அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWclNGRktWTHNlRnc/view?usp=sharing
இராமலிங்க
அந்தாதி (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)
நேரிசை
வெண்பா
வானலாவிய உறவாய் வருகின்ற அண்டங்களை
ஞானத்தால் நட்புறுவோம் ஞாயிறாய் - கானத்தால்
அவைகளைப் பாடி ஆளுகின்ற ராமலிங்கமே
சுவையாகி எனக்கு சுகமானான்.
சுகமான கீதங்களால் சன்மார்க்க மியற்றி
சகத்தில் நாம் சாகாதிருப்போம் - அகத்தில்
உலகெலாம் காண உலாவும் ராமலிங்கமே
பலமாய் இருப்பாயென் புறத்தும்.
புறமும் அகமும் புறப்புறத்தும் அகப்புறமும்
அறவொளி பிரகாசம் அருளினாய் - திறந்து
நான் பார்க்க நாணினேன் ராமலிங்கமே
ஏன் இன்பத்தை அளித்தாய்.
ஆன்மா ஜீவன் இந்திரியங்கள் கரணத்தில்
ஊன்றி பிண்டத்தில் ஒளிர்ந்தாய் - சான்றாய்
என் னகத்தே ஓங்கும் ராமலிங்கமே
உன் பிரகாசமே உண்மை.
சூரியன் அக்கினி சந்திரன் நட்சத்திரங்களில்
காரியப்பட்டு பிரகாசங் கொண்டாய் - வாரி
வழங்கு மண்டத்தில் வாழும் ராமலிங்கமே
பழக்குவாய் எனையும் பரத்தில்.
பரமாகாச மண்டத்திலும் பிண்டத் திலொரு
புருவ நடுவிலும் புகுந்தாய் - இருநிலை
அறிய அருட்பா அளித்த ராமலிங்கமே
சிறியேனின் நடு சித்தமோ.
சித்தம் அறியவே சத்தம் போட்டு
நித்தம் அழ நினைத்தேன் - பித்தன்
எனநீ நினைப்பாய் என ராமலிங்கமே
தினமும் சிரித்தேன் தனித்து.
தனித் தியங்க தெய்வத்தாலு மாகாது
மனிதன் முயல முடியுமோ - முனிவரும்
தேவரும் மூவரும் தேட ராமலிங்கமே
நீவரும் பாதை நின்றேன்.
நின்ற றியேன் நினைப்பு அறவேன்
கன்றாகினும் மடி அறியேன் - தன்நிலை
மறந் துனையே மதிக்க ராமலிங்கமே
இறந்தறியாத நிலையி லிடு.
இட்ட இடத்தி லிருந்து வளர்ந்து
துட்ட னாகித் தளர்ந்தேனே - சிட்டந்
தட்டி எனைத் தருவாய் ராமலிங்கமே
மட்டமாகி நான் மகிழவே. 210
இட்ட இடத்தி லிருந்து வளர்ந்து
துட்ட னாகித் தளர்ந்தேனே - சிட்டந்
தட்டி எனைத் தருவாய் ராமலிங்கமே
மட்டமாகி நான் மகிழவே.
மகிழவே விந்துநாத முதலிய ஆதியைப்
பகிர்ந்து நிறைந்தப் புகழே - அகிலமதில்
மின்னல் இடி மயமான ராமலிங்கமே
இன்னல் தீர்க்க இரங்காய்.
இரக்க மனமானால் இறப்பு மறப்பாகும்
உரக்கச் சொன்னதை உரைத்தேன் - நரகத்தில்
இடர் படா இயல்பை ராமலிங்கமே
சுடர் மாலையாய்ச் சூட்டு.
சூடாக இவ்வுலகம் சுட்டாலும் தேவனைப்
பாடாத நாளில்லை பார்த்தாய் - வீடாக
நானிருக்கும் கூட்டை நாளை ராமலிங்கமே
வானிருக்கும் இடமாய் வாழ்த்து.
