும் நாங்கள் உதவுகிறோம். 3% மலிவு வட்டி விகிதத்தில் நிதி பெறுங்கள், வணிகத்திற்கும் உங்கள் பில்களை அழிக்கவும் உங்களுக்கு இந்த நிதி தேவையா? மேலும் தகவலுக்கு இப்போது எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் (Financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.