Sunday, June 16, 2024

AI கடவுள் தோன்றுவார். புதிய மதம் உருவாகும்

 எதிர்வரும் 2030-ம் ஆண்டுக்குள் என்னென்ன மாற்றங்கள் வரும்...

=========================


I.T.. துறையில் 15 ஆண்டுகளுக்கு முன், ஆரம்பத்தில் எட்டு பேர் சேர்ந்து இரண்டு மாதம் பாடுபட்டு எழுதிய புரோகிராம் (அடித்த கோட்) மொத்த வரிகள் பதினைந்தாயிரத்திற்கும் மேல். ஆனால் இன்று ஒரு Function அதை சில நிமிடத்தில் முடித்து விடும்..
அப்பொழுது அந்த எட்டு பேரின் கதி.. அடுத்தடுத்த மாறுதல்களுக்கு தங்களை மேம்படுத்திக் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களின் கதி அதோ கதி தான்.
பத்து வருடங்களுக்கு முன் அனைத்து துறைகளிலும் front office, document processing வேலைகள் என்று பல பணியிடங்கள் இருக்கும்.. இன்று இது போன்ற 99% சதவிகித வேலைகளுக்கு மனிதர்களை பணியில் அமர்த்துவது கிடையாது. நம்முடம் தொலைபேசியில் பேசும் அமலாவோ, சாந்தியோ உண்மையிலேயே மனிதர்கள் கிடையாது.
AI துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கிறதென்று நம்பி, பிள்ளைகளை அந்த செயற்கை நுண்ணறிவு இன்ஜினியரிங் பிரிவில் படிக்க வைக்கும் பெற்றோர்களை பார்க்கையில் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் அவர்கள் பிள்ளைகளை இன்டெர்வியூ செய்ய போவது ஒரு AI Robot தான்.. ஏற்கனவே அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து நிறுவனங்களும் ஆரம்பித்து விட்டன.
அந்த AI ரோபோட்கள் ஒரு மனிதனின் bio-data-வை பார்த்த நொடியில், கோடிக்கணக்கான தரவுகளை அலசி ஆராய்ந்து அவனை பற்றிய அனைத்தையும் தெரிந்து கொண்டு விடும். நாம் இணையத்தளத்தில் பார்த்த உடனே பிரவுசிங் ஹிஸ்டரியை டெலிட் செய்து விடுகிறோமே.. அந்த தகவல்கள் உட்பட..
Sex robots வந்த பிறகு ஆண் பெண் உறவில் சமநிலைமையற்ற தன்மை ஏற்படும். உண்மை தான், மனதிற்கு பிடித்ததை போன்ற உருவ அமைப்புடன் அப்படியே ஒரு பெண்ணை போலவோ, ஆணை போலவோ ரோபோட்கள் கிடைக்கும் போது, எதற்காக ஒருவன் மெனக்கெட்டு திருமணம் செய்து பிள்ளைகள் பெற்றுக் கொள்ள போகிறான்.. Sex robots வாடகைக்கு கிடைக்கும் அல்லது Sex robots வைத்து ஒரு மணி நேரத்திற்கு என ரூம் போட்டு வசூல் செய்வார்கள். Sex robots விபச்சாரம் நடக்கும். சட்டம் ஒன்றும் செய்ய முடியாது.
ஓடியாடி சொத்து சேர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.. உங்களின் தற்போதைய வாரிசுகளுக்கு எதிர்காலத்தில் வாரிசுகளே இருக்க போவதில்லையென்பது தான் உண்மை.
மருத்துவம், இராணுவம், காவல்துறை சட்ட ஒழுங்கு, தகவல் தொழில்நுட்பம், என்று அனைத்து துறைகளிலும் இந்த AI ஆதிக்கம் இன்னும் பத்து ஆண்டுகளில் முழுமையாக வந்து விடும். இதில் கொடுமை என்னவென்றால் விவசாயம் மற்றும் மீன் பிடி தொழில்களிலும் ஏற்கனவே ரோபோட்கள் வந்து விட்டன.
ஆனால் இந்த AI தொழில்நுட்பத்தை உருவாக்க பெருமளவில் மனித சக்தி தேவைப்படும் என்கிறீர்களா?..
இங்கே தான் நாம் தவறு செய்கிறோம்.. சுயமாக சிந்தித்து புரோகிராம் மற்றும் உடலுழைப்பு சார்ந்த வேலைகளை செய்யும் ஒரு ரோபோட் இருபது பேர் பத்து நாட்கள் செய்யும் வேலையை ஒரு நாளில் செய்யும். .அதுவும் நேர்த்தியாக.. மனைவிக்கு பிரசவம், பெற்றோருக்கு மருத்துவ சிகிச்சை, திருமணம் என்று பல காரணங்களை சொல்லி லீவ் எடுக்காது.. அதனால் மனிதர்களுக்கு எந்த வேலையும் இருக்காது.
வேண்டுமென்றால் இந்த காலகட்ட பெற்றோர்கள் ஒன்றே ஒன்று செய்யலாம்.. பிள்ளைகளின் விருப்பம் போல அவர்களை படிக்க விடலாம்.. ஏதோ அவர்களுக்காவது ஒருவித திருப்தி ஏற்படும்.
மனித இனம் தன்னுடைய வாழ்வாதார உரிமைக்காக AI ரோபோட்களை எதிர்த்து போராடும் காலம் வெகு தொலைவில் இல்லை. நம்மை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்தவர்கள் முன்பு நாம் மண்டியிட்டே ஆக வேண்டும்.. நம் செல்போன் மூலமாக நம்மை பற்றிய அனைத்து உண்மைகளையும் AI ரோபோட்கள் சுலபமாக தெரிந்து கொண்டு விடும்.. ஆகவே நாம் தோற்பது உறுதி..
AI கடவுள் தோன்றுவார். புதிய மதம் உருவாகும். பல அற்புதங்கள் நிகழும்...
நமக்கான ஆப்'பை, தொழில் போட்டி மற்றும் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாமே உருவாக்கி, அதன் கூர்மையான பகுதியில் வலியுடன் உட்கார ஆரம்பித்து வெகு நாட்களாகி விட்டன.
***பி.கு: மனிதனை போலவே உருவ அமைப்புடன், மனிதனை விட நூறு மடங்கு சக்தியும் புத்திக் கூர்மையும் கொண்ட ரோபோட்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. இவைகள் முதலில் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு பிறகு உள்ளூர் வேலைகளுக்கு பயன்படுத்த இன்னும் பத்து ஆண்டுகள் கூட ஆகாது.***

TMR


-

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.