அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளலார் சர்வதேச மையம்
மனுதாரரின் கோரிக்கை நிராகரிப்பு
24-04-2024 மீண்டும் விசாரணை
03.04.2024 அன்று பாஜக சார்பில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு.S.வினோத் இராகவேந்திரன் அவர்களால் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு எண். W.P.9141/2024 வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமையக்கூடாது என்கின்ற பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் நகல் மேலே பகிரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதியரசர்கள் தமிழக அரசை வள்ளலார் சர்வதேச மையம் குறித்த தங்களுடைய நிலைப்பாட்டை விளக்கும் விதமாக எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். இந்த வழக்கோடு சேர்த்து தமிழ் வேங்கை ஐயா தொடுத்த பொது நல வழக்கு எண்.W.P. 8190/ 2024 05.04.24 இன்று வந்த வழக்கும் விசாரணைக்காக வந்தது இந்த வழக்கில் மனுதாரர் விளம்பரத்திற்காக வழக்கு தொடுக்கவில்லை என்பதனை உறுதி செய்யும் விதமாக இரண்டு நாட்களுக்குள் ரூபாய் ஒரு இலட்சம் கட்டும்படி உத்தரவு இடப்பட்டுள்ளது. அவர்களும் இரண்டு தினங்களுக்குள் கட்டும் பட்சத்தில் வருகிற 24 4 2024 அன்று இந்த இரண்டு வழக்கையும் சேர்த்து ஒன்றாக விசாரணைக்காக எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருட்பெருஞ்ஜோதி ஜெரால்ட் ராபர்ட் வழக்கறிஞர்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறக்கட்டளை
=================================================================
வடலூர் பெருவெளி தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நான் தொடுத்த பொது நல வழக்கு எண் W/P: 8190/2024 ஆகும்.
இதே காரணத்திற்காக மற்றொரு தரப்பினர் தொடுத்த வழக்கு எண் W/P: 9141/2024 ஆகும்.
எனவே வரிசை எண்படி எனது வழக்கு தான் முதல் விசாரணைக்கு ஏற்கப்பட்டிருக்க வேண்டும்.
பெருவெளியைப் பாதுகாக்க வேண்டும் என்ற எமது போராட்டம் 13/09/2022 அன்று தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றது முதல் கடந்த 19 மாதங்களாகத் தொடர்கிறது.
எனவே எமது வழக்கு விளம்பரத்திற்கான தாக்கல் செய்யப்பட்டது அல்ல என்பதை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் நீரூபிப்போம்.
தயவுடன்
கா.தமிழ்வேங்கை
விழுப்புரம்
9486176734
08-04-2024 அன்று வடலூர் மக்கள் சர்வதேச மையம் கட்டுமானத்தை எதிர்த்து போராட்டம்:
சர்வதேச மையம் - இடைக்காலத் தடை (நீதி மன்றம்)
###########
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்க வளாகத்தின் பெருவெளியில் தமிழக அரசு 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் கட்டுமான பணியை தொடங்கியது. கட்டுமானப் பணியை மேற்கொள்ள அடிக்கல் நாட்டியவுடன் பா.ஜ.க வின் ஆன்மிகம் மற்றும் ஆலயமேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் திரு.வினோத் ராகவேந்திரன் அவர்கள் ஏப்ரல் - 3-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.மூத்த வழக்கறிஞர் திரு.சுரேஷ் நடராஜன் அவர்கள் வாதாடினார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் விசாரணையின் கீழ் வந்த இந்த வழக்கில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிக்கான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 24ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதன் விசாரணை இன்று ஏப்ரல் 24ல் எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் அறிக்கையை பார்வையிட்டு விசாரித்த உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி, வடலூர் பெருவெளியில் அவ்விடத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க ஆணை வழங்கி அதுவரை கட்டுமானப் பணிக்கு தடை விதித்தார்.
மேலும் இது கோயில் சம்பந்தமான வழக்கு என்பதால்,வழக்கை நீதிபதிகள் திரு.மகாதேவன் மற்றும் திரு.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
Whatsapp Message.
மேலே குறிப்பிடப்பட்ட உயர்நீதிமன்றத்தின் ஆணை 24.4.2024ல் வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட ஆணை.
இந்த ஆணையில் சர்வதேச மைய கட்டுமானப் பணியை செய்வதற்கு எந்த தடை ஆணையையும் பிறப்பிக்கவில்லை.
மேலும் அரசின் சார்பாக வள்ளலார் குறிப்பிட்ட பாடல்கள் தமிழில் உள்ளதாலும் இவ்வழக்கு கோயில் தொடர்பானதாக உள்ளதாலும் புதிய வேறு அமர்விற்கு மாற்றி ஆணையிடப் பட்டுள்ளது.
வழக்கில் தொடர்புடையவர்கள் வழக்கை தொடர்ந்து நடத்த புதிய அமர்வில் முறையிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தவிர மற்றவர்கள்
வெற்றி வெற்றி என்று கூக்குரலிடுபவர்கள் சொல்வது போன்று தடை விதிக்கவில்லை தடை விதிக்கவில்லை.
அவர்கள் வழக்கம்போல்
உண்மைக்கு மாறான செய்தியை அல்ல அல்ல
வதந்தியை பரப்பி கொண்டு ள்ளார்கள்.
இவர்கள் இப்படித்தான்.
இவர்களுக்கும் உண்மைக்கும் வெகுதூரம் என்பதை நடுநிலையாளர்கள்
புரிந்து கொண்டால் போதும்.
செந்நெறி பா.தண்டபாணி
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.