வாழ்த்தினால் வானமும் வந்திங்கு வணங்குமே
தாழ்த்தினால் தாயும்நாயென தூற்றுமே - ஊழ்வினை
எனை வாழ்த்துமோ அறியேன் ராமலிங்கமே
உனையே பிடித்தேன் அஞ்சேன்.
அஞ்சும் எட்டும் அஞ்சாமல் விட்டேன்
எஞ்சிய யாவும் ஏனோபோச்சு - பஞ்சு
மனதில் மார்க்கத்தீ மூட்ட ராமலிங்கமே
கனலாய் சூழ்ந்தான் காண்.
காணாதக் கனவில் கடவுள் வந்தாரென
வீணாகப் பாடியே வந்தேன் - வாணாள்
தந்து பொய்யைத் தயவாக்கி ராமலிங்கமே
வந்தான் மெய்யாய் எனக்கு.
எனக்கிது போதுமென இருக்க மாட்டேன்
உனக்குக் கொடுக்க உண்டேல் - எனக்கு
வாங்க முடியும் வாஎன் ராமலிங்கமே
ஓங்க வேண்டும் உன்னைவிட.
விடமாட்டேன் உனை விட்டுத் துயர்
படமாட்டேன் இப் புன்னுலகில் - நடமாடேன்
நாய்போல் என் நண்பா ராமலிங்கமே
பேய்யாய் சுற்றினேன் போகாதே.
போப்போ ச்சீபோப்போ புகழெனும் ஆணவக்
கூப்பாடே என்னிடம் கூடாதேபோப்போ - வாப்பா
எனைத் தாழ்த்தி உன்குடிலில் ராமலிங்கமே
மனையாய் இருக்க
மடிசேர். 220
சேர்வாய் நெஞ்சே சன்மார்க்கஞ் சேர்ந்தால்
பேர் நிலைக்கும் பாராய் - ஊரெல்லாம்
நம் பேச்சுதான் நலமேவு ராமலிங்கமே
உம் மார்க்கம் உயர்ந்ததே.
உயர்ந்த உள்ளொளி அசைவின் நடனமதை
தயங்கிநான் கண்ட தருணம் - அயர்வெலாம்
போக்கி எனைப் புனிதனாக்க ராமலிங்கமே
தீக்குணம் நீக்கும் தெய்வம்.
தெய்வமிது தெய்வம் தேர்ந்தார் வணங்கும்
தெய்வமது அருட்ஜோதி தெய்வம் - மெய்யான
தெய்வமிது தூய தேகன் ராமலிங்கமே
தெய்வமெனப் பார்க்க தெய்வமாவீர்.
ஆவியில் கலக்கும் ஆற்ற லுடையாய்
காவியம் படைக்க கலந்தருளாயே - ஓவியம்
போலுன் அழகைப் பார்க்கவே ராமலிங்கமே
தோலுள் நரம்புகள் துடிக்குதே.
துடிக்கும் அணுக்களைத் திறந்தால் அங்கு
விடிந்திருக்கும் பல விண்வெளி - படிக்கும்
பாடமாய் உனைப் படிக்க ராமலிங்கமே
மாடம் தெரிந்தது முன்னே.
முன்னவனே முத்தேக மன்னவனே நின்
சன்னி தானத்திற்கே சரணம் - நன்றி
உரைத்தேன் என் உத்தம ராமலிங்கமே
கரைசேர்த்த உன் கருணைக்கு.
கருணை எத்தனை கிலோ கிடைக்குமென
தெரு வெல்லாம் தேடினேன் - மருதூரில்
கடை விரித்ததைக் கண்டேன் ராமலிங்கமே
எடைக்கு எடை என்னவிலையோ.
விலையறியாப் பொருளை வான் பொருளின்
கலையை சாகாதிருக்கக் கற்றேன் - புலை
கொலை விட்டேகவே குரு ராமலிங்கமே
அலை கடலை அடக்கினான்.
