அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
இராமலிங்க
அந்தாதி (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqVEdIMUpQUVpZTTQ/view?usp=sharing
நேரிசை
வெண்பா
அருட்பெருஞ்
ஜோதி அடிபணிந்து தனிப்
பெருங் கருணை
பெற்றேன் - நெருப்பென
இருக்கும்
என்னை அணைத்து ராமலிங்கமே
குருவென வந்து
கலந்தான்.
கலக்கும் முறை
கற்றிலேன் உன்னை
நலமுற வணங்கி
நாடிலேன் - குலமும்
கோத்திர
மயக்கமும் கழன்று ராமலிங்கமே
தோத்திரம்
ஆனான் தனக்கு.
தனக்கோர் மதம்
தானில்லை எம்மதமும்
உனக்கோர்
பொருட் டில்லை - மனத்தில்
பதிந்த
மதத்தைப் பிரிந்து ராமலிங்கமே
கதிஎன காலங்
கழித்தேன்.
கழித்த
காலங்களைவிட கழிந்தக் காலங்கள்
இழிவாய்
இருப்பது இயல்பு - விழித்திருந்து
அழியாதக்
கல்வி அளித்த ராமலிங்கமே
பழியாதப்
பாடம் புகட்டுவாய்.
புகட்டியப்
புராணப் புளுகில் சாத்திர
சகதியில்
மீளாது சிக்குண்டேன் - சகத்தில்
சுத்த
சன்மார்க்க சாலையிட்ட ராமலிங்கமே
முத்தங்
கொடுத்து மீட்டான்.
மீட்டுகின்றான்
நான் மீளும்வரை என்னை
ஆட்டுவித்து
என்னை ஆளுகின்றான் - பாட்டு
எழுதவிட்டு
என்னை எழுப்புகின்றான் ராமலிங்கமே
விழுதாய்
என்னுள் வந்தானே.
வந்த
நோக்கமறிந்து வரவுசெலவு மின்றி
இந்த
தேகத்தில் உறைந்தேன் - அந்தமும்
ஆதியும்
கண்ணுறக் கண்டேன் ராமலிங்கமே
நாதியாய்
இருந்தான் நன்று.
நன்றெல்லாம்
நீயானாய் நன் மார்க்க
சன்மார்க சங்க
சீரானாய் - பன்மார்க்கப்
பொரு ளெல்லாம்
போக ராமலிங்கமே
ஒருபெரும்
பொரு ளானான்.
ஆனவையாவும்
அளந்து அண்ட முழுதும்
வானகத்தில் அடக்கு
வித்தாய் - கானகத்தில்
நிறைந்த
மரங்களின் நடுவில் ராமலிங்கமே
இறையென
இருக்கின்றான் இங்கு.
இங்குமங்கும்
எங்கும் எதிலும் நீக்கமறத்
தங்கி யருளும்
தயாளன் - சங்கு
ஊதும் சடங்கை
உடைத்த ராமலிங்கமே
ஓதுவாய்
என்றும் அன்பினை. 10
அன்பினால்
என்னை அணைத்து என்
துன்பம் அறத்
துடைத்தாய் - வன்குண
மாயை நீக்கி
மாயமான ராமலிங்கமே
சாயையாய்
என்னைச் சார்.
சார்ந்தேன்
சன்மார்க்க சற்குரு நாதனைச்
சேர்ந்த நான்
சத்தியனானேன் - நேர்ப்பட
நான்பாட
என்னுள் நடமாடும் ராமலிங்கமே
வான்என
இருப்பதுநின் வரமே.
வரமொன் றருளி
வஞ்சக னெனைநின்
கரத்தில்
ஏந்திக் களித்தாய் - மரத்தில்
கனிந்தக்
கருணை கனியாம் ராமலிங்கமே
இனியார்க்கும்
நீயே ஆருயிர்.
ஆருயிர் உள்ளொளிர் அறிவே உலகில்
ஓருயிர் வாட ஒவ்வாய் - பாருக்கெல்லாம்
ஜீவ காருண்ய சீர்புகலும் ராமலிங்கமே
பாவம் தொடாதெனைப் பார்.
