INDIA
++++
பல வெளிநாட்டவர்கள் இந்தியா அழுக்காக இருக்கிறது, இந்தியர்கள் சுகாதாரமற்றவர்கள் என்று கேலி செய்கிறார்கள். நாம் உண்மையில் அவ்வளவு மோசமானவர்களா?
நம் நாட்டு மக்களிடம் சுத்தம் சுகாதாரம் என்பது நன்றாக படித்தவர்களிடம் கூட இல்லை என்பதைத்தான் இந்த கேள்வி காட்டுகிறது. நாம் சுத்தமாக இல்லை என்பதை நாம் கண்ணாடி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். அது கடினம் என்றால் அடுத்தவர்கள் சொல்லும்போது புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்கப்பூர் அல்லது சுவிட்சர்லாந்து அல்லது ஜப்பானை பார்த்து எந்த நாட்டினர் ஆவது "அவர்கள் சுத்தமாக இல்லை!!" என்று சொல்கிறார்களா? இந்தியா தன்னைப் போன்ற ஒரு நாட்டை பார்க்க வேண்டும் என்னால் பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் பங்களாதேஷ் மட்டும் தான் பார்க்க வேண்டும். இந்த மூன்று நாடுகளை தவிர சுத்தமில்லாத நகரங்களை கொண்ட நாடு உலக வரைபடத்திலேயே கிடையாது. ( ஆப்பிரிக்கா தென் அமெரிக்காவில் ஒரு சில நாடுகள் இருக்கலாம்)
மும்பை, அதைவிட Silicon city என்று அழைக்கப்படும் பெங்களூர், கொல்கத்தா கேக்கவே வேண்டாம் எல்லா இடங்களிலும் ஒரு விஷயம் மிகவும் பொதுவானது.
அங்கு ஒரு Slum, Redlight area கண்டிப்பாக இருக்கும். அதுவும் இந்த Contrast அதாவது ஒருபுறம் வளர்ச்சி மறுபுறம் குப்பைமேடு என்று இந்திய நகரங்கள் இருப்பது வெட்கக்கேடு!
லட்சக்கணக்கில் பணம் பிடுங்கும் மருத்துவமனையின் வாசலில் குப்பை இருக்கும். அந்தக் மோசமான சுகாதாரம் உள்ள சாலைகளை தாண்டி சுகாதாரமற்ற மக்களைத் தாண்டி டாக்டர்கள் நர்சுகள் சொகுசாக உள்ளே சென்று அந்த மருத்துவமனையின் கழிவுகளை குப்பைகளை வெளியேற்றுகிறார்கள். சமீபத்தில் கொல்கத்தா மருத்துவமனையில் நடந்த குற்றச்சாட்டு இந்த மருத்துவக் கழிவுகளை வெளியேற்றுவது சம்பந்தமாக ஏற்படும் ஊழல் பற்றியும் சொல்லுகிறது.
நீங்கள் உங்கள் ஊரை சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தால் வியாதியே வராது. குப்பையை தாண்டி சென்று மருத்துவமனையில் வைத்தியம் செய்து கொள்ளும் பணக்காரர்களை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
மருத்துவமனை மட்டும் அல்ல, கோவில் கல்வி நிலையங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் எந்த இடமும் நம் நாட்டில் குறிப்பாக பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் இல்லவே இல்லை.
உண்மையில் வெளிநாட்டு மக்கள் பார்ப்பது மிகவும் கம்மி. டாஸ்மாக் பார், சிவப்பு விளக்கு பகுதி, சேரிகள் போன்ற இடங்களை அவர்கள் சரியாக பார்க்கவில்லை என்று தான் கூறுவேன். மொத்த இடங்களையும் அவர்கள் பார்த்தால், திகைத்து போய் விடுவார்கள்.
இதைப் பற்றி எழுதுவதற்கு மனதிற்கு சங்கடமாக இருக்கிறது. நம் நாடு இந்த விஷயத்தில் திருந்தும் வாய்ப்பு இல்லவே இல்லை. இதைப் பற்றி இதற்கு மேல் எழுத எனக்கும் விருப்பமில்லை! நீர் நிலம் காற்று ஆகாயம் என்று மட்டுமல்ல, நாடு நகரம் காடு கிராமம் நதி கடற்கரை எங்கெல்லாம் நம் மனிதர்கள் போகிறார்களோ, அங்கெல்லாம் இந்திய மக்கள் சென்று வந்ததற்கு அடையாளமாக, ஏதோ தேசியக் கொடியை வைப்பது போல் குப்பைகளை போட்டு விட்டு வருகிறார்கள்.
வீதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போதே எச்சில் துப்பிச் செல்வது, நடக்கும் போது வீதியில் எச்சில் துப்புவது போன்ற தீய பழக்கங்கள் இயல்பாக நம்மிடையே குடிகொண்டு விட்டது.
