Wednesday, May 8, 2024

எக்காலம்?

 பிறப்பெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்:

++++++++++++++++++++++++++++++++++

அப்பா நான் பிறந்தநாளை எண்ணி
    அணுவள வேணும் மகிழ்ந்தறியேன்
இப்பாரில் உயிர்கள் பிறக்கக் கண்டால்
    இடிவிழுந்தார்ப் போன்று அவை
தப்பாமல் மடியவேக் கண்டுளம் நடுங்கி
    துன்பமே மேலோங்கி நின்றேன்
எப்போதும் நின்னடி நிழல் தன்னில்
    எவ்வுயிரும் இன்பமுறச் செய்வாயே.

--TMR

உயிரிறக்கம் சிறிதும் உணர்ந் தறியேன்
    உடல் மலமற்றிருக்க அறியாது தினம்
பயிருண்டு வாழும் கொடிய னானேன்
     பழமும் பாலும் கொண்டு மூச்சுக்
கயிற்றை பிடித்திருந்தேன் மதி மண்டலம் 
    கசியும் அமுதை பருகக் காணேன் 
பயிலும் சன்மார்க் கத்தால் என்று
    பிடிப்பேனோ சாகா வரத்தை நானே.  


 
எவ்வுயிரும் இன்புற்றிருக்க நினைந்து இவ்வுலகம்
செவ்வாடை துறப்பது எக்காலம்?



இராமலிங்க அபயமென்று இரக்கமே உயிராகி
காமமற்று இருப்பது எக்காலம்...


பொல்லா ஆணவம் அழியநான் இவ்வுலகில்
செல்லா காசுகளாவது எக்காலம்...


ஈன உலகில் ஊனுடம் பெடுத்து
ஞான சித்தராவது எக்காலம்...


பச்சைத் திரை படர்பாசிவிலகி ஆகாரத்தில்
இச்சையற் றிருப்பது எக்காலம்...


                                       
நல்லறம் பிடித்துச் சாகாமல் மண்குழி

இல்லம் துறந்து பறப்பது எக்காலம்?

மாடத்தின் ஒளியாய் மாயை உலகில்
ஓடம்போல் மிதப்பது எக்காலம்?



நரைதிரை மூப்பவை நண்ணா துலகில்
கரை சேர்வது எக்காலம்?

உயர்ந்தவனாய் நடிக்கும் என் வஞ்சக
இயற்கையாவும் நொடிவது எக்காலம்?

பொருளாலர் போன்றே பொழுதெல்லாம் போகநான்
அருளாலர் ஆவது எக்காலம்?

ஏங்கிய ஏக்கமெல்லாம் உயிர்த் துலகில்
ஓங்கி உத்தமனாவது எக்காலம்?
அருவுருவ மாகிமனித உயிரெல்லாம் வள்ளலார்
விருது பெறுவது எக்காலம்?

கண்டம் தாவும் கணை ஏவியென்னநீ
அண்டம் ஆள்வது எக்காலம்?.
நிறைவான வாழ்வில் நரைதிரை மூப்பிலும்
இறைவனைக் காட்டும் சிரிப்பு.
மரண மில்லா மாமருந்தை இத்
தருண மெனக்கு அருளேஅருளே.
அகல் விளக்காய் அகம் விளங்கிச்
சகத்துள் சன்மார்க்கம் காண்.
ஓரிறை மார்க்கத்தால் ஒளிதேக மடைந்து
பேரின்பம் காண்பது சன்மார்க்கம்.

வளியற்ற தேகமாய் வருந்தி வீழாமல்
ஒளியுற்று நீடுவாழ்க நீ.
மரபுசார் ஆன்மீகம் மறந்துஇனி மக்கள்
குரல் ஒலிக்கும் சன்மார்க்கம்.

உனக்கு நீயே உண்மையென போதித்து
எனக் குறவாகிய சன்மார்க்கம்.
ஞானசித்தர் காலமிது இடர்நீங்கி இனி
ஈனஉலகம் வாழும் வாழும்.

சாவதுதான் இறுதியென சான்றோர்கள் கூறும்
பாவங்களே பாடங்களாய் ஆனது.









           

           

           

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.