பார்வை ஒன்றே பாவம் போக்கும்நின்
கூர்விழி உலகைக் காக்கும் - போரில்லா
அமைதி ஓங்கும் எங்கும் ராமலிங்கமே
இமையாய் காத் திருப்பான்.
இருப்பது எதுவோ இல்லாதது எதுவோ
விருப்பம் எதிலும் வையேன் - திருப்பம்
வருமென உனை வணங்க ராமலிங்கமே
உருவாய் வந்து அருளாய்.
அருளும் பொருளும் அளித்து நிற்பாய்
இருளும் ஒளியும் இன்றியே - மருதூர்வாழ்
மரகதமே வடலூர் மணி ராமலிங்கமே
மரணமிலா மணி மகுடமே.
மகுடம் அணிவித்தெனை மன்னன் ஆக்கியே
புகுந்து கலந்திட்டான் புண்ணியன் - தகுந்த
எனக்குநல் உயிரான என் ராமலிங்கமே
மனதிற்கு இனிய மன்மதா.
மன்மதக் கலையால் மனிதனை மாய்க்கும்
துன்பம் நீக்கி துயரறுத்தாய் - அன்பே
என் நிலையாக்கி ஏற்றிட்ட ராமலிங்கமே
உன்பேர் சொல்லி உயர்ந்தேனே.
உயர்ந்த மனமருளி உத்தம நிலையருளி
நயந்துச் சொல்லிநிலை நாட்டினாய் - மயக்கும்
மங்கையர் முகத்தை மறந்து ராமலிங்கமே
அங்கமென ஆடா தமர்ந்தேனே. 20
அமர்ந்த என்னை அழைத்து ராமலிங்காய
நமவென் றென்னை நாட்டினாய் - கமலமலர்
சடத்தில் ஞான சபையாகி ராமலிங்கமே
நடன மிடுகின்றான் நடுவே.
நடுவைநாடி நடந்து நடுவிரவில் அடைந்து
கடுகென இருப்பதைக் கண்டேன் - அடுத்து
அதனுள் அண்டவெளி எல்லாம் ராமலிங்கமே
உதயமாக இருக்க உணர்ந்தேனே.
உணர்வாகி எனது உணர்ச்சியாகி காதலாகி
மணந்து கலந்த மணாளா - குணமெலாம்
குற்றமாய் இருந்தும் என்னை ராமலிங்கமே
சுற்றமாய் வந்து சூழ்ந்தான்.
சூழ்ந்தென வெல்லாம் சுகம் பெறவே
ஆழ்ந்தன அதை என்னென்பேன் - ஏழ்திரை
நிலைகளும் விலகி நிற்க ராமலிங்கமே
கலையாக நான் கற்றேன்.
கற்றவனின் சிறப்பைக் கூற அருட்ஜோதி
பெற்றவராலும் கருப் படாது - சிற்றவனின்
சிற் சபையில் சுகமளிக்கும் ராமலிங்கமே
சற் குருவேஎன் செந்தமிழே.
செந்தமிழால் நானுனைப் பாட இங்கு
வந்து என்னை வாழ்த்தாய் - எந்தையே
எண்ணமெலாம் நிறைந்த என் ராமலிங்கமே
வெண்பா வாகிய வெளியே.
வெளியெலாம் காணும்
விழி பெற்றேன்
தெளிந்த முக்கண்
தயவாலே - ஒளிஒன்றே
வான்முழுதும் இருந்து
விளங்க ராமலிங்கமே
தான் நிறைதான் தன்னுள்.
உள்ளே ஒளிந்திருந்து
உள்ளம் கலந்திருந்தக்
கள்ளக் காதல் கனிந்திடுமோ - எள்ளிபிறர்
நகைத்திடாது எனை
நாடி ராமலிங்கமே
பகை வென்றான் பரிந்து.
