சூஃபி ராபியா - கவிதைகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
திரை விலகல்:
******************
கடவுளை நோக்கிப் பயணிப்பவர்கள்
திரை விலக்கி
உண்மையைப் பார்க்கட்டும்.
பிறர் குற்றம் பாராதே:
**************************
நான் கடவுளை நேசித்துக்கொண்டிருக்கிறேன்.
சாத்தானை வெறுக்கும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை.
கதவைத் திற:
****************
யாரையாவது திறக்கச் சொல்லி மன்றாடி
எவ்வளவு காலம்தான்
திறந்தக் கதவை
தட்டிக்கொண்டிருப்பாய்?
தனித்திரு:
*************
எனது கடவுளே,
இப்போது எல்லோரும் அவரவர் காதலர்களுடன் தனித்து இருக்கிறார்கள்.
நான் உன்னுடன் தனித்து இருக்கிறேன்.
கடவுள் மயமாதல்:
**********************
யாருடைய இருத்தலில் நீங்கள்
மறைந்து போகிறீர்களோ,
யாருடைய இருத்தலில் நீங்கள்
இன்னும் இருக்கிறீர்களோ,
யாரைத் தேடி உங்கள்
பயணம் தொடர்கிறதோ,
அவருடைய அன்புக்கு ஏங்கி,
அதில் கரைந்து
தொலைந்தபின்,
உங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய
வெறுமையைத் தவிர
வேறென்ன இருக்க
முடியும்?
____________
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.