Thursday, December 27, 2012

LIGITHA JABAM


லிகித ஜெபம் 


நமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெபம் என்று ஒன்றும் இருக்கிறது. பேப்பரில், பழைய டைரியில் , நோட்டுப் புத்தகங்களில் இறை நாமத்தை எழுதுவார்களே அதைத் தான் லிகித ஜெபம் என்று கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த சில குடும்பங்களில் வயதான அனைவரும், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தை இதற்கெனவே ஒதுக்கி இடைவிடாமல் எழுதுகிறார்கள். இதனால் கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. அப்படி எழுதும் குடும்பங்கள் அனைத்திலும், பரிபூரண குடும்ப அமைதி நிலவுகிறது. அந்த குடும்ப வாரிசுகள் அனைவரும், இன்று நல்ல வேலையில், மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். காலம் கெட்டுக் கிடக்கும் சூழலில், ஒரு மனிதன் தவறான பாதைக்கு செல்ல நிமிஷ நேரம் போதும். அவ்வாறு செல்ல விடாமல் , இறையருள் தடுத்தாட்கொள்ள - இந்த லிகித ஜெபம் நிச்சயம் உதவும். 

மேலும், மனம் ஒன்றி எழுத எழுத - இறை சிந்தனை மேலோங்கும். நம்மை அறியாமலே , நாம் அந்த இறைவனின் நேரடிப் பார்வைக்கு உட்படுகிறோம்.
என்னுடைய சின்ன வயதில், என்னுடைய தகுதிக்கு கிடைக்கவேண்டிய சில அரிய வாய்ப்புக்களை மகாமந்திரம் எழுதி சாதித்தேன். நடக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்த விஷயங்கள் கூட, ஒரு அதிசயம் போல நடந்த சம்பவங்களும் உண்டு. அப்படி மகத்தான வல்லமை இந்த லிகித ஜெபத்திற்கு உண்டு.

அந்த காலத்தில் ஆலயங்களுக்கு மூலவரை ஸ்தாபிக்கும்போது, எந்திரத் தகடுகளில் சில மந்திரங்களை எழுதி, அந்த மூலவருக்கு உரிய மூல மந்திரங்களை எழுதி ஸ்தாபனம் செய்வார்கள். விண்ணில் நிறைந்து இருக்கும் சக்தியை கும்பம் மூலம் ஆகர்ஷித்து , அதை உள் வாங்கி, தீப வழிபாட்டின்போது அதை வழிபடுபவர்களுக்கு கிடைக்க செய்வதில், இந்த மந்திரங்களுக்கு பெரும் பங்கு உண்டு.


இதைப் போன்ற மிக அரிதான வாய்ப்பு, ஒன்று நம்மைத் தேடி வந்து இருக்கிறது. வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் ச.மு. கந்தசாமி பிள்ளை அவர்களின் சித்த சமாதிக்கு -  மந்திரங்களில் தலையாய மந்திரமான மஹா மந்திர லிகித நாம ஜெபம் தேவைப் படுகிறது.

நீங்கள் எழுத வேண்டிய மந்திரம் " அருட்பெரும்ஜோதி     அருட்பெரும்ஜோதி
                                      தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி"        

வள்ளலாரின் அருளைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாம் யார், நமது முந்தைய பிறவிகளின் பாவ புண்ணியங்கள் , நாம் இந்த பிறவியில் எந்த நிலையில் இருக்கிறோம் , என்ன செய்ய விருக்கிறோம், அடுத்த பிறவியில் நம் நிலை என்ன என்பதை , முற்றும் அறிந்த மகா ஞானி வள்ளல்  பெருமான். வள்ளலாரின் தரிசனம் ஒன்று போதும். ஒரு கணப் பொழுதில் நம் கர்மங்கள் அனைத்தும் தொலைந்து போகும். நம் வாழ்வில் சிகரம் தொடும் அளவுக்கு சாதனைகள் செய்ய இயலும். நம்பி இந்த காரியத்தில் ஈடுபடுங்கள்.

நோட்டுப் புத்தகத்தில், அல்லது வெள்ளைப் பேப்பர்களில்,மேற்கண்ட மகா மந்திரத்தை  நீலம் அல்லது பச்சை மையினால் , தங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு எழுதி - கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் மார்ச் 2013 குள் வந்தடையுமாறு, எழுதி அனுப்புங்கள். ஒவ்வொரு முறை எழுதத் தொடங்கும்போதும் மனதிற்குள் உங்கள் நிறைவேற வேண்டிய கோரிக்கை (களை) மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டு, உலக மக்கள் நன்மைக்காகவும்  வேண்டி  எழுதுங்கள்.