பரிந்துரை செய்தாய் புண்ணியா உனக்கு
சரிநிகர் ஆனேன்
சங்கத்தில் - எரிந்தது
முப்புறம் அப்புறமும்
முயல ராமலிங்கமே
எப்புறமும் ஆனான்
எனக்கு.
எனக் கென்றால் எதிர்நின்று
எதையும்
மனங் கோணாமல் மகிழ்ந்தாய் - தனமும்
தயவு குணமெல்லாம்
தந்த ராமலிங்கமே
மயங்கிக் கலந்தான்
மனதில். 30
மனமெனு மோர்குரங்கை மதித்து எனக்கே
வனமாகி வந்துதித்த வள்ளலே - இனமாகி
மதியாகி விதியாகி மருதூர் ராமலிங்கமே
கதியாகிக் களித்தேன் காணீரோ.
காணாதக் காட்சியைக் காட்டுவித்து என்னைத்
தூணாகத் தாங்கியத் தலைவன் - ஆணான
அழகன் முக்காடு அறிவன் ராமலிங்கமே
உழவனாகி என்னை உழுதான்.
உழுது பயிர்செய்து உரமும் போட்டு
அழுதே நீர்பாய்ச்சி உயர்ந்தேன் - நழுவி
பாலில் விழுந்தப் பழமாய் ராமலிங்கமே
கூலி கொடுக்கக் கண்டேன்.
கண்ணிமை நேரத்தில் கடவுளைக் கடந்து
உண்மை தெரிந்து ஊமையானேன் - பெண்மை
பெற்ற பேரின்பம் பகருமோ ராமலிங்கமே
உற்ற தேகத்தை யடைந்தேனே.
அடைந்த மரணங்கள் அளக்கில் பல்கோடி
கடைசி காயமிது கலந்ததே - மடைதிறந்த
வெள்ளம் போல் வெள்ளாடை ராமலிங்கமே
துள்ளிக் குதிக்கின்றான் தன்னகத்தே.
அகத்தே விரியும் உலகெலாம் உள்ளவன்
இகத்தே நானானான் என்னவன் - யுகமெலாம்
கடக்கினும் காணாக் காட்சியாய் ராமலிங்கமே
கடவுளானான் கருணைக் கொண்டு.
கொண்டதும் சன்மார்க்கம் கண்டதும்
உயிருக்கு
தொண்டு செய்வதே தொழிலாம் - உண்பதற்கு
தாவர உணவையேத் தந்த ராமலிங்கமே
பாவந் தவிர்த்தான் பயந்து.
பயந்தேன் பாடைமேல் படுத்தாரை பார்த்தேநீ
நயமாய் உரைக்க நடித்தேன் - தயக்கமின்றி
மரணமிலாது வாழ முயன்று ராமலிங்கமே
சரண மென்று சன்மார்க்கியானேன்.
ஆனேனென்று அன்று அறைந்த முரசெலாம்
தானேவந்து இன்று தானியங்குதே -
நானேஇங்கு
வானேபோ லானேன் வலிந்து ராமலிங்கமே
ஊனே புகுந்த அதனால்.
ஆலும்தன் விழுதுபோக ஆடுமே ஆனாலென்
வாலும் ஆடாது வலுப்பெறும் - காலும்
வேகாது புனலும் போகாது ராமலிங்கமே
சாகாத் தலை சமைத்தான். 40
சமைத்த
மதங்கள் சாத்திரங்கள் யாவும்
அமைத்து
ஒருபயனு முறார் - எமையாளும்
சுத்தசன்
மார்க்க சாலையில் ராமலிங்கமே
நித்தி
யானந்தம் நல்குவான்.
நல்கும்
நலமெல்லாம் நாட்டி என்னை
நல்லவன் என்றே
நாட்டினாய் - வல்லவன்
செய
லெல்லாம்நான் செய்ய ராமலிங்கமே
ஜெய மென்று
ஜொலித்தேனே.
தேனினும்
இனிக்கும் தெய்வம் எங்கள்
ஊனிலும்
உதிக்கும் உதயம் - நானிலம்
போற்றும்
தெய்வம் புகழ் ராமலிங்கமே
ஏற்றும்
அருட்ஜோதி இறைவன்.
