Showing posts with label எல்லாம் செயல் கூடும் – என் ஆணை!. Show all posts
Showing posts with label எல்லாம் செயல் கூடும் – என் ஆணை!. Show all posts

Thursday, September 14, 2017

எல்லாம் செயல் கூடும் – என் ஆணை!

எல்லாம் செயல் கூடும் – என் ஆணை!
+++++++++++++++++++++++++++++
 
       வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் இன்றைய வார வழிபாட்டில் சன்மார்க்க அன்பரகளால் திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதப்பட்டு ஜோதி வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் அன்ன தான நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. 

        வார வழிபாட்டின் முடிவில் ச.மு.க. அருள் நிலையத்தின் சார்பாக வள்ளற்பெருமானின் 195-ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற நாள் விழாவானது தமிழ் மாத கணக்கின்படி இம்மாதம் 22-09-2017 அன்று கொண்டாடப்பட வேண்டும் என அன்பர்களால் முடிவெடுக்கப்பட்டது.

        இன்றைய (14-09-2017 – வியாழன்) வார வழிபாட்டில் அன்ன தானத்தை வழங்கிய திரு.M.சண்முகநாதன் ஐயா – கும்பகோணம் (No.3/8-A, Near Railway Gate, North Street, Thepperumanallur Post, Kumbakonam – 612 206) அவர்களுக்கு ச.மு.க. அருள் நிலையத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். அவரும் அவரைச் சார்ந்த குடும்பத்தினரும் நல் அருளோடும் பொருளோடும் புகழோடும் இவ்வுலகில் ஓங்க வேண்டுமென வேண்டுகின்றோம். நன்றி.