அடக்கமும் அன்பும் அடங்கா இறைவனை
முடக்கும் உபாய மருந்தாகும் - சடங்கள்
எழுந்து வரும் எழுத்தாய் ராமலிங்கமே
முழுதும் மகா மந்திரமானான்.
மந்திரமோ மகாமந்திரம் முப்பத்து மூன்று
எந்திரம் ஓதும் அத்திறம் - தந்திரம்
அறிந்து தன்னை அறிந்த ராமலிங்கமே
அறியேன் என்னை அறியாயோ. 230
அறிவாய்
இரவிலே அமுதக் காற்றைக்
குறித்து
நன்முயற்சிக் கடவாய் - அறிவு
விளக்கம்
இரவில் விளங்க ராமலிங்கமே
உளத்தில் ஏனோ
உறக்கம்.
உறக்கமே
உணர்வாகி உணவே விருந்தாகி
மறந்தே
இருந்தேன் மன்னவா - இறந்து
பிறக்கவே
நன்கு பழகினேன் ராமலிங்கமே
அறஞ்
சொன்னாலும் அண்டேன்.
அண்டமெலாம்
அமுத அலையை இரவினில்
தெண்டத்திற்கு
தருகின்றாய் தயவோ - பிண்டம்
அதனைப் பெறுவ
தெப்படி ராமலிங்கமே
இதனை மாற்றி
யமைப்பாய்.
அமைப்பை
மாற்றி அமுதக்காற்றைப் பகலில்
சமைத்து
சன்மார்க்கம் சாற்று - சுமையில்லா
இறை சட்டம்
அருளாய் ராமலிங்கமே
குறை நான்
கூறலாமா.
கூறுகின்ற
மறைகளில் குறை என்றால்
மாறுகின்றான்
உடன் மனிதன் - வீறுகொண்ட
பதிமீதே குறை
புகன்றால் ராமலிங்கமே
விதியை மாற்ற
வழியுண்டா.
வழியுண்டேல்
வாரும் வானவீதியில் காலங்
கழித்துக்
கடவுளைக் காண - விழித்திருக்க
முடியாது
ஆனால் முத்திதர ராமலிங்கமே
பாடி வருவாய்
பறந்து.
பறக்கும்
என்னெஞ்சம் பசித்திருக்க அறியாது
பிறர் பசியும்
புரியாது - உறவு
கொண்ட என்
கணவா ராமலிங்கமே
உண்மை
உரைத்தருள் உடனே.
உடன்வந்த கரும
உடைமைகளை விரைந்து
கடந்து
மேலேறவழி காட்டாய் - மடமை
நெஞ்சம் உடமை
உறவே ராமலிங்கமே
எஞ்சியநான்
உனக்கே அடிமை.
அடிமை என்றசொல்லுக்
கடிமை அருட்ஜோதிக்
கடிமை
ஆருயிர்க் கடிமை - படித்தப்
படிப்பிற்கு
அடிமை பரஞான ராமலிங்கமே
நடிக்கும்
நடத்திற்குஅடிமை நானே.
நானென்ற
சொல்லில் நிறைந்தாய் நீயே
வான்பொருளாய்
வந்தாய் நீயே - ஏன்
தான் மறையத்
துணிந்தாய் ராமலிங்கமே
மானின் அழகு
மறைப்பன்றோ. 240
என்றோ ஒருநாள்
அவன்வரும் அழகினை
நன்றே
பார்த்திட நானிருப்பேன் - அன்று
என்னோடு
ஏதுபேச ஆசை ராமலிங்கமே
கன்றோடு
பசுவாய்க் கூடிடுவோம்.
கூடு
கலையுமோஎன் காடு அழியுமோ
பாடுபட்டப்
பாடு பொய்க்குமோ - சூடு
கண்ட பூனை
குடிக்குமோ ராமலிங்கமே
குண்டலிப்
பால் காட்டேன்.
காட்டு
விலங்கும் கூடி வாழுதே
நாட்டு மனிதா
நாணமில்லை - கூட்டு
சாதிமத இனஞ்
சார்ந்து ராமலிங்கமே
மோதி சாகவே
முயலுவர்.