இறைவன்
இவனென்று உரைத்த மதங்களும்
மறைகளும்
காணாது மறிந்தன - குறையொன்றும்
இல்லா
சுத்தசன்மார்க்க இயலில் ராமலிங்கமே
எல்லார்க்கும்
இறைவ னானான்.
ஆனா னென்று
ஊதியசங் கெல்லாமவன்
நானாக ஊதூதி
நிலைக்கும் - கூனாத
உடல்பெற்று உள்ளம் உருக ராமலிங்கமே
வடம் பிடித்து
வருவான்.
வருவான்
தருவான் வள்ளவன் என்றே
ஓராயிரம்
பாடல்கள் ஓதிநின்றேன் - ஈராயிரம்
வெண்பா
படித்து வேண்ட ராமலிங்கமே
தெண்ட னிட்டுத் தருவான்.
தருகின்றான் என் தலைவன் யாருக்கும்
அருள அகஇனம் ஆகுவீர் - தருணம்
இதுதானே வாரீர் இங்கு ராமலிங்கமே
அது வாகி ஆள்கின்றான்.
ஆள்கின்ற அடிக்கு ஆளாவோம் அவன்
தாள் தொட்டு தெண்டனிடுவோம் - நாள்தோறும்
அன்னதான மிட ஆளும் ராமலிங்கமே
உன்னைத் தேடி யருள்வான்.
வான்பொருள் காட்டியங்கு விளங்கும் எம்
மான்நிலை காட்ட மகிழ்ந்தேன் - நானென்ப
தெல்லாம் இனிநீயே என ராமலிங்கமே
செல்லாத நிலை சொன்னான்.
சொன்ன வரைக்கும் சென்று விட்டேன்
பொன்னான மேனியும் பெற்றுவிட்டேன் - தன்
நிகரில்லா பெரு நிலைபெற்ற ராமலிங்கமே
அகத்தில் சென்று
ஆழ்ந்தானே. 50
ஆழ்ந்திருக் கும்போது ஆளாத அண்டமெலாம்
வாழ்ந்திருக்கக் கண்டு வியந்தேன் - ஊழ்வினையை
அங்குள்ள உயிருக்கும் ஊட்டி ராமலிங்கமே
எங்குமாய் விளங்க எட்டானே.
எட்டானை அன்பினால் எட்டுவித்து அவனை
அட்டத்தில் பிடிக்க அமர்ந்தானே - விட்டத்தில்
நின்றுபார்க்க முழு நிலவாய் ராமலிங்கமே
என்னைப் பார்த்து ஏங்கினான்.
ஏங்கிய ஏக்கம் அறிந்து காதல்மடலை
வாங்கிப் படித்து வாஎன்றான் - ஓங்கிய
அண்டமெலாம் என தன்பை ராமலிங்கமே
விண் ணொளியாய் விரைத்தான்.
விரைந்து அருள்வார் வள்ளலார் என்றே
நரைவரும் முன்னே நாடுகின்றேன் - திரை
எல்லாம் தீர்த்து எனக்கு ராமலிங்கமே
பல்லாண்டு வாழ பதித்தான்.
பதித்த திருமுறை பன்னிரண்டும் சன்மார்க்கம்
உதித்த திருமுறைக்கு ஈடில்லை - மதித்த
சைவ வைணவ மதமெலாம் ராமலிங்கமே
நையப் புடைத்து நகர்ந்தானே.
நகர்ந்த அத்தருணம் நானும் சன்மார்க்க
உகத்தில் திருமுறை அளித்தேன் - சகத்தில்
எட்டாம் திருமுறை இதுவென ராமலிங்கமே
சட்டம் இயற்றி சார்ந்தான்.
சார்ந்த சன்மார்க்கத்தில் சாகாதிருக்க நான்
ஊர்ந்து உயிரொளி உற்றேன் - ஓர்நிலையை
அடைய வருமக இனத்தார்க்கு ராமலிங்கமே
உடைய பேரருள் உண்டாமே.
