அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!
எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்கு அத்தகை அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி!
எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்கு அப்படி அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி!
ஜோதி நிலையம் பிறையாறு சிதம்பர சுவாமிகள் தயா நிலையம்
(அருட்தாய் செல்வமாதரசியார் அரங்கம்,
பெருஞ்சேரி அமரர் ஜனதா நாகராஜன் உணவு அரங்கம்) நடராஜபிள்ளை சாவடி, தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்.
கொட்டையூர் சாது, சன்மார்க்கப் பேரொளி, தவத்திரு அண்ணா அவர்களின் அருட்சீடர் கோணக்கரை சமரச ஞானி பத்மநாப சுவாமிகள் அருளிய வண்ணம், நலந்திகழ் வள்ளலார் ஆண்டு 200, ஆடித் திங்கள் 13-ஆம் நாள் (29.07.2023) சனிக்கிழமை, வள்ளல்பெருமானால் அருட்காட்சி அளிக்கப்பெற்று, வடலூருக்கு அழைக்கப்பெற்றவரும், ஏமசித்தி கைவரப் பெற்றவரும், இருளிலும் நடந்துசெல்லும் கண்ணொளி பெற்றவரும், சன்மார்க்க உலகில் 4-ஆவது சன்மார்க்க குரவராக மதிக்கப் பெற்றவருமான பிறையாறு சிதம்பர சுவாமிகளுக்கு வழிபாடு மற்றும் அன்னமளிப்பு விழாவும், அதனைத் தொடர்ந்து நிகழ்முறையில் கண்டுள்ளவாறு 22.07.2023 தொடங்கி அருட்பா பாராயணமும், மாலை 6.00 மணிக்குக் கடவுளின் நிலை என்ன? நம் நிலை என்ன? கடவுளை எவ்வாறு வழிபடவேண்டும்? என்ற சத்விசாரமும் நடைபெறும். அதுசமயம், சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள், கிராமவாசிகள் அனைவரும் கலந்துகொண்டு வள்ளல் பெருமானின் திருவருளையும், பிறையாறு சிதம்பர சுவாமிகளின் குருவருளையும் பெற்றுய்ய அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம்:
இங்ஙனம்:
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
தருமச்சாலை கல்வி மற்றும் சமுதாய வளர்ச்சி அறக்கட்டளை,
ஜோதி நிலையம், நடராஜபிள்ளைசாவடி - 609 107.
ஜோதி நிலையம், நடராஜபிள்ளைசாவடி - 609 107.
மற்றும் கிடாரங்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட கிராமவாசிகள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.