தூத்துக்குடி
வேதாந்தா
என்றாலே வேதனை தானடா
வேண்டாத தொழிலெல்லாம் வேகமாய் மூடடா
நாதாந்த
நாடெல்லாம் நாசமாய் போச்சுடா
நாளெல்லாம் போராட்ட நாளென ஆச்சுடா
போதாந்தம்
காணவே போகின்றார் பாரடா
போர்களம் போலவே சுடுகின்றான் ஏனடா
பாதாந்தம்
பணியும் பணத்திற்குத் தானடா
பாவத்தொழில் செய்யும் அரசினை வீழ்த்தடா