உண்டுண்டு உறங்கி உயிர்விட்டுப் பிணமாய்க்
கண்டகால மெல்லாம் கனவே - கொண்ட
சுத்தசன்மார்க் கத்தில் சாகாத ராமலிங்கமே
மத்தியில் வர மாயைஓடுமே.
ஓடுகின்றேன் வடலூர் ஒளியைக் காணவே
பாடுகின்றேன் சன்மார்க்க மோங்கவே - ஆடுகின்றேன்
பொற்சபை நாட்டியம் போலவே ராமலிங்கமே
சொற்படி நான்நடக்கச் சாற்று.
சாற்றுவேன் சன்மார்க்க சங்கமதையே நான்
போற்றுவே னங்கு புனிதனாகியே - ஊற்றுபோல்
சொற் றொடரைச் சொல்லி ராமலிங்கமே
பொற் பாடலைப் பகர்ந்தான். 60
பகருகின்ற ஒவ்வொரு பாடலும் பரமனே
உகந்தளித்தான் எனக்கே உண்மை - பகலவன்
பொன்னொளி அகத்தில் பட்டு ராமலிங்கமே
இன்பமென துடிக்குதென் இதயம்.
இதயஇயக்க மனைத்தும் இறைவா நின்
பதத்தில் வைத்தேன் பாராய் - உதய
காலம் வருங் காலமெனவே ராமலிங்கமே
ஓலமிட்டு நமை எழுப்புவான்.
எழுந்தவரெல்லாம் இறவார் இறந்தவ ரெல்லாம்
எழுவார் என்பது உண்மை - அழுதாரெல்லாம்
சிரிக்கக் காண்பது சன்மார்க்கம் ராமலிங்கமே
புரிகின்ற செயலிது பாராய்.
பார்த்துப் படித்தப் படிப்பெல்லாம்
பொய்யே
பார்க்காமல் படிக்கும் படிப்பறியாய் - மார்க்கம்
கூறும் சாகாக் கல்வியை ராமலிங்கமே
சோறு போட்டு சொன்னான்.
சொன்ன சொல்லின் சொந்தக்காரன் என்
கன்னந்தடவி இதழ் குவித்தான் - பின்
இடைதழுவி கூடி இணைய ராமலிங்கமே
கடை விரித்துக் கொண்டான்.
கொண்டதன் கடையில் கொள்வார் இல்லை
பண்டத்தை மூடி கட்டிட்டானே - பண்ணால்
பாடவே கட்டியக் கடையை ராமலிங்கமே
ஊடலின்றி கூட உடைத்தான்.
உடைத்ததன் கடையில் உள்ளே நுழைந்து
எடையின்றி கொள்ள லாமே - படைதிரண்டு
வாரீர் உலகீர் வள்ளல் ராமலிங்கமே
வாரி அணைக்கின்றார் வாரீர்.
வாரீர் வாரீர்வந்து வள்ளலாரின்
கடையைப்
பாரீர் பாரீர்பார்த்துப்
பயனுறுவீர் - தேரீர்
மாண்டா ரெல்லாம் மீள ராமலிங்கமே
மீண்டும் விரித்தான் மடியை.
மடிசுரந்த அமுதை மதுவாகக் குடித்து
அடிசறுக்கி வீழ்ந்தேன் அய்யோ -
முடியா
லொரு மலையை இழுக்க ராமலிங்கமே
அருளால் செய்து முடித்தான்.
முடிந்த முடிவுகள் முடியாத
எல்லைகள்
அடிமுடி வட்டம்போ லாகும் - கடிந்த
மதத்தை விரும்பி மயங்க ராமலிங்கமே
உதைக்க வந்தான் உள்ளே. 70
உள்ளொன்றி இருக்கும் உண்மை யறிந்து
கள்குடித்துக் களித்தேன் கடவுளே - தள்ளாட்டம்
போக்கி ஒருமையுடன் பற்றி ராமலிங்கமே
நோக்கினான் நம்மை நயந்து.
