நமது கிரகத்தை காப்பாற்றும் சக்தி வாய்ந்த கருவி வீகானிசம் (சுத்த சைவம்)
சன்மார்க்கத்தில் ”சுத்த சன்மார்க்கம்” பிறந்ததும், சைவத்தில் சுத்த சைவம் பிறந்ததும் இறைவனின் தனிப்பெருங்கருணையால் வரப்பெற்றது. இங்கு நாம் “சுத்த
சைவம்” என்று
தமிழில் அழைப்பதையே உலக அளவில் ஆங்கிலத்தில் ”வீகான்” என்று
அழைக்கின்றார்கள். வெஜிடேரியன் vegetarian என்ற ஆங்கில வார்த்தையில் முதல் மூன்று எழுத்தான VEG மற்றும்
இறுதி இரண்டு எழுத்தான AN ஆகிய
எழுத்துக்களை மட்டும் ஒன்றினைத்து வீகான் (VEGAN)
என்று பெயரிட்டனர். இதன் தோற்றம் என்ற வரலாறு தனிக்கதை. அதனை
வேறொரு பதிவில் நாம் காண்போம். இன்று
நாம் காணப்போவது இந்த சுத்த சைவத்தைப் பற்றிய ஒரு காணொளி மட்டுமே.
இங்கு சுத்த சைவம் என்பதைத்தான் வீகான் என்று அழைக்கின்றோம். வீகான் என்பது தாவர உணவை மட்டுமே உண்ணும் கருணையுள்ள மனித வர்க்கங்களை குறிக்கும் ஒரு ஆங்கில சொல்.
வீகானிசத்தை பின்பற்றும் கருணையாளர்கள்
தங்களது உணவிற்கும், வாழ்க்கைக்கும் தாவரங்களைத் தவிர்த்து மற்ற விலங்குகளை எவ்வகையிலும் சார்ந்திருப்பதில்லை.
அதாவது பால், தயிர், மோர், வெண்ணை, நெய், மற்றும்
இவைகள் கலந்த மற்ற அனைத்து உணவுகள், தேன்
மற்றும் தேன் கலந்த அனைத்து உணவுகள், விலங்குத்
தோல்களில் உற்பத்தியான அனைத்துவிதமான பொருட்கள், பட்டாடைகள்
போன்றவைகளை அறவே தவிர்ப்பவர்களாக இருப்பார்கள். இவர்களையே சுத்த சைவர்கள் அல்லது வேகானிசத்தை பின்பற்றுபவர்கள் என்கின்றோம். உலக அளவில் அனைத்து மதங்களிலிருக்கின்ற மக்களும் இந்த வீகானிசத்தை பின்பற்ற தொடங்கிவிட்டார்கள். காரணம் அவரவர்களுடைய கடவுள் மற்றும் மதக் கொள்கை அல்ல. மாறாக
அவரவர்களுடைய இரக்க குணமே ஆகும்.
நாம் ஏன் இந்த வேகானிசத்தை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்,
இவ்வுலகில்
ஒரே ஒரு சிறிய உயிரினத்தை நாம் நமது உணவிற்காக வளர்க்க வேண்டுமானால், அவ்வுயிரை வளர்ப்பதற்கு
4158 லிட்டர் தண்ணீர், 20 கிலோ தானியங்கள், 30 சதுர அடி அளவுள்ள இடம் தேவைப்படுகின்றன.
மேலும் அவ்வுயிரினம் விடுகின்ற மூச்சுக்காற்றால் 9 கிலோ அளவுள்ள நச்சுக்காற்றான கார்பண்டை
ஆக்சைடு வெளியாகின்றது. அவ்வாறெனில் உலகெங்கும் மனித உயிர்களை விட, இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்ற
பல்வேறு விலங்குகளின் எண்ணிக்கை மிக அதிகம். இவற்றினால் நாம் இப்பூமியினை எந்த அளவிற்கு
அதன் புனிதத் தன்மையை அழிக்கின்றோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் வீகானிசத்தை கடைபிடித்தால், அதுவே நமது பூமியின் வளங்களை காப்பதற்கும், உலக மக்களின் பசியை போக்கவும் மிக அதிக சக்தி வாய்ந்த சாதனமாக உள்ளது.
