Showing posts with label என்றுநின் உயரம் ஓங்கும் நாள். Show all posts
Showing posts with label என்றுநின் உயரம் ஓங்கும் நாள். Show all posts

Tuesday, October 10, 2017

என்றுநின் உயரம் ஓங்கும் நாள்



என்றுநின் உயரம் ஓங்கும் நாள்
          என்றுநின் சமம் ஆகும் நாள்
என்றுநின் வேகம் ஓடும் நாள்
          என்றுநின் பிறப்பை எய்திடும் நாள்
அன்றுவரை நாயேனின் ஏக்க மெலாம்
          உன்னை நினைப்ப தல்லால் வேறு
ஒன்றும் அறியேன் என்மனப் பரியே
          அருட்பெருஞ் ஜோதி என் வள்ளலே.
                                      (--திருச்சபை)


         

அழகில் சிறந்ததோர் மங்கை துணையும்
          அறிவில் சிறந்ததோர் மகனின் புகழும்
குழலில் சிறந்ததொர் மகளின் சொல்லும்
          குறித்து கூடிடும் உறவின் செயலும்
இழந்து உதவும் நட்பின் உயர்வும்
          இடித்து உரைக்கும் உலகர் நடையும்
உழன்று பெற்றது யாவும்நீ என்பேன்
          அருட்பெருஞ் ஜோதி என் வள்ளலே.