பயோ
வெப்பன்
(தி.ம.இராமலிங்கம் – 03-04-2020)
கொரோனா
வைரசை தடுக்க உலக வங்கி இந்தியாவிற்கு 1 பில்லியன் டாலர்கள் நிதியுதவி (கடன்) அளிக்கின்றது.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 7613 கோடியே 50 லட்சம் கடன் வழங்குகின்றது. இதன் வட்டி
விகிதம் என்னவென்றும், எத்தனை வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பன பற்றி
வெளிப்படையாக நமக்குத் தெரியாது. இந்தியா கடன் உதவி கேட்காமலேயே இந்த கடன் தொகை நமக்கு
கிடைக்கின்றது. இது போல இன்னும் சில நாடுகளுக்கும் கடன் கொடுக்க உள்ளது.
கொரோனாவிற்காக
நமது நாட்டு நிறுவனங்கள், தனி நபர்கள் எல்லோரும் கோடி கோடியாக நமது அரசிற்கு கொடுத்துக்
கொண்டிருக்கின்றார்கள். மத்திய மாநில அரசும் பொது மக்களிடம் நிதி தாருங்கள் என வெளிப்படையாக
கேட்டு பெறுகின்றன. மேலும் தங்களுடைய ஊழிர்களின் ஊதியத்திலிருந்தும் தானாக ஒரு நாள்
ஊதியம் என பிடித்தம் செய்துக் கொள்கின்றன. இவையன்றி கொரோனா சிகிச்சை அளிக்க பல அரசியல்
கட்சிகள் தங்களுடைய இடங்களை அளிக்கின்றன. இவையன்றி அரசு தேவைப்பட்டால் திருமண மண்டபங்கள்,
அனைத்து மத வழிபாட்டுத்தளங்கள் இவைகளை பயன்படுத்திக்கொள்ள தடைகளும் இல்லை. நம் நாட்டு
மக்களிடம் பெற பெற்ற நிதிகளுடன் மத்திய அரசின் நிதியையும் சேர்த்து செலவு செய்தாலே
கொரோனா ஒழிப்பிற்கு போதுமானதாக இருக்கும். கொரோனா பாதிப்பை சரிசெய்ய அமெரிக்க அரசு
அங்குள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.90,000/- இனாமாக அளிக்கின்றது. ஆனால் இந்தியா மக்களிடமும்
வாங்கிக்கொள்கின்றது. உலக வங்கியிடமும் வாங்கிக்கொள்கின்றது. வெறும் ஆயிரம் இரண்டாயிரம்
என ஒருவருக்கு அல்ல, ஒரு குடும்பத்திற்கு கொடுத்து கொரோனா பாதிப்பை சரிசெய்ய நினைக்கின்றது
இந்தியா. மக்களிடம் மூன்று மாதத்திற்கு இ.எம்.ஐ. வாங்க வேண்டாம் என சொன்னாலும் அதனை
இந்திய நிதி நிறுவனங்களும், வங்கிகளும் கேட்பதாக இல்லை. தற்போது இந்த ஊரடங்கு உத்தரவால்
இந்தியாவில் உள்ள 90 சதவிகித மக்கள் மாதந்தோறும் தாங்கள் வாங்கிய கடனுக்கு இ.எம்.ஐ.
கட்ட சிரம்படுகின்றனர். வீட்டு வாடகை, மின் கட்டனம், உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய
தேவைகளுக்கு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.
ஆனால்,
உலக வங்கி இந்தியாவிற்கு இப்படி வலிந்து வந்து கடன் கொடுப்பது எதனால்? இத்தொகையினை
இந்தியா கொரோனா ஒழிப்பிற்கா பயன்படுத்தப் போகின்றது? இல்லை. நாடுகள் ஏற்கனவே வாங்கிய
கடனுக்கான வட்டியை கட்டுவதற்கும், பழைய கடன்களை புதுப்பிக்கவுமே உலக வங்கிகள் கடன்களை
பல்வேறு நாடுகளுக்கு வழங்கி வருகின்றன.
பல
நாடுகள் இந்தியா உட்பட தங்களது இராணுவ தளபதிகளுக்கு விளையாட பொம்மைகள் வாங்கிக் கொடுக்கவே
தங்களது நிதி ஆதரங்களை எல்லாம் பயன்படுத்தி விடுகின்றன. இராணுவ வரவு செலவு என்பது அனைத்து
நாடுகளுக்கும் பெரும் சவாலாக உள்ளன. ஒவ்வொரு நாடும் தமது அண்டை நாட்டை பார்த்து பயப்படுவதுதான்
இதற்கு காரணம். ஆயுதங்களுக்காக எவ்வளவு செலவு செய்தாலும் அதனால் ஒரு பயனும் கிடையாது
என்ற வெளிப்படையான உண்மை, நாட்டு பாதுகாப்பு என்ற வார்த்தையில் மறைக்கப்படுகின்றது.
இராணுவ செலவீட்டில் வெறும் நுகர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆயுதங்களை கடனில் வாங்கும்
நாடுகள், அசலோடு வட்டியையும் சேர்த்துத் திரும்பக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால் இவற்றிலிருந்து
எந்தவிதமான வருமானமும் வருவது இல்லை. இராணுவச் செலவு என்பது உலகை பயங்கரமான விளையாட்டில்
வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துகின்றது. இதில் நிச்சயமாக அனைவரும் தோல்வியடைய போவது உண்மை.