குளித்து முடித்து, சுத்தமான உடை அணிந்து, வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி  உங்கள் அவசியமான கோரிக்கைகளை வேண்டிக்கொண்டு - கடன் தொல்லை தீர, வீடு கட்ட, கார் வாங்க, திருமணம் நிறைவேற, குழந்தை பாக்கியம் கிடைக்க, நிம்மதியான வாழ்வு கிடைக்க, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு, உடல் நலம் வேண்டி இப்படி உங்களை வருத்திக்கொண்டு இருக்கும் கோரிக்கைகளை மனதிற்குள் வேண்டி, வள்ளல் பெருமானை நல் வழி காட்டுமாறு பிரார்த்தனை செய்துகொண்டு எழுதத் தொடங்குங்கள்...! இறுதியில் உங்கள் பெயர் மற்றும் முகவரியினை முடிந்தால் தொலை பேசி எண்ணையும் திரியப்படுத்தவும். 

அதன் பிறகு நடக்கும் அற்புதத்தை பாருங்கள்..! எழுதத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த அதிசயம் கண்டிப்பாக நிகழும்.

நீங்கள் லிகித நாம ஜெபம் எழுதி அனுப்ப வேண்டிய முகவரி :

Mr.A.Thirunavukkarasu, 
73-B, Sankara Naidu Street,
Thirupathiripuliyur,
Cuddalore - 607002
TamilNadu, India.
Cell : 9445545475
அந்த வள்ளலாரே  திருவுளம் கொண்டு , இந்த அரும்பெரும் வாய்ப்பை நல்கியதாகவே நான் கருதுகிறேன். உங்களுக்கும் இதே போன்ற எண்ணம் தோன்றுமேயானால், அவசியம் நீங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரமோ அல்லது பொருள் விரையமோ என்று நினைக்க வேண்டாம். உங்கள் சந்ததிக்கே நீங்கள் சேர்க்கும் சொத்து இது என்று நம்பி செயல் பட்டு, வள்ளலாரின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

இந்த தகவலை தகுதி வாய்ந்த உங்கள் உறவினர் / நட்பு வட்டத்திற்கும் தெரியப்படுத்துங்கள். Facebook / Twitter என்று உங்களால் முடிந்தவரைக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். யார் யாருக்கெல்லாம் ப்ராப்தம் இருக்கிறதோ, அவர்கள் அனைவருக்கும் இந்த தகவல் பயன் தரட்டும்.

தி.ம.இராமலிங்கம் 




தி.ம.இராமலிங்கம் 

Friday, November 30, 2012

MARRIAGE INVITATION

திருமண அழைப்பிதழ்

வருகின்ற டிசம்பர் 2012 வது மாதம் ஆங்கில நாட்காட்டின்  படி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதாவது இம்மாதத்தில் சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் முறையே 5 நாட்கள் இடம்பெறுகின்றன.  இப்படிப்பட்ட மாதம்  846 வருடத்திற்கு ஒரு முறை தான் வரும்படியாக உள்ளது. எனவே வருகின்ற டிசம்பர் மாதத்தை கொண்டாட உலகமே ஆவலுடன் உள்ளது.

மேற்கண்ட சிறப்பு வாய்ந்த டிசம்பர் 2012 மாதத்தில் 10-ஆம் நாள் எங்களது சகோதரியான தி.மஞ்சுளா & இர.இராமலிங்கம் அவர்களின்  திருமணம் கடலூர் கூத்தப்பாக்கத்தில் "சண்முகா" திருமண மண்டபத்தில், எல்லாம்வல்ல அருட்பெரும்ஜோதியின் திருஅருள் சம்மதத்துடன் நடைபெறஉள்ளது என்பதனை மிகவும் மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்றைய தினமே (10-12-2012) சிதம்பரத்தில் "ராமதாஸ்" திருமண மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு வரவேற்ப்பு நிகழ்சியும் உள்ளது 

அவ்வமையம் தாங்கள் அனைவரும் வந்திருந்து வாழ்த்துமாறு இதன்மூலம் அழைக்கிறோம். 

இப்படிக்கு தங்கள் அன்புள்ள 

தி.ம.இராமலிங்கம் - கடலூர் 
தி.ம.சதீஷ்  கண்ணன்  - மயிலாடுதுறை 
மு.ச.அருள்  - காரைக்காடு 
ம.சரவணன்  - ஊரப்பாக்கம் - சென்னை 
மு.ச.குமரேசன்  - காரைக்காடு 