முயலாய்
முடிந்தவரை மண்ணில் நாம்
தயவுடன்
எல்லாம் தருவோம் - குயவு
மண்ணைச்
சுட்டு மாளாவகை ராமலிங்கமே
கண் திறந்துக்
காணாய்.
கண்ணின் ஒளியே
கற்கண்டு சுவையே
விண்ணின்
அமுதே வாராய் - எண்ணில்
எட்டு
மிரண்டும் என்றாய் ராமலிங்கமே
எட்டாமல்
போவது ஏனோ.
ஏனோ
அறியேன்என் உயிரினில் கலந்ததனால்
தானோ
வரமறுக்கின்றாய் தனியே - வானோ
காற்றோ
எல்லாக் கூற்றும் ராமலிங்கமே
போற்றும்
அரும் பொருளே.
பொருள்நிலைக்
காணாது பொறுத்தேன் தலைவா
திருநிலை
காட்டித் திருப்பு - இருந்த
வேலையும்
விட்டு வந்தேன் ராமலிங்கமே
காலைப்
பிடித்துக் கட்டேன்.
கட்டுங்
கணக்கைக் காட்டி கால்
முட்டு
மிடத்தை மணந்தாய் - விட்டுக்
கொடுக்கும்
மனங் கொடு ராமலிங்கமே
ஒடுங்க வாராய்
என்னுள்.
என்னையே
கொடுத்தேன் எனதுயிர் உறவால்
உன்னையே
எடுத்து உயர்ந்தேன் - நன்மையே
நவிலும் உன்
நாவால் ராமலிங்கமே
கவிப்பல
சொல்லக் குறித்தேன்.
தேனென
இனிக்கும் திருவருட்பாக் கடலே
நானென
இருக்கும் நாயகனே - ஈன்ற
வலி இனியும்
விடுப்பனோ ராமலிங்கமே
பலி கொடுப்பதே
பிறப்பு. 250
பிறக்க அழுதேனோ
பிறந்து அழுதேனோ
இறக்க அழுதேனோ
இங்கு - சிறக்க
உனை நினைத்து
அழுதிலேன் ராமலிங்கமே
வினை தடுக்க விதிசெய்.
செய்த தவப்பலனாக சன்மார்க்கச் சாலை
எய்தி இறவாவரம் உற்றேன் - மெய்யே
எழுதினேன் பொய் எனில் ராமலிங்கமே
வழக்குப் போடுவேன் வந்து.
வந்து நான்செய்த வேலைகள் ஏதுமில்லை
நொந்து செல்லவோ நாயகா - வெந்து
கால் முட்டக் காணாது ராமலிங்கமே
பால் அருந்தப் பார்த்தேன்.
பார்க்கத் தெரியாது படித்தால் புரியாது
வார்த்தால் வராது வானம் - சார்ந்த
சன்மார்க்க சங்கத்தைச் சேர ராமலிங்கமே
தன்நிலை காட்ட தொடும்வானம்.
வானத்தில் சுற்றலாம் வாடாஎன் கண்ணே
ஞானமும் போதைதான் வாடாஎன் - கானமும்
பானமாகி உன்னைப் புகழ ராமலிங்கமே
போனப் பிறவிப்போல் போவேனோ.
போவேன் மேன்மேலும் பரமாகாச வானில்
ஈவேன் என் இன்னுயிரை - நோவேன்
இவ்வுலக வாழ்வு இசைய ராமலிங்கமே
அவ்வுலகம் காண்பது அறிவு.
அறிவுப் பெருங்கோவில் அகத்தில் காட்டி
குறிப்பால் நடுயிருந்த குருவே - பறித்த
பழமதை ருசி பார்க்க ராமலிங்கமே
அழகன் எனக்கு ஆசையே.