ஒரு
நாடு அதன் கடனை உலக வங்கிக்ளுக்கு அடைக்க முடியா தருணத்தில், என்ன நடக்கும்? அப்படிப்பட்ட
சமயங்களில் அந்நாட்டின் சொத்துக்கள், உலகெங்கும் அதற்கு கடன் கொடுத்த நாடுகளால் கையகப்படுத்தப்படும்.
அதன் ஏற்றுமதிகள் ஒவ்வொரு துறைமுகத்திலும் பறிமுதல் செய்யப்படும். அந்நாட்டின் விமான
போக்குவரத்து தொடர்ந்து இயங்க முடியாது. அதற்குத் தேவையான மூலதன பொருட்களும் உதிரி
பாகங்களும் ஒரேயடியாகக் கிடைக்காமல் போய்விடும். உணவு இறகுமதியும் தடை செய்யப்படும்.
அந்நாட்டு குடிமக்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். இது ஒன்றும் ஏற்புடைய காட்சி
அல்ல.
இவ்வாறு
ஏதும் நடந்துவிடாமல் பாதுகாக்க உலக வங்கிகள் அவ்வப்போது ஏதேனும் காரணத்தை அதுவாகவே
ஏற்படுத்திக்கொண்டு மீண்டும் மீண்டும் கடனை அளித்து வருகின்றன. நம்மை போன்ற நாடுகளும்
தங்களது வட்டியை அடைக்கவே புதிய கடன்களை வாங்கி வாங்கி வட்டித் தொகைகளை அதிகரித்துக்கொண்டுள்ளன.
அசலை பற்றி பேச்சுக்கே இடமில்லை.
தற்போத
நிலையில் ஓர் உண்மை உலகிற்கு தெரிய வந்துள்ளது. இனி ஆயுதங்களை பயன்படுத்தி ஒரு நாட்டு
இராணுவம் அதன் நாட்டை காப்பாற்ற முடியாது என்பதே அது. கொரோனா என்கின்ற உயிரிப் போர்
(BIO WAR) தற்போது உலகெங்கும் நடந்து வருகின்றது. இதற்கும் காரணம் உலக நாடுகளின் பொருளாதார
வேட்கைதான். உயிரிப் போர் - எந்த நாடு, எந்த நாட்டுக்கு எதிராக நடத்துகின்றது என்பதே
வெளிப்படையாகத் தெரியாது. உலகில் உள்ள மக்கள் கொத்து கொத்தாக சாகின்றார்கள். எந்த இராணுவமும்
இதனை தங்களது ஆயுதங்களைக் கொண்டு தடுக்க முடியாது. இனி இவ்வாறுதான் போர் நடக்கும் என்பதன்
ஆரம்பம்தான் இந்த கொரோனா. ஆகையால் ஒரு வழியில் இதுவும் உலகிற்கு நல்லதே. ஆயுத கொள்முதலில்
தங்களுடைய நிதியாதாரங்களை அழித்த நாடுகள் எல்லாம் இனி, அந்நிதிகளை தங்களுடைய மக்களின்
முன்னேற்றத்திற்காக பயன்படுத்தத் தொடங்கும். உயிரிப் போரால் உலகின் மக்கள் தொகை படிப்படியாக
குறையும். இருக்கும் வரை வசதியாக வாழ்வார்கள், போர் என வந்துவிட்டால் எல்லோரும் சாவார்கள்
என்ற நடைமுறைக்கு உலகம் வந்துவிடும்.
இராணுவத்திற்கு
வேலை இருக்காது. சில அறிவியல் விஞ்ஞானிகளின் கையில் இவ்வுலக உயிர்களின் வாழ்க்கை இருக்கும்.
எனவே இன்று இந்தியா வாங்கும் உலக வங்கிக் கடனே இறுதியானதாக இருக்கட்டும். இனி இராணுவ
நிதி ஒதுக்கீட்டினை பெருமளவு குறைக்க வேண்டும். நம்மிடம் உயிரிகள் (BIO WEAPON) உள்ளன
என்று மட்டும் வெளி உலகத்திற்கு சொல்லிக்கொண்டே (அச்சுறுத்திக்கொண்டே) நாம் நிம்மதியாக
வாழத் தொடங்குவோம். உயிரிகள் செய்ய ஒரு அறிவியல் கழகத்தை மிக நுட்பமாக அமைத்தால் மட்டும்
போதுமானது.
இனி
இவ்வுலகம் அடித்தட்டு மக்களுக்கானது. அவர்களின் வறுமையை ஓட்டி அனைவரும் செல்வந்தர்களாகவும்,
வளமாகவும், சமமாகவும் வாழ்வோம். இராணுவம் இல்லாத
நாடுகளில் மட்டுமே மக்கள் செல்வந்தர்களாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் என்கின்ற
ஒரு புதிய கோட்பாட்டை நமது உலகிற்கு கொடுத்த கொரோனாவிற்கு நன்றி சொல்வோம். - TMR
Download load e-book
https://drive.google.com/open?id=10OUSMte9ZE-2K92HvDyWHkTHyuiTzF7S
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.