நாம் நமது ஆரோக்கியத்திற்காக உணர்ந்து சாப்பிடும்போது, நமது ஆரோக்கியம் மேம்படவும், அத்துடன் உங்களுக்கே உண்டான இரக்க குணத்தை மீண்டும் பெறவும், நல்ல
மனிதர்கள் நாம் என்று நம்மை நாமே உணர்வதற்கும் இந்த வீகானிசம் உதவுகின்றது.
நாம் அனைவரும் விலங்குகளை நேசிக்கின்றோம் என்றே சொல்கின்றோம். ஆனால் விலங்குகளை சித்ரவதை செய்வதற்கும் விலங்குகளை கொல்வதற்கும் நாம் மற்றவர்களுக்கு பணம் கொடுக்கின்றோம்.
மனிதர்கள் போலவே விலங்குகளால் பயத்தை உணர முடியும். அவைகளால்
தனது இரத்தம் வெளிப்படுவதை வலியுடன் உணர முடியும். அவைகள்
தங்களது இறுதி காலத்தை விரும்பாமல் உங்களுடன் இறுதி வரை போராடுவதை நீங்கள் அறிகின்றீர்கள்.
வீகான் இல்லாத பலரிடம் நான் பேசியிருக்கின்றேன். இது வரை ஒரு சரியான காரணத்தைக்கூட நான் கேட்கவில்லை. அவர்கள் உடல் சக்திக்காக உண்பதாகவும், நாவின் ருசிக்காகவும் உண்பதாகவும் கூறுவது ஒரு சரியான காரணம் அல்ல. இவை இரண்டும் தாவர உணவிலேயே கிடைத்து விடுகின்றது. விலங்குகளை உணவிற்காக சார்ந்து இருப்பதில் எந்த ஒரு சிறப்புத் தேவையும் இல்லை.
நீங்கள் கொடூரமானவர்கள். ஆனால் நான் ஒரு வீகான் – சுத்த
சைவம், அதனால்
நான் எந்த ஒரு விலங்கின் உடலையும் எதற்காகவும்
உடைமையாக்குவது அல்லது மறைமுகமாகவும் பயன்படுத்துவது இல்லை. நான்
இதனை எனது வாழ்க்கை பயணத்தில் கடைபிடிப்பதுடன் எனது சமூக வலைத்தளங்களிலும் எழுதியும் பேசியும் வெளியிடுகின்றேன்.
ஆரோக்கியத்திற்காக அசைவத்தை உண்ணக்கூடிய அமெரிக்கர்களின் மரணம் இந்த முதல் 15 காரணங்களால் நடைபெறுகின்றன. ஆனால் தாவர உணவாளர்கள் இப்படிப்பட்ட 15 வகையான நோய்களையும் தடுத்துவிடுகின்றார்கள். நோய் வந்தாலும் அவர்கள் அதிலிருந்து விடுபட்டுவிடுகின்றார்கள். தாவர உணவாளர்கள் நோயினால் இறப்பது முற்றிலும் இல்லை.
அதாவது உடலுக்கு சக்தி கிடைக்குமென மாட்டிலுலிருந்து கிடைக்கும் பால், தயிர், மோர், வெண்ணைய், நெய் போன்ற விலங்குகளிலிருந்து கிடைக்கக் கூடிய அசுத்த உணவுகளுடன் விலங்குகளையே கொன்று உண்ணும் கொடியர்கள் அல்லது சைவம் என்று சொல்லிக்கொண்டு தாவர உணவுடன் பால் மற்றும் அதனைச் சார்ந்த உணவுகளை உண்ணும் சாதாரண சைவர்களும், உடல் ஆராக்கியம் கெட்டு நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர்.
இன்று இவ்வுலகமே கொரோனா வைரஸ், மற்றும் அதன் வகையான ஒமிக்கிரான் வைரஸ் ஆகிய உயிர்க்கொல்லி வைரஸ் மனிதனை தாக்க முக்கிய காரணமே, மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நான் வீகானாக இருப்பதுவே. உலகில் எப்பகுதியில் கொரானாவால் இறப்பு அதிகம் என கணக்கிட்டால், அப்பகுதி மக்கள் நான் வீகானாக அதாவது சுத்த சைவமாக இருக்க மாட்டார்கள். வீகானாக இருப்பவர்களை கொரோனா எதுவும் செய்யாது.
