அருட்பெருஞ்ஜோதி:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இவ்வுலகிற்கு முதன் முதலில் சாதி, மதம், இனம் அற்ற தனிப் பெருங் கருணை கடவுளான "அருட்பெருஞ்ஜோதி" கடவுளை அறிமுகப்படுத்தியவர் நமது வள்ளலார்.
"அருட்பெருஞ்ஜோதி" என்று தாம் வழிபட்ட தனித் தலைமை இறைவனுக்கு முதன் முதலில் வள்ளலார்தான் பெயர் வைத்தார். இதற்கு முன்னர் வேறு எந்த மதங்களிலும் சமயங்களிலும் "அருட்பெருஞ்ஜோதி" என்ற பெயர் கொண்ட கடவுள் யாரும் கிடையாது.
எனவே சமய மதங்களைச் சார்ந்த உலக மக்கள் யாரும் தாங்கள் வழி வழியாக வணங்குகின்ற கடவுள்களை "அருட்பெருஞ்ஜோதி" என்று வள்ளலார் உருவாக்கிய பெயரைக் கொண்டு அழைப்பது நன்றல்ல. இப்பெயர் சுத்த சன்மார்க்க கடவுளுக்கே முற்றிலும் உரியது. வள்ளலாருக்கே (சுத்த சன்மார்க்கத்துக்கே) இப்பெயர் காப்பரிமை பெற்றது.
சமய மதங்களில் உள்ள அன்பர்கள் தயவு செய்து அவரவர் கடவுள்கள் பெயரை மட்டும் தங்கள் பிரச்சாரத்திற்கு பயன் படுத்தவும். எனது சமய அல்லது மதக் கடவுள்தான் "அருட்பெருஞ்ஜோதி" என்று வழங்குவது வள்ளலார் கொள்கைக்கு எதிரானது. நன்றி.
TMR
9445545475
vallalarmail@gmail.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.