ஆசையெலாம் உன் அருட்பா ஓசையால்
மீசையும் போய் மாண்டதே - காசை
கூட்டும் பாவக் கணக்கை ராமலிங்கமே
பூட்டுப் போட்டு பூட்டுமே.
பூட்டைத் திறந்துப் பார்க்க எனக்குமோர்
வீட்டைக் கொடுத்த வள்ளலே - காட்டைக்
கடந்து செல்லக் காவலாய் ராமலிங்கமே
நடந்து வருவாய் நாளுமே.
நாளும் முப்பத்துமூன்றை நாவினால் ஓத
வாளறுந்து போகும் வினை - கோளும்
அதில் வாழும் உயிரும் ராமலிங்கமே
கதிபெற்று உயரக் காப்பாய். 260
காப்பாய் நீயென கடலில் விழுந்து
கூப்பாடு போட்டு கலங்கினேன் - சாப்பாடு
போட்டு கரைசேர்ப் பித்த ராமலிங்கமே
காட்டு உனது கதிர்நலத்தை.
நலமோங்கு மந்திரம் நானறிந்து என்
குலதெய்வம் நீஎனக் கண்டேன் - மலமொத்த
வாழ்வில் எனை வீழ்த்தாது ராமலிங்கமே
ஏழ்பிறப்பும் எனை ஏந்தினாய்.
ஏந்தியக் கரங்கள் எதிர்வர உன்னிரு
காந்தியக் கண்களைக் காணேணோ - சாந்தி
எங்கும் நிலவ எண்ணில் ராமலிங்கமே
தங்கள் தயவைத் தாரும்.
தருகின்ற அமுதத்தை தலை வணங்கிப்
பருகநானும் சன்மார்க்க பொருளானேன் - உருகி
உனைப் பாடவே உயர்ந்தேன் ராமலிங்கமே
எனையும் சமமாக்க எண்ணு.
எண்ணுந் தோறும் என்னிதயம் துள்ளி
கண்ணில் நீர் காணுதே - பண்ணில்
கலந்து எழுதி காட்டும் ராமலிங்கமே
தலமோங்கப் பாடுவாய் தழைத்து.
தழைத்த சன்மார்க்கம் துலங்கி பெருவாழ்வு
இழைத்திட இணங்கி அருளாய் - பிழை
எல்லாம் பொறுத்து ஏற்பாய் ராமலிங்கமே
கல்லான் பிழையும் கணக்கோ.
கணக்கில்லா அண்டங்களை கடந்து சுகம்
உணரும் நாள்தான் எந்நாளோ - குணங்கள்
ஒழிந்து துரிய மாவதை ராமலிங்கமே
குழியில் விழும்முன் கூட்டு.
கூட்டு சதியால் குலைக்கும் பொறிகளை
ஓட்டும் நாள்தான் எந்நாளோ - வாட்டும்
மன்மத லீலையை மறக்க ராமலிங்கமே
உன்பாத நிழலில் உறைந்தேன்.
உறைந்தப் பனி உருகுவதுபோல் உயிருருகி
இறைவனாகும் நாள்தான் எந்நாளோ - மறைத்த
திரைகளை தயவால் தள்ளும்முன் ராமலிங்கமே
நரைதிறை மூப்பை நாட்டாதே.
நாட்டுகின்ற மதமெலாம் நன்மார்க்கப் பொது
ஆட்ட மாடும்நாள்தான் எந்நாளோ - சூட்டும்
அந்தாதிப் பாடலை அலங்கரிக்க ராமலிங்கமே
வந்து பொதுவாக்கி விடுத்தான். 270
விடுதலை வேண்டி விண்ணப்பித்து விண்ணில்
ஒடுங்கும் நாள்தான் எந்நாளோ - படுகுழி
பாவையின் கண் படுமோ ராமலிங்கமே
சாவை விரும்புமோ சன்மார்க்கம்.
சன்மார்க்க சமரச சத்திய சுத்தமானது
என்னளவில் வருநாள் எந்நாளோ - என்று
தினந் தினம் துவல்கிறேன் ராமலிங்கமே
மனம் உருகும் மந்திரந்தா.