நான் வீகான்ஸ் உங்களையும் கொள்கிறார்கள், விலங்குகளையும் கொல்கிறார்கள், இந்த உலகத்தையும் கொல்கிறார்கள். நாம் விலங்குகளை உண்ணக்கூடாது என நமக்குத் தெரியும். நாம் எந்தவொரு விதத்திலும் அவற்றை உண்ணாமல், இந்த பூமியில் நமக்கான தனி முத்திரையை பதித்து புரட்சி செய்ய வீகானிசம் ஒரு வாய்ப்பாக இருக்கின்றது.நான் உலகம் முழுக்க பயணம் செய்திருக்கின்றேன். ஏழை நாடுகளில் தங்களது சொந்த குழந்தைகளுக்கே உணவு கிடைக்காத போது, அந்நாட்டில் வளரும் கால்நடைகளுக்கு உணவு வழங்குகின்றார்கள்.
நல்ல மனிதர்கள் பட்டினி கிடக்கும் குழந்தைகளின் உணவை சுரண்ட மாட்டார்கள். நல்ல மனிதர்கள் நமது குழந்தைகள் வளரும் இந்த பூமியை அழிக்க மாட்டார்கள். நல்ல மனிதர்கள் பிறந்த குழந்தையை கொல்வதில்லை. நல்லவர்கள் சித்ரவதை செய்து கற்பழிக்கமாட்டார்கள். நாம் நல்லவர்களையும் கொண்டுள்ளோம். அவர்கள் இக்கொடுமைகள் எதனையும் செய்வதில்லை. அவர்களால் இக்கொடுமைகளை தடுக்கவும் முடியும். அப்படிப்பட்ட நல்லவர்கள்தான் வீகானிசத்தை பின்பற்றக்கூடியவர்கள்.
இந்த பூமியில் மனிதர்கள் வீடு கட்டி வாழ அவர்களுக்கென சொந்த இடங்களில்லை. அவர்கள் விளைவித்த விவசாய பொருட்களைக் கொண்டு அவர்களுக்கே உணவு கொடுக்க முடியவில்லை. ஆனால் கால்நடைகளை வளர்க்க இப்பூமியில் பெரும் இடங்களை ஒதுக்கி ஆக்ரமிப்பு செய்வது எவ்வகையில் நியாயம். விவசாய விளைச்சல்களில் பெரும்பாலும் கால்நடைகளுக்கே தீவினமாக கொடுக்கின்றார்கள். உண்ண உணவின்றி இருக்கும் மனிதர்களின் உணவுகள் சுரண்டப்படுகின்றன. உணவுக்காக வளர்க்கப்படும் கால்நடைகளின் பெருக்கத்தால் இப்பூமியில் கார்பண்டை ஆட்சைடு Co2 என்னும் நச்சுக் காற்று மிகுதியாகிறது. அதாவது அவைகள் சுவாசிக்கும் காற்றின் மூலம் இவை உருவாகின்றன. இதனால் இப்பூமி அழிய ஏதுவாகின்றது.
இந்த பாகுப்பாட்டை எதிர்ந்த்து நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு மூன்று முறை நான்கு முறை ஐந்து முறைகள் என எவ்விதத்திலாவது எதிர்க்க வேண்டும். நான்
பாகுபாட்டை எதிர்க்கிறேன், நான் அநீதியை எதிர்க்கிறேன் என சொல்ல வேண்டும். மேலும்
நான் ஏன் சுத்த சைவத்தை வீகானிசத்தை ஆதரிக்கின்றேன் என சொல்ல வேண்டும். இது
உண்மையில் நீங்கள் செய்யக்கூடிய ஒன்று. நீங்கள்தான்
மாற்றுவீர்கள். உங்கள் உடலுக்குள் என்ன செல்ல வேண்டும் என நீங்கள் தீர்மானியுங்கள். உங்களுக்காக மற்ற விலங்கினங்கள் கொல்லப்படுவது தொடரவேண்டுமா? என நீங்கள் தீர்மானியுங்கள். இனி நீங்கள் வீகானிசத்தை பின்பற்றுவீர்கள் என்பது எனது நம்பிக்கை. ஒரு
நல்ல முடிவை எடுக்க உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ளுங்கள்.
தி.ம.இராமலிங்கம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.