நயந்து சொன்னதெல்லாம் நயக்க ஆனதோ
வியந்த தெல்லாம் வியர்த்தமானதோ - பயந்து
பாவச்செயல் செய்யாப் பாவியை ராமலிங்கமே
கோவப்படப் பார்ப்பது கருணையோ.
கருணையால் கல்லும் கரைந்ததே தயவால்
இருளும் ஒளியானது இங்கே - விருந்தென
மனதிற்குக் கிடைத்த மாமருந்தே ராமலிங்கமே
உனையன்றி எனக்கேது உயிரே.
உயிரென்று இருப்பது உண்மையோ அன்புக்
கயிற்றை பாம்பென கூறுவதோ - வயிற்றுப்
பசிபோல் என்றும் பிரியாத ராமலிங்கமே
வசிக்க உயிராய் வந்தான்.
வந்தநாள்முதல் வடலூரே வாழ்வென இருந்தேன்
எந்தநாளும் எனக்கில்லை இனியே - சந்தமிகுப்
பாடல் உனக்காகப் பாடியே ராமலிங்கமே
ஆடல் புரிந்திருப்பேன் அழகாகவே.
அழகாய் தலைவாரி அழகன் உனக்காக
கழனியில் தனியே காத்திருந்தேன் - பழமுடன்
பாசமாய் வந்து பூச்சூடினாய் ராமலிங்கமே
தாசனாக நானும் தாசியானேனே.
தாசியாய் இருக்கஆசி தாருமய்யா உன்னை
பாசியாய் பிடித்திருக்க பிடிக்குதய்யா - நாசியில்
சென்று வருமென் செல்ல ராமலிங்கமே
என்றும் நீஇருக்க இறவேனே.
இறப்பதும் பிறப்பதும் இறைவன் செயலென்றால்
இறைவனும் இறப்பான் அன்றோ - இறப்பதை
தவிர்த்துப் பிறப்பதை தடுக்க ராமலிங்கமே
புவியை வென்று புகன்றான்.
புகன்ற சொல்லெல்லாம் புத்தியில் எட்டாது
அகன்று சென்றேன் என்னய்யாவே - தகன்று
போகாது என்னைப் பிடித்து ராமலிங்கமே
நோகாது நிறுத்தினான் நாட்டிலே.
நாட்டிலே நாட்டிய நான்மறையும் மற்றதும்
வீட்டிலே திரியும் விலங்காகும் - ஏட்டிலே
கூட்டிய எழுத்தைக் காட்ட ராமலிங்கமே
பாட்டிலே பாடியது போலாமோ. 80
ஆகின்ற செயலெல்லாம் ஆள்கின்றாய் போற்றி
போகின்றபோக் கெல்லாமானாய் போற்றி - சாகின்ற
போதெல்லாம் தடுத்தாய் போற்றி ராமலிங்கமே
போற்றி நாதமுடிவே போற்றி.
போற்றி எனைப் பாடவைத்த பொற்சபை
சாற்றி எனைஏற்றியது சிற்சபை - காற்றில்
உள்ள வேகமாய் உருவான ராமலிங்கமே
அள்ளி வீசினான் ஆற்றலை.
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி
கூற்றதை ஓட்டும் காலஜோதி - ஏற்றதை
அளித்து மாற்றத்தை அருள ராமலிங்கமே
ஒளியாய் வரும் எளியஜோதி.
ஜோதிஜோதி ஜோதிஜோதி ஜோதி யென்று
ஓதுமே ராமலிங்க அந்தாதியே - ஆதிநீதி
அந்தம் யாவும் ஆட்டியே ராமலிங்கமே
பந்தமுற்று வந்தான் பாட்டிலே.
பாட்டெல்லாம் அவன் புகழையேப் பாடும்
ஏட்டெல்லாம் அவனையே எழுதும் - ஊட்டிய
உணர் வெல்லா மென் ராமலிங்கமே
மணம் புரிந்து மகிழ்வான்.