மந்திரஞ் சொல்லி மனமடக்கி நான்
எந்திர மாகும்நாள் எந்நாளோ - தந்திரஞ்
சொல்லி நாதமுடி சந்திரனாக ராமலிங்கமே
பல்லி நன்னிமித்தம் புகலாய்.
புகன்ற வள்ளுவன் புகழ்குறள்படி சாகா
உகம் காணும்நாள் எந்நாளோ - இகபர
வாழ்வில் இரக்கம் வர ராமலிங்கமே
ஊழ்வினை உறுத்து ஊட்டுமோ.
ஊட்டும் உணவினை உவட்டாது உண்ண
ஆட்டுவிக்க ஆடும்நாள் எந்நாளோ - ஏட்டுக்
கல்வியும் இங்கு கறியாக ராமலிங்கமே
பல்லவி பாடுவாய்ப் புகழ்ந்து.
புகழ்ந்து நானுரைக்கும் பாட்டெல்லாம் நீவந்து
அகழ்ந்து ஆளும்நாள் எந்நாளோ - தகன்ற
நெஞ் சகத்தை நெகிழ்விக்க ராமலிங்கமே
அஞ்சுவது தான் அழகோ.
அழகைப் பார்க்காது அகத்தைப் பார்த்து
அழுகின்ற நாள்தான் எந்நாளோ - கழுகேற்றி
மதம் மாற்றிய மடையனை ராமலிங்கமே
நிதம் புகழ்வது நியாயமோ.
நியாயஞ் சொல்லும் நித்திய ஒழுக்கத்தை
ஓயாமல் பிடிக்கும்நாள் எந்நாளோ - மாயா
உலகப் பற்றை உடைக்க ராமலிங்கமே
பலங் கொடுப்பாய் பாமரனுக்கு.
பாமரனும் ஞானியாகி பைந்தமிழில் பாடியே
ஏமம் செய்யும்நாள் எந்நாளோ - காமமுன்
நாமம் சொல்ல நெடுமே ராமலிங்கமே
தாமதம் ஏனோ தயவருள.
அருளும் திரையோதச அலையில் மூழ்கி
உருளும் நாள்தான் எந்நாளோ - குருவும்
இறையும் நீஎன இருந்தேன் ராமலிங்கமே
மறைராகத் திரைநீக்கி மீட்டாய். 280
மீட்டுமின்ப ராகத்தில் மரணமிலா ராகத்தை
ஈட்டும் நாள்தான் எந்நாளோ - கேட்டும்
இல்லை எனில் அந்தோ ராமலிங்கமே
எல்லை கடந்து ஏறுவேன்.
ஏறுகின்ற வழியெலாம் ஏகாந்தனைப் பார்த்து
ஊறுகின்ற நாள்தான் எந்நாளோ - மாறுகின்ற
உலக மாயை அறுத்து ராமலிங்கமே
கலகமில்லா நடம் காட்டு.
காட்டா தொழிக்கவே கர்வந் தன்னை
ஓட்டும் நாள்தான் எந்நாளோ - மாட்டி
விட்ட தேகம் வாடாது ராமலிங்கமே
துட்ட வாசனை துடைப்பாய்.
துடைக்கும் துயரெலாம் துடைத்து சன்மார்க்க
மடையும் நாள்தான் எந்நாளோ - தடை
ஏது கண்டாய் என் ராமலிங்கமே
சூது செய்யாது சூழ்வாய்.
சூழும் உலகிடை சூழ்ச்சிவிட்டு என்னில்
ஆழும் நாள்தான் எந்நாளோ - வீழும்
உடலிடை நீ இருக்க ராமலிங்கமே
சடமென வீழேன் சத்தியம்.
சத்திய ஞானசபை சுயத்தில் கண்டுஅதில்
அத்தை காணும்நாள் எந்நாளோ - வித்தை
புரியும் விவரம் புகன்று ராமலிங்கமே
உரித்தாகுக உரிய இன்பத்தை.
