MONTHLY POOSAM - 2020-21
அன்பர்களே...! நடப்பு நிதி ஆண்டில் 02-04-2020 வியாழன் அன்று நமது வடலூரில் மாதப்பூசத்தன்று பக்தர்கள் இன்றி ஜோதி தரிசனம் நடைபெற்றது. வடலூர் வரலாற்றில் இவ்வாறு நடைபெற்றது முதல் முறையாகும். கொரோனா (கோவிட்-19) தொற்றால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டது. எனினும் தருமச்சாலை மட்டும் தினமும் இயங்கி வருகின்றது மகிழ்ச்சியளிக்கின்றது.
02-04-2020 அன்று பக்தர்கள் இன்றி வடலூரில் ஜோதி தரிசனம் நடந்ததை ஒரு அன்பர் தமது கைப்பேசியில் வீடியோ எடுத்த காட்சி மற்றும் புகைப்படம்.
உலகம் முழுதும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருப்பினும், நமது வடலூர் தருமச்சாலை பணிகள் மட்டும் என்றும் உயிர்ப்பு நிலையில் இருப்பதை தந்தி தொலைக்காட்சி மூலம் காணவும்.
30-04-2020 அன்றும் வடலூர் வரலாற்றில் இரண்டாவது முறையாக பக்தர்களின் வருகை இன்றி ஜோதி தரிசனம் நடைபெறும். கொரோனா காரணமாக ஊரடங்கு மே - 03 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் அன்பர்கள் யாரும் வடலூர் வரவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். இல்லங்களில் இருந்து குடும்பத்துடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை விளக்கேற்றி தொழவும். நன்றி.
தி.ம.இராமலிங்கம்.
27-05-2020 - வடலூர் வரலாற்றில் மூன்றாவது முறையாக பக்தர்களின் வருகை இன்றி ஜோதி தரிசன - மாதப்பூசம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு மே-31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் அன்பர்கள் யாரும் வடலூர் வரவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
27-05-2020 - வடலூர் வரலாற்றில் மூன்றாவது முறையாக பக்தர்களின் வருகை இன்றி ஜோதி தரிசன - மாதப்பூசம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு மே-31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் அன்பர்கள் யாரும் வடலூர் வரவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
23-06-2020 - அன்று நடைபெற இருக்கும் மாதப்பூசம் நான்காவது முறையாக தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஊரடங்கு இன்னும் இந்தியா முழுதும் நீடிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் (சில மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது) மூடப்பட்டுள்ளதால் வடலூர் ஞான சபையும் ஜோதி தரிசனம் காட்ட இயலாமல் உள்ளது. ஆகையால் அன்பர்கள் இம்மாதமும் வடலூர் வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது. நன்றி.
21-07-2020, 17-08-2020 மற்றும் 13-09-2020 மாதப்பூசங்களும் கொரோனா தொற்றால் தொடர்ந்து 7-ஆவது மாதமாக தடைபட்டுள்ளன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.