Tuesday, December 27, 2022

இறப்பவன் அல்லேனே

 

தப்பியும் இனிநான் தவறுபவ னல்லேன்

      தருமச் சாலையை மறப்பவ ல்லேன்

அப்பா உனையன்றி வேறு நினைப்பவ னல்லேன்

      ஆன்ற  சன்மார்க்கம் விடுபவ ல்லேன்

இப்பாரில் துயரேதும் படுபவ னல்லேன்

      எவ்வுயிரும் துயருற நடப்பவ னல்லேன்

பூப்பாதம் நடனமதை காணாதவ ல்லேன்

      பொன்தேக மானேன்நான் இறப்பவ ல்லேனே.





T.M.RAMALINGAM

9445545475