அதிலும் பிளாஸ்டிக் குப்பைகளை வெளியேற்றுவதில் பிலிப்பைன்ஸ் இந்தியா இரண்டு நாடுகளும் உலகத்தில் முன்னணியில் இருக்கிறது. பஞ்சபூதங்கள் நீர் நிலம் காற்று ஆகாயம் எல்லாம் இங்கு முழுமையாக மாசு கலந்து இருக்கிறது.
இந்த மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வாழ்ந்து இந்த மக்களுக்கு இந்த அபாயகரமான சூழ்நிலை பழகி விட்டது. உலகத்தில் உள்ள அத்தனை விதமான கழிவுகளும் நம் நாட்டில் மட்டும்தான் நீங்கள் பார்க்க முடியும்! எனவே வெளிநாட்டவர் இல்லை, வெளி கிரகத்திலிருந்து ஒருவர் வந்தால் கூட இங்கிருக்கும் அசுத்தமான சூழ்நிலையை பார்த்தால் இந்த உலகத்தை விட்டே ஓடிவிடுவார்கள்!
குப்பைகளை எரிக்கக்கூடாது என்ற அடிப்படை அறிவுக்கூட இந்தியர்களிடம் இல்லையே. தெரு ஓரங்களில் சிறிய சிறிய குப்பைகளை எரிக்கும் பொது நபர்களை பல இடங்களில் பார்க்கலாம். மேலும் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களே வீதி ஓரங்களில் குப்பைகளை சிறிய அளவில் குவித்து எரிக்கின்றார்கள். விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடை முடிந்து அங்குள்ள எச்சங்களை தீயிட்டு கொளுத்துகின்றார்கள்.
இத்தனை லட்ச கணக்கான மக்கள் இருக்கும் இந்திய நகரங்களில் நீங்கள் வெளிநாட்டவர் ஒருவர் கூட பார்க்க முடியாது. " நல்ல வேளை! யாரும் வெளிநாட்டினர் இதை பார்க்கவில்லை!" என்று பலமுறை நான் நினைத்து கொண்டு சில இடங்களை தாண்டிச் சென்றிருக்கிறேன். ஆனால், IT கம்பெனி Multiplex Mall Showroom என்று நகரங்களில் கட்டி வைத்து ஒரு குறிப்பிட்ட இடங்களை மட்டும் உலகத்திற்கு படம் பிடித்து காட்டி, நாம் இந்தியா முன்னேறி விட்டதாக எல்லோரையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றிக் கொள்கிறோம். பஞ்சபூதங்கள் மட்டுமல்ல Noise pollution பொது இடங்களில் தேவையில்லாமல் ஒலி எழுப்பும் மக்கள் நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள்! வீதிகளில் இரண்டு கோயில்கள் வைத்துக்கொண்டு அங்கே பக்தி என்ற போர்வையில் பாடல்களை அதிக சப்தத்துடன் ஒலிக்க வைத்து நாள் முழுதும் தொடர்ந்து ஒலி மாசுகளை உருவாக்கும் புத்திசாலிகள் நம் நாட்டில்தான் உள்ளார்கள். திருமண விழாக்களில் சொல்லவே வேண்டாம். இந்தியாவில் வாகன ஓட்டிகள் எழுப்பும் சப்தத்திற்கு அரசு தடை விதிப்பதே இல்லை. இதில் பட்டாசு ஒலிகளும் இவ்வுலகை மாசுபடுத்துவதில் முதலிடத்தில் உள்ளன.
வெளிநாட்டுக்காரர் யாரும் நம் நாட்டுக்கு வருவதில்லை. ஆனால் இந்தியர்கள் எல்லா நாட்டிற்கும் சென்று விடுகிறார்கள். சென்று இந்தியாவின் மானத்தை வாங்குகிறார்கள்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் அது வெளியே தானே வழியும்?
அதுபோல்தான் இந்திய மக்கள் தொகை!! இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய தெற்கு ஆசிய நாடுகளின் மக்கள் தொகை ( குறிப்பிட்ட ஒரு மக்களால்) எக்கச்சக்கமாக பெருகிக்கொண்டே செல்வதால், இந்த மக்கள் தொகை உலகம் முழுவதும் நிரம்பி வழிகிறது!
பங்களாதேஷ் போல், இன்னும் சொல்ல போனால் பங்களாதேஷை விட அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இந்தியாவில் பெருகிவிட்டது. இந்தியாவில் BJP ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று சொல்லிக் கொண்டு எக்கசக்கமாக மக்கள் தொகை உள்ள இவர்கள் இப்போது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள்!
முந்தையெல்லாம் படித்தவர்கள் மட்டும் தான் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தார்கள். இப்பொழுது பஞ்சாப் போன்ற மாநிலத்தில் இருந்து illegal migrants என்று பங்களாதேஷ் மக்களுடன் போட்டி போட்டுக் கொண்டு அகதிகள் போல், அமெரிக்காவின் மெக்ஸிகோ கனடா போன்ற அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து அகதிகள் போல் ஊடுருவுகிறார்கள். இனி அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இந்தியர்களுக்கு மரியாதை இருக்காது.
- இந்தியன்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.