Showing posts with label நடுப்பட்டு சன்மார்க்க சங்கம். Show all posts
Showing posts with label நடுப்பட்டு சன்மார்க்க சங்கம். Show all posts

Saturday, August 5, 2017

நடுப்பட்டு சன்மார்க்க சங்கம்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஆகஸ்ட்-2017 மாதம் வெளியானது…


 முகநூலில் முக்கியச் செய்திகள்

நடுப்பட்டு சன்மார்க்க சங்கம்

Kumar Kumar என்கிற முகநூல் தலத்தில் திரு.குமார் ஐயா அவர்களின் பதிவிலிருந்து தொகுக்கப்பட்ட செய்தி. திரு.குமார் ஐயாவின் தொடர்பு எண்: 7904297116 / 9597775217

28-07-2017 அன்று செஞ்சி வட்டம் மேலச்சேரி கிராமத்தில் பச்சையம்மன் ஆலய விழாவில் உயிர்பலி நடக்க இருந்தது. அவ்வமயம் செஞ்சி வட்டம் நடுப்பட்டு சன்மார்க்க சங்கத்தார்கள் உயிர்பலி இடக்கூடாது என்று அவ்வூர் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். மற்ற இடங்களில் உள்ள சன்மார்க்க சங்கங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக செயல்படும் நடுப்பட்டு சன்மார்க்க சங்கத்தின் சேவைகள் போற்றத்தக்கது. மேலும் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றினை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுதும் பரப்பிவருகின்றார்கள். திரு.ப.புருஷோத்தமன் ஐயா அவர்களின் தலைமையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றது. தொடர்பு எண்: 9790389934


          நடுப்பட்டு சன்மார்க்க சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.