Showing posts with label உயிர் அறம். Show all posts
Showing posts with label உயிர் அறம். Show all posts

Wednesday, July 1, 2026

உயிர் அறம்

உயிர் அறம்

வள்ளலார்


எல்லா உயிர்களும் இவ்வுலகில் மரியாதையாக வாழ உரிமை உண்டு. திருக்குறள் நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று சொன்ன தமிழ அரசு, அந்நூலின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசை நடத்த வேண்டும். குறைந்த பட்சம் தமிழக அரசு, ஓர் உயிரின் மரணத்திற்காவது மரியாதை கொடுக்க வேண்டும். சினிமாக் காரர்களுக்கெல்லாம் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வது மட்டும் அறம் அல்ல. அதே அறம் எல்லா உயிர்களிடத்தும் காண்பிக்கப்பட வேண்டும்.

”தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.”
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்??
இவ்விடயத்தில் - சென்னை உயர்நீதி மன்றத்திற்கு பாராட்டுக்கள். தமிழக அரசு மேல் முறையீட்டினை செய்திருக்கக்கூடாது. அறத்திற்கு புறம்பாக தமிழக அரசு செயல்படுகின்றது.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
-TMR