வானத்தைத் தேடி விண்ணிலே செல்லினும்
கானத்தை பார்க்கக் கூடுமோ - நானடங்கி
கரனங்கள் யாவும் கழல ராமலிங்கமே
சரண மென்பது சன்மார்க்கம்.
சன்மார்க்க சாலையில் சித்தர்பல ரிருக்க
என்மார்க்கம் வந்தான் ஏனடி - நன்மார்க்க
மெல்லாம் சன் மார்க்கமென ராமலிங்கமே
பல்லார்க்கும் பகன்றான் பாரடி.
அடிமுடி காணாத அற்பன்நான் திருவருட்பா
அடிக்கடிப் படிக்க அடிமுடியானேன் - தடியடி
சண்டை யிட்டு சோர்ந்தேன் ராமலிங்கமே
கண்திறக்க கண்டேன் காட்சி.
காட்சிக்கு எளியவன் கண்ணுக்கு ஒளியவன்
ஆட்சிக்கு அரசனவன் ஆரேடி - சாட்சிக்கு
வருவா னவன் வடலூர் ராமலிங்கமே
தருவானருளை அவன் தானடி.
தானம் செய்யசெய்ய தானே பையபைய
ஊனம் போக்கி உயர்த்துவான் - நானங்
கொண்டு களவி காண ராமலிங்கமே
தண்டில் ஏறி தங்கினான். 90
தங்கியவன் குண்டலிப்பால் தந் தென்
அங்கப்பசி நீக்கி ஆய்ந்தான் - தங்கமே
அணையார் சங்க மதில் ராமலிங்கமே
இணையாக வைத்தான் என்னை.
என்னதவம் செய்தேனோ என்னவன் மடி
தன்னில் தலைவைத்து துஞ்சவே - கன்னத்தில்
முத்தமிட்டு இன்பம் மலர ராமலிங்கமே
பித்தனா னானென் பார்வையில்.
பார்வை ஒன்று போதுமே என்னவன்
போர்வை கழண்டு போகுமே - ஓர்சொல்லுக்கு
ஏங்கிய அவன் ஏக்கத்தால் ராமலிங்கமே
தாங்கிய ஆடை துடிக்குமே.
துடிக்கு மென்னிரு தனங்களும் அவன்கைப்
பிடிக்கு அடங்கிப் பெருகுதே - இடிக்கப்
பெய்தபெரு மழைப் போல ராமலிங்கமே
தெய்வ சுகமதைத் தந்தான்.
தந்தான் தந்தான் தேனிதழ் உதட்டால்
எந்தன் மேனியை அளந்தான் - வந்துநான்
பாடியப் பாடலைப் பார்த்து ராமலிங்கமே
ஆடிய ஆட்டம் அறிவேன்.
அறியாயோ எனது ஆனந்த மூச்சின்
வெறியதை அடக்க வாராயோ - குறி
எல்லாம் காத லுறுமே ராமலிங்கமே
அல்லால் எனக்கு ஆரே.
ஆர்கண்டார் என் அண்ணலை அவர்
பேர் கொண்டேன் பெரிதே - பார்போற்றும்
மன்னவனை நான் மீட்ட ராமலிங்கமே
என் ராகத்தில் அசைந்தான்
அசைந்த உள்ளத்தில் ஊஞ்ச லாடியே
இசைக்க நான் இச்சையானேன் - பசையால்
ஒட்டிய காகிதமாய் என் ராமலிங்கமே
கட்டி இறுக்கக் கண்டேனே.
கண்களும் காணாத காட்சி அவன்
எண்களும் காணாத நீட்சி - பண்களும்
காணாதப் பாட்டைக் காண ராமலிங்கமே
பாணாத் தாளம் போட்டான்.
போட்டத் தாளத்திற்கு பாடின தோத்திரம்
ஏட்டில் எழுத ஏழ்கடலாம் - கூட்டில்
கூடும் குருவி களாய் ராமலிங்கமே
பாடும் வீட்டைப் பாராய். 100
(இராமலிங்க
அந்தாதி - தொடரும்)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.