Wednesday, November 28, 2012

BEST ANTHEM OF THE WORLD


வணக்கம்,

 நமது தேசிய கீதத்தை யுனெஸ்கோ அமைப்பு, இவ்வுலகிலேயே சிறந்த  தேசிய கீதம் என்ற சிறப்பினை அளித்துள்ளது. பெங்காலி மொழியில் எழுதப்பட்ட இப்பாடலை பாடாத இந்தியர் யாரும் இல்லை எனலாம், இதன் மூலம் பெங்காலி மொழி தெரியாத இந்தியரும் இல்லை எனலாம். இப்பாடலை ரபீன்ரநாத் தாகூர் அவர்கள், இரண்டாம் ஜார்ஜ் மன்னர் அவர்களை வரவேற்பதற்காக (வரவேற்ப்பு பாடல்) எழுதப்பட்டது என்றும் கூறுவர். அப்படிப்பட்ட நமது தேசிய கீதத்தை யுனெஸ்கோ அமைப்பு, இவ்வுலகிலேயே சிறந்த  தேசிய கீதம் என்று சிறப்பித்தது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிப்பதாகும். 

ரபீன்ரநாத் தாகூர் அவர்களுக்கு 1913 ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக நோபல் பரிசு கிடைத்தது  என்பதையும் இத்தருணத்தில் நினைத்து மகிழலாம்.





தி.ம.இராமலிங்கம்.

Tuesday, November 27, 2012

ARE YOU VEGTARIAN


நீங்கள் சுத்த சைவமா ?? இன்றிலிருந்து நீங்களும் அசைவம்தான்
என்ன தான் நீங்கள் சுத்த தாவர உணவாளன் என்று பெருமிதம் கொண்டாலும். அனைவராலும் விட முடியாத ஒன்று பால், பால் சார்ந்த உணவுகள். ஜீவகாருண்யம் பேசுபவர்கள் மாட்டின் பாலைத் திருடுவதேனோ என்றக் கேள்விக்கு பதில்லை. 

சமணர்கள் என்பவர்கள் மிகவும் ஆச்சாரமான, கடுமையாக சைவ உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் என்பதை நாம் அறிவோம். தண்ணீரைக் கூட வடிக்கட்டி குடிப்பவர்கள், தப்பி தவறியும் பூச்சிகளை விழுங்கிவிடக் கூடாது என்பதால்.

அவர்களிடம் இருந்து தான் பௌத்தம், இந்து மதம் தாவர உணவுப் பழக்கத்தைக் காப்பியடித்தன அது தனிக் கதை. ஆனால் சமணர்களால் கூட பால் உண்பதை விட முடியவில்லை. சமண துறவிகள் கூட பால், பால் சார்ந்த உணவை உண்கின்றார்கள். பால் என்பது விலங்கின் ரத்தம் என்பதை நாம் அறிவோம். அது குட்டிகளுக்கு கொடுக்கவே தயார் செய்கின்ற பாலை நாம் பறித்து பருகுகின்றோம் அல்லவா. 

மனிதனுக்கு புரதம் மிக மிக அவசியம். புரதம் என்பது விலங்குகள் ஊடாகவே நமக்கு அதிகம் கிடைக்கின்றது. மாமிசம் உண்ணா விட்டாலும், விலங்குகள் தரக்கூடிய பாலை பருகித் தான் ஆக வேண்டும் என்ற நிலை மனிதனுக்கு உள்ளது. 

அடுத்த முறை எவராவது தாம் சுத்த சைவம் என உதாறினால், நீங்கள் பால் குடிப்பீர்களா என கேளுங்கள் . ஆம் ! என்றால் அவர் சுத்த சைவம் இல்லை, சுத்த பேத்தல் என்று கூறி அனுப்பிவிடலாம்.



தி.ம.இராமலிங்கம். 

Wednesday, November 21, 2012

GURU POOJA

சன்மார்க்க அன்பர்களுக்கு அருள்பெறும் வணக்கங்கள்: 

நேற்று (20.11.2012 - செவ்வாய் கிழமை) கடலூர் மாவட்டம் காரணப்பட்டு கிராமத்தில் திருவருள் சம்மதத்தால், வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்  அருள்திரு. ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் 86-வது குருபூஜை இனிதே நடைபெற்றது. 


அவ்வமையம் சிறப்பு பேச்சாளராக திரு.அருட்பா அருணாசலம் கலதுக்கொன்டு வள்ளலாரின் சன்மார்க்க கருத்துகளையும், வள்ளலாரின் பொற்பாத குறட்டின் (வள்ளலாரின் பொற் பாதுகை இங்கே உள்ளது) மகிமைகளையும்  மற்றும் ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் சிறப்புகளையும் எடுத்து இயம்பினார்.



 மேலும் சில அன்பர்கள் சொற்பொழிவு நிகழ்தியப் பிறகு அனைவர்களுக்கும்  அன்னதானம்,காரணப்பட்டு கிராம மக்களால் மிகவும்  சிறப்பாக அளிக்கப்பட்டது.




