சுழலும் உலகிற் கிணையாக
சுழன்று உலகம் போற்ற
குழ லோசையாய் நெருப்புக்
கனலை வீசி இளைஞரின்
அழகை எடுத்துரைத்து இந்திய
ஆன்மாவை பரமாத்மா என
முழங்கிய நமது அப்துல்காலாம்
மலரடியை போற்றி வணங்குவோம்.
==========================
இந்திய மக்களின் இதய நாயகர்
இளைஞர் மூச்சின் இதயத் துடிப்பு
சந்தித்தத் தலைவரில் சைவ உணவு
சுகித்த சன்மார்க்க சான்றோ னவர்
வந்ததால் இந்தியா வான்புகழ் கண்டு
வையத்தில் ஓர் வல்லரசாக்க அணுவில்
அந்தம் பார்த்த அவுல்பக்கிர் ஜெய்னுலாப்தீன்
அப்துல் கலாம் அவர்கள் வாழ்க.
=================================
கடலலையும் அமைதிக் காணும் ராமேஸ்வர
இடமதில் உடலெடுத்த உத்தமரே - நடமாடியே
எப்பாரும் வியக்க இந்தியாவை உயர்த்திய
அப்துல்கலாம் வாழ்க வாழ்க.
================================
தப்பாது ஊட்டிடும் தாய்த்திரு நாட்டிற்கு
அப்துல் கலாமெனும் அமிழ்து.
===================================
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா - மேதகு "அவுல் பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம்" அவர்கள் நேற்று (27-07-2015) மாலை இந்திய மண்ணில் கலந்தார். அவருக்கு எம்முடைய ஆனந்தக் கண்ணீரை மேற்கண்ட பாடல்கள்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். ---- தி.ம.இராமலிங்கம் - கடலூர்.
