Tuesday, May 28, 2024

தலை மாற்று அறுவை சிகிச்சை

                                 அருட்பெருஞ்ஜோதி               அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை             அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

தலை  மாற்று அறுவை சிகிச்சை

 

அனைவருக்கும் வணக்கம்.

மனிதன் தனக்குக் கிடைத்த ஊன் உடம்பை எப்படியாவது நிலை நிறுத்திக்கொள்ள போராடி வருகின்றான். அதாவது சாகாமல் இருக்க பேராசை படுகின்றான். “மரணமில்லா பெருவாழ்வு” என்கின்ற கருத்தை முதன் முதலில் இவ்வுலகிற்கு போதித்து அதன்படி தனது ஊன் உடம்பினையே ஒளி உடம்பாக நிலை நிறுத்தி, என்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்பவர் நமது வள்ளற்பெருமான்.

இதற்காக அவர் கொண்டு வந்த புதியப் பாதைதான் “சுத்த சன்மார்க்கம்” என்கின்ற சாகாக் கல்வியாகும். இம்முறையானது அருளியல் ரீதியில் வெற்றி பெற்ற முறையாகும். இம்முறையில் தற்போது எண்ணற்றவர்கள், தாங்களும் வள்ளற்பெருமானைப் போன்று சாகா நிலை எய்திட வேண்டும் என இறை அருளை பெற நன்முயற்சியில் இருந்துவருகின்றார்கள். அப்படிப்பட்ட எண்ணற்றவர்களும் நானும் ஒருவன்.

இவ்வாறு அருளியல் முறை ஒன்று செயல் பட்டுக்கொண்டே இருந்தாலும், அறிவியல் முறையில், ஒரு மனிதன் சாகா நிலையினை எவ்வாறு அடைய முடியும்? என இன்னொரு பக்கம் ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றதையும் நாம் பார்க்கின்றோம்.

மனிதன், தனது உடலில் பழுதடைந்த பாகங்களை இன்னொரு மனிதனிடமிருந்து பெற்று புதுப்பித்துக்கொள்கின்றான். அல்லது இன்னொரு விலங்குகளிலிருந்தும் தனது பழுதடைந்த உறுப்பினை மாற்றி நீண்ட நாள் வாழ வழிவகுத்துக்கொள்கின்றான். இவ்வாறு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, கருவிழி மாற்று அறுவை சிகிச்சை ஆகிய உறுப்புகளை மாற்றி உயிர் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

மூளை மாற்று அறுவை சிகிச்சையும் 1970-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ராபர்ட் ஜே.ஒயிட் மேற்கொண்டு வெற்றியும் பெற்றார். ஆனால், இவர் மனிதனுக்குப் பதிலாக குரங்கின் தலையை எடுத்து மற்றொரு குரங்கின் உடம்பில் பொருத்தி சோதித்ததில் வெற்றி பெற்றார். இதனை தலை மாற்று அறுவை சிகிச்சை என்றும் சொல்லலாம். ஆனால் அக்குரங்கு சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தது.

இந்த தலை மாற்று அறுவை சிகிச்சையில் மூளையை தண்டுவடத்துடன் இணைப்பதில்தான் சிக்கல்கள் உள்ளன. உடலின் ஒட்டு மொத்த இயக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூளை, தன்னுடன் பல மில்லியன் கணக்கான இணைப்புகளையும் கொண்டுள்ளது. அவ்விணைப்புகளை மீண்டும் வேறொரு உடலுடன் இணைப்பதில் தோல்வியுறுகின்றது அறிவியல். மருத்துவர் ஜே.ஒயிட் மேற்கொண்ட குரங்கு தலை மாற்று அறுவை சிகிச்சையில் குரங்கு சில நாட்கள் உயிர் வாழ்ந்தாலும், அது கழுத்துக்கீழே உள்ள உறுப்புகளின் இயக்கம் முடங்கித்தான் போயின.

அப்படியே ஒருவரின் தலையினை எடுத்து வேறு ஒருவரின் உடம்பில் பொருத்தி, தண்டுவடத்தையும் மிகச்சரியாக இணைத்தாலும்,  மீண்டும் அவரது பழைய நினைவுகள், உணர்வுகள், அறிவுகள் அப்படியே செயல்படுமா? என்பதில் சிக்கல்கள் உள்ளன. அப்படி ஒரு வேளை செயல்பட்டுவிட்டால், மனிதனின் தன்னிகரில்லா ஒரு மாபெரும் மருத்துவப் புரட்சியாக இந்த ”தலை மாற்று அறுவை சிகிச்சை” விளங்கிடும்.

மூளைச்சாவு அடைந்த ஒரு மனிதனின் தலையை அப்புறப்படுத்தும் பொழுது, அதே நேரத்தில் உடல் நலம் சரியில்லாத ஒருவரின் தலையையும் அப்புறப்படுத்தி, உடனே மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் உடல் நலம் சரியில்லாதவரின் தலையை சேர்ப்பதுதான், “தலை மாற்று அறுவை சிகிச்சை” என்கின்றோம். இந்த அறுவை சிகிச்சையினை மனித மருத்துவர்கள் செய்வதில் சிக்கல்கள் அதிகம் இருப்பதால், ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ஹசிம்-அல்-ஃகைலி என்பவர் இவ்வுலகில் முதல் முறையாக மனிதத் தலை    மாற்று அறுவை சிகிச்சையினை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் ரோபாக்கள் செய்யும் விதமாக, அதிநவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு வந்துள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவைத்தான் நீங்கள் தற்போது பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். இவ்வாறு ஏ.ஐ. (A.I. – Artificial Intelligent)  மூலம் ரோபாக்கள் தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது, இரண்டு உடல்களிலும் மிகத்துல்லியமாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் (இரு உடலிலும் ஒரே இடத்தில்) மிகவும் துரிதமாக ரோபாக்கள் இரண்டு தலைகளையும் வேட்டி எடுத்து, தேவையற்ற உடம்பின் தலையை, தேவையற்ற தலையின் உடம்பில் மிகத்துல்லியமாக, அணுவாளவேணும் பிசகாமல் இணைக்கும் வேலையை ரோபாக்கள் செய்வதால், முதுகுத் தண்டுவடமும் இணைப்பதில் சிக்கல்கள் நீக்கப்பட்டு வெற்றியடைவதாக அவர் கூறியுள்ளார்.

