புத்தகங்களை வாசிக்கும் நேரம்:
தன்னைத் துாக்கிலிட அழைத்தபோது, தான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை முடித்து விட்டு வருகிறேன் என சாகும் தருவாயிலும் கூட புத்தகம் வாசித்தவர் மாவீரன் பகத்சிங்.
வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றார் நெல்சன் மண்டேலா.
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டபோது, ஒரு நுாலகம் கட்டுவேன் என்று சொன்னார் காந்தியடிகள்.
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது, வரும் முன் பணத்தில் முதல் நுாறு டாலர்களுக்கு புத்தகம் வாங்குவார் சார்லி சாப்ளின்.
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் அதி சிறந்த பரிசு ஒரு புத்தகந்தான் என்றார் வின்சன்ட் சர்ச்சில்.
தான் மறைந்த பிறகு தனது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்க வேண்டாம். புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றாரர் ஜவஹர்லால் நேரு.
புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும்வரை அறுவை சிகிச்சையை தள்ளி வைக்கச் சொன்னார் அறிஞர் அண்ணா.
ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரத்தை படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
“கற்றனைத்துாறும் அறிவு“ என்றார் திருவள்ளுவர்.
ஒரு நுாலகம் திறக்கப்படும்போது, 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்றார் விவேகானந்தர்.
கைத்துப்பாக்கிகளை விட புத்தகங்களே பெரிய ஆயுதங்கள் என்றார் புரட்சியாளர் லெனின்.
இறைவன் அறிவுறுத்த, நூல் அனைத்தும் பொய் என்றார் வள்ளலார். ஆனால், ”பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் ( 70 X 10 X 400 X 1000 X 1000 = 28000,00,00,000 கிலோ ) கலைஅறிவை, ஒருவன் அருள்முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம். என்றும் கூறுவார் வள்ளலார்.
வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே.
புத்தகங்கள் ஏதும் பேசாது, அவைகள் ஊமை தன்மையைக் கொண்டுள்ளன. புத்தகங்களை வாசிக்க வாசிக்க மெளனத்தையே கற்றுக்கொள்வாய்.
-TMR
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.