இன்பம் துன்பம் இரண்டுமின்றி சன்மார்க்க
அன்பராகும் நாள்தான் எந்நாளோ - தன்னொளி
தான் பார்க்கத் தடையோ ராமலிங்கமே
வான் ஒளியாய் வழங்கு.
வழங்கும் முத்தேக வித்தைப் பெற்று
உழலும் நாள்தான் எந்நாளோ - விழலும்
நீர் பெற்று நீளுமே ராமலிங்கமே
சீர்த்தர எனக்கு சிரமமோ.
சிரமமின்றி நாளும் சீவ காருண்ய
இரக்கம் காணும்நாள் எந்நாளோ - நரகில்
இடர் படோம் என்றும் ராமலிங்கமே
விடம் கொடுத்தாலும் வரமே.
வரம் வாங்கிவந்து விளங்கி ஓங்கும்
சிரம் காணும்நாள் எந்நாளோ - கரம்
பிடித்து நாடி பார்த்த ராமலிங்கமே
விடிந்ததே என் வானம். 290
வானம் வசப்பட்டு வானறிவும் பெற்று
ஊனம் நீங்கும்நாள் எந்நாளோ - தானம்
அளிக்கும் திற னளித்து ராமலிங்கமே
களிம்பை நீக்கி கனகமாக்கு.
கனலை உணர்ந்து கனகமாகி உன்அக
இனமாகும் நாள்தான் எந்நாளோ - மனம்
வாட்ட மடைய வள்ளல் ராமலிங்கமே
காட்டுவேன் பல காரணம்.
காரணப்பட்டு காணும் கந்தசாமி போல
ஆரணங் கடக்கும்நாள் எந்நாளோ - பூரண
சுத்தசிவ நோக்கம் சார்ந்து ராமலிங்கமே
புத்தகங்கள் கணத்தில் படிப்பேனோ.
படிப்பறியா பாவியேன் படுந்துன்ப மறந்துன்
அடிக்காணும் நாள்தான் எந்நாளோ - முடிவற்ற
வாழ்வாம் பெரு வாழ்வை ராமலிங்கமே
பாழ் படாது பயிற்று.
பயிலும் பாடத்தில் பிரணவங் கற்றுஎன்
உயிரை காணும்நாள் எந்நாளோ - வயிற்றுப்
பசி நீங்கியேப் போக ராமலிங்கமே
புசிக்க முப்பூப் பொருளைத்தா.
பொருளெல்லாம் அருளாய் பார்க்கும் உன்திரு
வருட்பா இயற்றும்நாள் எந்நாளோ - ஒருமந்திரம்
இயற்றி உனை இசைப்பேன் ராமலிங்கமே
பயம் பூஜ்ஜியமாகிப் போனதே.
போவென்று சொன்னாலும் போகாத பாவத்தால்
ஓவென்று அழும்நாள் எந்நாளோ - வாவென்று
என்று சொல்லி அனுப்பிய ராமலிங்கமே
வென்றேன் அங்கு வரட்டுமா.
வரம் எனப்படும் வள்ளலின் அருளை
கர மேந்தும்நாள் எந்நாளோ - சர
ஓட்டங் கண் டாட ராமலிங்கமே
பாட்டுக்குத் தாளம் போடுவாய்.
வாயெல்லாம் இனிக்க வானவனைப் பாடி
ஆய்ந் திருக்கும்நாள் எந்நாளோ - ஓய்ந்திருக்க
ஆகுமோ என் அய்யா ராமலிங்கமே
சாகுமோ எனது சங்கம்.
சங்கத்தில் இருந்தே சாதுவாகி சாகாத
அங்கமாகும் நாள்தான் எந்நாளோ - தங்கம்
செய்யு மாற்றல் சனித்தும் ராமலிங்கமே
அய்யோ அதனை அண்டேனே. 300
(இராமலிங்க
அந்தாதி - தொடரும்)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.