எதிர் காலத்தில் மனித உறுப்புகள் திருடுவதுடன், மனித உடல்களையே திருடும் நிலை ஏற்படலாம். எந்த ஒரு நல்ல விடயங்களிலும் தீய நோக்கங்களே மிக எளிதில் எடுத்துச் செல்லப்படுகின்றது. எனவே ஒரு எழுபது வயது கோடீஸ்வரர் உயிருக்கு போராடுகின்றார். அப்பொழுது நல்ல திடகாத்திரமான இருபது வயது பையனை திருடிவந்து அல்லது விலை கொடுத்து வாங்கிவந்து அவனது தலையை அகற்றி நீக்கிவிட்டு, அந்த கோடீஸ்வரரின் தலையை அகற்றி அந்த இருபது வயது பையனின் உடலில் பொருத்திவிட்டால், உயிர் போகும் நிலையில் இருந்த அந்த எழுபது வயது முதியவர் மீண்டும் இருபது வயது வாலிபனாகி, தனது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பத்திலிருந்து வாழத்தொடங்கிவிடுவார். இருபது வயது பையன் உடல் இறவாமல் வாழும், ஆனால் எழுபது வயதுக்காரரின் மூளையுடன், நினைவுடன் வாழும். அந்த இருபது வயதுக்காரரின் தலை இறந்தவுடன், அவனது உடல் வாழ்ந்தாலும் அவன் மரணமடைகின்றான்.

இந்த தலை மாற்று அறுவை சிகிச்சையானது எதிர் காலத்தில் பல சிக்கல்களை மனித சமுதாயத்தில் ஏற்படுத்தப்போகின்றன. உலக நாடுகள் எந்த அளவிற்கு இதனை அனுமதிப்பார்கள் எனத் தெரியவில்லை. ஒரு வகையில் நமது திருமூலர் கதையினை ஒத்து நடைபோடுகின்றது, இந்த தலை மாற்று அறுவை சிகிச்சை.

வடலூர் ஞானசபைக்கு வந்து வந்துச் சென்றால், மூப்பினர் இளமை அடையும் அற்புதம் நிகழும் என வள்ளலார் கூறுவார். அப்படிப்பட்ட அற்புதத்தை எனது அறிவியலும் நிகழ்த்தும் என்று ஹசிம்-அல்-ஃகைலி கூறுவதுபோன்று உள்ளது.     

மேலும் ஹசிம்-அல்-ஃகைலி இத்துடன் நின்றுவிடவில்லை. மனித பிறப்பிற்கு தற்போது மிகவும் உதவும் தொழிற்நுட்பம் டெஸ்ட் டியூப் பேபி என்பதாகும். இந்த தொழில்நுட்பத்தையும் தாண்டி செயற்கை கற்பப்பை தயாரிக்கும் தொழிற்சாலையையும் துவங்கிவிட்டார் இவர். இந்த செயற்கை கற்பப்பை மூலம், குழந்தை பெற முடியாத பெண்களின் கருவினை சுமந்து குழந்தையினை உற்பத்தி செய்து கொடுக்க முடியும். இதனால் இன்று நடைமுறையில் இருக்கும் வாடகைத் தாய், டெஸ்ட் டியூப் பேபி போன்ற நடைமுறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு செயற்கை கற்பப் பையில் இனி வரும் குழந்தைகள் உருவாக்கப்படுவார்கள். ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை குறையக் காரணமே, அங்குள்ள பெண்களில் பலர் பன்னிரு மாதங்கள் கருவைச் சுமந்து, வலியை சகித்து குழந்தைப் பெற தயாராக இல்லை. ஆண்களை போன்று சுதந்தரமாக வாழ விரும்புகின்றார்கள். இப்படிப்பட்ட நாட்டுப் பெண்களுக்கு செயற்கை கற்பப்பை ஒரு வரமாக அமையும்.

இறுதியாக, நமது பிரதமர் மோதிஜி ஓரிரு நாட்களுக்கு முன்பு பேசியது நினைவுக்கு வருகின்றது. “நான் பயோலாஜிக்கலாகப் பிறக்கவில்லை” என்ற வாக்கியமே அது. அதாவது ஒரு தாயும் தந்தையும் கூடி, அதனால் கருவுற்று நான் பிறக்கவில்லை என்பதாகக் கூறுகின்றார். அதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ், “ஆமாம், அவர் டெஸ்ட் டியூப் பேபி என்று கிண்டல் செய்தார். பிரதமர் சொன்னது உண்மையா? பிரகாஷ்ராஜ் சொன்னது உண்மையா? என விவாதம் செய்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இனி இவ்வுலகில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம், நமது இந்திய பிரதமர் சொன்னது போன்று “நான் நான்பயோலாஜிக்கல் பேபி (I am Non-Biological Baby)” என்று கெளரவமாகச் சொல்லும் காலம் வந்துவிட்டது.  நன்றி.  

T.M.RAMALINGAM

9445545475

vallalarmail@gmail.com




    

 

  

  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.