இவ்வருட குருபூஜையில் எமக்கு தெரிந்து, சென்னையில் இருந்து வந்திருந்த திரு.வினோத் அவர்களும் மேட்டுக்குப்பத்தில் இருந்து வந்து ஆன்மலாபம் பெற்ற சில அன்பர்களையும் இங்கே குறிப்பிடவிரும்புகிறேன்.






மேலும்  இப்பூஜையில் கலந்துக் கொண்டவர்களின் சில புகைப் படங்களையும்  காண்போம்...




இறுதியாக இக்குருபூஜையின் ஒருங்கிணைப்பாளரான திரு.பழனி அவர்களுக்கு, திரு. அருட்பா அருணாசலம் அவர்கள் பொன்னாடை சாற்றி சிறப்பித்தார்கள்


மற்றும் இப்பூஜையில் அருள்திரு. ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் வழி தோன்றல்களான திருமதி கவ்சல்யா நடராஜன் (காரணப்பட்டு), திரு.அ.திருநாவுக்கரசு மல்லிகா (மேலழிஞசிப்பட்டு), திரு.அ.மணிவண்ணன் விஜயா (ஊரப்பாக்கம் - சென்னை ), திரு.அ.முருகாநிதி சரஸ்வதி (காரைக்காடு) ஆகியோர்கள் கலந்துகொண்டு ஆன்ம இலாபம் அடைந்தனர்

தி.ம.இராமலிங்கம்.

Wednesday, November 14, 2012

GURU POOJA INVITATION


If interest to visit at Karanappattu, please contact to 9445545475 / vallalarmail@gmail.com

T.M.RAMALINGAM. 

Saturday, October 20, 2012

IMPEACHMENT


பதவி நீக்கம் (IMPEACHMENT):

நமது இந்திய திருநாட்டின் இரண்டாவது தூண் (Second Estate) என்று கருதப்படுபவர்கள் சாமியார்கள். இன்று ஒரு சிலரை தவிர பெரும்பாலான சாமியார்கள் இவ்வுலக அசைகளால் பிடிபட்டு       தள்ளாட் த்தில் இருப்பதை காண்கிறோம். இத்தள்ளடத்தில் இருந்துவரும் நித்தியானந்தாவை நேற்று (19.10.2012) மதுரை ஆதீனம் திரு.அருணகிரிநாதர் தமது இளைய வாரிசாக நியமித்ததை - பதவி நீக்கம் செய்தது வரவேற்கத்தக்கது. 

(நீதி : உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவர் தம் உறவு கலவாமை வேண்டும்)

தி.ம.இராமலிங்கம் 



Friday, October 19, 2012

MAHA MANTHIRAM

அருட்பெரும்ஜோதி                                                                      அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை                                                                 அருட்பெரும்ஜோதி

"உலகுயிர்த் திரளெல்லாம் ஒலிநெறி பெற்றிட   திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் உலகுக்கு அளித்த அருட்கொடைதான் மேலே உள்ள மகாமந்திரம். நம் தெய்வத் தமிழ் மொழியில் அ, இ, உ, எ, ஒ இவ்வைந்தும் உயிர் எழுத்துக்கள்.  இதேபோல் ஆங்கிலத்திலும் A, E, I, O, U என்பவைதான் வவ்வல்ஸ் என்று கூறுவார்கள். மேலே உள்ள மகாமந்திரத்தில் இவ்வைந்து உயிர் எழுத்துக்களும் இருப்பதை நாம் சிந்தித்து உய்யலாம்.

அருட்பெரும்ஜோதி 

அ                      =                     -     அ 
ர்     +    உ        =        ரு        -      உ 
ப்    +    எ          =        பெ      -      எ 
ச்    +    ஒ        =        ஜோ  -     ஒ 
த்    +    இ        =          தி        -        

உயிர் எழுத்து ஐய்தும் அடங்கிய மந்திரம் இந்த சுத்த சன்மார்க்கத்தில் அல்லாது, உலக மக்களால் பின்பற்றக்கூடிய மதத்திலோ, சமயங்களிலோ, வேறு அமைப்புகளிலோ இல்லை, அதனால்தான் இப்புனித மந்திரத்திற்கு "மகாமந்திரம் " என வள்ளலார் பெயர் வைத்தது பொருந்துகிறது அல்லாவா?

{குறிப்பு : இதனை கண்ணுறும் அன்பர்கள், வேறு ஏதேனும் மந்திரங்களில் இந்த  ஐய்து உயிர் எழுத்துகளும்  அடங்கி இருந்தால் தயை கூர்ந்து எனக்கு தெரிவிக்கலாம் . (vallallarmail@gmail.com) }

தி.ம.இராமலிங்கம்